புதிய பேருந்து நிலையத்தில் சிங்களமொழியில் இருந்து தமிழ் மொழிக்கு முதன்மையிடம்

சனி, 30 ஜனவரி, 2021

.யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் திறந்துவைக்கப்பட்ட தூர இடங்களுக்கான புதிய பேருந்து நிலையத்தில் தமிழ் மொழியினாலான பெயர்ப் பலகைகள் மாற்றப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நகர அபிவிருத்தித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின்கீழ் அமைக்கப்பட்டுவந்த குறித்த பேருந்து நிலையம் தற்போது யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றுக்கான 
ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.13ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பிரதேசத்தில் பெரும்பான்மையாக
 உள்ள மக்களின் மொழிக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்ற நிலையினையும் மீறி, நகர அபிவிருத்தித் திணைக்களத்தால் சிங்களத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.இந்த
 விடயம் சர்ச்சைகளினை ஏற்படுத்தியிருந்த நிலையில், பேருந்து நிலையம் மாநகரசபையின் கட்டுப்பாட்டின்கீழ் வந்ததன்
 பிற்பாடு, மாற்றியமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையிலேயே, இவற்றுக்கான பெயர்மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.எவ்வாறாயினும், பேருந்து நிலையத்தின் முதன்மைப் பெயரிலும், தமிழை 
முன்னுக்கு கொண்டுவர மாநகர சபை நடவடிக்கை எடுக்குமா என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளமை 
குறிப்பிடத்தக்கதாகும்.


நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - புதிய பேருந்து நிலையத்தில் சிங்களமொழியில் இருந்து தமிழ் மொழிக்கு முதன்மையிடம்

நாட்டில் முதல் கோவிட்- 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மருத்துவர்

வெள்ளி, 29 ஜனவரி, 2021

 

 நாட்டில்  கொரோனா தடுப்பூசியை அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் (ஐ.டி.எச்) மருத்துவ ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜய விக்ரம பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் விதமாக இந்தியாவில் இருந்து.28-01-2021. நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ராஜெனீகா
 கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை,29-01-2021. இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆறு
 வைத்தியசாலைகளில் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில், முதலாவது தடுப்பூசி படையினருக்கு செலுத்தப்பட்டது. 
சுகாதார பணியாளர்கள், இராணுவம் மற்றும் பொலிசாருக்கு முதல் கட்டமாக இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





READ MORE - நாட்டில் முதல் கோவிட்- 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மருத்துவர்

எழுதுமட்டுவாளில் கோர விபத்து..ஏ-9 வீதியில் மயிரிழையில் தப்பிய உயிர்கள்

செவ்வாய், 26 ஜனவரி, 2021

தென்மராட்சி, எழுதுமட்டுவாள் பகுதியில் கனரக வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.வாகனங்களை 
ஏற்றி வரும் கனரக வாகனமொன்று 26-01-2021.இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகி, வீதியோமாக சரிந்து 
விழுந்துள்ளது.வாகன சில்லில் காற்று போனதால் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





READ MORE - எழுதுமட்டுவாளில் கோர விபத்து..ஏ-9 வீதியில் மயிரிழையில் தப்பிய உயிர்கள்

பாடசாலையில் சித்தி பெற்ற மாணவர்களை சேர்ப்பதில் எந்த மாற்றமும் இல்லை

சனி, 23 ஜனவரி, 2021


 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளி அடிப்படையில் மாணவர்களைப் பாடசாலைக்குச் சேர்க் கும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கல்வி அமைச்சு 
தெரிவித்துள்ளது.
அதன்படி, பாடசாலைகளில் சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாடசாலை வகுப்புகளின் எண்ணிக் கையையோ அல்லது ஒரு வகுப்பில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையையோ குறைக்க எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - பாடசாலையில் சித்தி பெற்ற மாணவர்களை சேர்ப்பதில் எந்த மாற்றமும் இல்லை

இலங்கைக்கு வரப் போகும் கோவிட் 19-ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி

வெள்ளி, 22 ஜனவரி, 2021

 அனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் முக்கிய செய்தி..நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொவிட் 
தடுப்பூசியின் அவசர 
பயன்பாட்டுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தகவலை ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன
 உறுதிப்படுத்தியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - இலங்கைக்கு வரப் போகும் கோவிட் 19-ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி

ஆலய பூசகர் மற்றும் நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயபூசகர் மற்றும் நிர்வாகத்தினரை எதிர்வரும் 27 ம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்த நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை 
பிறப்பித்துள்ளது.
ஒலுமடு ஆதிசிவன் ஆலயப்பகுதியில் உள்ள தொல்லியல் பகுதிகளை சேதப்படுத்தியமை காடுகளை அழித்தனர் என நெடுங்கேணி காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - ஆலய பூசகர் மற்றும் நிர்வாகத்தினரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு

வெள்ளவத்தை பொதுச்சந்தை தொற்றாளர்களால் தற்காலிகமாக மூடப்பட்டது

வியாழன், 21 ஜனவரி, 2021

 

கொவிட்-19 தொற்றாளர்கள் சிலர் சந்தையில் இனங்காணப்பட்டதையடுத்து வெள்ளவத்தை பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச பொதுச்சுகாதார மருத்துவ அதிகாரி
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - வெள்ளவத்தை பொதுச்சந்தை தொற்றாளர்களால் தற்காலிகமாக மூடப்பட்டது

தேசிய பாடசாலைகளாக யாழில் 10 பாடசாலைகள் தரமுயர்வு

ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல்’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக
 தரமுயர்த்தப்பட்டுள்ளன.
பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் பரிந்துரையின் கீழ் 10 பாடசாலைகள் இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.
இதன்படி தீவக கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளும் வலிகாமம் கல்வி வலயத்தில் 4 பாடசாலைகளும் வடமராட்சிக் கல்வி வலயத்தில் 2 பாடசாலைகளும் தரமுயர்த்தப்பட்டுள்ளன.
தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் விபரம் வருமாறு:
01. ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி
02. வேலணை மத்திய கல்லூரி
03. நெடுந்தீவு மகா வித்தியாலயம்
04. காரைநகர் இந்துக் கல்லூரி
05. வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி
06. தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
07. சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி
08. புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி
09. பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை
10. உடுத்துறை மகா வித்தியாலயம்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - தேசிய பாடசாலைகளாக யாழில் 10 பாடசாலைகள் தரமுயர்வு

சத்து நிறைந்த காய்கறிகளை உண்பதால் நுரையீரல் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாமாம்

சனி, 16 ஜனவரி, 2021

காய்கறிகள் என்பது இயற்கை நமக்கு அளித்துள்ள கொடை எனலாம். காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிமசத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற 
சத்துகள் உள்ளன.காய்கறிகளை உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கும். பச்சை
 மற்றும் ஆரஞ்சு நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம்.
இந்த வகை காய்கறிகளில் பீட்டா 
கரோட்டின், உடலுக்கு வைட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோய் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைகிழங்கு, காலிப்ளவர் நூல்கோல் போன்றவை இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.நெல்லிக்காய், எலுமிச்சை 
ஆகியவற்றில் அதிக அளவு 
வைட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். மிளகு,
 முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து 
உள்ளது. வேறு சில காய்கறிகளில் இரும்பு
 சத்துகள் அதிகம் இருக்கும்.இவற்றால் உடலின் ரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிக குறைவான இரும்பு சத்து இருப்பின் அனீமியா எனப்படும் ரத்த சோகை
நோய் ஏற்படும்.பட்டாணி, கொண்டை கடலை 
உள்ளிட்ட பயிறு வகைகள், பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. முட்டைகோஸ் உள்ளிட்ட கரும்பச்சை நிறத்தில் உள்ள காய்கறிகளில் அதிகளவு 
கல்சியமும் உள்ளதால் ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களுக்கு அவை அவசியமாகிறது. அனைத்து காய்கறிகளுமே நார்ச்சத்தினை கொண்டிருக்கின்றன. காய்கறிகள் மற்றும் பழங்களில் ஃப்ளேவனாய்ட்ஸ் காணப்படுகிறது.மிளகாய், பூசணி, 
கத்தரிக்காய், கேரட், தக்காளி, செர்ரி, அனைத்து வகை வெங்காயம், பச்சை கீரைகளில் ஃப்ளேவனாய்ட்ஸ் அதிகம் உள்ளது. அதிக காய்கறிகள், பழங்கள், கீரைகள், சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக
வாழலாமாம் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>







READ MORE - சத்து நிறைந்த காய்கறிகளை உண்பதால் நுரையீரல் புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாமாம்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்கில் திருமணத்திற்கு அனுமதி

வெள்ளி, 15 ஜனவரி, 2021

வவுனியாவை கொரோனா முடக்கியுள்ள நிலையில் எதிர்வரும்.18-01-2021. திங்கட்கிழமை முதல் வடக்கில் திருமண மண்டபங்கள் பொதுச் சந்தைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக வடக்கு
 மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய 
 நான்கு மாவட்டங்களிலும் உள்ள திருமண மண்டபங்களை 150 பேருடன் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிப்பதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்கில் திருமணத்திற்கு அனுமதி

அடைமழை யாழில் தொடருகின்ற நிலையில் ஆராய்ச்சி நிலையம் தெரிவிப்பு

புதன், 13 ஜனவரி, 2021

யாழ்.குடாநாட்டில் அடைமழை தொடருகின்ற நிலையில் யாழில் 68   மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில்  மழையுடன் கூடிய கால நிலை 
காணப்படுகின்றது.13.01-21. .இன்று காலை காலையிலிருந்து தற்போது வரை
  யாழில் 68.1மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி
 பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொறுப்பதிகாரி மேலும் 24 ணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய  காலநிலை தொடரும் எனவும் 
தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - அடைமழை யாழில் தொடருகின்ற நிலையில் ஆராய்ச்சி நிலையம் தெரிவிப்பு

ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன ரயிலில் வருவோர் கவனமாம்

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்குக்கு வரும் பயணிகள், அந்தந்தப் பிரதேசங்களில் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள  வேண்டுமென, வடக்கு சுகாதார  சேவைகள் பணிப்பாளர்  ஆ. கேதீஸ்வரன் 
தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், ரயில் மூலம் வடக்குக்கு   வருகின்ற பயணிகள், தங்கள் இடங்களுக்கு வந்தப் பின்னர்,  உடனடியாக அந்தந்தப்  பிரதேசத்தில் உள்ள சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு
 கேட்டுக்கொண்டா
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன ரயிலில் வருவோர் கவனமாம்

ஆரியகுளத்தில் பிரபல சைவ உணவகம் புலோலி தொற்றாளர் முடக்கம்

புதன், 6 ஜனவரி, 2021

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால்06-01.2021. இன்று முடக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, புலோலியின் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர், இந்த உணவகத்துக்கு
 வந்திருந்தார் என்பது தெரியவந்ததை அடுத்தே இந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.
தொற்றாளர் கடந்த 31ஆம் திகதி இந்த உணவகத்துக்கு வந்து உணவருத்திச் சென்றார் என்று விசாரணைகளில் 
தெரிவித்துள்ளார்..

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - ஆரியகுளத்தில் பிரபல சைவ உணவகம் புலோலி தொற்றாளர் முடக்கம்

யாழ் அளவெட்டி, பள்ளிக்குடா இளைஞர்களுக்குக் கொரோனா தொற்று

செவ்வாய், 5 ஜனவரி, 2021

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் வெளிநாடு செல்வதற்காகக் கொழும்பு சென்றிருந்த நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த ஒன்பது பேரும், பளை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவருமாக 11 பேர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் தங்கியிருந்துள்ளனர். அவர்களுக்கு அங்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பி.சி.ஆர். முடிவுகள் கிடைக்கும் முன்னதாக இவர்கள் வான் ஒன்றில் கொழும்பில் இருந்து 04-01-21.அன்று இரவு தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
அவர்களில் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும், பள்ளிக்குடாவைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து வந்த தகவலுக்கமைய சுகாதாரப் பிரிவினர் அவர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு 
மாற்றியுள்ளனர்.
அவர்களின் குடும்பத்தினர், அவர்களுடன் வாகனத்தில் பயணித்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - யாழ் அளவெட்டி, பள்ளிக்குடா இளைஞர்களுக்குக் கொரோனா தொற்று