ஒரு வயதுகூட நிரம்பாத பச்சிளம் குழந்தையை யாழில் அடித்து துன்புறுத்திய தாய்

செவ்வாய், 2 மார்ச், 2021

குழந்தைப் பாக்கியம் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் மிகவும் மங்களகரமான ஒரு விடயமாகும். எத்தனையோ வகையான பேறுகளில் இது மிகவும் முக்கியமானது.குழந்தைப் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படியிருக்க குழந்தை 
பாக்கியம் வேண்டி ஏங்கிக்கொண்டிருக்கும் பலரும் இன்றும் இந்த உலகில்இருக்கின்றனர்
எனினும், குழந்தை இருந்தும் அந்த குழந்தையை சரிவர கவனிக்காக பெற்றோர்களும் இந்த உலகில் இருக்கத்தான்
 செய்கின்றனர்.குழந்தைகள் இருந்து அந்த குழந்தையினை சரியாக கவனத்தில்கொள்வதில்லை. இந்த குழந்தையின் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி
 செய்வதில்லை. சிலர் கொடுமைப்படுத்துவதும் உண்டு.இதுபோன்ற சம்பவம் ஒன்று யாழ் மணியம் தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 
ஒரு வயது கூட நிரம்பாத பச்சிளம் குழந்தையை 
ஒரு பெண் அடித்து துன்புறுத்தும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.ஒரு வயது கூட நிரம்பாத 
பச்சிளம் குழந்தையை குச்சியொன்றை கொண்டு 
பெண் ஒருவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த காணொளி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.பலரும் தங்களது 
விசனம் வெளியிட்டுள்ளனர். இந்த பெண்ணுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். 
ஆனால், உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு.உங்கள்  எதிர்பார்ப்புகளை,
விருப்பங்களை, 
எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால 
உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது 
தவறு.நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல
 இருங்கள். ஆனால், 
உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை.என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல.நம் குழந்தையே 
ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது.அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா?
அடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? 
அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
குழந்தைகளை 
ஆசையோடும் அன்போடும் அரவணைத்து வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் என்பதுதான் நம் பொதுவான கருத்து.இந்த தாயை 
இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துதல் அவசியம் என சமூக வலைத் தளங்களில் பலரும் தத்தம் ஆதங்கங்களை 
வெளிப்படுத்தியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக