நாட்டில் 12 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்கள் அறிவிப்பு

திங்கள், 31 ஜனவரி, 2022

நாட்டில் டெங்கு பரவும் அபாயத்தில் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 81 பிரதேச செயலாளர் பிரிவுகளை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளம் கண்டுள்ளது.கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், புத்தளம், களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய

மாவட்டங்களில் கடுமையான டெங்கு அளவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஜனவரி மூன்றாம் வாரத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 411 பேரும், கம்பஹாவில் 305 பேரும், களுத்துறையில் 120 பேரும், குருநாகலில் 109
பேரும், புத்தளத்தில் 96 பேரும், காலியில் 83 பேரும், கண்டியில் 73 பேரும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த வருடத்தில் இதுவரை 7,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் 12 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்கள் அறிவிப்பு

நாட்டில் அடுத்த மாதம் மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

அடுத்த மாதம் அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சரான சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.இந்தியாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய கடன் எல்லையை பயன்படுத்துவதற்கான
ஏற்பாடு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் இறக்குமதிக்காக இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க முன்வந்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கடன் பத்திரங்களைத் திறப்பதற்காக மத்திய வங்கி 16 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவித்துள்ளதாகவும், அதனால் உடனடி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் அடுத்த மாதம் மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

நாட்டில் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் நேர அட்டவணை உள்ளே

சனி, 29 ஜனவரி, 2022

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
அனுராதபுரம் அவ்வப்போது மழை பெய்யும்
மட்டக்களப்பு அவ்வப்போது மழை பெய்யும்
கொழும்பு பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
காலி பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
யாழ்ப்பாணம் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கண்டி பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
நுவரெலியா அடிக்கடி மழை பெய்யும்
இரத்தினபுரி சிறிதளவில் மழை பெய்யும்
திருகோணமலை அவ்வப்போது மழை பெய்யும்
மன்னார் அடிக்கடி மழை பெய்யும்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


READ MORE - நாட்டில் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் நேர அட்டவணை உள்ளே

இலங்கையில் அதி உச்சத்தைத் தொட்ட சீமெந்தின் விலை

வெள்ளி, 28 ஜனவரி, 2022

நாட்டில் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டாலும், சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு சீமெந்தை தொடர்ந்தும் விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.பெரும்பாலான பகுதிகளில், சீமெந்து மூடையின் விலை 1,600 முதல் 1,800 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோரிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகள் காரணமாக, நுகர்வோர் அதிகார சபை, கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பாகங்களில், அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகளை
 முன்னெடுத்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் அதி உச்சத்தைத் தொட்ட சீமெந்தின் விலை

ஜோதிடத்தில் 30 வருடத்திற்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் 4 ராசிக்கு அதிர்ஷ்டம்

புதன், 26 ஜனவரி, 2022

ஜோதிடத்தில், நவகிரகங்களின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது ஒருவரின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கும். அதில் ஒன்பது கிரகங்களும் சீரான இடைவெளியில் ராசியை 
மாற்றுகின்றன.
இதில் நீதிமான் சனியின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒன்பது கிரகங்களில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியது. இது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற எடுத்துக் கொள்ளும் காலம் இரண்டரை 
வருடங்கள் ஆகும்.
சனி பெயர்ச்சி 2022அந்த வகையில் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். 30 வருடங்களுக்கு பிறகு சனி கும்ப ராசியில் சஞ்சரிக்கவுள்ளார். சனி ராசியை மாற்றுவதால், சில 
ராசிக்கு ஏழரை சனி தொடங்குவதோடு, சிலருக்கு அஷ்டம, அர்தாஷ்டம சனி 
ஆரம்பமாகிறது. சிலர் சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். 30 வருடங்களுக்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இப்போது பார்ப்போம்.
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல அற்புதமான வாய்ப்புக்கள் கிடைக்கும். வாழ்வில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் நிதி நிலை உயரும். புதிய வேலை கிடைப்பதற்கான வலுவான 
வாய்ப்புக்கள் உள்ளன. வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால், அதற்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். மேலும் இக்காலம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான
 காலம். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உங்கள் ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், 
இந்த சனி பெயர்ச்சியால் உங்களுக்கு அனைத்துவிதமான ஆடம்பரங்களும், சுகபோகங்களும் நிறைந்திருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வெளியூர் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு, 
அவர்களின் விருப்பம் நிறைவேறும். 
இக்காலத்தில் உங்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு அதிகமாக கிடைக்கும். மேலும் உங்கள் பணத்தை அதிகமாக சேமித்து வைப்பதற்கான 
வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். எப்போதும் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். நிலம், வீடு போன்றவற்றை வாங்குவதற்கு இது சிறந்த காலமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கப்படும்.
தொழிலதிபர்கள் தங்களின் வியாபாரத்தை பெருக்குவதற்கு சாதகமான காலமாக இருக்கும். புதிய தொழிலில் பணத்தை முதலீடு செய்ய நினைப்பீர்கள். மேலும் எவ்வித மரியாதையையும் இவர்கள் இழக்கமாட்டார்கள். சட்ட விஷயம் தொடர்பான முடிவுகள் இந்த ராசிக்காரர்களுக்கு 
சாதகமாக இருக்கும்.
தனுசுதனுசு ராசிக்காரர்கள் இந்த ஆண்டு சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதால் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மேலும் சனி பகவானின் சிறப்பான அருள் இந்த ராசிக்காரர்கள் மீது
 இருக்கும். பணியிடத்தில் நல்ல பதவி உயர்வு மற்றும் பண உயர்வுக்கான வலுவான வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான 
வாய்ப்புக்களும் உண்டு

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - ஜோதிடத்தில் 30 வருடத்திற்கு பின் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் 4 ராசிக்கு அதிர்ஷ்டம்

இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு அமுலில் அதன் நேர அட்டவனை

திங்கள், 24 ஜனவரி, 2022

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளின் காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில், நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45 மணி முதல் 
இரவு 09.30 மணி வரை ஒரு
மணி நேரமும், நாளை பிற்பகல் 01.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை இரண்டு மணி நேரமும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கத்தின் உறுப்பினர் எரங்க குடஹேவா இதனை தெரிவித்துள்ளார்.
புதிய இணைப்பு
சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பின்வரும் நேர அட்டவணைக்கு அமைவாக மின்துண்டிப்பு இடம்பெறும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது.
மின்தடை இடம்பெறும் நேரங்கள் A பிரிவு : 17:30 முதல் 18:30 வரை B பிரிவு: 18:30 முதல் 19:30 வரை C பிரிவு : 19:30 முதல் 20:30 வரை D பிரிவு: 20:30 முதல் 21:30 வரை முதலாம் இணைப்பு -இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளின் காரணமாக இன்று (24) இரவு மற்றும் நாளை (25) இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், நான்கு பிரிவுகளின் கீழ் இன்று மாலை 05.45 மணி முதல் இரவு 09.30 மணி வரை ஒரு மணி நேரமும், நாளை பிற்பகல் 01.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை இரண்டு மணி நேரமும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு அமுலில் அதன் நேர அட்டவனை

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் பின்னால் உள்ள வில்லங்கம்

சில தரப்புக்கள் கொமிஷன் பெறுவதற்காகவே அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நாமல் கருணாரத்ன, அரசாங்க தரவுகளின்படி தற்போது சந்தையில் தேவையான 
அரிசி கையிருப்பு
இருப்பதாக தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருடாந்தம் 3.7 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படுவதாகவும், 3.6 மெட்ரிக் தொன்கள் நுகர்வுக்காகவும், 100,000 தொன்கள் சாகுபடிக்காகவும் தேவைப்படுவதாக 
அவர் கூறினார்
அரச அமைப்புகளில் உள்ள தரவுகளின் அடிப்படையில், இலங்கை 2019 இல் 4.78 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியையும், 2020 இல் 5.03 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியையும், 2021 இல் மேலும் 4 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியையும் உற்பத்தி செய்துள்ளது.
எனவே, பெரும்போகத்தில் போதிய அறுவடை கிடைக்காவிட்டாலும், 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை தேவையான அரிசி கையிருப்பு நாட்டில் இருப்பதாக அவர் கூறினார்.உள்ளூர் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் கொமிஷன்களை பெறுவதற்காக மட்டுமே அரிசி 
கையிருப்பு இறக்குமதி
செய்யப்படுகிறது என்பது தெளிவாகிறது என மேலும் தெரிவித்தார்.எனவே மக்களே உள் நாட்டு விவசாயிகளையும் திரும்பி பாருங்கள். அவர்களுக்கும் உங்கள் ஆதரவை கொடுங்கள்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் பின்னால் உள்ள வில்லங்கம்

நீங்கள் இந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிட்டால் வறுமை ஏற்படலாம்

சனி, 22 ஜனவரி, 2022

பண்டைய வேதங்களின் படி மகிழ்ச்சியாக மற்றும் வெற்றிகரமாக வாழ்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது.இந்த விதிமுறைகள் பிரம்மாவாரதபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.
இந்த விதிமுறைகள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய உதவும். நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்ததராக இருந்தாலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாவிடில் உங்கள் செல்வமும், புகழும் விரைவில் அழிந்து விடும்.இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் ஏழ்மை ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை என்னென்ன என்று 
பார்க்கலாம்.
மனதில் கொள்ள வேண்டிய திகதிகள்:இந்து நாள்காட்டியின் படி ஆண்கள் அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி மற்றும் அஷ்டமி ஆகிய நாட்களில் எண்ணெய் குளியல் எடுத்து கொள்ளக்கூடாது, அதேசமயம் அசைவ உணவும் சாப்பிடக்கூடாது. சாஸ்திரங்களின் படி இது பாவச்செயலாகும்.தரையில் வைக்கக்கூடாத பொருட்கள்:தெய்வங்களின் சிலைகள் மற்றும் படங்கள், விளக்குகள், சிவலிங்கம், தங்கம், சங்கு போன்ற பொருட்களை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது.
ஒருவேளை இவற்றை தரையில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் தரையில் ஒரு துணியை விரித்து அதன்மீது வைத்து வழிபடவும்.விலகி இருக்க வேண்டிய நபர்கள்:சுகாதாரம் இல்லாதவர்களிடம் இருந்தும், கடுமையான குணம் கொண்டவர்களிடம் இருந்தும் எப்பொழுதும் விலகி இருக்க வேண்டும். இத்தகையவர்கள் உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதோடு ஏழ்மை மற்றும் அழிவையும் ஏற்படுத்தும்.
சூரிய அஸ்தமனம்:சூரியனும், சந்திரனும் மறையும் போது கண்டிப்பாக பார்க்கக்கூடாது. இது புனிதமற்றதாக கருதப்டுவதுடன் கண் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.வாக்குறுதி அளித்த 
நாளில் தானம் செய்யவும்:ஒரு குறிப்பிட்ட நாளில்
 தானம் செய்ய முடிவெடுத்தல் கண்டிப்பாக அந்த நாளில் தானம் செய்துவிட வேண்டும். தாமதமாக தானம் செய்வதால் உங்களுக்கு 
எந்த பலனும் கிடைக்காது.வெண்கல பாத்திரம்:வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி வெண்கல பாத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் குடிக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது. இது உங்கள் தொழிலில்
 நஷ்டத்தை ஏற்படுத்தும்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>






READ MORE - நீங்கள் இந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிட்டால் வறுமை ஏற்படலாம்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி! மீண்டும் மின் தடை

செவ்வாய், 18 ஜனவரி, 2022

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை இன்றைய தினத்துக்குள் வழங்காவிட்டால் பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம்
 தெரிவித்துள்ளது.
அனல் மின்நிலையங்கள் ஊடாகவே நாட்டின் அதிகளவு மின்சார தேவை பூர்த்தி செய்யப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.இன்று மாலை 5 மணி வரை மாத்திரம் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குவதற்குத் தேவையான டீசல்
 கையிருப்பில் உள்ளது.
இதன் காரணமாகப் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை சுமார் ஒன்றரை மணிநேர மின்சார துண்டிப்பை, ஏற்படுத்த நேரிடும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இன்று காலை முதல் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி! மீண்டும் மின் தடை

கேரளாவில் இறைச்சி வாங்க சென்ற பெண்ணுக்கு கிடைத்த பண மழை

திங்கள், 17 ஜனவரி, 2022

இந்தியாவின் கேரளாவில் இறைச்சி வாங்க சென்ற மனிதர் பனிரெண்டு கோடி ரூபாய்க்கு அதிபதியான ஆச்சர்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.முந்தின நாள் வரைக்கும் தினசரி வாழ்விற்கும் உணவிற்கும் கஷ்டபட்ட மனிதர்கள் அடுத்த நாளில் பெரிய கோடீஸ்வரர்கள் ஆக மாறுவது உண்டு. அதிலும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மட்ட மனிதர்களிடமும் பொருளாதார
 வீழ்ச்சி நிலவுகிறது.
தினக்கூலி வேலை செய்தவர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அய்மனானம் என்ற கிராமம் உள்ளது . அங்கு வாழ்ந்து வரும் பெயின்டிங் தொழிலாளி சதானந்தன்.16-01-2022.அன்று  காலையில் ஒரு லாட்டரி விற்பவரிடம் இருந்து கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி சீட்டு ஒன்றை
 வாங்கி உள்ளார்.
அன்றையதினம் அவர் சீட்டு வாங்கிய சில மணி நேரங்கள் கழித்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அதிர்ஷ்டக் குலுக்கலின் மூலமாக சதானந்தன் வாங்கியிருந்த லாட்டரி சீட்டுக்கு 12 கோடி பரிசு கிடைத்துள்ளது.இதுகுறித்து பரிசு வென்ற சதானந்தன் கூறுகையில்,
கடந்த 50 வருடங்களாக பெயின்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஞாயிற்றுக் கிழமை என்பதால் காலை இறைச்சி 
வாங்குவதற்காக அருகில் உள்ள சந்தைக்கு சென்றேன். அப்போது சரி ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கலாம் என லாட்டரி விற்பவரிடம் ஒரு சீட்டை வாங்கினேன். அது தற்போது என்னுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றியுள்ளது. என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


READ MORE - கேரளாவில் இறைச்சி வாங்க சென்ற பெண்ணுக்கு கிடைத்த பண மழை

நாட்டில் க.பொ.த உயர்தர புலமைப் பரிசில் பரீட்சைகளின் செய்தி

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

நாட்டில் கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாமல் போன புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இரண்டாயிரத்து 943 பரீட்சை நிலையங்களில் புலமைப் பரிசில் பரீட்சையை நடத்த நடவடிக்கைகள் 
எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் மார்ச் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இரண்டாயிரத்து 338 நிலையங்களில் உயர் தரப் பரீட்சை
 நடத்தப்படவுள்ளது.
இந்த பரீட்சைகள் நடக்கும் காலப் பகுதியில் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் க.பொ.த உயர்தர புலமைப் பரிசில் பரீட்சைகளின் செய்தி

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி அத்தியாவசியப்பொருட்கள் குறைந்த விலைகளில்

சனி, 15 ஜனவரி, 2022

இலங்கை மக்களுக்கான விசேட நிவாரணப் பொதியொன்றை வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.10 கிலோ சுப்பிரி சம்பா அரிசி உட்பட 20 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய
 இந்த நிவாரணப் பொதியை லங்கா சதொச நிறுவனத்தில் இருந்து 3998 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.வர்த்தகத் துறை அமைச்சரால் வழங்கப்பட்டுள்ள நிவாரணப் பொதியில்,சுப்பிரி சம்பா 10 கிலோ,ஒரு கிலோ வெள்ளை சர்க்கரை,ஒரு கிலோ சிவப்பு பருப்பு,ஒரு
 கிலோ இடியப்ப மா
500 கிராம் நெத்தலி,400 கிராம் நூடுல்ஸ்,400 கிராம் உப்பு,2 தேங்காய் பால் (330 மிலி பாக்கெட்),100 கிராம் மிளகாய் தூள்,மிளகு தூள் 100 கிராம்,100 கிராம் மசாளா தூள் ,100 கிராம் மஞ்சள்,100 கிராம் தேநீர்,80 கிராம் உடல் லோஷன்,சதோச சந்தன சோப்பு,100 மில்லி கை கழுவும் திரவம்
90 கிராம் சோயாமீட்,சதோச TFM தரப்படுத்தப்பட்ட சலவை சவர்க்காரம்,1 பைக்கற்று பப்படம்,10 முகக்கவசங்கள்,குறித்த பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி இன்று முதல் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு கிடைக்கும் என அமைச்சர் 
வலியுறுத்தினார்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




READ MORE - நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி அத்தியாவசியப்பொருட்கள் குறைந்த விலைகளில்

உங்கள் அனைவரின்இன்றய ராசி பலன் 14.01.2022

வெள்ளி, 14 ஜனவரி, 2022

பொதுவாக நமது வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று நம்மால் அறிந்துகொள்ள முடியாத விஷயம். இருந்தாலும் வேதங்களில் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் நாம் நாளைய பொழுது எப்படி இருக்கும் என்று நம்மால் ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். நமது நாளைய தினத்தின் சுப பலனை இன்று அறிவதன் மூலம் நம்மால் ஓராயிரம் பிரச்சனைகளை 
கையாள இயலும்.
நாளைய தினத்தின் சுப அசுப பலன்களை அறிந்து அதற்கேற்ப நாம் திட்டமிட பொதுவான நாளைய ராசி பலன்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள். நாளைய தினம் இனிமையான நாளாக இருக்க இந்த பதிவில் நாளைய ராசி பலன் பற்றி பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்தறியலாம்.
மேஷம்:மேஷ ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமாக இருக்காது. சில நேரத்தில் நம்பிக்கையின்றி காணப்படுவீர்கள். நாளைய நாள் சாதகமாக அமைய அனுசரித்து செல்ல வேண்டும். நாளை பணிச்சுமை அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையுடன் பொறுமையாக இருப்பது நல்லது. நாளை நிதிநிலைமை நன்றாக இருக்காது. நாளை தாயின் உடல்நலத்திற்காக கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
ரிஷபம் :ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு நாளைய நாள் ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்த நாள். நாளை வெளிப்பயணம் மேற்கொள்வீர்கள். நாளை உங்களுடைய செயல்களை மேற்கொள்ளும் போது பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்கவும். வீட்டில் இருக்கக்கூடிய மூத்தவர்களின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். மனதில் உள்ள எதிர்மறையான எண்ணங்கள் காரணமாக வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை பணவரவு நன்றாக இருக்காது. நாளை தொண்டை வலி
 ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம்:மிதுனம் ராசிக்காரர்கள் நாளைய தினம் மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தையில் கவனம் தேவை. பணியிட சூழல் நன்றாக இருக்காத. வேலையை பொறுத்தவரை திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்ப பிரச்சனை காரணமாக வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக 
வைத்துக்கொள்ளலாம்.
கடகம்:கடக ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் நம்பிக்கைக்குரிய நாளாக இருக்கும். புதிய தொடர்புகளுக்கும் புதிய நட்பிற்கும் நாளை வாய்ப்புள்ளது. பணியிடத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும். இதனால் மனதில் மகிழ்ச்சி கிடைக்கும். வாழ்க்கை துணையின் உறவில் சமநிலை காணப்படும். நாளை பணவரவு அதிகமாக காணப்படும். நாளை மிகுந்த ஆற்றலுடன் இருப்பதால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
சிம்மம் :நாளை உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள்.நாளை சிறிய முயற்சிகள் கூட உங்களுக்கு சாதகமாக இருக்கும். நாளை கிடைக்கும் புதிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையுடன் நேர்மறை எண்ணங்களை பகிர்ந்துகொள்வீர்கள். நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். நாளை ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.
கன்னி:கன்னி ராசிக்காரர்களுக்கு நாளைய நாளில் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும். பணியிட சூழல் நாளை சவால் நிறைந்ததாக இருக்கும். உங்களுடைய செயலிற்கும் அங்கீகாரம் கிடைக்காது. வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நாளை அதிகமாக செலவுகள் இருக்கும். நாளை ஆரோக்கியத்தில் முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
துலாம்:துலாம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். நாளை பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். நாளை பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்படும். வாழ்க்கை துணையுடன் அகந்தை போக்கினை காண்பிப்பீர்கள். உங்களுடைய குடும்ப வளர்ச்சிக்காக பணத்தை செலவு செய்வீர்கள். ஒவ்வாமை காரணமாக தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன.
விருச்சிகம்:விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் அதிக அளவில் பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆன்மீக ஈடுபாடு மனதிற்கு ஆறுதலை கொடுக்கும். பணியில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும்.பணியிட சூழல் நன்றாக இருக்கும். வாழ்க்கை துணை இருவரிடம் நல்ல புரிதல் உணர்வு காணப்படும். நாளை சேமிப்பு அதிகமாக இருக்கும். உங்கள் தைரியம் மற்றும் மன உறுதி காரணமாக நாளை முழு ஆரோக்கியத்துடன் 
காணப்படுவீர்கள்.
தனுசு:தனுசு ராசிக்காரர்கள் நாளைய நாளில் உங்கள் முயற்சிகளின் வளர்ச்சி சாதகமாக இருக்கும். பணியிடத்தில் பணிகளை நேர்மையாக செய்வீர்கள். வாழ்க்கை துணையுடன் உணர்வு நேர்மை காணப்படும். நாளை திடீர் பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நாளை திடமாகவும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.
மகரம்:மகரம் ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் சாதகமான நாளாக இருக்காது. நாளை பணிகளை செய்யும் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பணியிடத்தில் கவனம் தேவை. வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொள்வீர்கள். நாளை பணவரவு மனதிற்கு திருப்தி கிடைக்காது. பாதுகாப்பற்ற உணர்வின் காரணமாக பதட்டம் 
காணப்படும்.
கும்பம்:கும்பம் ராசிக்காரர்கள் நாளைய நாளில் உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். நாளை மகிழ்ச்சி குறைந்து காணப்படும். நாளை பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக பணியாற்ற வேண்டும். நாளை மந்தமாக உணர்வீர்கள். நாளை பணவரவு மகிழ்ச்சியை கொடுக்கும். நாளின் இறுதியில் தேவையில்லாத செலவுகளை சந்திப்பீர்கள். நாளை மனதில் ஆற்றல் குறைவாக இருப்பதன் காரணமாக நீங்கள் வலுவிழந்து காணப்படுவீர்கள். தூக்கமின்மை உங்களை
 பாதிக்கும்.
மீனம்:மீனம் ராசிக்காரர்கள் நாளைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. நடக்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியை கொடுக்கும். நாளை கடினமான பணிகளை கூட எளிமையாக முடிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். வாழ்க்கை துணை இருவரிடம் நல்ல புரிதல் உணர்வு காணப்படும். நாளை பணவரவு அதிகமாக காணப்படும். நாளை மனதில் மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் இருப்பதால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - உங்கள் அனைவரின்இன்றய ராசி பலன் 14.01.2022

யாழ் மீசாலை அல்லாரை கிராமத்தில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய மலைப்பாம்பு

வியாழன், 13 ஜனவரி, 2022

யாழ் தென்மராட்சியின் மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது..13-01-2022.
இன்று காலை அல்லாரை பகுதியில் உள்ள வீட்டில் சேவல் ஒன்றை மலைப்பாம்பு பிடித்துள்ளது.
சேவல் கத்தும் சத்தத்தினை கேட்ட வீட்டிலிருந்தவர்கள் சென்று பார்த்த போது மலைப்பாம்பு சேவலை விழுங்க 
முற்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் பெரும் முயற்சி செய்து பாம்பை பிடித்து கட்டியுள்ளனர். கிராமத்துக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் 
ஏற்படுத்தியுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>








READ MORE - யாழ் மீசாலை அல்லாரை கிராமத்தில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய மலைப்பாம்பு

நாட்டில் மின் தடை தொடர்பில் இனி அச்சப்படத் தேவையில்லை

புதன், 12 ஜனவரி, 2022

நாட்டில்.12-01-2021.இன்று மின் வெட்டு ஏற்படாது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் பழுதடைந்த மின் பிறப்பாக்கி பழுதுபார்க்கப்பட்டுள்ளதால் இன்று மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னதாக நாட்டின் சில பகுதிகளில் -12-01-2012.இன்று முதல் மின்சாரம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையிலேயே சற்று முன்னர் பழுதடைந்த இயந்திரம் சரி செய்யப்பட்டுள்ளதால் மின்சாரம் தடைப்படாது என்று
 தெரிவிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் மின் தடை தொடர்பில் இனி அச்சப்படத் தேவையில்லை

நாட்டில் நாளை சில பிரதேசங்களில் 5மணி வரை மின்சாரம் துண்டிப்பு.

செவ்வாய், 11 ஜனவரி, 2022

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி நாளை (12) ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் 
சில பிரதேசங்களில்
மின்சாரம் தடைப்படும்.வவுனியா பிரதேசத்தில் அரசன் அரிசி ஆலை, வைரவப் புளியங்குளம், ஆதி விநாயகர் கோவிலடி, றம்பைக்குளம், மகாபகல அளுத்வத்த, புபுதுகம, குருக்களூர் மன்னார் வீதி, 
முகத்தான்குளம் 1
ஆவது பண்ணை ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் நாளை சில பிரதேசங்களில் 5மணி வரை மின்சாரம் துண்டிப்பு.

நாட்டில் வசிக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நாட்டில் எதிர்வரும் நாட்களில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கோழிப் பண்ணை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர 
தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவனம் கிடைக்காததால் முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். கால்நடை தீவனம் விரைவில் வழங்கப்படாவிட்டால் தட்டுப்பாட்டு நிலையை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் கோழி இறைச்சிக்கு அதிக கிராக்கி இருந்ததால் விலையும் வேகமாக உயர்ந்தது. எவ்வாறாயினும், தேவை குறைவடைந்ததன் காரணமாக கோழி மற்றும் முட்டையின் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டில் வசிக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

யாழில் .லட்சம் ரூபாக்குமேல் பணத்தை உரிமையாளரிடம் சேர்ப்பித்த மாணவன்

செவ்வாய், 4 ஜனவரி, 2022

ருநெல்வேலி- யாழ்ப்பாணம் வீதியில் கிடந்து கண்டெடுத்த 137,000 ரூபா பணத்தினை உரிமையாளரிடம் சேர்ப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் மாணவர்களான பிரதீபன் மற்றும்
ஜெயதர்ஷனிற்கு பலரும் பாராட்டு,

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - யாழில் .லட்சம் ரூபாக்குமேல் பணத்தை உரிமையாளரிடம் சேர்ப்பித்த மாணவன்

நாட்டு மக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் கிடைக்கவுள்ள வாய்ப்பு

திங்கள், 3 ஜனவரி, 2022

நாட்டில் வருடத்தின் முதலாவது எரிகல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று கிடைக்கவுள்ளது.இன்று நள்ளிரவு முதல் இந்த வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் 
தெரிவித்துள்ளது.
மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆதர் சி க்ளார்க் மையத்தின் சிரேஷ்ட நிபுணர் ஜனக்க அடஸ்சூரிய தெரிவித்தார்.நாளை அதிகாலை 2 மணிக்கு அதனை மேலும் தெளிவாக அவதானிக்க முடியும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெளிவாக பார்வையிட முடியும் என்பதுடன், தெளிவான வானிலை நிலவும் பகுதிகளிலும் எரிகற்கள் வீழ்ச்சியினை காண முடியும் என சிரேஷ்ட நிபுணர் ஜனக்க அடஸ்சூரிய
 தெரிவித்தார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



READ MORE - நாட்டு மக்களுக்கு இன்று நள்ளிரவு முதல் கிடைக்கவுள்ள வாய்ப்பு