நாட்டில் நாடளாவிய ரீதியில் இன்று முதல் சீனி விலையில் மாற்றம்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

  நாடளாவிய ரீதியில் .31-08-2021.இன்று முதல்உள்ள சதொச நிலையங்களில் சீனி ஒரு கிலோ 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை  இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீனி ஒரு கிலோ 230 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





READ MORE - நாட்டில் நாடளாவிய ரீதியில் இன்று முதல் சீனி விலையில் மாற்றம்

இலங்கையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை வெளிவந்த முக்கிய தகவல்

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

¨

இலங்கையில் தொற்றுநோய் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என வெளி மாகாண வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது
நிகவெரட்டியவில் நேற்று ஊடகங்களுக்கு உரையாற்றிய சங்கத்தின் அழைப்பாளர் காமினி கந்தேகெதர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வெதுப்பக பொருட்களின் விலையை இன்று முதல் அதிகரிக்க அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே முடிவு 
செய்திருந்தது.
அதன்படி, பாணின் விலையை 5 ரூபாவாலும், ஏனைய பொருட்களின் விலை 10 ரூபாவாலும், 1 கிலோகிராம் கேக்கின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்படவிருந்தன.
எனினும் பொது மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து வெதுப்பக உரிமையாளர்களையும் வெளிமாகாண வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் 
கோரியுள்ளார்.
மூலப்பொருட்களின் விலை உயர்வால, வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டியது அவசியம், ஆனால் இது அவ்வாறு செய்ய ஏற்ற நேரம் அல்ல என்று சங்கம் கருதுகிறது என்று சங்கத்தின் அழைப்பாளர் காமினி கந்தேகெதர குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் இன்றைய தினம் முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளன.
இதன்படி 10 ரூபாவால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை வெளிவந்த முக்கிய தகவல்

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கறி உற்பத்திகளில் மாற்றம்

சனி, 21 ஆகஸ்ட், 2021

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்திகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரை இறாத்தல் பாண் – பருப்புக் கறி 150 ரூபாவாகவும் பிளேன் ரீ 25 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் உணவகங்களின் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அச் சங்கம் கூறியுள்ளது. இந்நிலையில் சீனி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து பேக்கரி பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கான முடிவு நியாயமானது என அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

பாண் மற்றும் பிற பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பதற்கான பேக்கரி உரிமையாளர்களின் முடிவு அரசாங்கத்தையோ அல்லது பொதுமக்களையோ சிரமப்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் கூறினார்.

பேக்கரி பொருட்களில் பயன்படுத்தப்படும் பண்டங்களின் விலை உயர்வு காரணமாக தொழில் சிக்கலில் இருப்பதாகவும், எனவே இந்த நடவடிக்கை நியாயமானது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியத் தேவைகளுக்காக சிறிய அளவிலான கடைகள் மாத்திரமே திறக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்றினால் உணவகங்கள் பல மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடைகளில் விற்கப்படும் அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக் கறியின் விலையானது 150 ரூபாவாகவும் பிளேன் ரீஒன்றின் விலையானது 25 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கறி உற்பத்திகளில் மாற்றம்

உணவில் உப்பினை அதிகளவில் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

உணவில் அதிகளவில் உப்பினை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அதன்படி அதிகளவான உப்பு உட்கொள்ளல் தொற்று நோய்கள் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் விசேட நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள மக்கள் அதிகளவு உப்பை உட்கொள்வதைப் பழக்கமாகக் கொண்டுள்ளதாக கணக்கெடுப்பில் 
தெரியவந்துள்ளது.
வீட்டு உணவுகளில் அன்றாடம் உப்பை சேர்க்கும் போது குறைவான உப்பைப் பயன்படுத்துவது மிகவும் நல்ல ஆரோக்கிய பழக்கம்.அத்துடன் சோறு சமைக்கும்போது ஒரு சிட்டிகை உப்பை சேர்ப்பது 
தேவையற்றது.
தேவேளை கருவாட்டிலுள்ள அதிகப்படியான உப்பை தேங்காய் நீரில் அரை மணி நேரம் ஊறவைப்பதன் மூலம் அகற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - உணவில் உப்பினை அதிகளவில் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை

புதன், 18 ஆகஸ்ட், 2021

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.ட்விட்டர்
 பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், நாடு முகங்கொடுத்துள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இவ்வருடத்தின், 
முதல் 6 மாதங்களில் இறக்குமதி செலவுகளில் 18 சதவீதமானவை எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
இந்தத் தொகையானது வருடத்தின் இறுதி 6 மாதங்களில் 25 சதவீதம் வரையில் உயர்வடையக்கூடும் என அமைச்சர் கம்மன்பில 
சுட்டிக்காட்டியுள்ளார்
எனவே, மருந்துப்பொருட்கள் மற்றும் தடுப்பூசிகள் போன்றை அத்தியாவசிய பொருட்களுக்காக ஒதுக்கங்களை மேற்கொள்வதற்காக எரிபொருள் பாவனையை சிக்கனப்படுத்துமாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - நாட்டில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை

யாழில் மோட்டார் சைக்கிளில் வீதியில் மறித்து ஏற்றிச் செல்லுபவர்களுக்கு

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

யாழில் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லுமாறு கோரியவருக்கு உதவியளிக்க முற்பட்டவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம்.17-08-2021.  இன்று யாழ்ப்பாணம் சிவலிங்கப்புலியடியில் 
இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் சிவலிங்கப்புலியடி வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்த ஒருவர் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கேட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர் விசாரித்துகிகொண்டிருக்கும் போது அவர் அணிந்த 6 தங்கப்பவுன் சங்கிலியை அறுத்து தப்பி ஓடியுள்ளார்.மேலும் இச் சம்பவத்தையடுத்து சங்கிலியை அபகரித்துச் சென்றவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கியதை அடுத்து சந்தேக நபரிடம் இருந்து சங்கிலியும் கைப்பற்றப்பட்டமை
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





READ MORE - யாழில் மோட்டார் சைக்கிளில் வீதியில் மறித்து ஏற்றிச் செல்லுபவர்களுக்கு

உங்கள் வருங்கால மாமியார் இந்த ராசியென்றால் உஷாராவே இருங்க

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

திருமணம் என்றால் பெண்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பு தான்… கணவன் உடனான உறவு எப்படி இருக்கும் என்பதை விட, தனது கணவருடைய குடும்பத்தில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள 
வேண்டும் என்று புரிந்து, அனுசரித்து நடந்து கொள்ளவே
 திருமணத்திற்கு 
முன்னர் பெண்களுக்கு தங்களது பிறந்த வீடுகளில் தனி பயிற்சியே கொடுக்கப்படுகிறது. இந்த மாமியார், மருமகள் உறவு 
மட்டும் எப்போதும் ஒரு பரபரப்பான உறவாகவே இருக்கிறது. உங்களுக்கும் உங்களது
 மாமியாருக்கும் இருக்கும் உறவு எப்படி இருக்க போகிறது என்பது பற்றி உங்களது மாமியாரின் ராசி என்ன சொல்கிறது என்பதை இந்த பகுதியில் காணலாம்.
மேஷம் இந்த ராசிக்காரர்கள் எதிலும் மிகவும் கவனத்துடன் இருப்பவர்கள். இவர்கள் எதிலும் புத்தி கூர்மையுடனும், மனதளவிலும் யோசித்து செய்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் வலுவான ஆளுமை காரணமாக கடுமையாக இருப்பதாகக் கருதினால், அவர்களுக்கு உங்களால் உதவி செய்ய முடியாது, ஆனால் ஆழமாக உங்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களை உங்கள் அன்பால் தொடர்ந்து
 மாற்றுங்கள்.
ரிஷபம் இவர்கள் மிகவும் கடுமையானவர்களாக இருப்பார்கள். அவர்கள் உத்தரவுகளைப் பின்பற்றுகையில், முறையானவர்களாக இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பவர்கள். நீங்கள் அவர்களின் அன்பை பெற்று நெருக்கமாகும் வரை, அவர்களின் உத்தரவுகளை பின்றுவது
 மிகவும் சிறந்தது.
மிதுனம் உங்கள் மாமியார் இந்த ராசிக்காரர் எனில், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. இவர்கள் மிகவும் விட்டுக்கொடுக்க கூடியவர்களாகவும், மனதை புண்படுத்த கூடாது எனும் நோக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பவராகவும், இனிமையானவராகவும் இருப்பார்கள்.
கடகம் நீங்கள் உங்கள் கணவரை திருமண செய்த பின், உங்களுக்கு கிடைத்திருக்கும் புதிய அம்மாவால் நீங்கள் மிகவும் விரும்பப்படுவீர்கள். இது உங்களுக்கு ஜாக்போர்ட் அடித்ததை போன்றதாகும். பொதுவாக தாய்மை மற்றும் கவனிப்பு போன்றவற்றால், உங்கள் திருமண வாழ்க்கை நிறைய அன்பு மற்றும் பராமரிப்பு நிரம்பியதாக இருக்கும் படி செய்வார்கள். நீங்கள் மீண்டும் உங்கள் தாய் வீட்டில் இருப்பதை போல் 
உணர்வீர்கள்.
சிம்மம் இவர்கள் தலைமை பண்புடையவர்களாக இருப்பார்கள். இவர்களின் கண்காணிப்பின் கீழ் அனைத்தும் நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அவர்கள் இட்டுச் செல்லும் நிர்ப்பந்தங்கள் உங்களுக்கு சிறிது எரிச்சலாயிருக்கலாம். ஆனால் உங்களை நீங்களே அமைதியாக்கைக்கொண்திருந்தால், அவர்களின் அன்பான பக்கத்தை நினைவில் கொள்ளும் படி செய்து கட்ட கூடியவர்கள். உங்கள் வாழ்கை மிக நன்றாக இருக்கும்
கன்னி இந்த ராசியில் இருக்கும் அம்மாக்களால், உங்கள் ஆசிரியர்களிடம் மீண்டும் பள்ளிக்கு திரும்பியத்தை போல் உணர்வீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் எதையும் செய்வார், உங்களை பொது இடைகளில் மற்றவர்கள் முன் திட்டுவது போல் எதையாவது செய்வார்கள். ஆனால் அவர்கள் உங்களை மிகவும் நேசிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
துலாம் இந்த அம்மாக்கள் மிகவும் தன்னலமற்ற மற்றும் கொடுக்கும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள். அதனால் நீங்கள் அவர்களிடம் நெருக்கமாக இருத்தல் மற்றும் அவர்களை விட்டு ஒருபோதும் விலகி செல்லாமல் இருப்பதே போதுமானது. உங்கள் கணவர் மற்றும் பேரக்குழந்தைகளை உங்கள் பொறுப்பில் விட்டு விட்டு கவனித்து கொள்வார்கள். அவர்கள் முற்றிலும் அன்பானவர்கள்.
விருச்சிகம் இவர்கள் பலம் மற்றும் பலவீனத்தை சமாளிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தனியாக தங்களுக்கு வேண்டியதை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் வலுவான நபர்களாக இருப்பதாகத் திட்டவட்டமாக கூறும்போது, அவர்கள் குடும்ப ஒற்றுமையையும் சமநிலையில் வைக்கிறார்கள். குடும்பத்தில் ஒரு பகுதியாக இருப்பதை அவர்களுக்கு தெரிவிக்க தயங்க வேண்டாம். இது அவர்களை மகிழ்விக்க கூடியதாகும்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - உங்கள் வருங்கால மாமியார் இந்த ராசியென்றால் உஷாராவே இருங்க

அம்பாறை ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் வருடாந்த மகோற்சவம் நடைபெறாது

புதன், 11 ஆகஸ்ட், 2021

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக அம்பாறை  மாவட்டம், ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இம்முறை நடைபெறாது என ஆலயத்தின் தலைவர் ஆர்.ஜெகநாதன் 
தெரிவித்தார்.
எனினும் விசேட அபிசேக பூஜைகள் மாத்திரம் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ளப்  பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும்
 குறிப்பிட்டார்.
ஆலய மகோற்சவம் தொடர்பாக 10-08-2021.அன்று  இடம்பெற்ற ஆலய நிருவாக சபைக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக 
அவர் கூறினார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






READ MORE - அம்பாறை ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் வருடாந்த மகோற்சவம் நடைபெறாது

நாட்டில் அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றின் விலை திடீர் அதிகரிப்பு

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

நாட்டில் தேசிய வர்த்தக சந்தையில் மைசூர் பருப்பு மற்றும் சீனியின் மொத்த விற்பனை விலைகள் ஒரு வாரத்தில் 10 ரூபாயால் அதிகரித்துள்ளதாக மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம் ஒரு கிலோ கிராம் மைசூர் பருப்பு 155 ரூபாயாக இருந்ததுடன் 07-08-2021அன்றய  அதன் விலை 165 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அத்துடன் பருப்பின் மொத்த விற்பனை விலை 170 வரை அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ பருப்பை 220 ரூபாவுக்காவது விற்பனை செய்ய வேண்டும் என சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம்
ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 125 ரூபாயாக காணப்பட்டதுடன் நேற்றைய தினம் 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டதல், அதன் மொத்த விற்பனை விலையானது 142 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
காணப்படும் நிலைமையில் ஒரு கிலோ கிராம் சீனியினை 155 ரூபாவுக்காவது விற்பனை செய்ய வேண்டும் என சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.சந்தையில் காணப்படும் தேவைக்கு ஏற்ப மைசூர் பருப்பு மற்றும் சீனி கையிருப்பில் இல்லாத காரணத்தினால் மொத்த விற்பனையாளர்கள் விலைகளை அதிகரித்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட்டில் அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றின் விலை திடீர் அதிகரிப்பு

நாட்டில் இன்று வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

புதன், 4 ஆகஸ்ட், 2021

இலங்கையின் வானிலையில் இன்று சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மாகாணத்தில் மழை பெய்யும். அதேநேரம் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய இடங்களில் பொதுவான வானிலை நிலவும். மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் இன்று வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

உங்களுக்கு பொடுகு பிரச்சினையா இதனை தடுக்க என்ன செய்யலாம்

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் 
பொடுகு என்கிறோம்.
பொடுகு பிரச்சனை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. பொடுகு ஏன் வருகிறது. பொடுகு வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
அதிகமாக சுரக்கும் எண்ணெய் சுரப்பிகளால் பொடுகு வரும்.
வறண்ட scalp கொண்டு இருந்தால் பொடுகு வர வாய்ப்புண்டு.
malassezia என்ற பங்கசு எண்ணெயை சுரப்பியை எதிர்த்து போராடும் போதும்.
தொடர்ந்து shampoo போடமால் இருப்பதனாலும் பொடுகு வர வாய்ப்புண்டு.
 தடுக்க என்ன செய்யலாம்? 
  வியர்வை அதிகமாக இருந்தால் கண்டிப்பாக குளிப்பது நல்லது.
பொடுகு இருக்கும் போது எண்ணெய் தடவ கூடாது.
பொடுகு நின்ற பிறகு anti dandruff shampoo போடுவதை தவிர்க்க வேண்டும்.
 anti dandruff shampoo பயன்படுத்தலாம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - உங்களுக்கு பொடுகு பிரச்சினையா இதனை தடுக்க என்ன செய்யலாம்