அடுத்த வருடத்துடன் 7000 இற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை

வியாழன், 25 பிப்ரவரி, 2021



கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்த வருடத்துடன் சுமார் 7000இற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இவர்களுக்கான மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை 
அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும்:-2009இற்கு பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள்குடியேற்றமசெய்யப்பட்ட போது ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் பல
 நிறுவனங்கள் ஈடுபட்டன.
குறிப்பாக ஹலோ ட்ரஸ்ட்,சார்ப்,டாஸ்,போன்ற நிறுவனங்கள் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிறுவனங்களில் அன்று தொடக்கம் இன்றுவரை சுமார் 7000 இற்கு மேற்பட்ட இளைஞர்களும், யுவதிகளும் பணியாற்றி 
வருகின்றார்கள்.
இது இந்த மாவட்டங்களின் சனத் தொகையில் மிகப் பெரியது. ஆனால் வருகின்ற 2022 உடன் கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதால் இதில் பணியாற்றிய 7000 இற்கு மேற்பட்டவர்கள் தங்களின் தொழில் வாய்ப்பினை
 இழக்கின்றனர்.
இதனால் அவர்களின் குடும்பங்களில் வாழ்வாதாரம் இழக்கப்படுகிறது. இந்த நிலைமை மிக மோசமான பொருளாதார மற்றும் சமூக பின்னடைவை ஏற்படுத்தும்.
மேற்படி தொழில் வாய்ப்பினை இழக்கும் 7000 இற்கு மேற்பட்டவர்கள் தொழிலின்றி சமூகத்தில் காணப்படுகின்ற நிலைமையானது ஆபத்தானது அதனால் பல்வேறு சமூக,பொருளாதார
 பாதிப்புக்கள் ஏற்படும்.
எனவே தாங்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் இவர்களின் நிலைமையினை கருத்தில் கொண்டு இவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.எனத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

READ MORE - அடுத்த வருடத்துடன் 7000 இற்கும் மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை

நாட்டில் க.பொ.த.(சா/த) பரீட்சைக்குத் தோற்றுவோரின் தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லையா

வியாழன், 18 பிப்ரவரி, 2021

 நாட்டில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டை இதுவரை கிடைக்கவில்லை என்றால் பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள பாடசாலைப் பகுதி யில்  விசாரிக்குமாறு அதிபர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களம்
 அறிவித்துள்ளது .
கொரோனா தொற்று காரணமாகப்  பாடசாலைகள் மூடப்பட்டமையால் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப் பி வைக்கப்பட்டதாக இலங்கை ஆட்பதிவுத் திணைக் களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக
 தெரிவித்துள்ளார்.
அத்துடன், இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள
 அட்டைகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை
 யென் றால்,  பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள பாடசாலைப் பகுதியில் விசாரிக்குமாறு அதிபர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களம் 
அறிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் க.பொ.த.(சா/த) பரீட்சைக்குத் தோற்றுவோரின் தேசிய அடையாள அட்டை கிடைக்கவில்லையா

முல்லைத்தீவு பிரதான வீதியில் பட்டப்பகலில் ஒன்பது இலட்சம் கொள்ளை

புதன், 17 பிப்ரவரி, 2021

 
வவுனியா - புளியங்குளம் பகுதியில்,17-02-2021, அன்று  முல்லைத்தீவு பிரதான வீதியில் பட்டப்பகலில் கொள்ளைஒன்பது இலட்சம்  ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம்  காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
,17-02-2021, அன்றைய தினம் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்காக ஒருதொகைப்பணத்துடன் நபர் ஒருவர் 
சென்றிருந்தார்.
அவரை புளியங்குளம் முல்லைத்தீவு பிரதான வீதியில் வழிமறித்த குழுவினர் அச்சுறுத்தி அவரிடமிருந்த 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரால் புளியங்குளம் காவல் துறை  நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

READ MORE - முல்லைத்தீவு பிரதான வீதியில் பட்டப்பகலில் ஒன்பது இலட்சம் கொள்ளை

மணிபுரத்தில் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சந்தை

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

வவுனியா மணிபுரத்தில் கிராமிய பொதுச்சந்தை,14-02-2021, இன்று திறந்து வைக்கப்பட்டது.சப்ரிகம வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த சந்தை கட்டிடத்தொகுதி உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டும் கிராமத்தின் உற்பத்தி 
பொருட்களுக்கான
 சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்போது மணிபுரம் கிராமத்திற்கான மரண ஆதார சங்கமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டித்தினை வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட இணைத்தலைவருமான கு.திலீபன் திறந்து 
வைத்திருந்ததுடன் குறித்த நிகழ்வில் கிராம சேவகர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பொதுமக்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - மணிபுரத்தில் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சந்தை

யாழ்.மாவட்டத்தில் 190 குளங்களைக் காணவில்லையாம்

யாழ்.மாவட்டத்தில் 190 குளங்களைக் காணவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் மூத்த புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். 
இது சம்பந்தமாக
அவர் மேலும் கூறுகையில்:-யாழ்.மாநகரத்தின் 1956 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1246 குளங்கள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் தற்போது 1056 குளங்களே காணப்படுகின்றன.
யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 18 குளங்கள் காணாமல்போயுள்ளதோடு 19 குளங்களின் பரப்புகள் மனித செயற்பாடுகளால் குறைக்கப்பட்டுள்ளன.
மாநகரத்தின் தனியார் விடுதிக்கு அருகாமையில் காணப்பட்ட குளம் ஒன்று காணாமல் போயுள்ளதோடு மாநகர கட்டடத் தொகுதி அமைப்பதற்காக குளத்தின் கணிசமான பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.
நகரப் பகுதியில் அமைந்துள்ள 
வழிபாட்டு தலம் 
ஒன்றின் தேர்முட்டி அமைப்பதற்காக அருகிலிருந்த குளத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளதோடு யாழ் பல்கலைக்கழகத்தின் ஆனந்தகுமாரசாமி விடுதி அமைந்துள்ள பிரதேசத்தில் காணப்பட்ட குளம் ஒன்று காணாமல்போயுள்ளது.
யாழ். மாநகரத்தின் பல பகுதிகளில் குங்கள் காணாமல் போயுள்ளதோடு பல குளங்கள் அமைக்கப்பட்ட பின்னர் அதன் அளவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் யாழ் மாநகரத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் குறிப்பாக யாழ். ஸ்டான்லி வீதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை நோக்கும்போது குறித்த பகுதிகளில் வழிந்தோடும் வெள்ள நீர் அருகிலுள்ள புல்லுக் குளத்தை சென்றடைகின்ற நிலையில் அதன் பல பகுதிகளை மூடி யாழ் மாநகர சபை கட்டடங்கள் அமைத்ததே
 காரணமாகும்.
யாழ் மாவட்டத்தில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய குளங்கள் உருவாக்கப்படுவதோடு ஏற்கனவே இருந்த குளங்கள் தூர்வாரப்பட வேண்டும்.
வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு வீடுகளுக்கு அருகாமையில் புதிய குளங்கள் உருவாக்கப்படுவதோடு சிறிய நீர் நிரப்புக் கிணறுகள் உருவாக்குவதன் மூலமும் வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கும் வரட்சியான காலப்பகுதியில் நிலத்தடி நீரை 
பாதுகாக்க முடியும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



READ MORE - யாழ்.மாவட்டத்தில் 190 குளங்களைக் காணவில்லையாம்

நாட்டில் பல நுகர்வுப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டது

புதன், 10 பிப்ரவரி, 2021

சீனி, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு ஆகிய வற்றிற்கான நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிக பட்ச சில் லறை விலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப் பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகள்,09-02-2021. அன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறித்த பொருட்களை நுகர்வோர் லங்கா சதொச, கூட் டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் (Q-shop ) கியூ கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச் சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 03 மாத காலத்துக்கு இந்தச் சலுகை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் பல நுகர்வுப்பொருட்களின் விலை குறைக்கப்பட்டது

நாட்டில் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

திங்கள், 8 பிப்ரவரி, 2021

புதிய விலையின் பிரகாரம் கோதுமையினை விற்பனை செய்தால் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் பெரும் நட்டத்தை எதிர்க் கொள்ள நேரிடும்.ஆகவே நிர்ணயிக்கப்பட்ட புதிய விலையினை ஆறு அல்லது ஏழு ரூபாவால் அதிகரிக்குமாறு கோதுமை மா உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை 
விடுத்துள்ளனர்.
கூட்டுறவு சேவைகள்,சந்தைப்படுத்தல்,அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவிற்கும் பிரதான நிலை கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று அமைச்சின் காரியாலயத்தில்
 இடம் பெற்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

சர்ச்சையை ஏற்படுத்திய யாழ் புதிய பேருந்தில் மொழிப்பிரச்சினைக்கு தீர்வு

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021


யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய புதிய பேருந்தில் மொழிப்பிரச்சினை தற்போது சீர்ப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த மாதம் யாழ் நகரப்பகுதியிலுள்ள முனீஸ்வரன் வீதியில் தூர பிரதேசங்களுக்கான பேருந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
அதன் போது பேருந்து நிலையத்திலுள்ள மொழிப்பிரச்சினை அன்றைய நிகழ்வில் பிரஸ்தாபிக்கப்பட்டது.அந்த நிலையத்தை மாநகர சபை பொறுப்பெடுத்ததன் பின்னர் மாற்றியமைக்கப்படும் என்று
 கூறப்பட்டது.
இதன் பின்னர் முதல்வர் மணிவண்ணனின் உத்தரவிலும் மாநகரசபை உறுப்பினர் பார்த்திபனின் மேற்பார்வையின்கீழும் தற்போது பெயர்ப்பலகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - சர்ச்சையை ஏற்படுத்திய யாழ் புதிய பேருந்தில் மொழிப்பிரச்சினைக்கு தீர்வு

முல்லைத்தீவில் தையல் இயந்திரங்கள் வழங்கி தொழில் முயற்சிகளை ஊக்கிவிப்பு

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

முல்லைத்தீவு மாவட்டச் செயலக கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட தையல் துறைசார் பயிற்சி நெறிகளின் அடிப்படையில் அவர்களது வாழ்வாதாரத்தை 
விருத்தி செய்து தொழில் முயற்சிகளை ஊக்கப்படுத்தும் முகமாக இன்று (05) தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த தையல் இயந்திரங்களை மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வழங்கி வைத்துப் பின் கருத்துத் 
தெரிவிக்கையில்,
இத் தையல் இயந்திரங்களை வெறுமனே வீட்டுத் தேவைகளுக்குரிய மூலப் பொருட்களாக வைத்திராது வினைத்திறனாகத் தொழில் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அதனூடாக அடுத்தவர்களுக்கும் தொழில் வாய்ப்புக்களை வழங்கிப்  புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க வேண்டும் எனவும் 
கேட்டுக் கொண்டார்.
இதேவேளை,கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட ஆறு தொழில் முனைவோருக்கான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>
READ MORE - முல்லைத்தீவில் தையல் இயந்திரங்கள் வழங்கி தொழில் முயற்சிகளை ஊக்கிவிப்பு

மிக மகிழ்ச்சி தரும் செய்தி யாழ்.தீவகப் பகுதி மக்களுக்கு

வியாழன், 4 பிப்ரவரி, 2021

இலங்கையின் வடக்கே பெரும் தீவுகளாக விளங்கும் காரைநகரும் வேலணைத்தீவும் கடற்பாலம் மூலம் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி காரைநகர் மற்றும் வேலணைத்தீவில் உள்ள ஊர்காவற்துறை ஆகியவற்றுக்கான போக்குவரத்தை சரிசெய்யும் நோக்கில் கடற்பாலம் ஒன்று அமைக்கப்படவுள்ளதுடன் இந்த பாலத்திற்கான 
மதீப்பீட்டுப் பணிகள் தற்சமயம் நிறைவடைந்துள்ளதாக 
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் 
அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.இதற்கான நிதி வந்தவுடன் வேலைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் 
அவர் கூறுகின்றார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் காரைநகர் – ஊர்காவற்துறை பிரதேசங்களுக்கான பாலம் அமைக்கும் திட்டத்தின் மதீப்பீட்டு பணிகள் நிறைவடைந்து விட்டன.
நிதி வந்தால் பணிகள் ஆரம்பமாகும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண பணிப்பாளர் 
தெரிவித்துள்ளார்
 இது தொடர்பாக ஒருங்கிணைப்புகுழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
என்றார் அவர்.இதேவேளை காரை நகர்மூலம் தீவுப் பகுதிகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்து சீர்செய்யப்படும் செய்தி வலிகாமம் பிரதேச மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





READ MORE - மிக மகிழ்ச்சி தரும் செய்தி யாழ்.தீவகப் பகுதி மக்களுக்கு

கினிகத்ஹேன பகுதியில் 3 மாத குழந்தைக்கு கொரோனா

கினிகத்ஹேன பகுதியில்3 மாத குழந்தைக்கு கொரோனா
வியாழன் பெப்ரவரி 04, 2021
 14 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 14 பேரில் 3 மாத குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் 
தெரிவிக்கின்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>


READ MORE - கினிகத்ஹேன பகுதியில் 3 மாத குழந்தைக்கு கொரோனா

மட்டக்களப்பபில் மூலிகை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரனினதும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தினதும் ஏற்பாட்டில், மாவட்ட செயலகத்தில் இயங்கிவரும் கிளைப் பிரிவினருக்கு மூலிகை மரக்கன்றுகள், மாவட்ட செயலகத்தில் நேற்று (02) வழங்கி வைக்கப்பட்டன.
 சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தை நோக்கிய எதிர்காலம்” எனும் கோட்பாட்டுக்கமையவும் “வளமான நாடு - சுகாதாரமான சுற்று சூழல்” என்ற தொனிப்பொருளுக்கமையவும் இம்மூலிகை மரக்கன்றுகள்  வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்த மூலிகை கன்றுகளை தங்கள் வீடுகளிலே நட்டு, சிறந்த முறையில் பராமரிப்பதன் மூலம் நாட்டை வளம் மிக்க நாடாக மாற்ற வேண்டுமென மாவட்ட விவசாய பணிப்பாளர் கலிஸ் 
கேட்டுக்கொண்டார்.  
இந்நிகழ்வில்  மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீன், மாவட்ட விவசாயக் கிளை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக கிளைப் பிரிவினரும்
 கலந்துகொண்டனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - மட்டக்களப்பபில் மூலிகை மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

நாட்டில் ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா மேலும் 7 மரணங்கள்

புதன், 3 பிப்ரவரி, 2021

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இதன்படி.03-02-2021. இன்றைய தினம் மேலும் ஏழு கொரோனா மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி கராபிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் மூளையில்
 ரத்தம் கசிதல் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு – 15 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண் 
ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி வீட்டிலேயே
 உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய காரணிகளினால்
 இவர் உயிரிழந்துள்ளார்.வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா 
மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர் பிம்புர வைத்தியசாலையில் நேற்றைய 
தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு, இரத்தம் குறைதல் ஆகிய காரணிகளால் இவர் உயிரிழந்துள்ளார்.கெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் நேற்றைய 
தினம் கண்டி தெல்தெனிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, இரத்தம் விசாமாகியமை, 
தீவிர நீரிழிவு, சிறுநீரக நோய் என்பனவற்றில் இவர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு – 2 பிரதேசத்தைச் சேர்ந்த 18 மாத ஆண் சிசுவொன்று நேற்றைய தினம் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.ராகம பிரதேச்தைச் 
சேர்ந்த 32 வயதான ஆண் ஒருவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.கொவிட் நியூமோனியா, இரத்த அழுத்தம் மற்றும் அஸ்துமா
 ஆகிய நோய்க் காரணிகளினால் இவர் 
உயிரிழந்துள்ளார்.சுகாதார 
சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் 
வெளியிட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட்டில் ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா மேலும் 7 மரணங்கள்

நாட்டில் இந்த வயதுப் பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது

கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் செலுத்தப்படமாட்டாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளதாவது;
இலங்கையில் கொரோனா தடுப்பூசியாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசியில் பல சிக்கல்கள் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கத் தடுப்பூசி மாத்திரமே தீர்வு.உலகில் இதுவரை எந்தவொரு தடுப்பூசியையும் தயாரிக்கக் குறைந்தது 3 அல்லது 5 வருடங்கள் எடுத்துள்ளது ஆனால் குறித்த 
தடுப்பூசி தயாரிக்க ஒருவருடமே எடுத்துள்ளது. இதனால் மக்களின் பாதுகாப்பு 5 மாதங்களா அல்லது அதற்கு மேல் செல்லுமா என
 உறுதியாகச் சொல்ல முடியாது.அத்துடன், குறித்த தடுப்பூசியில் நன்மை தீமை இரண்டும் உண்டு.ஏனைய தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது 
கோவ்ஷீல்ட் தடுப்பூசியிலிருந்து வரும் பக்க விளைவுகளின் எண்ணிக்கை மிகக் குறைவு எனவும் அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நாட்டில் இந்த வயதுப் பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது

களமுறிப்பு வனப்பகுதியில் யானையை வேட்டையாடிய இருவர் கைது

திங்கள், 1 பிப்ரவரி, 2021

முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் கொன்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
8 அடி உயரமுடைய 20 வயதான குறித்த
 யானை களமுறிப்பு பகுதியில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டு அதன் தந்தங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 32 வயதானவர்கள் என்பதுடன் முள்ளியவளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் 
கொண்டவர்களாவர்.
இச்சந்தேக நபர்கள் யானையின் தந்தங்களை விற்க முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் கோடரியை தம்வசம் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் சந்தேக நபர்கள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






READ MORE - களமுறிப்பு வனப்பகுதியில் யானையை வேட்டையாடிய இருவர் கைது