நாட்டில் பல இடங்களில் இன்று 5 மணி நேர மின்வெட்டு அமுலாக்கம்.

திங்கள், 28 பிப்ரவரி, 2022

இன்றைய தினமும் திட்டமிட்ட சுழற்சி முறையிலான மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்க‍ை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கமைவாக A,B,C ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை 4 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

ஏனைய பகுதிகளில் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 9.45 மணிவரை 5 மணிநேரம் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள மின் துண்டிப்பை குறைந்தது மூன்று மாத காலத்திற்கு மேற்கொள்ள வேண்டி நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி பிரதேசங்களில் காணப்படும் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு மிகவும் குறைந்து காணப்படுவதாகவும் அந்தப் பகுதிகளில் தற்போது உள்ள நீர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கே மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமானதாக உள்ளதாகவும் 
மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
அதற்கிணங்க மீண்டும் மழை வீழ்ச்சி ஏற்பட்டு மேற்படி நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு மட்டம் அதிகரிக்கும் வரை தொடர்ச்சியாக மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும். மேற்படி பகுதிகளில் தற்போது எதிர்பார்க்கும் மழை வீழ்ச்சியை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்வரும் மே மாதம் அளவிலேயே மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமையும் 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் பல இடங்களில் இன்று 5 மணி நேர மின்வெட்டு அமுலாக்கம்.

நாட்டில் அரச தனியார் தொழிலாளர்களின் வேலை மணித்தியாலங்களில் மாற்றம்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானத்துள்ளது. டொலர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான யோசனையொன்றை ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த யோசனையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார். அரச வங்கிகள் இரண்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்து கடன் வழங்கினால், வங்கிகள் இரண்டின் வீழ்ச்சியை தடுப்பது கடினமாகிவிடும்.
அந்த இரண்டு வங்கிகளிடமிருந்தும் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்குவதை உடனடியாக நிறுத்தவும் மத்திய வங்கி யோசனை முன்வைத்துள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கும் செலுத்த வேண்டிய கடன் தொகை 56 ஆயிரம் கோடி ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கூட்டுத்தாபனத்திற்கு மேலும் கடனுதவி வழங்கினால் இரண்டு வங்கிகளும் வீழ்ச்சியடைவதற்கும் 
பொருளாதாரத்தில்
பாரிய நெருக்கடிக்கும் வழிவகுக்கும் என்பதால், உடனடியாக மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எரிபொருள் விற்பனையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தைக் குறைப்பதற்காக எரிபொருள் விலையை அதிகரிக்குமாறும் மத்திய வங்கி அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளது. வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, 
மணிநேரத்தை
அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானத்துள்ளது. இதன்படி, நிறுவனங்களின் செயற்பாடுகளை காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 5.30 மணிவரை தொடரவும் யோசனைகள முன்வைக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வேலை செய்வதற்கும் முன்னதாக வீட்டிற்குச் செல்லும் திட்டத்தையும் மத்திய வங்கி பரிந்துரைத்துள்ளது. தனிப்பட்ட
வாகனங்கள் பயன்படுத்துவதை குறைத்து பொதுப் போக்குவரத்தில் மக்களை திருப்பிவிடவும் மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, ஏற்பட்ட நெருக்கடி நிலை மற்றும் எரிபொருளை சிக்கமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் பாரிய ஊடகப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறும் மத்திய வங்கி முன்வைத்துள்ள யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் அரச தனியார் தொழிலாளர்களின் வேலை மணித்தியாலங்களில் மாற்றம்

நாட்டில் நாளை மின்தடை மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பானா செய்தி

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நாட்டில் நாளை மற்றும் நாளை மறுதினம் நாடு முழுவதும் இரவு வேளையில் மின் தடை மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
எனினும், பகல் நேரங்களில் A,B,C ஆகிய வலயங்களுக்கு 3 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.ஏனைய வலயங்களுக்கு உட்பட்ட இடங்களில், 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை
 மேலும் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் நாளை மின்தடை மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பானா செய்தி

நாட்டில் தொடரும் மின்வெட்டு நேரம் தொடர்பான தகவல் வெளியானது.

வியாழன், 24 பிப்ரவரி, 2022

சுழற்சி முறையில் இன்றைய தினமும் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
இதன்படி, இன்றைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும். ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்
 குறிப்பிட்டுள்ளார்..
                                                                                                                                                                
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் தொடரும் மின்வெட்டு நேரம் தொடர்பான தகவல் வெளியானது.

நாட்டில் மீண்டும் நாளையும் மின்வெட்டு உத்தியபூர்வ செய்தி

புதன், 23 பிப்ரவரி, 2022

நாளைய தினமும் சுழற்சி முறையில் நான்கு மணித்தியாலங்களுக்கு அதிக காலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க
 தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மின்சாரத்தை உற்பத்தி செய்ய நாளாந்தம் சுமார் 4,000 மெட்ரிக் டன் எரிபொருள் தேவைப்படுகிறது. 22-02-2022.அன்று  இரண்டாயிரம் மெட்ரிக் டன் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் 550 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுத்தப்பட்டன.
நாளைய எரிபொருள் தேவை 4,000 மெட்ரிக் டன் ஆகும். எனினும், 1,000 மெட்ரிக் டன் மட்டுமே கையிருப்பில் உள்ளது.இதன்படி நாளைய தினம் 3,000 மெட்ரிக் டன் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படும்.அவ்வாறு பற்றாக்குறை ஏற்பட்டால் தேசிய மின் கட்டமைக்கு 750 மெகாவொட் மின்சார இல்லாது போகுமென பொதுப்பயன்பாடு ஆணைக்குழு தலைவர் 
மேலும் தெரிவித்தார்.
மின்வெட்டு அமுலாகும் பிரதேசங்கள் (வலயங்களின் அடிப்படையில்)
 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் மீண்டும் நாளையும் மின்வெட்டு உத்தியபூர்வ செய்தி

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிதுள்ளன

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலத்தில் 9 ஆயிரத்து 809 டெங்கு நோயாளர்களின் பதிவாகியுள்ளனர்.
கட்டுமானத் தளங்கள், பாடசாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள இடங்களாக
 கருதப்படுகின்றன.
40 முதல் 45 வீதமான கழிவுப்பொருட்கள் டெங்கு பரவுவதற்கு பங்களிப்பதாக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிதுள்ளன

நாட்டில் தீவிரமடையும் மின் நெருக்கடி 3 நேர பிரிவுகளாக மின் வெட்டு

இலங்கையில் மின்சார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அதற்கமைய இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. அதற்கமைய, மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 பிரிவுகளில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
நேற்றைய தினம் நாடு முழுவதும் 11 வலையமைப்புகளில் தலா 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. 541 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் மின் தடையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் 
ஆணைக்குழுவின்
தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “நேற்று இரவு அதிகபட்சமாக 2,150 மெகா வோட் மின்சார தேவை காணப்பட்டது. இரவு நேரத்தில் அதிகபட்ச மின் தேவை 2,700 மெகா வோட் வரை அதிகரிக்கலாம் என்பதால், அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தடையில்லா மின்சாரம் வழங்கும் நெருக்கடிக்கு மின்சாரம் தயாரிக்க தேவையான எரிபொருள் பற்றாக்குறையும் ஒரு காரணமாகும். மற்றொரு காரணம், நீர்மின் உற்பத்தி மிகவும் குறைவாக 
உள்ளமையாகும். காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 22 வீதமாகவும், சமனல ஏரியின் நீர்மட்டம் 32 வீதத்திலிருந்து 9 வீதமாகவும், மவுஸ்சாகலை 
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 45
வீதத்திலிருந்து 4 வீதமாகவும் குறைவடைந்துள்ளமை நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. ரன்னெகல நீர்த்தேக்கத்தில் மாத்திரம் 50 சதவீதத்திற்கும் அதிகமான நீர்மட்டம் காணப்படுகின்றது. இதனால், அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில் க
டும் நெருக்கடி 
ஏற்பட்டுள்ளது. 07 மின் உற்பத்தி நிலையங்கள் இன்னும் செயல்படவில்லை.
களனிதிஸ்ஸ சுழற்சி மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெப்தாவும் நேற்று இரவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், தற்போது ஒரு சில மின் உற்பத்தி நிலையங்களில் மாத்திரமே போதுமான எரிபொருள் இருப்பது நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் தீவிரமடையும் மின் நெருக்கடி 3 நேர பிரிவுகளாக மின் வெட்டு

நாடு முழுவதும் இன்று மின்வெட்டு வெளியான புதிய நேர அட்டவனை

திங்கள், 21 பிப்ரவரி, 2022

நாடு பூராகவும் சுழற்சி முறையிலான ஒரு மணித்தியால மின் வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.போதியளவிலான மின் உற்பத்தி
 இல்லாததால் இலங்கை
மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலான காலப்பகுதியில் தென்
மாகாணம் தவிர்த்த ஏனைய மாகாணங்களில் ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.மேலும், தென் மாகாணத்தில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரையிலான காலப்பகுதியில் 3 மணித்தியால மின் வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாடு முழுவதும் இன்று மின்வெட்டு வெளியான புதிய நேர அட்டவனை

தங்கங்கத்தின் விலைசர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளன

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1900 டொலர் வரையில் உயர்ந்து 8 மாத உயர்வை எட்டியுள்ளது.ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம், உலக நாடுகளில் அதிகரித்து வரும் பணவீக்கம், அமெரிக்கப்
 பெடரல் வங்கியின் வட்டி உயர்வு போன்ற காரணிகளினால் முதலீட்டாளர்கள் பெருமளவு தங்கத்தில் முதலீடு செய்த காரணத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 
இதன் காரணமாக  தங்கம் விலை சற்றும் எதிர்பார்க்காத வகையில் 1900 டொலர் வரையில் உயர்ந்து 8 மாத உச்சத்தை தொட்டுள்ளது.
முதலீட்டு சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளமையினால் தங்கம் வாங்க காத்திருப்போர் காத்திருந்து தங்கம் வாங்குவது சிறந்தது எனவும் நிபுனர்கள் 
கணித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





READ MORE - தங்கங்கத்தின் விலைசர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளன

நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகள் கோதுமை மா தட்டுப்பாடால் மூடப்படும் அபாயம்

கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகள் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் இரத்தினபுரி, கஹவத்தை, கொடகவெல, பல்லேபெத்த மற்றும் இறக்குவானை போன்ற பகுதிகளில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மா போன்ற பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பண்டங்களின் தரம் குறைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 
இந்நிலையில், நாட்டில் நடமாடும் பேக்கரி தயாரிப்பு விற்பனையாளர்களும் வேலையின்மை அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன்,நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் 
தேவையான மாவில் 75% மாத்திரமே பெறப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக 
கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் 
சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கோதுமை மாவுக்கான கட்டுப்பாட்டு விலையை விரைவில் அமுல்படுத்தி மாவின் விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




READ MORE - நாடளாவிய ரீதியில் உள்ள பேக்கரிகள் கோதுமை மா தட்டுப்பாடால் மூடப்படும் அபாயம்

இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும்

சனி, 19 பிப்ரவரி, 2022

அற்புதங்கள் நிறைந்த இந்த மூலிகையை எங்கு கண்டாலும் வீட்டுக்கு எடுத்திட்டு வந்துடுங்க காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி தொட்ட உடன் தன்னை சுருக்கிக் கொள்ளும். காந்த சக்தி உடைய மூலிகை என்று சித்தர்கள் 
தெரிவித்துள்ளனர்
. இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும்,
பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் 
இதன் இலையை
 அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். மூலநோய் நீங்கும்.
சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும்.தொட்டாற்சுருங்கி இலையையும், வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம்,
பவுத்திரம் போம். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்கு சூடு தாங்குமாறு இடுப்பின் மீது ஊற்ற இடுப்புவலி குணமாகும்.தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போல அரைத்து விரை வாதம், கை, கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகளுக்கு வைத்துக் கட்ட குணமாகும்

  இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


READ MORE - இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும்

யாழ் வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழாவில் தங்கச் சங்கிலிகள் அறுப்பு

புதன், 16 பிப்ரவரி, 2022

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது , ஐந்து பக்தர்களின் தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு 
செய்யப்பட்டுள்ளது.
வல்லிபுர ஆழ்வாரின் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா 15-02-2022.அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அதன் போது , ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களில் ஐந்து பேரின் தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளது. அவ்வாறு அறுக்கப்பட்ட ஐந்து தங்க சங்கிலிகளும் 8 அரை பவுண் நிறையடைய சுமார் 10 இலட்ச ரூபாய் பெறுமதியானது என பொலிஸார் 
தெரிவித்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - யாழ் வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழாவில் தங்கச் சங்கிலிகள் அறுப்பு

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் இரண்டு வாரங்களில் உயரும் சாத்தியம்

திங்கள், 14 பிப்ரவரி, 2022

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சின் அனுமதியை 
கோரியுள்ளது.
நிதி அமைச்சின் அதிகாரபூர்வ அனுமதி கிடைக்கப் பெற்றதும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரத்தில் லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த மாதம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 6.8 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் எரிபொருட்களின் விலைகள் இரண்டு வாரங்களில் உயரும் சாத்தியம்

நாட்டில் முக்கிய 4 பொருட்களுக்கு தட்டுப்பாடு: அரசாங்கத்தின் தீர்மானம்

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

இலங்கையில் இந்த முக்கியமான நான்கு வகையான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் நாட்டில், கோதுமை மா, பால் மா, எரிவாயு மற்றும் சிமெந்து ஆகிய 4 முக்கிய பொருட்களுக்கே தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 4 வகையான பொருட்களை தவிர, ஏனைய அனைத்து அத்தியாவசிய பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்குவதற்காக அரச தலைவரால் நியமிக்கப்பட்ட குழு, முதல் தடவையாக குழுவின் தலைவரும், நிதி அமைச்சருமான 
பஷில் ராஜபக்ஷ (Basil Rajapaksa)
தலைமையில் நிதி அமைச்சில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (11-02-2022) கூடி, விடயங்களை ஆராய்ந்துள்ளது.இதேவேளை, பொருளொன்றின் விலை, மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபட்டதாக காணப்படுகின்றமையினால், பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதன்போது,
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், 
‘விலைப் பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயப்படுத்தப்படவேண்டும்’ என்ற சட்டம் தற்போது நாட்டிற்குள் அமுலாகவில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறியுள்ளார்.
இதனால், வர்த்தகர்கள் தமது விருப்பத்திற்கு பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் அவர், நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர், அத்தியாவசிய பொருட்களின் விலைகளையேனும், காட்சிப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்குள் காணப்படுகின்ற அந்நிய செலாவணி பிரச்சினையானது, தற்காலிக பிரச்சினை என கூறிய நிதி அமைச்சர், அதனூடாக மக்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


READ MORE - நாட்டில் முக்கிய 4 பொருட்களுக்கு தட்டுப்பாடு: அரசாங்கத்தின் தீர்மானம்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

சனி, 12 பிப்ரவரி, 2022

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் சசிரங்க டி சில்வாவினால், இந்த மோட்டார் சைக்கிள் 
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மின்சார மோட்டார் சுமார் 4 மணிநேரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய வகையில்,120 கிலோமீற்றர் வரை பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த மோட்டார் சைக்கிளை 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சசிரங்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






READ MORE - இலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கவுள்ள முட்டையின் விலை

வியாழன், 10 பிப்ரவரி, 2022

கால்நடை தீவன விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம். பி. ஆர். அழகோன் 
குறிப்பிட்டுள்ளார்.
ஒரு முட்டையின் உற்பத்தி செலவை ஒப்பிடுகையில், தற்போதைய சந்தை விலையில் முட்டைகளை விற்க முடியாமல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் இது தொடர்பில் அதிகாரிகள் தலையிடவில்லை என்பதால், முட்டை உற்பத்தியில் ஈடுபடும் சிலர் அந்த தொழிலை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதற்கமைய ,எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை எட்டும் எனவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கவுள்ள முட்டையின் விலை

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

புதன், 9 பிப்ரவரி, 2022

நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி,  இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க
 தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்று மாலை 6 மணிமுதல் 10 மணிவரையான காலகட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





READ MORE - இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

உள்நாட்டுத் தயாரிப்பில் அறிமுகம் ஆகும் நான்கு சக்கர வாகனம்

இலங்கையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, நான்கு சக்கர வாகனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி 
வெளியிட்டுள்ளது
இந்த கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் 1.2 மில்லியன் ரூபா விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் எனவும், 200சிசி திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 814 கிலோ எடையை சுமந்து செல்லும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதாகவும்
 கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விரைவில் குறித்த கார் சந்தையில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணைச்செய்திகள் >>>



READ MORE - உள்நாட்டுத் தயாரிப்பில் அறிமுகம் ஆகும் நான்கு சக்கர வாகனம்

நாட்டுக்கு புலம்பெயர் நாட்டில் இருந்து அனுப்பும் ஒரு லருக்கும் 240 ரூபாய்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் கருத்து வெளியிட்ட 
அமைச்சர், வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் டொலர்களுக்கு குறைந்தபட்சம் 240 ரூபாய் செலுத்துமாறு 
திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும், எனது அமைச்சினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு “பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்” ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று வெளிநாடு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 15,000 அமெரிக்க டொலர் காப்பீடு வழங்குவதை கட்டாயமாக்கும் பணியும் நடந்து வருகிறது என அமைச்சர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டுக்கு புலம்பெயர் நாட்டில் இருந்து அனுப்பும் ஒரு லருக்கும் 240 ரூபாய்

திடீரென நாட்டில் அதிகரித்த உணவுப்பொருள் ஒன்றின் விலை

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் யோகட் ஒன்றின் விலை 55-60 ரூபா வரை அதிகரிக்க நேரிடும் என இலங்கை பால் சங்கத்தின் உப தலைவர் மஞ்சுள நிஷாந்த தெரிவித்துள்ளார்.இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக 2020ஆம் ஆண்டு 30 ரூபாவாக இருந்த யோகட்டின் விலை தற்போது 50 ரூபாவாக அதிகரித்துள்ள போதிலும் உற்பத்தியாளருக்கு இலாபம் இல்லை என மஞ்சுள நிஷாந்த தெரிவித்துள்ளார்.பால் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் யோகட் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - திடீரென நாட்டில் அதிகரித்த உணவுப்பொருள் ஒன்றின் விலை

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

நாட்டில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.இதற்கமைய,
 ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.121 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்று 124 ரூபா என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேநேரம், 92 எல்.பீ ரக பெட்ரோல் லீட்டரொன்றிற்கு 7 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில், 184 ரூபா என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, 95 ஒக்டென் ரக பெட்ரோல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 213 ரூபாவுக்கு 
விற்பனை செய்யப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




READ MORE - நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி குறித்து முக்கிய கோரிக்கை

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

பண்டிகைக் காலத்தின்போது, அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக 175 முதல் 200 மில்லியன் டொலர்கள் அவசியம் என்று இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள்,
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தை சந்தித்து, இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக, சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசியப்பொட்களை தாங்கிய சுமார் 1,500 கொள்கலன்கள் தேங்கியுள்ளன.எனினும் அவற்றை விடுவிப்பதற்கு இன்னும் டொலர்கள் வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று கூறிய அவர், வெளிநாடுகளில் உள்ள தங்களின் விநியோகஸ்தர்களுக்கு கொடுப்பனவுகளை செலுத்த அந்நிய செலாவணி கிடைக்க வேண்டும்.இல்லையெனில், வெளிநாட்டு விநியோகஸ்தர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்று நிஹால் செனவிரட்ன 
குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி குறித்து முக்கிய கோரிக்கை

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலையில் ஏற்பட்ட மாற்றம்

கால்நடை தீவன உற்பத்திக்காக சுமார் 100,000 மெட்ரிக்தொன் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, சோள இறக்குமதியின் மூலம் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்
 தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ரூ.25/- ஆக இருந்த முட்டையின் விலை ரூ.20/- ஆக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கோழி இறைச்சியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை, முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான தேவையும் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் தலைவரான அஜித் எஸ்.குணசேகர தெரிவித்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலையில் ஏற்பட்ட மாற்றம்