இதுரை நால்வருக்கு கொரோனா தொற்று திருமலையில் உறுதி

வியாழன், 30 ஏப்ரல், 2020

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமாயின் அதனை தடுப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.கொரோனா தொற்று பற்றி இன்று இடம்பெற்ற நேர்காணலின் போதே 
அவர் இதனை தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தில் 2829 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமான 47 நோயாளர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் 
தெரிவித்தார்.அதில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதவிசிறிபுர பகுதியில் இரண்டு பேரும் மஹதிவுல்வெவ பகுதியில் ஒருவரும் கந்தளாய் – ரஜ எல பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன், 2101 பேருக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் முடிவடைந்துள்ள நிலையில் 728 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு 
உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டு நபர்களின் மாதிரிகளும், தம்பலகாமம் பிரதேசத்தில் 12 பேரின்
 மாதிரிகளும் PCR பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமானால் அவர்களை 
தனிமைப்படுத்துவதற்குரிய அனைத்து
 வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தும் நிலையங்களை 
ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன் சுகாதார திணைக்கள ஊழியர்கள் தமது உயிர்களை பணயம் வைத்துக் கொண்டு நோயாளர்களின்
 விடயத்தில் இரவு பகலாக சேவையாற்றி வருவதாகவும், தொடர்ந்தும் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - இதுரை நால்வருக்கு கொரோனா தொற்று திருமலையில் உறுதி

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் ரத்துச் செய்தது

புதன், 29 ஏப்ரல், 2020

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.குறித்த வர்த்தமானி அறிவிப்பில், மொத்த வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை 100 ரூபாவாக ஆக இருந்தது, பக்கெட்டுகளுக்கு 105 ரூபா எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் நுகர்வோர் அதிகார சபையினால் குறித்த வர்த்தமானியை இரத்து செய்யும் வகையிலான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் ரத்துச் செய்தது

கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆவது நபரும் யாழில் குணமடைவு

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண 
குணமடைந்துள்ளார்.
அவர் இன்று யாழ்.போதனா வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டியில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படுவார் என்று வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி 
தெரிவித்தார்.குறித்த நபர் தொடர்ந்து 14 நாட்கள் அவருடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்.
யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 5 ஆவது நபரும் குணமடைந்துள்ளார் என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்தார்.இதேவேளை யாழ்ப்பாண
 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டிருத்தனர். இவர்களில் சிலர் வெலிகந்த, கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று
 வருகின்றனர்.மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பேர் குணமடைந்து
 யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், 5 ஆவது நபரும் இன்று குணமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் அனுப்பி 
வைகலகல்படவுள்ளார்.இதன்படி யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் குணமடைய மிகுதியாக 12 பேர் சிகிச்சை 
பெற்று வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆவது நபரும் யாழில் குணமடைவு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 581 ஆக அதிகரிப்பு

திங்கள், 27 ஏப்ரல், 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
 தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 
581ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றுறுதியானவர்களில் மேலும் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.இதற்கமைய
 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.அத்துடன் 434 பேர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்தத் தகவலை 
வெளியிட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





READ MORE - கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 581 ஆக அதிகரிப்பு

ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளைய தினம் அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு, பின்னர் இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படவுள்ளது.ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த மாவட்டங்களுக்கான ஊரடங்கு 
உத்தரவு மே மாதம் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மீண்டும் திங்கட்கிழமை
 அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை 
மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு

வெளியே வருவதற்கு தேசிய அடையாள அட்டை இறுதி இலங்கங்களின் அடிப்படையில் அனுமதி

சனி, 25 ஏப்ரல், 2020

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டுமாயினும் சில விதிகளைப் பின்பற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, திங்கட் கிழமைகளில் தேசிய அடையாள 
அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 1 அல்லது 2 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.செவ்வாய்க்கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 3 அல்லது 4 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே 
அனுமதிக்கப்படுவர்.புதன்கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 5 அல்லது 6 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.வியாழக்கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 7 அல்லது 8 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர். வெள்ளிக்கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு
 இலங்கங்கள் 9 அல்லது 0 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற மிகவும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே இவ்வாறு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.மிகவும் அருகாமையில் உள்ள கடைகளில் தேவையான பொருட்களை முடிந்தளவு சீக்கிரம் கொள்வனவு செய்து, வீடு திரும்ப வேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.கொரோன வைரஸ் தொற்றுப் பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கு இவ்வாறான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - வெளியே வருவதற்கு தேசிய அடையாள அட்டை இறுதி இலங்கங்களின் அடிப்படையில் அனுமதி

யாழில் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் வெளிமாவட்டக்காரர்

யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், விண்ணப்பித்தவர்களில் 2000 பேர் தமது சொந்த இடங்களுக்கு 
அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது;யாழ்ப்பாணத்தில் கடந்த 20 திகதி தொடக்கம் இன்றைய நாள் வரை பிற மாவட்டத்தைச் சேர்ந்த
 5000 பேர் அந்தந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் சுமார் 2000 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியமாக செல்ல வேண்டியவர்களே 
அனுப்பப்பட்டுள்ளனர்.அடுத்த கட்டமாக சிலர் அனுப்பப்படவுள்ளனர். மேலும் ,அதி இடர் வலயமாக கருதப்படும் மாவட்டங்களுக்கு செல்வதற்காக விண்ணப்பிப்பவர்கள் தற்போதய நிலையில் அனுப்பப்பட மாட்டார்கள் என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - யாழில் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் வெளிமாவட்டக்காரர்

போதனா வைத்திய சாலையில் நடந்த கொரோனா பரிசோதனை முடிவுகள்

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ள 19 பேருக்கு-21-04-20- இன்று பி.சி.ஆர் ஆய்வுகூட பரிசோதனை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்தியசாலை 
பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.அதில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது 
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.யாழ்.போதனா 
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள 18 பேருக்கும்-21-04-20- இன்று பரிசோதணை நடத்தப்பட்டது.அவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதணைக்காக யாழ்.பல்கலைக்கழக 
மருத்துவ பீடத்தில் உள்ள ஆய்வுகூடத்திற்கு 
அனுப்பிவைக்கப்பட்டது.குறித்த பரிசோனைகளின் முடிவின்படி, எவருக்கும் தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - போதனா வைத்திய சாலையில் நடந்த கொரோனா பரிசோதனை முடிவுகள்

கொரொனா தொற்று முடியும் வரை சாரதி அனுமதிப்பத்திர காலாவதித் திகதி நீடிப்பு

சனி, 18 ஏப்ரல், 2020

சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் காலத்தை கொரோனா தொற்றுநோய் முடியும் வரை நீடிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு 
அறிவுறுத்தியுள்ளார்.சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 10 அன்று காலாவதியானது.மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகம் இயங்காததால், சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்க
 முடியவில்லை.இன்று போக்குவரத்து துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, கொரொனா தொற்றுநோய் அபாயம் முடிவடையும் வரை சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதி திகதி நீடிக்கப்பட அறிவுறுத்தினார். அத்துடன்,
 இது தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.
அத்தியாவசிய ஊழியர்கள் குழுக்களைப் பயன்படுத்தி நாரஹன்பிட்டி தலைமை அலுவலகத்தில் அலுவலக நடவடிக்கைகளைத் தொடரவும், இந்த மாதம் 20 ஆம் திகதிக்குப் பிறகு 
பிற மாகாணங்களில் அலுவலகங்களைத் திறக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.இதேவேளை, கொரோனா முடக்கத்தினால் மோட்டார் போக்குவரத்து திணைக்கத்திற்கு சுமார் 30 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






READ MORE - கொரொனா தொற்று முடியும் வரை சாரதி அனுமதிப்பத்திர காலாவதித் திகதி நீடிப்பு

மட்டக்களப்பில் கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காக்க நடந்த மகாயாகம்

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

உலகையே உலுக்கிவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்குமாறு வேண்டியும் கொரோனா தொற்றினால் உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் தொடர்ச்சியாக மத அனுஸ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர்
 ஆலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட யாக பூசை நடத்தப்பட்டது. இதன்போது, அற்புத சக்தி படைத்த மூலிகைகள் கொண்டு தன்வந்திரி மகா யாகம் நடத்தப்பட்டது. ஆலயத்தின் பிரதமகுரு கிரியா கலாபமணி, கிரியாஜோதி, திருமுருக கலாமணி,
 ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ மா.குலேந்திரரூப சர்மா தலைமையில் இந்த மகா யாகம் நடைபெற்றது.இதன்போது,
 மூலிகைகள் கொண்டு யாகம் நடத்தப்பட்டதுடன் மந்திரிக்கப்பட்ட மகா கும்பம் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு
 மூல மூர்த்தியாகிய முருகப்பெருமானுக்கு அபிசேகம் செய்யப்பட்டது
. இந்த யாகத்தின்போது, கொரோனாத் தொற்றினை 
இல்லாமல்செய்து நாட்டினை சுபீட்சத்திற்குக் கொண்டுவர இறையாசி வேண்டப்பட்டதுடன்  இன்றைய யாக பூசையின்போது ஆலய நிர்வாகத்தினர் மட்டுமே 
அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - மட்டக்களப்பில் கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காக்க நடந்த மகாயாகம்