நாட்டில் மீண்டும் உச்சத்திற்கு சென்ற தேங்காயின் விலை.!!!

வியாழன், 31 டிசம்பர், 2020


  இலங்கையில் மீண்டும் உச்சத்திற்கு  தேங்காயின் விலை பெரும் குழப்பத்தில் பொதுமக்கள்.!சந்தையில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன்படி
 தேங்காய் ஒன்று சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.அங்காடிகளில் தேங்காய் விலை அதிகரித்தமையை அடுத்து, தேங்காய் ஒன்றின் சுற்றளவிற்கு அமைய
 விலையினை நிர்ணயித்து அரசாங்கம் விசேட வர்த்தமானியையும் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிட்டிருந்தது.இதற்கமைய 13 அங்குல சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் அதிகூடிய சில்லறை 
விலை 70 ரூபாவாகவும், 12 முதல் 13 அங்குள சுற்றளவுடைய தேங்காய் ஒன்றின் அதி கூடிய சில்லறை விலை 65 ரூபாவாகவும், 12 அங்குலத்திற்கு குறைவான சுற்றளவினை கொண்ட தேங்காய் ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 60 ரூபாவாகவும் நிர்ணயித்து, 
வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.எனினும், தற்பொழுதும் தேங்காய் விலை அதிகமாகவே காணப்படுகின்றது என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் மீண்டும் உச்சத்திற்கு சென்ற தேங்காயின் விலை.!!!

நெலுபொல்லுகட பகுதியில் ஒரே நாளில் இரு யானைகள் பலி ஒருவர் கைது

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

அநுராதபுரம் – கஹட்டகஸ்திஹிலிய, நெலுபொல்லுகட பகுதியில் காட்டு யானை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில்.26-12-20. அன்று யாான ஒன்று வீடொன்றை சேதப்படுத்தியதுடன், விளை பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இது கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், காட்டு யானையை விரட்டுவதற்கு முற்பட்ட போது யானை பொலிஸாரை தாக்க முயற்சித்துள்ளது. இதன்போது யானை சுட்டுக் 
கொல்லப்பட்டது.
இதேவேளை, கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியிலுள்ள வயலில் இருந்து யானையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதால் யானை உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் 
சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்களம் கைது செய்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - நெலுபொல்லுகட பகுதியில் ஒரே நாளில் இரு யானைகள் பலி ஒருவர் கைது

நான்கு தேசிய விருதுகள் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு

வியாழன், 24 டிசம்பர், 2020

ல்வி அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் டவர் மண்டப அரங்க மன்றம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான நாடகப் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்ட கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி நான்கு தேசிய விருதுகளை பெற்றுக்கொண்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் சூம் ஊடாக நடைபெற்ற விருது வழங்கல் நிகழ்வில் கருவறையில் கல்லரை நாடகத்திற்காக

1.சிறந்த இசையமைப்பு
2.சிறந்த துணை நடிகை
3.சிறந்த நாடக எழுத்துரு 1ம் இடம்
4,சிறந்த நாடகம் 2ம் இடம்
ஆகிய விருதுகளை குறித்த கல்லூரி பெற்றுக் 
கொண்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நான்கு தேசிய விருதுகள் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு

மறு அறிவித்தல் வரை திருகோணமலையில் அனைத்து பாடசாலைகள் மூடல்

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

திருகோணமலை கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று கிழக்கு மாகாண ஆளுநர்.20-12-20. இன்று சற்றுமுன் அறிவித்துள்ளார்.
மூடப்படுவதற்கான காரணம் தொடர்பில் இதுவரை 
அறிவிக்கப்படவில்லை

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - மறு அறிவித்தல் வரை திருகோணமலையில் அனைத்து பாடசாலைகள் மூடல்

இலங்கையில் முகக் கவசப் பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

வியாழன், 17 டிசம்பர், 2020

இலங்கையில் பயன்படுத்தும் முகக்கவசம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முகக் கவசம் பயன்படுத்தும் போது மஞ்சள் நிறத்திலான சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த முகக் கவசத்தை தடை செய்யுமாறு தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பேராசிரியர் வைத்தியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.N95 எனப்படும் அந்த முகக் கவசத்தில் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. சர்ஜிக்கல் 
முகக் கவசம்
 பாதுகாப்பானதாகும்.அதிக விலையுடனான N95 பயன்படுத்த வேண்டாம்.வசதி குறைந்தவர்கள் சாதாரண 
துணியை பயன்படுத்தி முகக் கவசத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். ஆனால், இரண்டு துணிகள் வைத்து தயாரிக்க 
வேண்டும்.N95 முகக் கவசத்தில் உள்ள ஒரு சிறிய ஓட்டையில் கிருமி தொற்று மூக்கினுள் செல்ல வாய்ப்புகள் உள்ளது. இதனால், அதனை தடை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - இலங்கையில் முகக் கவசப் பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையில் உடன் அமுலுக்கு வடக்கிலுள்ள அனைத்து சந்தைகளும் பூட்டு

வடமாகாணத்தின் அனைத்து பொதுச்சந்தைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் 
முடிவுகள் பெறுவதில் தாமதம் நிலவிவரும் நிலையில், அதுவரை பொறுத்திருக்காது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை
 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் உடன் அமுலுக்கு வடக்கிலுள்ள அனைத்து சந்தைகளும் பூட்டு

பிரமந்தனாறு பகுதியில் சிசுவை மண்ணில் புதைத்த பெண்

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில்13-12-20.. இன்று மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தமை கண்டறியப்பட்டது. இந்நிலையில் பிறந்த தனது குழந்தையை மண்ணில் புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் 
வழங்கியுள்ளார்.
“பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்.13-12-20. இன்றுமதியம் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பிறந்ததை கண்டறிந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அங்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு குழந்தை பிறந்ததாகவும், குறித்த குழந்தையை புதைத்துவிட்டதாகவும் வாக்குமூலம் 
வழங்கியுள்ளார்.
இந்நிலையில் குழந்தை புதைக்கப்பட்ட இடம் தொடர்பான தகவலில் உள்ள குழப்பம் காரணமாக சம்பவ இடத்தை கண்டுபிடிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது”என தெரியவருகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - பிரமந்தனாறு பகுதியில் சிசுவை மண்ணில் புதைத்த பெண்

கண்டி மாவட்டத்தில் நான்கு ஏற்றுமதி வலயங்களில் பழ உற்பத்தி

சனி, 12 டிசம்பர், 2020

நாட்டில் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி, கம்பளை, உடுநுவர மற்றும் ஹேவாஹெட்ட ஆகிய 4 ஏற்றுமதி வலயங்களில் ஏற்றுமதி வர்த்தகத்தை இலக்காக கொண்டு பழ உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட விவசாயிகளின்
 பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த 
ஏற்றுமதி வர்த்தக பழவகை உற்பத்தி திட்டத்தில் 2000 குடும்பங்களுக்காக 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ்,ஒரு குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபா வீதம் உற்பத்தி 
நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்திப் பொருட்களை நேரடியாக ஏற்றுமதி சந்தைக்காக உற்பத்தி செய்வதாகும். அறுவடையில் ஆக கூடிய மற்றும் வெளிநாட்டு சந்தையின் கோரிக்கைக்கு அமைவாக உற்பத்தியை வழங்ககூடிய பழக் கன்றுகள், விதைகள், தொழில்நுட்பம், உயர் தரத்திலான 
உற்பத்திக்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆலோசனைகளும் இதன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.அறுவடையை வெளிநாட்டு சந்தைக்கு ஏற்ற வகையில் பெறுமதியை சேர்ப்பதற்காக 
அனைத்து துறைகளையும் கொண்ட (State Of The Art) தயாரிப்பு மத்திய நிலையம் (Processing Centers) முதலான நான்கும் இந்த ஏற்றுமதிக்காக வழங்கப்படவுள்ளது.வாழை, கொய்யா, அன்னாசி, ஆனைக்கொய்யா ஆகிய பழவகை இந்த திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்வதை
 இலக்காக கொண்டு உற்பத்தி செய்யப்படும்.இந்த உற்பத்தியாளர்களின் உற்பத்திக்காக வெளிநாட்டு சந்தையை
 உருவாக்குவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை சந்தித்த டோல் நிறுவன பிரதிநிதிகள் அதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - கண்டி மாவட்டத்தில் நான்கு ஏற்றுமதி வலயங்களில் பழ உற்பத்தி

புரேவிப் புயலால் யாழில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

புதன், 9 டிசம்பர், 2020

 புரேவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி பகுதியிலேயே அதிகளவான படகுகள் கடல் நீர் தடுப்பணை மற்றும் நங்கூரமிடும் வசதிகள் இன்மை காரமாகவே இவ்வாறு 
சேதமடைந்துள்ளன.
நங்கூரமிடும் மற்றும் தடுப்பணை ஆகியன அமைத்துத்தருமாறு தாம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் எந்த அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என நா.வர்ணகுலசிங்கம் கவலை
 வெளியிட்டுள்ளார்.
தற்போது இரண்டு புயல் காற்று காலத்திலும் தமது மீனவர்கள் கடலிற்க்கு செல்லவில்லை என்றும் தமக்கான நிவாரணம் எதுவும் அரசு பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

READ MORE - புரேவிப் புயலால் யாழில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

யாழ். போதனாவில் மற்றுமொரு மனிதாபிமான சேவை உதயம்

புதன், 2 டிசம்பர், 2020

 அநியாய உயிரிழப்பைத் தவிர்க்க  வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக தற்கொலைக்கு முயற்சிப்போர் மற்றும் அதனால் சாவடைவோர் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
எனவே இவற்றிலிருந்து பலரது இழப்பை உரிய ஆலோசனையின் மூலம் தவிர்க்க முடியும் என்ற வகையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் "அபயம் அழைப்பு சேவை" எனற உன்னத பணி தொடங்கப்பட்டுள்ளது.
உளநெருக்கடி, விரக்தி ஏற்படுகின்ற நிலையில் தொடர்பு கொள்பவர்களுக்கு 24 மணி நேர வைத்திய ஆலோசனை சேவை எதிர்வரும் 15 மார்கழி தொடக்கம் முழு அளவில் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு சேவை தேவைப்படுவோர் 071 071 2345 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இலவச ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும்.அபயம் நிறுவனம் இதற்கான முழு அனுசரணையும் செய்கின்றது.
போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தலைமையில் இன்று வைபவ ரீயாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் மனநல வைத்திய நிபுணர்கள் சிவயோகன்,சிவதாஸ் ,பிரேமகிருஷ்ணா,சிவன்சுதன்,நளாயினி ,கன்னங்கரா ,கஜந்தன் ,துஷ்யந்தன் மற்றும் வைத்திய அதிகாரிகள் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலரும் 
கலந்து சிறப்பித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - யாழ். போதனாவில் மற்றுமொரு மனிதாபிமான சேவை உதயம்

காரைநகரில் கொரோனா அச்சத்தால் இழுத்து மூடப்பட்ட பாடசாலை

திங்கள், 30 நவம்பர், 2020

யாழ் காரைநகர் இந்துக் கல்லூரி மூன்று தினங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.
காரைநகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு 
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், குறித்த தொற்றாளருடன் காரைநகர் இந்துக் கல்லூரி ஆசிரியர் ஒருவர் பழகியுள்ளார்.இவர் கடந்த 
கிழமை பாடசாலைக்கு சமூகம் கொடுத்துள்ளார்.இவருக்கு 
எதிர்வரும் 02.12-20.புதன்கிழமை PCR பரிசோதனை 
மேற்கொள்ளப்படவுள்ளது. இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படாவிட்டால் எதிர்வரும்.03-12-20.வியாழக்கிழமை 
வழமைபோல் பாடசாலை நடைபெறும் எனவும், அதுவரை எதிர்வரும் புதன்கிழமை வரை பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் 
அறிவிக்கப்பட்டுள்ளன

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - காரைநகரில் கொரோனா அச்சத்தால் இழுத்து மூடப்பட்ட பாடசாலை

..யாழ் மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவர் புயல்அறிவித்தல்

புதன், 25 நவம்பர், 2020

வடமாகாணத்தில் பலத்த காற்று வீச கூடும் இதனால் மின்வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும். இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால்,உடனடியாக 
மின்சார சபைக்கு
 அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து 
சமூக நலன் பேணவும்.
அத்துடன் எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் ‭(021) 202 4444‬ அல்லது 
கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி 
இலக்கங்களுடன் தொடர்பு
 கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் 0212222609, திருநெல்வேலி, கோண்டாவில் 0212222498,
சுன்னாகம் 0212240301, சாவகச்சேரி 0212270040, பருத்தித்துறை 0212263257
வட்டுக்கோட்டை 0212250855,வேலணை 0212211525 ஆகிய 
இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் 
தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - ..யாழ் மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் நிவர் புயல்அறிவித்தல்

கோழி பண்ணை உரிமையாளர்கள் உணவு தட்டுப்பாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு

புதன், 18 நவம்பர், 2020

விலங்கு உணவு தட்டுப்பாடு காரணமாக அம்பலாங்கொடை, பலபிட்டிய மற்றும் அஹூங்கல்ல ஆகிய பகுதிகளில் வாழும் சிறியளவான கோழி பண்ணை உரிமையாளர்கள் இன்னல்களுக்கு 
முகம்கொடுத்துள்ளனர்.
முட்டையிடும் கோழிகள், நிறுவனங்களினால் வழங்கப்படும் தீவகத்திற்கு மாத்திரம் பழக்கப்பட்டுள்ளதாக அவர்கள் 
தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் 2 வார காலமாக கோழி தீவகப் பணிகள் தடைப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தீவகம் இன்றி கோழிகள் இறந்து 
வருவதாக கோழி பண்ணை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் வர்த்தக அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை செலுத்த முடியாது கடும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பலாங்கொடை, பலபிட்டிய மற்றும் அஹூங்கல்ல ஆகிய பகுதிகளில் வாழும் சிறியளவான கோழி பண்ணை உரிமையாளர்கள் 
கோரியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - கோழி பண்ணை உரிமையாளர்கள் உணவு தட்டுப்பாட்டால் பல்வேறு இன்னல்களுக்கு

யாழ் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை

திங்கள், 16 நவம்பர், 2020

உடுவில் மகளீர் கல்லூரியின்  15.11-20.அன்று  வெளியாகிய புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி உடுவில் மகளீர் கல்லூரியில் 45 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1,அபிஷனா கோபிநாத் 193
2,ஹரிஷ்ராம் சிவானந்தன் 191
3,நயனிதா கன்ஸ்வரன் 186
4,பரிதிவராண் கிருஷ்ணகுமார் 184
5,ஷஜானா விக்னராஜா 183
6,கிதாரா தயானந்தன் 182
7,சதுர்த்தியன் ஜெயராஜ் 182
8,அக்ஷரன் உதயமோகன் 181
9,ரெந்துஷன் சர்வேஸ்வரன் 180
10,சண்முகராகவன் ராஜகுமாரன் 179
11,ரித்திகா உதயகுமார் 178
12,அபினாஷ் கசேந்திரன் 178
13,ஜெப்ரின் தர்மராஜ் பிராங்க் அன்செலன் 177
14,அஷ்மிதா சுதர்ஷன் 177
15,தனுஜா அருலேஸ்வரன் 176
16,அனிஷாந்த் திருப்பதிகாந்தன் 176
17,பிரஜீன் பிரபாகரன் 176
18,அனுஹர்சன் துஷாந்த் 176
19,கவிஷ்கா வர்ணராஜா 175
20,கிருத்திகா சொரூபன் 174
21,பிரம்மநஸ்பதன் சசிவர்னன் 174
22,பிரியங்கா பரசுதன் 172
23,பர்மினி சசிகுமார் 172
24,தர்ஷனா நந்தகோபன் 172
25,தீபிகா சிவானந்தன் 172
26,யஷானா திவாகரன் 172
27,ஜஷ்மியா நித்தியானந்தம் 171
28,ஹரினி சசிகாந்த் 170
29,கேஷிகன் பாலிங்கன் 170
30,சதுஸ்ரிகா கஜேஸ்வரன் 169
31,ஜெஷாம் ஜெசிந்தன் 168
32,தரண்யா செந்தூரன் 167
33,அபினா சதீஸ்வரன் 167
34,அஷ்லின் முகுந்தன் 167
35,ஷர்மிளா ஸ்ரீகாந்தன் 166
36,சுவேத்தா பெனார்ட் 164
37,ரதுர்சன் சிவகுமார் 164
38,பொன்பிலியா டன்ஸ்டன் 163
39,லூர்து தாரா பட்ரிக் அஹிலன் 163
40,அக்சிகா சுரேந்திரன் 163
41,மதுவர்ஷா ரஜீத்காந்த் 162
42,கம்ஷாபி பிரபாகரன் 161
43,விகாஷினி செந்தூரன் 161
44,அனுஜிதா தயாபரன் 160
45,தர்ஷானி ஜெயந்தன் 160
சித்திபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இந்த இணையத்தின்
 நல் வாழ்த்துக்கள்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - யாழ் உடுவில் மகளீர் கல்லூரி மாணவர்கள் புதிய சாதனை

காலி சங்கமித்த கல்லூரி மாணவிகள் 200 புள்ளிகளை பெற்றுள்ளார்

ஞாயிறு, 15 நவம்பர், 2020

வெளியாகியுள்ள 2020ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி ஐந்துமாணவர்கள் 200 புள்ளிகளை பெற்று
 சாதித்துள்ளனர்.
இதன்படி காலி சங்கமித்த கல்லூரி மாணவி எஸ்.டி. சியதி வி.சந்துன்டி கருணாதிலக 200 புள்ளிகளையும்,
மற்றும் வேறு பாடசாலைகளை சேர்ந்த எம்.எப்.மொஹமட் அம்மார், அ.எச்.சிஹத் சந்தினு மேலும் இரு மாணவர்களும் 200 புள்ளிகளை பெற்றுள்ளனர்.
இதற்கு முன்னர் 2007ம் ஆண்டில் மாணவர் ஒருவர் 200 புள்ளிகளை பெற்றிருந்தார். அதற்கு பின்னர் 200 புள்ளிகள் பெறப்பட்ட இரண்டாவது மற்றும் ஐந்து மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்ற முதலாவது 
சந்தர்ப்பமும் இதுவாகும்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - காலி சங்கமித்த கல்லூரி மாணவிகள் 200 புள்ளிகளை பெற்றுள்ளார்

பாெருட்களுக்கு திடீர் விலை உயர்வு வாழைச்சசேனையில் மக்கள் குற்றச்சாட்டு

சனி, 31 அக்டோபர், 2020

 மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டத்தையடுத்து கடந்த ஏழு தினங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணாமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ள போதிலும், சுகாதாரத் துறையினர், பாதுகாப்புத்தரப்பினர், அரச அலுவலர்கள் அடங்கிய கொரோனா தடுப்புச் செயலணி தம்மால் முடிந்த அத்தனை உதவிகளையும் இரவு, பகல் பாராது 
மேற்கொண்டு வருகிறது.
அதே நேரம், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் 15 நாட்களுக்குத் தேவையான பொருட்கள் கையிலிருப்பில் உள்ளதாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது வர்த்தக சங்கத்தினர் 
தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு சில வியாபாரிகள் கோழி, தக்காளி, மிளகாய், வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட அதிகரித்துள்ளதாகவும், குறிப்பிட்ட சிறுதூர இடைவெளியில் இரு
 பிரதேசங்களுக்கிடையில் பொருட்களின் விலையில் பாரிய வித்தியாசம் உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பொது மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோரும் பொது மக்களும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் 
தவித்துக் கொண்டிருக்கும்
 நிலையில், நாளாந்தம் கூலித் தொழிலில் ஈடுபடுவோர், அன்றாடம் வியாபாரம் செய்வோரும் தமது வருமானத்தை இழந்துள்ள
 இந்த இக்கட்டான நிலையில், இவ்வாறான விலை அதிகரிப்புக்கள் மென்மேலும் சுமையை 
அதிகரிக்கச் செய்துள்ளன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 


 

READ MORE - பாெருட்களுக்கு திடீர் விலை உயர்வு வாழைச்சசேனையில் மக்கள் குற்றச்சாட்டு

யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து 35 பேர் மருத்துவ பீடத்துக்குத் தெரிவு

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து இம்முறை 181 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி 12 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், 35 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும் தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக மொத்தமாக 181 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு
 தெரிவாகியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

READ MORE - யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து 35 பேர் மருத்துவ பீடத்துக்குத் தெரிவு

கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளி கைது

வெள்ளி, 23 அக்டோபர், 2020

கண்டி – கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளி .23-10-20.இன்று மதியம் கொழும்பு – பொரளை கட்டடத் தொகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே கொஸ்கம, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 
நிலையில் 23-10-20.இன்று அதிகாலை தப்பிச் சென்றிந்தமை
 குறிப்பிடத்தக்கது




READ MORE - கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளி கைது

முனைக்காடில் சட்டவிரோத மது நிலையம் சுற்றிவளைப்பு; நால்வர் கைது

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதியில் நூதனமான முறையில் இயங்கிவந்த
 சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம்.22-10-20. அன்று   இரவு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்து பெருமளவான மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன. 
இதன்போது 170 மில்லி லீற்றர் அளவு கொண்ட 750 மதுபான போத்தல்களும், பெரியளவிலான 48 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டது.
அத்துடன் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் 
கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - முனைக்காடில் சட்டவிரோத மது நிலையம் சுற்றிவளைப்பு; நால்வர் கைது

செட்டிக்குள பஸ் தரிப்பு நிலையத்தில் மரம் முறிந்ததில் பேரூந்துக்கு சேதம்

வியாழன், 15 அக்டோபர், 2020

 செட்டிக்குளம் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் தரித்து நின்ற இலங்கை போக்குவரத்துச்சபையின் வவுனியா 
சாலைக்குச் சொந்தமான பேரூந்தின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் பேரூந்து பாரிய
 சேதத்துக்குள்ளாகியது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

READ MORE - செட்டிக்குள பஸ் தரிப்பு நிலையத்தில் மரம் முறிந்ததில் பேரூந்துக்கு சேதம்

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதிவரி நீக்கம்

செவ்வாய், 13 அக்டோபர், 2020

நாட்டில்அத்தியாவசிய பொருட்களுக்கான
இறக்குமதி வரி.13-10-20. இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படும் என்று பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி பருப்பு, மீன்டின், பெரிய வெங்காயம், சீனி உள்ளிட்டவற்றுக்கு வரி விலக்கு அமுலாகவுள்ளது.
எனவே மீன்டின் ரூ.200, பெரிய வெங்காயம் ரூ.100, சீனி ரூ.85 ஆகிய விலைக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதிவரி நீக்கம்

பரீட்சைகள் திட்டமிட்டபடியே நடக்கும் திகதிகளில் மாற்றமில்லை

புதன், 7 அக்டோபர், 2020

நாட்டில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சை என்பன திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு .07-10-20.இன்று  தமது இறுதி முடிவை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா சமூகத் தொற்றின் இரண்டாம் அலை வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால் பரீட்சைகள் தொடர்பில் குழப்பம் எழுந்திருந்தது.
இன்றை அறிவிப்பின்படி திட்டமிட்டவாறு ஒக்டோபர் 11ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
அத்துடன் 12ம் திகதி உயர்தர பரீட்சை 
ஆரம்பிக்கப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - பரீட்சைகள் திட்டமிட்டபடியே நடக்கும் திகதிகளில் மாற்றமில்லை

கொரோனா அச்சம் கொழும்பு கோல்ப் கிளப் மூடப்பட்டுள்ளது

ரோயல் கொழும்பு கோல்ப் கிளப் கார்டன் ஊழியரின் மகள் மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால் கோல்ப் கிளப் மூடப்பட்டுள்ளது.
கோல்ப் கிளப் கார்டனில் பணியில் ஈடுபடும் ஒருவர் கடந்த சனிக்கிழமை வரை கடமைக்கு வந்துள்ளதால் அவருடன் நெருக்கமாக பழகியோர தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் 
இடம்பெறுகின்றன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - கொரோனா அச்சம் கொழும்பு கோல்ப் கிளப் மூடப்பட்டுள்ளது

நாட்டில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டம்

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

 

இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் 
அளித்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை நேற்று ஒப்புதல் 
வழங்கியுள்ளது.




READ MORE - நாட்டில் மாடுகளை இறைச்சிக்காகக் கொலை செய்வதைத் தடை விதிக்கும் திட்டம்