நாட்டில் சீனியின் விலைஅதிகரிப்பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கலாம்

செவ்வாய், 31 மே, 2022

நாட்டில் கடந்த வாரம் ரூ.300க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி தற்போது ரூ.320க்கும், ரூ.300க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனி தற்போது ரூ.330க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை கடந்த வாரம் சதொச கிளைகளில் ஒரு கிலோ சீனி 170 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
அதிகரித்து வரும் சீனி விலைக்கு ஏற்ப உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உள்ள சீனி சார்ந்த உணவுகள், தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை உயர்த்த வேண்டியிருக்கும் என ஹட்டன் பிரதேசத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் 
தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>





READ MORE - நாட்டில் சீனியின் விலைஅதிகரிப்பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கலாம்

நாட்டில் பல மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

திங்கள், 30 மே, 2022

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் 
காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் 
காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து 
ஹம்பாந்தோட்டை ஊடாக
 பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் 
காணப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான 
அலையுடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் பல மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தற்போது நாட்டில் நிலவும் நிலைமையில்யாழ் மக்களுக்கு அறிவித்தல்

ஞாயிறு, 29 மே, 2022

நாட்டில் எரிவாயு கொள்கலன் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்விக்கு குறைவான எரிவாயு கொள்கலன்களே எமக்கு கிடைக்கப்பெறுவதனால், கிடைக்கப்பெறும் எரிவாயு கொள்கலன்களை சீரான 
முறையில் மற்றும் நியாயமான விலையில் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக பின்வரும் பொறிமுறை ஊடாக எரிவாயு எரிவாயு கொள்கலன்களை எதிர்வரும் காலங்களில் பகிர்ந்தளிப்பதற்கு 
முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுப்பாவனைக்காக மக்களுக்கு விநியோகிக்கும் முறை
கிராம அலுவலர் பிரிவுகளுக்கென ஒதுக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம், உரிய கிராம மக்கள் தமது எரிவாயு எரிவாயு கொள்கலனுக்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
விநியோகஸ்தர்களும் மேற்படி விபரங்கள் தொடர்பான பதிவேடு ஒன்றினை பேணுதல் வேண்டும்.
விநியோகஸ்தர்களிடம், ஒரு வீட்டுக்கு ஒரு எரிவாயு கொள்கலன் என்ற முன்னுரிமை அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுவதனை கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தல் வேண்டும்.
விநியோகஸ்தர்களுக்கு எரிவாயு கொள்கலன்கள் கிடைக்கப்பெற்றதும் பதிவு அடிப்படையில் அவர்களுக்கான விநியோகம் நடைபெறும்.
குறித்த நேரத்தில் பதிவு மேற்கொண்டோர் சமூகமளிக்காவிடின், பதிவு அடிப்படையில் அடுத்துள்ள பயனாளிக்கு 
விநியோகிக்கப்படும்.
விநியோகிக்கப்பட்ட விபரம் பிரதேச செயலக மேற்பார்வையில் குடும்ப பங்கீட்டு அட்டையில் திகதி குறிப்பிடப்பட்டு பதிவு செய்தல் கட்டாயமானது.
எரிவாயு கொள்கலனை பெறவருபவர் உரிய கிராம 
அலுவலர் பிரிவு பங்கீட்டு அட்டை, தேசிய அடையாள அட்டையுடன் பங்கீட்டு அட்டையில் பெயருடைய அங்கத்தவர் ஒருவராக இருத்தல் கட்டாயமானது.
விநியோகஸ்தர்களுக்கு விநியோகிக்கும் முறை
தமக்கு கிடைக்கப்பெறும் எரிவாயு கொள்கலன்களது எண்ணிக்கை அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு லிட்ரோ பிராந்திய முகாமையாளரால் வழங்கப்படும்.
கிடைக்கப்பெற்ற எரிவாயு கொள்கலன்களது எண்ணிக்கைக்கு அமைவாக விநியோகஸ்தர்களுக்கு விநியோகிக்க வேண்டிய சிலிண்டர்களது எண்ணிக்கை பிரதேச செயலாளர்களால் எஸ்விஎம் நிறுவனத்திற்கு அறிவிக்கப்படும்.
அதன் அடிப்படையில் எஸ்விஎம் நிறுவனத்தினர் விநியோகஸ்தர்களுக்கான சிலிண்டர்களை விநியோகிப்பர்.
கைத்தொழில் நிலையங்கள், உணவகங்கள், வைத்தியசாலைகள் மற்றும் நலன்புரி சேவை நிறுவனங்களுக்கான 
விநியோகம்
கைத்தொழில் நிலையங்கள், உணவுச்சாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் நலன்புரி சேவை நிறுவனங்கள் (சிறுவர் / முதியோர் இல்லம்) ஆகியவற்றுக்கு வழமைபோல்
விநியோகஸ்தர்களால் நேரடியாக விநியோகிக்கப்படும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

READ MORE - தற்போது நாட்டில் நிலவும் நிலைமையில்யாழ் மக்களுக்கு அறிவித்தல்

நாட்டில் மின் வெட்டு குறித்து வெளியான தகவல்

வெள்ளி, 27 மே, 2022

நாட்டில் .27-05-2022.இன்று மே  வெள்ளிக்கிழமை 2 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையில் இந்த விபரம் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




READ MORE - நாட்டில் மின் வெட்டு குறித்து வெளியான தகவல்

அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண்களுக்கு முன்னுரிமை

யாழ் அச்சுவேலியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், மக்களுக்கு இலகுவாக 
எரிபொருளை வழங்கும்
 நோக்குடன். 27-05-2022.இன்றையதினம் அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண்களின் வேலைப்பழுவினை கருத்தில்கொண்டு அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்திலேயே நீண்ட வரிசையில் ஆண்களும்,பெண்களும் பெட்ரோலை பெறுவதற்கு காத்திருந்த வேளை பெண்களை தனியாக வரிசைப்படுத்தி அவர்களுக்கான எரிபொருள் 
துரிதமாக வழங்கப்பட்டது.
இவ்வாறு பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை எவரும் தவறுதலாக பயன்படுத்தி தமது தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேமிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகினறார்கள்.
இந்த முன்மாதிரியான செயற்பாட்டினால் எரிபொருளை பெற வந்த பலரும் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

READ MORE - அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண்களுக்கு முன்னுரிமை

ரயில் மோதும் நிலையில் குருணாகலில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய்சம்பவம்

வியாழன், 26 மே, 2022

குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய் தொடர்பில் பலரும் நெகிழ்ச்சியாக
 பேசிவருகின்றனர்.
அலவ்வ பிரதேசத்தில் ரயில் நிலையத்திற்கு அண்மித்த குறுக்கு வீதியில் ரயிலில் மோதவிருந்த மாணவனை, அந்தப் பகுதியில் இருந்த நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.
25-05-2022-அன்று காலை அலவ்வ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையை பாடசாலை மாணவர் கடக்க முயன்ற போது பொல்கஹவெலவில் இருந்து வந்த ரயில் குறுக்கு வீதியை 
அண்மித்துள்ளது.
இதன் போது மாணவன் ரயிலில் மோதப்போகிறார் என அங்கிருந்த மக்கள் கத்தி கூச்சலிட்ட போதிலும் ரயில் சத்தம் காரணமாக அவருக்கு கேட்கவில்லை என தெரியவந்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




READ MORE - ரயில் மோதும் நிலையில் குருணாகலில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய்சம்பவம்

நாட்டில் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு

புதன், 25 மே, 2022

நாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலையும் மேலும் உயர்வடையும் நிலை
 ஒன்று ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் கோழி தீவனத்தின் விலை அதிகரிப்பு காரணமாக இன்று ஒரு முட்டையின் உற்பத்தி செலவு மட்டும் 31 ரூபாயாக அதிகரித்துள்ளது..25-05-2022.
கோழி தீவன விலை உயர்வால் சிறு கோழி வியாபாரிகள் பலர் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்.
65 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ உணவு பொதி விலை 220 ரூபாயாக அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை உயரும்போது
 இது மேலும் அதிகரிக்கும்.
விவசாயி இந்த தொழிலில் நிலைத்திருக்க வேண்டுமானால், ஒரு முட்டையை குறைந்தபட்சம் 38 அல்லது 40 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலைமை ஏற்படும் என கில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்களும் அதிகரிப்பு

செவ்வாய், 24 மே, 2022

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலியாக பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்களிலும் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி  முச்சக்கரவண்டிகளில் முதல் கிலோமீட்டருக்கு 100 ரூபாவும், மேலதிக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 80 ரூபாவும் 
அறவிடப்படும் என தேசிய முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்திருந்தார்.
எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியதையடுத்தே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருளின் விலையை அதிகரித்துள்ளதாக 
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் விலைக்கு நிகராக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும், பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்களும் அதிகரிப்பு

நாட்டில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு!!!

ஞாயிறு, 22 மே, 2022

இலங்கையின் சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 1000 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சில பகுதிகளில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை சுமார் 1050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக
 தெரிய வந்துள்ளது.
சிங்கள – தமிழ் புத்தாண்டிலிருந்து ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை சுமார் 950-980 ரூபாவாக காணப்பட்டுள்ளது.இந்த நிலையில் முதன்முறையாக இந்த வாரம் கோழி இறைச்சியின் விலை 1000 ரூபாயைத் 
தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.சமகாலத்தில் 
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாளாந்தம் பல பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு!!!

நாட்டில் விரைவில் தடையில்லா மின்சாரம்! அமைச்சர் தெரிவிப்பு

சனி, 21 மே, 2022

அடுத்த வார தொடக்கத்தில் இருந்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில் இதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் எரிபொருளின் அளவு குறையும் எனவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதன் மூலம் இந்நிலையைத் தவிர்க்க முடியும் எனவும் பலர் கேன், பக்கெட், பீப்பாய்களுக்குள் எரிபொருளை பதுக்கி வைப்பதாகவும் 
அவர் மேலும் தெரிவித்தார்.
நாளைய தினம் நுரைச்சோலை அனல்மின் நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் எனவும், நீர் மின்சாரத்தை முகாமைத்துவம் செய்து திங்கட்கிழமை அல்லது செவ்வாய் கிழமைகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்படும் எனவும்
 அவர் மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் விரைவில் தடையில்லா மின்சாரம்! அமைச்சர் தெரிவிப்பு

இலங்கையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரித்தது

வெள்ளி, 20 மே, 2022

கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் உள்ளூர் நிறுவனமான செரண்டிப், கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதுடன், பிரிமா நிறுவனமும் கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரித்தது

நாட்டில் பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் நுகர்வோரிடம் கோரிக்கை

புதன், 18 மே, 2022

கொழும்பு துறைமுகத்திற்கு .18-05-2022.இன்றைய தினம் வரவிருக்கும் கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கி விநியோகிக்கப்படும் வரை நாட்டில் பெற்றோல் கிடையாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
 தெரிவித்துள்ளது.
சுமார் 2000 மெற்றிக் தொன் பெற்றோலை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விநியோகித்த போதிலும் அது தேவைக்கு போதுமானதாக இல்லை என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனவே, பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்திய கடன் அடிப்படையில் இலங்கைக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருந்து 40,000 மெற்றிக் தொன் டீசலை இறக்கி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 
கூறப்படுகின்றது.
இதனால் டீசல் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு போக்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் போக்குவரத்துக்கு அந்த அளவு டீசல் நான்கு நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் 
கூறப்படுகின்றது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

READ MORE - நாட்டில் பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் நுகர்வோரிடம் கோரிக்கை

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செவ்வாய், 17 மே, 2022

இன்று மே 17 ஆம் திகதிக்கு 3 மணி நேரம் மற்றும் 40 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல்
 அளித்துள்ளது
குதிகள் ABCDEFGHIJKLPQRSTUVW – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள்.
பகுதி CC: காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் MNOXYZ பகுதிகள்: காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை 3 மணி நேரம்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் விநியோகம் இன்று முதல் மீண்டும் வழமைக்கு

திங்கள், 16 மே, 2022

எரிபொருள் விநியோகம் இன்று முதல் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா 
அறிவித்துள்ளார்.
எரிபொருள் நிலையங்களுக்கு நேற்று எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,விசாக பூரணை தினம், விடுமுறை தினம் என்பதால் நேற்று எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், இன்றைய தினம் எரிபொருள் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும்.மேல் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காலை வேளையில் எரிபொருள் 
கிடைக்கப் பெறும்.
ஏனைய மாகாணங்களுக்கு மதிய வேளையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என 
சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் எரிபொருள் விநியோகம் இன்று முதல் மீண்டும் வழமைக்கு

இலங்கையில் தென்மேற்க்கில் சில பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு

ஞாயிறு, 15 மே, 2022

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நான்கு இடங்களில் வெள்ளப்பெருக்கு
 ஏற்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களிலும் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நேற்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி களுத்துறை பாலிந்தநுவர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் தென்மேற்க்கில் சில பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சனி, 14 மே, 2022

உலகில் கோவிட் தொற்று, ரஷ்ய –  உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வினை தீர்மானித்து
 வருகின்றது.
அதற்கயைம, தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதன்படி இலங்கையின் இன்றைய (13-05-2022) தங்க நிலவரம் வருமாறு
தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 658,421 ஆகும்.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,230

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 185,850

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,300

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 170,400

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,330

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 162,650




இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
READ MORE - நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக நாடுகளில் புவி வெப்பநிலை தொடர்பில் எச்சரித்த விஞ்ஞானிகள்

புதன், 11 மே, 2022

 உலக நாடுகளில் எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல்சியஸ்ஸினால் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் 50 சதவீதம் அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து்ள்ளனர்.அதன்படி, 2022 முதல் 2026 வரையான காலப்பகுதியில், உலக நாடுகளில் அதிகளவான வெப்பநிலை பதிவாகும் என விஞ்ஞானிகள் 
தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 தசாப்தங்களாக புவி வெப்பமடைதலானது கிரமமாக அதிகரித்து வருகிறது.மனித செயற்பாடுகளே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - உலக நாடுகளில் புவி வெப்பநிலை தொடர்பில் எச்சரித்த விஞ்ஞானிகள்

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது

செவ்வாய், 10 மே, 2022

இலங்கையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தொடர்ந்து  மின்சாரம் துண்டிக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் வெளியான ஒலிப்பதிவு உண்மையில்லை என மின்சாரசபை 
தெரிவித்துள்ளது.
அத்துடன் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் இன்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது

நாட்டில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

திங்கள், 9 மே, 2022

வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு கையிருப்பு இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.சமையல் எரிவாயுவுக்காக வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் லிட்ரோ நிறுவன தலைவர் ஊடகங்களுக்கு இந்த விடயத்தை 
குறிப்பிட்டுள்ளார்.
வீட்டு உபயோகத்துக்கான எல்பி எரிவாயு கையிருப்பு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சாலை நோக்கங்களுக்காக மாத்திரமே எரிவாயு வெளியிடப்படும். எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம்.இதேவேளை எல்பி எரிவாயு இறக்குமதிக்காக 07 மில்லியன் 
அமெரிக்க டொலர்கள்.09-05-2022. இன்று செலுத்தப்படும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு கப்பல்கள் இலங்கை வந்தடையும் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

மன்னார் கடல்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட கனிய வளம்

சனி, 7 மே, 2022

 

இலங்கை கடற்பரப்பில் கிடைத்த கனிய வளத்தை கொண்டு நாட்டுக்கு தேவையான எரிபொருளை 60 வருடங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
எனினும் இது குறித்து முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படாமை பற்றி நாடாளுமன்றத்தில் கோப்பா குழு கவனம் 
செலுத்தியுள்ளது.
மன்னார் கடல்படுகையில் காணப்படும் எரிபொருள், இயற்கை வாயு என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய கனிய வளம் கிடைத்துள்ளது.மன்னார் கடல்படுகையில் ஐந்து பில்லியன் பீப்பா அளவிலான எரிபொருள் காணப்படுவதாக 2016ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அரசாங்க கணக்கு குழு அறிவித்திருந்தது. இதில் 5 ட்ரில்லியன் கன அடி இயற்கை வாயு காணப்படுகின்றமையும் தெரியவந்துள்ளது.
நாட்டின் 60 வருட எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய இவை உதவும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்திருக்கிறது
.செயற்கை
 வாயுவின் மூலம் மாத்திரம் 25 வருடங்களில் 200 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் 
காணப்படுகிறது.
ஆனால் இவற்றைப் பெற்று வர்த்தக ரீதியான வருமானத்தை ஈட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படாமை பற்றி தொடர்ந்தும் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

READ MORE - மன்னார் கடல்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட கனிய வளம்

நாட்டில் மேலும் மேலும் அதிகரிக்கப்படும் மின்வெட்டு நேர அறிவிப்பு

வெள்ளி, 6 மே, 2022

நாட்டில் தற்போ நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு நேரம் மேலும் நீடிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் ஐந்து மணித்தியாலம் வரை இவ்வாறு மின்வெட்டு நீடிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் 
நிலையம் தேசிய மின்வட்டத்திற்கு 270 மெகாவோட் மின்சாரத்தை இழந்துள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் மேலும் மேலும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
270 மெகாவோட் எண்ணெய் இழப்பை ஈடுகட்டுவது 
நஷ்டம் என்றும், அந்தத் திறனை நீர்மின்சாரத்தில் 
இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 
பொறியாளர்கள் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.இது தொடர்பில் மகாவலி அதிகாரசபையுடன் கலந்துரையாடப்பட்ட போதும் அவர்கள் அதில் அதிக அக்கறை காட்டவில்லை எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.
சமனல வெவ மற்றும் லக்சபான நீர் மின் நிலையத்திலிருந்து இழந்த இந்த கொள்ளளவை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை 
மின்சார சபை தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் மேலும் மேலும் அதிகரிக்கப்படும் மின்வெட்டு நேர அறிவிப்பு

நாட்டில் வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வியாழன், 5 மே, 2022

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் 
காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய,வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் 
காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது இன்று மாலையிலிருந்து அதிகரிக்கக் கூடிய சாத்தியம் 
காணப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் எரிவாயு

புதன், 4 மே, 2022

நாட்டில் சந்தையில் கொள்வனவு செய்ய போதிய தொகை எரிவாயு கொள்கலன்கள் இல்லாத போதிலும் கறுப்புச் சந்தையில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாவுக்கு எரிவாயு கொள்கலன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சமையல் எரிவாயு கொள்கலன்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள், தொகையை மறைத்து வைத்து இடைத்தரகர்கள் ஊடாக அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்து 
வருகின்றனர்.
இதனை தவிர மேலும் சில தரப்பினர் திடடமிட்டு எரிவாயு வரிசைகளில் நின்று எரிவாயுவை கொள்வனவு செய்து, அவற்றை 4 ஆயிரம் இலாபத்துடன் வெளியில் விற்பனை செய்து வருவதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சில எரிவாயு விற்பனை முகவர்கள் எரிவாயு தட்டுப்பாட்டுடன் எரிவாயு  சர்வாதிகாரத்தை கையில் எடுத்து விற்பனைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
நுகர்வோர் அதிகார சபை உட்பட பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர் தலையீடுகளை மேற்கொண்டு இந்த அநீதியான செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் எரிவாயு

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்

செவ்வாய், 3 மே, 2022

இலங்கையில் தங்கத்தின் விலை.03-05-2022. இன்று சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.648,997.00. 24 காரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ. 22,900.00. 24 காரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூ. 183,150.00.
22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.21,000.00. 22 காரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூ.167,950.00 1 காரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.20,040.00 . 21 காரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூ.160,300.00 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்