நாட்டில் மீண்டும் உச்சத்திற்கு சென்ற தேங்காயின் விலை.!!!

வியாழன், 31 டிசம்பர், 2020


  இலங்கையில் மீண்டும் உச்சத்திற்கு  தேங்காயின் விலை பெரும் குழப்பத்தில் பொதுமக்கள்.!சந்தையில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன்படி
 தேங்காய் ஒன்று சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.அங்காடிகளில் தேங்காய் விலை அதிகரித்தமையை அடுத்து, தேங்காய் ஒன்றின் சுற்றளவிற்கு அமைய
 விலையினை நிர்ணயித்து அரசாங்கம் விசேட வர்த்தமானியையும் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிட்டிருந்தது.இதற்கமைய 13 அங்குல சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் அதிகூடிய சில்லறை 
விலை 70 ரூபாவாகவும், 12 முதல் 13 அங்குள சுற்றளவுடைய தேங்காய் ஒன்றின் அதி கூடிய சில்லறை விலை 65 ரூபாவாகவும், 12 அங்குலத்திற்கு குறைவான சுற்றளவினை கொண்ட தேங்காய் ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 60 ரூபாவாகவும் நிர்ணயித்து, 
வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.எனினும், தற்பொழுதும் தேங்காய் விலை அதிகமாகவே காணப்படுகின்றது என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - நாட்டில் மீண்டும் உச்சத்திற்கு சென்ற தேங்காயின் விலை.!!!

நெலுபொல்லுகட பகுதியில் ஒரே நாளில் இரு யானைகள் பலி ஒருவர் கைது

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

அநுராதபுரம் – கஹட்டகஸ்திஹிலிய, நெலுபொல்லுகட பகுதியில் காட்டு யானை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில்.26-12-20. அன்று யாான ஒன்று வீடொன்றை சேதப்படுத்தியதுடன், விளை பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இது கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், காட்டு யானையை விரட்டுவதற்கு முற்பட்ட போது யானை பொலிஸாரை தாக்க முயற்சித்துள்ளது. இதன்போது யானை சுட்டுக் 
கொல்லப்பட்டது.
இதேவேளை, கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியிலுள்ள வயலில் இருந்து யானையொன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதால் யானை உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் 
சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்களம் கைது செய்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - நெலுபொல்லுகட பகுதியில் ஒரே நாளில் இரு யானைகள் பலி ஒருவர் கைது

நான்கு தேசிய விருதுகள் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு

வியாழன், 24 டிசம்பர், 2020

ல்வி அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் டவர் மண்டப அரங்க மன்றம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான நாடகப் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்ட கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி நான்கு தேசிய விருதுகளை பெற்றுக்கொண்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் சூம் ஊடாக நடைபெற்ற விருது வழங்கல் நிகழ்வில் கருவறையில் கல்லரை நாடகத்திற்காக

1.சிறந்த இசையமைப்பு
2.சிறந்த துணை நடிகை
3.சிறந்த நாடக எழுத்துரு 1ம் இடம்
4,சிறந்த நாடகம் 2ம் இடம்
ஆகிய விருதுகளை குறித்த கல்லூரி பெற்றுக் 
கொண்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - நான்கு தேசிய விருதுகள் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு

மறு அறிவித்தல் வரை திருகோணமலையில் அனைத்து பாடசாலைகள் மூடல்

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

திருகோணமலை கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று கிழக்கு மாகாண ஆளுநர்.20-12-20. இன்று சற்றுமுன் அறிவித்துள்ளார்.
மூடப்படுவதற்கான காரணம் தொடர்பில் இதுவரை 
அறிவிக்கப்படவில்லை

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - மறு அறிவித்தல் வரை திருகோணமலையில் அனைத்து பாடசாலைகள் மூடல்

இலங்கையில் முகக் கவசப் பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

வியாழன், 17 டிசம்பர், 2020

இலங்கையில் பயன்படுத்தும் முகக்கவசம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முகக் கவசம் பயன்படுத்தும் போது மஞ்சள் நிறத்திலான சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த முகக் கவசத்தை தடை செய்யுமாறு தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக பேராசிரியர் வைத்தியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.N95 எனப்படும் அந்த முகக் கவசத்தில் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. சர்ஜிக்கல் 
முகக் கவசம்
 பாதுகாப்பானதாகும்.அதிக விலையுடனான N95 பயன்படுத்த வேண்டாம்.வசதி குறைந்தவர்கள் சாதாரண 
துணியை பயன்படுத்தி முகக் கவசத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். ஆனால், இரண்டு துணிகள் வைத்து தயாரிக்க 
வேண்டும்.N95 முகக் கவசத்தில் உள்ள ஒரு சிறிய ஓட்டையில் கிருமி தொற்று மூக்கினுள் செல்ல வாய்ப்புகள் உள்ளது. இதனால், அதனை தடை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - இலங்கையில் முகக் கவசப் பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையில் உடன் அமுலுக்கு வடக்கிலுள்ள அனைத்து சந்தைகளும் பூட்டு

வடமாகாணத்தின் அனைத்து பொதுச்சந்தைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் 
முடிவுகள் பெறுவதில் தாமதம் நிலவிவரும் நிலையில், அதுவரை பொறுத்திருக்காது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை
 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - இலங்கையில் உடன் அமுலுக்கு வடக்கிலுள்ள அனைத்து சந்தைகளும் பூட்டு

பிரமந்தனாறு பகுதியில் சிசுவை மண்ணில் புதைத்த பெண்

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில்13-12-20.. இன்று மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தமை கண்டறியப்பட்டது. இந்நிலையில் பிறந்த தனது குழந்தையை மண்ணில் புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் 
வழங்கியுள்ளார்.
“பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்.13-12-20. இன்றுமதியம் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பிறந்ததை கண்டறிந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அங்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு குழந்தை பிறந்ததாகவும், குறித்த குழந்தையை புதைத்துவிட்டதாகவும் வாக்குமூலம் 
வழங்கியுள்ளார்.
இந்நிலையில் குழந்தை புதைக்கப்பட்ட இடம் தொடர்பான தகவலில் உள்ள குழப்பம் காரணமாக சம்பவ இடத்தை கண்டுபிடிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது”என தெரியவருகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - பிரமந்தனாறு பகுதியில் சிசுவை மண்ணில் புதைத்த பெண்

கண்டி மாவட்டத்தில் நான்கு ஏற்றுமதி வலயங்களில் பழ உற்பத்தி

சனி, 12 டிசம்பர், 2020

நாட்டில் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி, கம்பளை, உடுநுவர மற்றும் ஹேவாஹெட்ட ஆகிய 4 ஏற்றுமதி வலயங்களில் ஏற்றுமதி வர்த்தகத்தை இலக்காக கொண்டு பழ உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.
வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட விவசாயிகளின்
 பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த 
ஏற்றுமதி வர்த்தக பழவகை உற்பத்தி திட்டத்தில் 2000 குடும்பங்களுக்காக 700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ்,ஒரு குடும்பத்திற்கு 5 இலட்சம் ரூபா வீதம் உற்பத்தி 
நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்திப் பொருட்களை நேரடியாக ஏற்றுமதி சந்தைக்காக உற்பத்தி செய்வதாகும். அறுவடையில் ஆக கூடிய மற்றும் வெளிநாட்டு சந்தையின் கோரிக்கைக்கு அமைவாக உற்பத்தியை வழங்ககூடிய பழக் கன்றுகள், விதைகள், தொழில்நுட்பம், உயர் தரத்திலான 
உற்பத்திக்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் ஆலோசனைகளும் இதன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.அறுவடையை வெளிநாட்டு சந்தைக்கு ஏற்ற வகையில் பெறுமதியை சேர்ப்பதற்காக 
அனைத்து துறைகளையும் கொண்ட (State Of The Art) தயாரிப்பு மத்திய நிலையம் (Processing Centers) முதலான நான்கும் இந்த ஏற்றுமதிக்காக வழங்கப்படவுள்ளது.வாழை, கொய்யா, அன்னாசி, ஆனைக்கொய்யா ஆகிய பழவகை இந்த திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்வதை
 இலக்காக கொண்டு உற்பத்தி செய்யப்படும்.இந்த உற்பத்தியாளர்களின் உற்பத்திக்காக வெளிநாட்டு சந்தையை
 உருவாக்குவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை சந்தித்த டோல் நிறுவன பிரதிநிதிகள் அதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - கண்டி மாவட்டத்தில் நான்கு ஏற்றுமதி வலயங்களில் பழ உற்பத்தி

புரேவிப் புயலால் யாழில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

புதன், 9 டிசம்பர், 2020

 புரேவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி பகுதியிலேயே அதிகளவான படகுகள் கடல் நீர் தடுப்பணை மற்றும் நங்கூரமிடும் வசதிகள் இன்மை காரமாகவே இவ்வாறு 
சேதமடைந்துள்ளன.
நங்கூரமிடும் மற்றும் தடுப்பணை ஆகியன அமைத்துத்தருமாறு தாம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் எந்த அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என நா.வர்ணகுலசிங்கம் கவலை
 வெளியிட்டுள்ளார்.
தற்போது இரண்டு புயல் காற்று காலத்திலும் தமது மீனவர்கள் கடலிற்க்கு செல்லவில்லை என்றும் தமக்கான நிவாரணம் எதுவும் அரசு பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

READ MORE - புரேவிப் புயலால் யாழில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

யாழ். போதனாவில் மற்றுமொரு மனிதாபிமான சேவை உதயம்

புதன், 2 டிசம்பர், 2020

 அநியாய உயிரிழப்பைத் தவிர்க்க  வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக தற்கொலைக்கு முயற்சிப்போர் மற்றும் அதனால் சாவடைவோர் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
எனவே இவற்றிலிருந்து பலரது இழப்பை உரிய ஆலோசனையின் மூலம் தவிர்க்க முடியும் என்ற வகையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் "அபயம் அழைப்பு சேவை" எனற உன்னத பணி தொடங்கப்பட்டுள்ளது.
உளநெருக்கடி, விரக்தி ஏற்படுகின்ற நிலையில் தொடர்பு கொள்பவர்களுக்கு 24 மணி நேர வைத்திய ஆலோசனை சேவை எதிர்வரும் 15 மார்கழி தொடக்கம் முழு அளவில் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு சேவை தேவைப்படுவோர் 071 071 2345 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இலவச ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும்.அபயம் நிறுவனம் இதற்கான முழு அனுசரணையும் செய்கின்றது.
போதனா வைத்தியசாலைப்பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தலைமையில் இன்று வைபவ ரீயாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் மனநல வைத்திய நிபுணர்கள் சிவயோகன்,சிவதாஸ் ,பிரேமகிருஷ்ணா,சிவன்சுதன்,நளாயினி ,கன்னங்கரா ,கஜந்தன் ,துஷ்யந்தன் மற்றும் வைத்திய அதிகாரிகள் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பலரும் 
கலந்து சிறப்பித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - யாழ். போதனாவில் மற்றுமொரு மனிதாபிமான சேவை உதயம்