நாட்டில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

வியாழன், 31 மார்ச், 2022

நாட்டில் மின்சார விநியோகம் தடைப்படும் காலப்பகுதியில் மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான டீசல் கிடைக்காவிடின், பல பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
பிலியந்தலை, பன்னிப்பிட்டிய, மஹரகம, ஹோக்கந்தர மற்றும் பத்தரமுல்லை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மேற்கு மற்றும் மத்திய வலயத்திற்கு பொறுப்பான பிரதி பொது முகாமையாளர் யு.மு. கப்புராகே தெரிவித்துள்ளார்.
டீசல் இன்மையால் ஏற்கனவே பல சிரமங்களுக்கு மத்தியில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது அத்தியாவசியத் தேவையாக நீர் விநியோகம் அமுல்படுத்தப்பட்டு இருப்பதால், மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கான டீசல் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் வறட்சியான காலநிலை காரணமாக நாளாந்த நீர்த் தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும், மிக சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

பேராலை பகுதியில் உள்ள வீடொன்றில் இடி விழுந்ததால் பெரும் அதிர்ச்சி

வியாழன், 24 மார்ச், 2022

பளை – பேராலை பகுதியில் உள்ள வீடொன்றில் இடி விழுந்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23-03-2022.இன்று புதன்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த அனைவரும் அவர்களது வீட்டின் முன் ஹோலில் இருந்துள்ளனர்.
இதன்போது பாரிய சத்தத்துடன் மின்னல் வீட்டின் கூரை பகுதியிலேயே தாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது மின் குமிழ்களும் வெடித்து சிதறியுள்ளது, மின்சாரமும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. தெய்வாதீனமாக வீட்டில் இருந்த எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





READ MORE - பேராலை பகுதியில் உள்ள வீடொன்றில் இடி விழுந்ததால் பெரும் அதிர்ச்சி

இலங்கையில் திருமணப் பதிவு சட்டத்தில் தீடீர் மாற்றம்

புதன், 23 மார்ச், 2022

வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலை ஏற்றுக்கொள்ளல் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதற்கமைய சட்ட வரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தில் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் உள்வாங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலுக்கான ஏற்பாடுகள் குறித்த கட்டளைச் சட்டத்தில் உள்வாங்கப்படாமையால், திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
மேலும் அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


READ MORE - இலங்கையில் திருமணப் பதிவு சட்டத்தில் தீடீர் மாற்றம்

இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை சடுதியாக உயர்வு

செவ்வாய், 22 மார்ச், 2022

இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழிக்கறி 850 முதல் 900 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டை மற்றும கோழி இறைச்சியின் விலை உயர்வால் முட்டை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள்
 தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கோழி மற்றும் முட்டை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், கோழி தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

READ MORE - இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை சடுதியாக உயர்வு

நாட்டில் வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

வெள்ளி, 18 மார்ச், 2022

இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் வானிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் 18 மாவட்டங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடுமையான இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் 
விடுத்துள்ளது.
இதன்படி, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, மாத்தளை, குருநாகல், கண்டி, கேகாலை, நுவரெலியா, கம்பஹா, பதுளை, அம்பாறை, கொழும்பு, மொனராகலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் அனர்த்தங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது திறந்தவெளி பகுதிகளான நெல் வயல்கள், தேயிலை தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி நீர்நிலைகள் போன்றவற்றை தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

சுழிபுரம் பறளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நகையும், பணமும் திருட்டு

வியாழன், 17 மார்ச், 2022

யாழ். சுழிபுரம் – பறளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்16-03-2022அன்றிரவு நகையும் பணமும் களவாடப்பட்டுள்ளது.16-03-2022அன்று குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்களின் கழுத்தில் 
வாளினை வைத்து மிரட்டி ஒரு பவுண் சங்கிலி, 
அரைப்பவுண் தோடு, அரைப்பவுண் மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திருட்டு சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - சுழிபுரம் பறளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நகையும், பணமும் திருட்டு

நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவு உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

திங்கள், 14 மார்ச், 2022

இலங்கையில் வரலாற்றில் முதன்முறையாக இன்று 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை இலங்கையில் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 கரட் தங்கம் 51,600 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், 22 கரட் தங்கம் 48,200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.
அத்துடன், கடந்த ஆண்டு ஜுலை மாதம் இலங்கை சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை செய்கூலியுடன் சேர்த்து 124000 ரூபாவை
 கடந்திருந்தது.
இலங்கையில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைய ஆரம்பித்ததை தொடர்ந்தே தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக
 அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நாடும் கடும் பொருளாதார நெருக்கடியை அடைந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவு உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

இலங்கையில் பேருந்து கட்டணமும் அதிகரித்தது

இலங்கையில்புதிய பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால்.14-03-2022. இன்று இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இலங்கையில் தற்போது ஆகக்கூடிய பேருந்து கட்டணமாக 1303 முதல் 1498 ரூபா வரை காணப்படுகின்றது.  

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் பேருந்து கட்டணமும் அதிகரித்தது

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

ஞாயிறு, 13 மார்ச், 2022

நாட்டில் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட செய்தியல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
“அனைவரும் படிக்க வேண்டிய பொலிஸ் செய்தி – பொருளாதார நெருக்கடியில் ஜாக்கிரதை” என 22 விடயங்கள் உள்ளடக்கப்பட்டு, இறுதியில் அவதானமாக இருங்கள் – பொலிஸ் திணைக்களம் என இந்த போலி தகவல் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அவ்வாறான செய்தி எதுவும் வழங்கப்படவில்லை எனவும், பொலிஸார் ஒரு விடயம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்க விரும்பினால், ஊடகப் பிரிவிலிருந்து ஊடக அறிவித்தலை வெளியிடுவதாகவும் அலுவலகம் 
இந்த போலி செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்தி வரும் ஊடகப் பேச்சாளர் அலுவலகம், போலி செய்திகளை வெளியிட்ட நபர்களை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

இலங்கைவாழ் மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்த அவசர எச்சரிக்கை

 

உங்கள் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறும் போது உப்பை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்ற தகவல் வேகமாக பரவி வருவதால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இதுவொரு உண்மைக்குப் புறம்பான கூற்று என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் பிரதம ஊட்டச்சத்து நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ 
தெரிவித்துள்ளார்.
உடலில் வியர்வை அதிகமாக வெளியேறும் போது உப்பை அதிகம் உட்கொள்ள வேண்டும் என கட்டுக்கதை பரவி வருவதாகவும் அவற்றினை நம்ப வேண்டாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு மட்டுமே 
போதுமானது.
வீட்டிற்கு கொண்டு வரும் உப்பின் அளவை குறைத்தால் தேவையில்லாமல் உடலில் சேரும் உப்பு குறையும் என ரேணுகா ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். இதனால் கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம். உடலுக்கு அதிகளவில் உப்பை சேர்த்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கைவாழ் மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்த அவசர எச்சரிக்கை

இலங்கையில் அதிகரித்த எரிவாயு சிலிண்டரின் விலை

சனி, 12 மார்ச், 2022

நாட்டில் 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தது 750 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச எரிவாயு விலை உயர்வு, கப்பல் போக்குவரத்து செலவு அதிகரிப்பு மற்றும் டாலர் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்களின் வட்டாரங்கள் 
தெரிவித்தன.
இந்நிலையில் தற்போது, ​ஒரு எரிவாயு மெட்ரிக் தொன் ​​900 டொலராக உய ர்ந்துள்ளது மற்றும் கப்பல் செலவுகள் 31% அதிகரித்துள்ளன. இதன் காரணமாகவே எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி தற்போது 2750 ரூபாவாக உள்ள 12.5 எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3500 ரூபாவுக்கு மேல் அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை எரிவாயு விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப் படவில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் அதிகரித்த எரிவாயு சிலிண்டரின் விலை

யாழ் நல்லூரில் தொன்மை வாய்ந்த மந்திரி மனையில் திருட்டு

வெள்ளி, 11 மார்ச், 2022

யாழில் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன.மந்திரி மனை என்பது இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரச காலத்தோடு சம்மந்தப்படும் 
ஒரு கட்டடமாகும்.
போர்த்துக்கேயரால் யாழ்ப்பாண அரசு கைப்பற்றப்படுவதற்க முன்னுள்ள காலப்பகுதி வரை அமைச்சரின் இருப்பிடமாக இருந்துள்ளது. இது 13 நூற்றாண்டுக்கு முற்பட்டது. இக் கட்டடம் செங்கட்டி சுண்ணாம்பு சாந்து மரங்கள் ஓடுகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






READ MORE - யாழ் நல்லூரில் தொன்மை வாய்ந்த மந்திரி மனையில் திருட்டு

நாட்டில் டீசல் பெற்றோல் விலை திடீர் அதிகரிப்பு

வியாழன், 10 மார்ச், 2022

நாட்டில் லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது.இதன்படி, அனைத்து விதமான டீசல் மற்றும் பெற்றோலின் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம்
 தீர்மானித்துள்ளது.
அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலின் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.இந்த விலை உயர்வானது, இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் 
அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் டீசல் பெற்றோல் விலை திடீர் அதிகரிப்பு

இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

புதன், 9 மார்ச், 2022

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது..இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அனுமதிப்பத்திரமுடைய அனைத்து வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு அறிவித்தல் ஒன்றை 
வெளியிட்டுள்ளார்.
அதில், தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்காக, மத்திய வங்கியினால் டொருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நெகிழ்வுத் தன்மைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி.08-03-2022. அன்றைய தினம் 225 ரூபா 20 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 229 ரூபா 99 சதமாகவும் 
பதிவாகி இருந்தது.
இதற்கமைய, வெளிநாட்டுப் பணியாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் அமெரிக்க டொலருக்காக வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 8 ரூபா மேலதிக கொடுப்பனவுடன், அவர்களுக்கு டொலர் ஒன்றுக்காக 238 ரூபா 
அளவில் கிடைக்கும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

செவ்வாய், 8 மார்ச், 2022

இன்றைய தினமும்(8) சில வலயங்களுக்கு ஏழரை மணிநேரம் மின்துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்தத் துண்டிப்பு காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு 
உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிக்கப்படவுள்ளது.
P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின் துண்டிக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.


இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் அத்தியாவசியமற்ற 600 பொருட்களுக்கான இறக்குமதி தடை குறித்த செய்தி

 

அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கிய பட்டியல்.07-03-2022. அன்று  அமைச்சரவைக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.இதற்கு அமைச்சரவைப் பரிந்துரை கிடைத்தவுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் 
என்றும் அவர் கூறினார்.
தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு மத்திய வங்கி பரிந்துரைத்த நிலையில் 600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை நிறுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நுகர்வோர் பொருட்களின் இறக்குமதிக்கான செலவு 2020 இல் 3401.66 மில்லியன் டொலரில் இருந்து 2021 இல் 3848.71 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் அத்தியாவசியமற்ற 600 பொருட்களுக்கான இறக்குமதி தடை குறித்த செய்தி

நாட்டு வாழ் மக்களுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள மகிழ்சியான செய்தி

ஞாயிறு, 6 மார்ச், 2022



இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகதெரிவித்துள்ளது.நாட்டிற்குத் 
தேவையான எரிபொருள் தற்
போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க (Sumith Wijesinghe) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,நாட்டில் ஏற்கனவே கப்பலில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அவற்றுக்கான டொலர் செலுத்தப்பட்டுள்ள நிலையில் 
எரிபொருட்களை இறக்கும்
செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது.வீணான அச்சம் காரணமாக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தேவையில்லையென நாட்டு மக்களுக்கு அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகன சாரதிகள் நீண்ட நேரம் காத்திருந்து எரிபொருள்களைப் பெற்றுக்கொண்டமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டு வாழ் மக்களுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள மகிழ்சியான செய்தி

மாத்தறை வெல் பாலம் இடிந்து விழுந்ததில் மக்களுக்கு ஏற்பட்ட நிலை

சனி, 5 மார்ச், 2022

மாத்தறை புறா தீவுக்கு செல்லும் ‘வெல் பாலம்’ அண்மையில் இடிந்து விழுந்தது.பாலம் இடிந்து விழுந்ததில் மக்கள் பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என நேரில் பார்த்தவர்கள் 
தெரிவித்தனர்.
கடலின் குறுக்கே கட்டப்பட்ட இடிந்து விழுந்த பாலத்தில் இருந்து தீவுக்கு மக்கள் உதவுவதை வீடியோ காட்சிகள் 
காட்டுகிறது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - மாத்தறை வெல் பாலம் இடிந்து விழுந்ததில் மக்களுக்கு ஏற்பட்ட நிலை

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

வெள்ளி, 4 மார்ச், 2022

நாட்டில் இன்றையதினமும் சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு நடைமுறையிலிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில்.04-02-2022 காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 5 மணி நேரமும், மாலை 6 மணி 
முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி நாடுமுழுவதும்
 ஏற்படும் மின்தடை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்கள் கருத்தறிதல் விசாரணையில் மின்சார சபையின் 15 சாட்சிகள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
 தெரிவித்துள்ளது.
குறித்த நடைமுறையானது இலங்கையில் முதன்முறையாக இடம்பெற்றதுடன், இதன் அடுத்த விசாரிப்பு எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும், நேற்றிரவு கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


READ MORE - நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் நாள் தோறும் 8 மணித்தியாலங்கள் மட்டுமே மின் வழங்கப்படும்

வியாழன், 3 மார்ச், 2022

நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மாதம் பருவப்பெயர்ச்சி மழை ஏற்படாவிட்டால் இவ்வாறு நீண்ட மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என தெரிவித்துள்ளனர். தற்போதைய மின்சாரப் 
பிரச்சினைக்கு ஒரே தீர்வு
தேவையற்ற மின் குமிழ்களை பயன்படுத்துவதனை தவிர்ப்பதேயாகும் என குறிப்பிட்டுள்ளனர். மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதில் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுத்தாலும் பாரியளவில் 
செலவினை

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் நாள் தோறும் 8 மணித்தியாலங்கள் மட்டுமே மின் வழங்கப்படும்

நாட்டில் நாளைய தினமும் மின்வெட்டு.மணித்தியாலம் தொடர்பான அறிவிப்பு

புதன், 2 மார்ச், 2022

நாடளாவிய ரீதியில் நாளை சுழற்சி முறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை காலை 8 மணித்தொடக்கம் மாலை 6 மணி வரையிலான
 காலப்பகுதிக்குள்
5 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அத்துடன், மாலை 6 மணித்தொடக்கம் இரவு 11 மணி வரையிலான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 
குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள தவறான நிதியியல் கொள்கையை மேலும் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் நிலைமை இன்னும் மோசமாகி, எதிர்வரும் நாட்களில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேர மின்வெட்டுக்கு வழிவகுக்கும் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு டொலருக்கு
நிகரான ரூபாவின் பெறுமதி எவ்வளவு அதிகரித்தாலும் ரூபாவின் பெறுமதியைச் சுதந்திரமாகப் பெற அனுமதிப்பதே தீர்வாகும் என பொதுப் பயன்பாட்டு ஆணையம் தலைவர் ஜனக ரத்நாயக்க
 கூறியுள்ளார். 
எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதால் சுமார் 700 மெகாவோட் மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படாமையே மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும்,
அரசாங்கத்திடம் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டாம் எனக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்படுத்தப்படும் இவ்வாறான மின்வெட்டு நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாதகமாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் இன்றைய தினமும் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் நாளைய தினமும் மின்வெட்டு.மணித்தியாலம் தொடர்பான அறிவிப்பு

யாழில் நடைபெற்ற உலக சாதனைக்கான தெரிவுப் போட்டிகள்

செவ்வாய், 1 மார்ச், 2022

இருவேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் யாழ்.உரும்பிராய் இந்துக்கல்லூரி மண்டபத்தில்.28-02-2022. அன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலை நாட்டுவதற்கான தெரிவுப்போட்டி மற்றும் தனிநபர் புயப்போன்ற போட்டிகள்
 இடம்பெற்றுள்ளது.
தமிழர்களின் புராதன கலைகளில் ஒன்றான சிலம்பு சுற்றுதலில் கின்னஸ் சாதனை நிலைநாட்டும் முகமாக முதற்கட்டமாக உலக சாதனையை நிலைநாட்டும் தெரிவுப் போட்டி 8 நாடுகளை உள்ளடக்கி ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போட்டியின் விதிமுறையாக மூன்று மணித்தியாலங்கள் இடைவிடாது சிலம்பு சுற்றுவதோடு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒவ்வொரு மணித்தியாலமும் ஒவ்வொரு படிமுறைகளில் சிலம்பு சுற்றுதல் வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 14 போட்டியாளர்கள் பங்குபற்றினார்கள்.
தனிநபர் புயப் போட்டிக்காக இரண்டு மாணவர்கள் பங்குபற்றிய நிலையில் வவுனியாவைச் சேர்ந்த 8 வயது மாணவன் 4 நிமிடம் 30 வினாடிகளில் 390 புயப்புக்களை மேற்கொண்டுள்ளார். குறித்த போட்டி நிகழ்வுகள் யாவும் மெய்நிகர் வழியின் ஊடாக இடம்பெற்றமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




READ MORE - யாழில் நடைபெற்ற உலக சாதனைக்கான தெரிவுப் போட்டிகள்