வடமராட்சியில் மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை புள்ளி சுறா

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் மீனவர் வலையில் பிடிபட்ட அரியவகை ராட்சத புள்ளி சுறா மீன் கடலுக்குள் விடப்பட்டது.
கட்டைக்காடு பகுதியில் கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையிலேயே மிகப் பெரிய கோமராசி மீன் ஒன்று அகப்பட்டுள்ளது. சுமார் 8 அடி நீளம் கொண்ட இந்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டி இழுத்து வந்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >



READ MORE - வடமராட்சியில் மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை புள்ளி சுறா

நாட்டில் ஒரு கிலோ மஞ்சள் தூள் 6000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது

வியாழன், 16 செப்டம்பர், 2021

சந்தைகளில் தற்போது ஒரு கிலோ மஞ்சள் தூள் 6000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நுகர்வோர் தற்போது பெரும் அவல நிலையை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே 
தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் 50 மற்றும் 100 கிராமில் மஞ்சள் தூளை வாங்குகிறார்கள், அதன்படி அவர்கள் சுமார் 100 முதல் 600 ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது.
சில நிறுவனங்கள் 20 கிராம் மஞ்சள் தூளை சுமார் 170 ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், அரசு இதில் கவனம் செலுத்தி மக்களுக்கு குறைந்த விலையில் மஞ்சள் தூளை வழங்கு திட்டத்தை வகுக்க வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் ஒரு கிலோ மஞ்சள் தூள் 6000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது

நாட்டில் இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பின் செய்தி

திங்கள், 13 செப்டம்பர், 2021

நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கையை சனிக்கிழமை நாட்களில் மேற்கொள்வதை நிறுத்துவதற்கு எரிபொருள் விநியோகக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை காணப்படுவதாக வணிக சேவை தொழிற்சாலை மற்றும் முற்போக்கு சேவை சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார் தெரிவித்தார். தமது தொழிற்சங்கம் ஆரம்பித்திருக்கும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்பாக 
அவர் தொடர்ந்து
தெரிவிக்கையில்,கொவிட் -19 நிலைமையை காரணம் காட்டி சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திரகரிப்பு நிலையத்திலிருந்து சனிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகிப்பதை நிலையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நிறுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எமது தொழிற்சங்கம் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டுக்குள் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை காணப்படுகிறது. ஏனெனில் துறைமுகங்கள் உட்பட சில அத்தியாவசிய நிறுவனங்களுக்கு எரிபொருளை சேமித்து வைப்பதற்கு குறிப்பிட்டதொரு கொள்ளளவே உள்ளது.
 அது எமக்கு தெரியும்.
அதனால்தான் இதனை மேற்கொள்ளவேண்டாம் என நாங்கள் எடுத்துக் கூறினோம். ஆனால் எமது கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்தனர். சனிக்கழமை தினங்களில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதன் மூலம் சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் எரிபொருள் 
விநியோகிக்கப்படுவதில்லை.
இதன் காரணமாக .13-09-2021. இன்றுதிங்கட்கிழமைக்கு நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறோம். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதன் பொறுப்பை அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் 
அவர் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட்டில் இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பின் செய்தி

நாம் வெங்காயத்தை நறுக்கும் போது ஏன் கண்ணீர் கொட்டுகிறது தெரியுமா

புதன், 8 செப்டம்பர், 2021

வெங்காயத்தை நறுக்கும் போது நம்முடைய கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வரும். அது ஏன் தெரியுமா..?வெங்காயத்தில் ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய் உள்ளது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது.
அதுமட்டும் இல்லாமல், வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், 
தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.
வெங்காயத்தை நமது உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.உணவில் வெக்காயம், பூண்டு சேர்த்து சாப்பிட டான்ஸில், ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். மேலும் கொலஸ்ட்ரால்
 குறையும்.
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு வெங்காயத்தை சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். 
வலி குறைந்துவிடும்
சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாம் வெங்காயத்தை நறுக்கும் போது ஏன் கண்ணீர் கொட்டுகிறது தெரியுமா

நமது உடலுக்கு வெள்ளை சக்கரையால் இவ்வளவு ஆபத்தாம்

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

சக்கரை என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஒவ்வொருநாளும் தேனுடன் சிறிது சக்கரை சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
சர்க்கரை தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் நஞ்சாக மாறிவிடும். சீனி உட்கொள்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். நம் உடலில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் சர்க்கரை உட்கொள்ளும் போது மக்களுக்கு விரைவில் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.
பெரும்பாலும் நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் சர்க்கரையை பயன்படுத்துவதால் தான் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது தவிர சர்க்கரை மிக விரைவில் உடல் எடையை அதிகரிக்க வைக்கின்றது. உடலுக்கு ஏற்படும் அபாயம் தவிர நம் சருமத்தில் சுருக்கங்களை
 ஏற்படுத்தும்.
எனவே நாம் முடிந்தவரை குறைந்த அளவில் சர்க்கரையை உட்கொள்ளவேண்டும். தேவையான நேரத்தில் நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொள்வது நல்லது .பெரும்பாலான மக்கள் நாட்டுச்சக்கரை
 உபயோகிக்கும் பழக்கத்தை கொண்டு வந்துள்ளனர். சாலையோர டீக்கடையில் நாட்டுச்சக்கரை போட்ட டீ காபி கிடைக்கின்றது. எனவே அதனை பயன்படுத்தினால் நாம் பல நோயிலிருந்து
 விடுபடலாம்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நமது உடலுக்கு வெள்ளை சக்கரையால் இவ்வளவு ஆபத்தாம்

நாட் டவர்களை வியப்பில் ஆழ்த்திய கிராம மக்களின் நெகிழ்ச்சியான செயற்பாடு

திங்கள், 6 செப்டம்பர், 2021

அனுராதபுரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பணத்தை கொவிட் நிதியத்திற்காக தியாகம் செய்துள்ளனர்.தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக தினசரி வருமானத்தை இழந்த குடும்பங்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2000 கொடுப்பனவை அவர்கள் இவ்வாறு கொவிட் நிதியத்திற்காக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மிகவும் கடினமான சூழலில் தங்கள் வாழ்க்கையை நடத்தும் குடும்பத்தினரே இவ்வாறு தங்களுக்கு கிடைத்த கொடுப்பனவை இவ்வாறு தியாகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.அனுராதபுரம், தலாவ, ஹங்குரங்கெத்த பிரிவின் அருனபுர கிராமத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு
 வழங்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டின் தற்போதைய 
நிலைமையை கருத்திற் கொண்டு அவர்கள் இந்த கொடுப்பனவை கொவிட் நிதியத்திற்கு வழங்குமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைய அருனபுர கிராமத்தை சேர்ந்த மக்கள் மேலும் சில
 உதவிகளை சேர்த்து அதனை கொவிட் நிதியத்திற்கு வழங்கியுள்ளனர்.நெருக்கடியான காலத்தில் மிகவும் பின்தங்கி கிராம மக்களின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் வியப்பில் 
ஆழ்த்தியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட் டவர்களை வியப்பில் ஆழ்த்திய கிராம மக்களின் நெகிழ்ச்சியான செயற்பாடு

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பான அறிவிப்பு

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021


நாட்டில் சீனி மற்றும் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்படலாம் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அபராத தொகை இதுவரையில் 2500 ரூபாயாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் 75 புதிய திருத்தங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் அதிகாரங்களுக்கமைய சீனி மற்றும் அரிசியை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டுள்ள இதுபோன்ற பொருட்கள் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பான அறிவிப்பு

திடீர் என நாட்டில் அதிகரித்த மற்றுமொரு அத்தியாவசிய பொருளின் விலை

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நாட்டில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக பொருட்களின் விலைகள் அதிகரித்த வண்ணமுள்ளன.தற்போதைய கொரோனா காலகட்டத்தில் மக்கள் வாழ்வாதாரத்துக்கு மிகவும் கஷ்ரப்படும் நிலையில் இந்த விலை அதிகரிப்பு மக்களை சொல்லொணா துன்பத்துக்குள் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே சீனி, பருப்பு, சிமெந்து ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் பால்மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை பிரீமா நிறுவனம் 
அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கிலோ ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு தெரியப்படுத்தாமல் இந்த விலை உயர்வை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - திடீர் என நாட்டில் அதிகரித்த மற்றுமொரு அத்தியாவசிய பொருளின் விலை

ஒரு றத்தல் பாணின் விலையை யாழில் ஐந்து ரூபாவால் அதிகரிப்பு

புதன், 1 செப்டம்பர், 2021

யாழ்ப்பாணத்தில் 01-09-2021.அன்று  முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டவுள்ளது இதேவேளை ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஒரு றத்தல்  பாணின் விலையை ஐந்து ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பணிஸ் வகைகள் ஆகக் கூடிய சில்லறை விற்பனை விலையாக ரீ பணிஸ், கொம்பு பணிஸ், பேஸ்ரி, சங்கிலி பணிஸ், ஜாம் பணிஸ், கறி பணிஸ் முக்கோண பணிஸ் என்பன 40 ரூபாயாகவும், கிறீம் பணிஸ் 50ரூபாவாகவும், அடைக் கேக் 30 ரூபாவாகவும் 
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - ஒரு றத்தல் பாணின் விலையை யாழில் ஐந்து ரூபாவால் அதிகரிப்பு