நைனாமடுப் பகுதியில் எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி

ஞாயிறு, 28 ஜூன், 2020

வவுனியாவில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா நெடுங்கேணி நைனாமடுப் பகுதியிலேயே இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டியொன்று நேற்று (சனிக்கிழமை) 3 மணியளவில் 
பிறந்துள்ளது.
நைனாமடுப்பகுதியில் சீதாகோபால் ஆறுமுகம் எனும் அரசியல் கைதி ஒருவரின் வீட்டிலையே இவ்வாறு விசித்திர 
ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது.
இவர், 2017ஆம் ஆண்டில் இருந்து வாழ்வாதாரத்துக்காக ஆடுகளை வீட்டில் வளர்த்து வந்துள்ளார். இதில் ஒரு ஆடுதான் அ
திசய குட்டியினை ஈன்றுள்ளது.
இந்த ஆட்டுக்குட்டி இறந்து பிறந்துள்ள போதிலும் அதனைப் பார்வையிட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் படையெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நைனாமடுப் பகுதியில் எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி

சித்தண்கேணியில் வயோதிபப் பெண்களின் வாயைக் கட்டிவைத்து கொள்ளை

சனி, 27 ஜூன், 2020

யாழ் சித்தண்கேணி பகுதியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் அவர்களை அச்சுறுத்தி தாக்கி விட்டு 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளது..26-06-20.நேற்றையதினம் இரு வயோதிபப் பெண்கள் மட்டும் வதியும் வீடொன்றில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் 
தெரியவருவதாவது;
நள்ளிரவு வேளையில் கொள்ளையர்கள் இருவர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் இருவரும் அங்குள்ள பெண்கள் இருவரையும் மிரட்டியதுடன் ஒருவரை வீட்டு வளாகத்துக்குள் உள்ள 
கோவிலில் போய் அமருமாறு கூறியுள்ளனர்.மற்றைய வயோதிபப் பெண் கூக்குரலிட்டதால் அவரது வாயை துணியால் கட்டிவிட்டு 
வீட்டை சல்லடை போட்டு 
கொள்ளைக் கும்பல் தேடுதலை மேற்கொண்டுள்ளது.அலுமாரியிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு விட்டு வேறு நகைகள் இருந்தால் தரும்படி கேட்டு வாயைக் கட்டிய வயோதிபப் பெண்ணைத் தாக்கியுள்ளனர்.கொள்ளையர்களுக்கு 
அஞ்சி போத்தல்களில் போட்டு வைத்த நகைகளையும் அந்தப் பெண் எடுத்துக் கொடுத்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் யாழ் தடயவியல் பொலிஸாரால் தீவிர விசாரணைகள் 
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - சித்தண்கேணியில் வயோதிபப் பெண்களின் வாயைக் கட்டிவைத்து கொள்ளை

நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்

வெள்ளி, 26 ஜூன், 2020

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரே நேரத்தில் செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில், பௌத்த விகாரைகள், சைவ 
ஆலயங்கள், கத்தோலிக்க உட்பட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களில் கூடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று சமூக மட்டத்தில் பரவில்லை 
என்பதை குறிப்பிடத்தக்க காலம் ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.எவ்வாறாயினும் இதற்கு முன்னர் சமய வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்ல 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததுடன் தற்போது அவை படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.இலங்கையில் 2001 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்தனர். அத்துடன் ஆயிரத்து 562 பேர் குணமடைந்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>

READ MORE - நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்

நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த தேதியில் திருமணம் செய்துகொள்வது நல்லது

திங்கள், 15 ஜூன், 2020



வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தாலே முதலில் வந்து நிற்பது ஜாதக பொருத்தம் தான். அதே போல ஒருவர் பிறந்த தேதியை கொண்டும் எந்த தேதியில் பிறந்தவர்கள் அவர்களுக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்பதை கணிக்க முடியும். அதை பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.
01
 ஒன்றாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஒன்றாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 3,4,5,6,8 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளில் திருமணம்

செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 1ம் எண்ணில் பிறந்த ஆண்கள் அதே எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 2,11,20,29 ஆகிய தேதியில் பிறந்தவர்கள்
02
இரண்டாம் தேதியிலோ அல்லது கூட்டு என் இரண்டாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,3,5,6,7 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 அல்லது 7 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 2ம் எண்ணில் பிறந்த

 ஆண்கள் 8 அல்லது 9ம் எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 3,12,21,30 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : three மூன்றாம் தேதியிலோ அல்லது கூட்டு என் மூன்றாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 2,3,9 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. 4,13,22,31 ஆகிய

தேதியில் பிறந்தவர்கள் : four நான்காம் தேதியிலோ அல்லது கூட்டு என் நான்காக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,5,6,8 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 வரும்
தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 5,14,23 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : five ஐந்தாம் தேதியிலோ அல்லது

கூட்டு என் ஐந்தாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,2,3,6 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 9 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இதையும் படிக்கலாமே: சகல செல்வங்களையும் பெற உதவும் சுலோகம்

 6,15,24 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : six ஆறாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஆறாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 6,9 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம்

செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 அல்லது 9 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 6ம் எண்ணில் பிறந்த ஆண்கள் 1,4,5,3 ஆகிய எண்ணில் பிறந்த பெண்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 7,16,25 ஆகிய தேதியில்

பிறந்தவர்கள் : seven ஏழாம் தேதியிலோ அல்லது கூட்டு என் ஏழாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,2,5,6 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 2 அல்லது 6 வரும் தேதிகளில்

 திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 7ம் எண்ணில் பிறந்தவர்கள் 8ம் எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 8,17,26 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : eight எட்டாம் தேதியிலோ அல்லது கூட்டு என் எட்டாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 1,4 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ

பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 8ம் எண்ணில் பிறந்தவர்கள் 2,7 ,8 ஆகிய எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. 9,18,27 ஆகிய தேதியில் பிறந்தவர்கள் : nine ஒன்பதாம் தேதியிலோ அல்லது கூட்டு என்

ஒன்பதாக வரும் தேதியிலோ பிறந்தவர்கள் 3,5,6,9 ஆகிய தேதியிலோ அல்லது கூட்டு எண் இவைகளாக வரும் தேதியிலோ பிறந்தவர்களை திருமணம் செய்துகொள்வது சிறந்தது. இவர்கள் கூட்டு எண் 1 அல்லது 3 அல்லது 6

அல்லது 9 வரும் தேதிகளில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 9ம் எண்ணில் பிறந்தவர்கள் 2,8 ஆகிய எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

 
READ MORE - நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த தேதியில் திருமணம் செய்துகொள்வது நல்லது

அம்பு வில்லு பாவித்த முதல் இனம் இலங்கையில் தென்பகுதில்

ஞாயிறு, 14 ஜூன், 2020

இலங்கையின் தென்பகுதில் உள்ள மழைக் காடுகளில்(Fa-Hien Lena) உள்ள குகை ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட கற்கள், சிறிய ஆயுதங்கள் 48,000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை 
என்பது நிரூபனமாகியுள்ளது. அவர்கள் 48,000 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே 
அம்பு வில்லை பாவிக்க கற்றுக்கொண்டு இருப்பது பெரும் ஆச்சரியமான 
விடையம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இதுவரை உலகில் ஆபிரிக்காவில் தான் மிகப் பழமையான 
ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இவை சுமார் 64,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை.
அவர்களும் அம்பு வில்லை பாவிக்க கற்றுக்கொண்டு இருந்தார்கள். மேலும் ஜேர்மனில் கண்டு பிடிக்கப்பட்ட சில ஆதிகால ஆயுதங்கள் 18,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாவிக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில் உலகில் 2வது மிகப் பழைய கற்கால ஆயுதங்கள் இலங்கையில் தான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் வசித்த மக்கள், மிகவும் பழமைவாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதில்
 ஒரு ஐயப்பட்டும் இல்லை.
இந்த கற்கால மனிதர்கள் மொழிகள் தோன்ற முன்னரே இலங்கையில் வசித்து வந்துள்ளார்கள். இவர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அல்லது இவர்களில் ஒரு பகுதியினரே பின் நாளில் தமிழர்களாக மாறி இருக்க் வாய்ப்புகள் அதிகம்.அந்த வகையில் உலகின் மூத்த குடி தமிழ் குடி என்று சொல்வதில் ஒரு அர்த்தம் 
உள்ளது அல்லவா.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - அம்பு வில்லு பாவித்த முதல் இனம் இலங்கையில் தென்பகுதில்

சில பகுதிகளில் கொழும்பில் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில்

வெள்ளி, 12 ஜூன், 2020

நாளை மறுதினம் (14-06-20) ஞாயிற்றுக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பின், கொம்பனித் தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம், பொரளை, மருதானை (கொழும்பு 02,03,07,08,10) ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு 
அமுல்படுத்தப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (14) முற்பகல் 9.00 மணி முதல் செவ்வாய் நள்ளிரவு 12.00 மணி வரையான 15 மணி நேரத்திற்கு இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, சபை அறிவித்துள்ளது.
இக்காலப் பகுதியில், (கொழும்பு 01) கொழும்பு கோட்டை பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என சபை தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், தங்களுக்கு ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - சில பகுதிகளில் கொழும்பில் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில்

மாணவர்களுக்கு இணையவழிக் கற்பித்தல் மூலம் ஏற்படும் பேராபத்தாம்

வியாழன், 11 ஜூன், 2020

கொரோனா அச்சம் காரணமாக இணையவழிக் கற்பித்தல் முறை வைரலாகி வருகிறது.இக்கற்பித்தல் முறை வெறும் வகுப்பறை கற்பித்தல் போல் ஆசிரியரிடமிருந்து மாணவர் கற்கும் ஒருவழிப்பாதையாக
 மட்டுமல்லாது பல்வழிப்பாதை கொண்ட
முழுநிறைவு கற்பித்தல் முறையாக விளங்குகின்றது.இணையவழிக் கல்வி முறையில் பாட வல்லுநர்களால் வடிவமைக்கப்படும் பாடங்கள் பல்லூடக 
வசதிகளுடன் பல்வழிக் கற்பித்தல் முறைகளைத் தருவதாக விளங்குகிறது.இத்தகைய நன்மைகளை 
தரும் இணையவழிக் கல்வி முறையில் பல ஆபத்துக்களும் உள்ளதை நீங்கள் அறிவீர்களா?இணையவழிக் கல்வி 
முறையில் எத்தகைய ஆபத்துக்கள் உள்ளன?, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன? இதுபோன்ற உங்கள் கேள்விகளுக்கு பதிலாக வருகிறது
 இக்காணொளி,

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

     
READ MORE - மாணவர்களுக்கு இணையவழிக் கற்பித்தல் மூலம் ஏற்படும் பேராபத்தாம்

கணவன் மனைவி கஞ்சா மற்றும் ஹெரோயின் மாத்திரைகளுடன் கைது

புதன், 10 ஜூன், 2020

மஹரகமவில் அரசு உத்தியோகத்தர் மற்றும் அவரது பட்டதாரி மனைவி ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.நல்லவத்த வீதியில் அரச ஊழியர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவரது வீட்டில் கஞ்சா மீட்கப்பட்டது. மனைவி கைது
 செய்யப்பட்டார்.பத்து கிராம் ஹெற்றமைன், 20 கிராம் பனி, 250 கிராம் கஞ்சா மற்றும் 33 போதை மாத்திரைகள் பறிமுதல்
 செய்யப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் 29 மற்றும் 25 வயதுடையவர்கள்.இந்த 
ஜோடி வாடகை வீட்டில் (ஒரு மாதத்திற்கு
 ரூ .25,000) வசித்து வருகிறது. அரச உத்தியோகத்தர் போதைப்பொருட்களை வெளியிடங்களில் விற்பனை செய்து வந்ததுள்ளமை
 தெரிய வந்தது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கணவன் மனைவி கஞ்சா மற்றும் ஹெரோயின் மாத்திரைகளுடன் கைது

நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு .ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறை

ஞாயிறு, 7 ஜூன், 2020

கொரோனா தொற்றை அடுத்து முடக்கம் கண்ட சுற்றுலாத்துறையை மீளவும் புத்துயிர் கொடுக்க அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.அந்தவகையில் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல்,சுற்றுலாப்பயணிகள் ஸ்ரீலங்காவுக்கு 
வருவதற்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.ஆனால், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், குறைந்தபட்சம் 05 இரவுகளாவது நாட்டில் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார 
சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலாப் பயணிகள், இந்நாட்டிற்கு வருகை தருவதற்கு குறைந்தபட்சம் 72 மணிநேரத்திற்கு முன்னர் தங்களது PCR பரிசோதனை
 அறிக்கையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அவர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்த பின்னர்,
 மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான 
முடிவுகள் கிடைக்கும் வரை, கொழும்பில் அல்லது நீர்கொழும்பிலுள்ள 
நட்சத்திர ஹோட்டலொன்றில் ஒரு நாள் சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள் என, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள
 அறிக்கையில் தெரிவித்துள்ளது.எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு பின்னர், நோய்க்கான அறிகுறிகள் தென்படாத பட்சத்தில், தனிமைப்படுத்தலுக்கான பரிந்துரை
 இருக்காது எனவும், குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், 10 நாட்கள் அல்லது, அதற்கு மேற்பட்ட காலம் தங்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் 03 PCR பரிசோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு .ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறை

ஹட்டன் வீதியின் கோர விபத்து…மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

சனி, 6 ஜூன், 2020

இலங்கை  கொழும்பு – ஹட்டன் வீதியின் ரெசல்ல சந்தியில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டெம்பஸ்டோவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பயணிகள் பேருந்து.06-06-20. இன்று பிற்பகல் 2.15 மணியளவில் விபத்துக்குள்ளனது.ஹட்டன் பிரதான
 வீதிக்குள் நுளைய முற்பட்ட போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து குடைசாந்துள்ளது. விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும் விபத்து தொடர்பிலான
 மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் வட்டவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





READ MORE - ஹட்டன் வீதியின் கோர விபத்து…மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

முக்கிய செய்தி க.பொத. உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில்

உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்சை இடம்பெறும் திகதி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை நாளை மறுதினம் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தேர்தல் திகதி அறிவிக்கப்படும் தினத்தன்று பரீட்சைகள் தொடர்பான திகதிகளும் அறிவிக்கப்படுமென நம்பத்தகுந்த 
தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.தற்போது வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய உயர்தர பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சை செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரச தரப்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது
363,278 மாணவர்கள் உயர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.இந்த மாத இறுதியில் பாடசாலைகளை திறப்பதற்கு அதிக வாய்ப்பகள் உள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் அதற்கான உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்று வெளியாகும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - முக்கிய செய்தி க.பொத. உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில்

இலங்கையில் இடைவிடாது பத்து வருட காலமாக தொடரும் பந்தம்

வெள்ளி, 5 ஜூன், 2020

வுனியா நகரில் அமைந்துள்ள பெரியதொரு குளம் குடியிருப்புக் குளம் ஆகும். அந்தக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் பலர் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் தனிக்கொடி சிவானந்தம் (பாபு) என்பவர்.இவர் இருபது வருடமாக அந்தக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு 
வருகின்றார்.அவருடன் கூடவே தோணியில் ஒரு கொக்கும் கடந்த பத்து வருட காலமாக செல்வது அதிசயமான காட்சியாக உள்ளது.நான் இக்குடியிருப்புக் குளத்தில் இருபது வருடங்களாக மீன்பிடித்து 
வருகின்றேன். கடந்த
 பத்து வருடமாக இந்தக் கொக்கு என்னுடனேயே தோணியில் வருகின்றது. குளத்துக்குள்ளே நான் மீன்பிடிக்க இறங்குவதில் இருந்து தொழில் முடிந்து கரைக்கு வரும் வரை என் கூடவே இக்கொக்கு வருகின்றது. 
இந்தக் கொக்கு வேறு எவருடைய தோணியிலும் போய் அமர்வதில்லை” என்கிறார் சிவானந்தம்.குளத்தில் மீன்பிடிக்க 
அவர் தோணியை எடுத்துக் கொண்டு செல்லும் போது, இவரைக் கண்டதும் அந்தக் கொக்கு
 பறந்து வந்து அவரது தோணியின் முன்பக்கத்தில் அமர்ந்து கொள்கிறது. அந்த மீனவர் போடுகின்ற சின்ன சின்ன மீன்களை 
உண்டு கொண்டு அவருடனேயே தோணியில் பயணம் செய்கிறது அந்தக் கொக்கு.அந்தக் குளத்தில் பல 
மீனவர்கள் தோணியில் மீன்பிடிக்கின்ற போதிலும், எங்கிருந்தோ வருகின்ற ஒரு கொக்கு காலை, மாலை வேளையில் அந்த மீனவரோடு பயணம் செய்வதுதான் அபூர்வமானதாக இருக்கின்றது.”
என்னோடு இந்தக் குடியிருப்புக் குளத்தில் எவ்வளவோ பேர் தோணியில் மீன் பிடிக்கிறார்கள். நிறையக் கொக்குகள் வருகின்றன. அவர்கள் போடுகின்ற சின்ன மீன்களை உண்டு 
விட்டுப் போய் விடும். ஆனால் இந்த ஒரு கொக்கு மட்டும் எனது தோணியில் எப்போதும் இருக்கும். நான் மீன்பிடித்து முடிக்கும் வரை என்னுடனேயே இருந்து 
விட்டு நான் கரைக்கு வந்ததும் பறந்து போய் விடும்” என்கிறார் சிவானந்தம்.
இந்த அதிசயக் கொக்கின் நடத்தையை இங்குள்ளவர்கள் வியப்பாகவே நோக்குகின்றனர். பிராணிகளின் விநோதமான நடத்தைகள் சிலவற்றைப் புரிந்து கொள்ளவே முடியாதுள்ளதாக
 இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.பறவைகளுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு அன்றைய காலம் தொட்டு இன்று
 வரை தொடர்ந்து வருவதையே இக்காட்சி புலப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், வவுனியா குடியிருப்பு குளத்தில்
 தொழில்புரியும் அந்த மீனவனுக்கு தொழில் முடியும் வரை வழித்தடமாகவும், துணையாகவும் இருக்கும் அதிசய கொக்கின் செயற்பாடு எப்பொழுதும் 
ஆச்சரியமே!
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இலங்கையில் இடைவிடாது பத்து வருட காலமாக தொடரும் பந்தம்

முக்கியமான செய்தி திருமண நிகழ்வுகளை நடத்தும் மண்டப உரிமையாளர்களுக்கு

திங்கள், 1 ஜூன், 2020

திருமண, வரவேற்பு மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.இது 
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “நடைபாதைகள், ஆசனங்கள், அலங்கார அமைப்புகள் மற்றும் ஏனைய நோக்கங்களுக்கான இட ஒதுக்கீடுகளைக் கருத்திற்கொண்டு மண்டபத்தின் இடப்பரப்பிற்கு ஏற்ற வகையில் ஆசனங்களின் அனைத்துப் பக்கங்களிலும் ஒரு மீற்றர் தனிநபர் இடைவெளியைப் பேணக்கூடிய 
வகையில் அனுமதிக்கக் கூடிய விருந்தினர்களின் எண்ணிக்கை முகாமைத்துவத்தினரால் தீர்மானிக்கப்பட வேண்டும்.எந்தவொரு மண்டபத்திலும் ஆகக்கூடியது 100 பங்குபற்றுனர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட முடியும்.நிகழ்விற்கு 
அழைப்பு விடுக்கப்பட்ட எவரேனும் சுகயீனமாக உணர்ந்தால் நிகழ்வில் பங்குபற்றுவதை தவிர்ப்பதை உறுதிப்படுத்துவது நிகழ்வின் ஏற்பாட்டாளரின் பொறுப்பாகும்.மண்டபத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதாவது வரவேற்பு பகுதி, நிகழ்வு நடைபெறுமிடம், உணவு 
பரிமாறுமிடம் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து இருக்கை ஒழுங்கமைப்புகளிலும் ஆசனங்களின்
 அனைத்துப் பக்கங்களிலும் ஒரு மீற்றர் தனிநபர் இடைவெளி பின்பற்றப்படுவது கட்டாயமாகும்.மண்டபத்தினுள் சிறந்த காற்றோட்ட வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். வளிச் சீராக்கி பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் போதுமான
 புதிய காற்று வெளியிருந்து உள்வாங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
கைகளைச் சரியான முறையில் சவர்க்காரமிட்டுக் கழுவுவதற்கான வசதி மண்டபத்தின் நுழைவாயிலில் பொருத்தமான இடத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும்.நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படும் இடத்தில் கைகளை தொற்று நீக்கம் செய்துகொள்வதற்கு இலகுவாக கிடைக்கக் கூடிய வகையில் பொருத்தமான பல இடங்களிலும் கை 
தூய்மையாக்கிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.உணவு பரிமாறும் பகுதியில் உணவு வகைகள் அதற்கென நியமிக்கப்பட்ட பணியாளரால் மாத்திரம் பரிமாறப்பட வேண்டும். சுயமான உணவுப் பரிமாறுதல் அனுமதிக்கப்படக்கூடாது.பாதுகாப்பான குடிதண்ணீர் மற்றும் பானங்கள் ஒவ்வொருவருக்கும் அதற்கென நியமிக்கப்பட்ட பணியாளரால் மாத்திரம் வழங்கப்பட வேண்டும். குடிதண்ணீர்,
 பானங்களை வழங்க சூழலுக்கு பாதிப்பற்ற கடதாசிக் கோப்பைகள் பாவிப்பது வரவேற்கத்தக்கது.நிகழ்வு ஒன்றுக்காக ஒருவர் மண்டபத்தைப் பதிவு செய்ய வரும்போது தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற
 சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டறிக்கை கட்டாயமாக சேவை பெறுநருக்கு வழங்கப்பட வேண்டும்.நிகழ்வில் கலந்துகொள்ளுகின்ற 
அனைவரும் சரியான முறையில் முகக்கவசத்தை அணிந்திருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.நடனம் மற்றும் இசை நிகழ்வுகளில் தனிநபர் இடைவெளி பேணப்படும் வாய்ப்புகள் 
குறைவென்பதால் அவற்றைத் தவிர்த்துக்கொள்ளவும்.எந்தவொரு நிகழ்விலும் மதுபானம், புகைப்பொருள் பாவனை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.சுகாதார, பாதுகாப்பு நடைமுறைகளுக்கு பொறுப்பாக பணியாளரொருவர் நியமிக்கப்படுவதுடன், நிகழ்வுகளின் முன்னாயத்தம் முதல் இறுதி வரை சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுவது கண்காணித்து உறுதி 
செய்யப்பட வேண்டும்.கொவிட் – 19 பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டல்கள் நிகழ்வின் ஆரம்பத்திலும் நிகழ்வு நடைபெறும் போதும் ஒலிபரப்பப்பட வேண்டும்.நிகழ்வு நிறைவடைந்ததும், மண்டபத்தின் அனைத்துப் பகுதிகள், தளபாடங்கள், 
பாவனைப் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும்.கொவிட் – 19 தொடர்பான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் 
விண்ணப்பம் மண்டபத்தின் உரிமையாளரால் முழுமைப்படுத்தப்பட்டு, பகுதிக்குரிய
 உள்ளூராட்சி அதிகார சபைக்கும் பிரதியொன்று
 பகுதிக்குரிய சுகாதார மருத்துவ அதிகாரிக்கும்
 சமர்ப்பிக்கப்படுவதுடன், தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து நடைமுறைகள் தொடர்பாகவும் மண்டபத்தின் உரிமையாளரே பொறுப்புக்கூற வேண்டியவராவார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - முக்கியமான செய்தி திருமண நிகழ்வுகளை நடத்தும் மண்டப உரிமையாளர்களுக்கு

கொழும்பு மாநகரில் 70 நாட்களாக சிக்கிய கேரளத் தம்பதிக்கு ஆதரவு கொடுத்த தமிழர்

விடுமுறை நாட்களை மனைவியுடன் இலங்கையில் கழிக்க சென்ற இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் கடந்த 70 நாட்களாக கொழும்பில் சிக்கியுள்ளார்.கேரள மாநிலம் வைப்பின் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித். கப்பல் ஊழியரான 
இவர் விடுமுறை நாட்களை இலங்கையில் செலவிடலாம் என முடிவெடுத்து 
மனைவியுடன் கடந்த மார்ச் 11 அன்று கொழும்பு சென்றுள்ளார்.இதனிடையே
 கொரோனா பரவல், ஊரடங்கு என கடும்
 நெருக்கடியை எதிர்கொண்ட இந்த தம்பதி மார்ச் 19 முதல் கேரளாவுக்கு திரும்ப முயன்று வருகின்றனர். ஊரடங்கால் உள்ளூர் விமான சேவைகள் மொத்தம் முடக்கப்பட்டுள்ளதால் செய்வதறியாது தவித்துள்ளனர்.இவர்கள் 
இலங்கை தமிழர் ஒருவரின் ஹொட்டலில் தங்கியிருப்பதால், அவரது கருணையால் 
இதுவரை உணவுக்கும் தங்குவதற்கும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்கின்றனர்.கொரோனா ஊரடங்கால் மார்ச் 25 முதல் அந்த ஹொட்டல் மூடப்பட்டாலும், தற்போது இவர்கள் மட்டுமே 
அந்த ஹொட்டலில் தங்கி வருகின்றனர். சமையற் கலைஞர் உட்பட சில ஊழியர்கள் மட்டுமே 
அந்த ஹொட்டலில் தற்போது உள்ளனர்.மேலும், ஊரடங்கு காரணமாக ஹொட்டலில் இருந்து வெளியேற முடியாமல் ஸ்ரீஜித்தும் மனைவியும் முடங்கிப்போயுள்ளனர். கேரள மாநிலத்தவர்கள் சுமார் 80 பேர் வரை இலங்கையில் 
கொரோனாவால் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தால் எவ்வித 
பயனும் இல்லை என்றே ஸ்ரீஜித் குற்றஞ்சாட்டுகிறார். கேரள சுற்றுலாத்துறைக்கும், அமைச்சருக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக கூறும் ஸ்ரீஜித், மத்திய அமைச்சர் வி.முரளிதரன் அடுத்தமுறை பார்க்கலாம் என மட்டும் தெரிவித்ததாக குறிப்பிடுகிறார்.இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் ஒரு நாட்டில் பல மாதங்களாக சிக்கியிருக்கிறோம், ஆனால்
 அரசு தரப்பில் இருந்து எந்த உதவியும் இல்லை.
 இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜூன் 1 ஆம் திகதி கொழும்பில் இருந்து திருச்சிக்கு கப்பல் சேவை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முன்னெடுக்கப்படுகிறது. அதில் இடம் கிடைக்கும் என்பது சந்தேகமே 
என்கிறார் ஸ்ரீஜித்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கொழும்பு மாநகரில் 70 நாட்களாக சிக்கிய கேரளத் தம்பதிக்கு ஆதரவு கொடுத்த தமிழர்

முக்கிய அறிவிப்பு பாடசாலையில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோருக்கு

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தேவையான இறுதி ஐந்தாண்டுக்கான வாக்காளர்கள் பட்டியல் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் புதிய முறைமையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.கொரோனா
 வைரஸ் நிலைமை
 காரணமாக மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் நோக்கில், பாடசாலைகளுக்கு
 மாணவர் சேர்க்க தேவையான வாக்காளர் 
பட்டியல் தொடர்பான தகவல்களை பெற மாவட்ட தேர்தல் செயலகங்களுக்கு செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.
மேலும், விண்ணப்பத்தை 
பூர்த்தி செய்ய தேவையான தகவல்களை கிராம சேவர்கள் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளமான www.elections.gov.lk என்ற 
இணையத்தளத்திற்கு சென்று தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை தட்டச்சு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள 
முடியும் என கூறியுள்ளது.2021 ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டுக்கு பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்கும் பெற்றோர் அதற்கான விண்ணப்பத்தில் ஒரே விலாசத்தில் 5 ஆண்டுகள் வாக்காளராக பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




READ MORE - முக்கிய அறிவிப்பு பாடசாலையில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோருக்கு