கொரோனா அச்சுறுத்தலால் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுகிறது

வியாழன், 19 மார்ச், 2020

 கொரோனா அச்சுறுத்தலின் தொடராக இலங்கைக்கான வெளிநாட்டு விமானப் பயணங்கள் அனைத்தையும் இன்று முதல் மூன்று வாரங்களுக்கு இடைநிறுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பணித்திருப்பதாக தெரியவருகிறது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைமுறைக்கு வரும்வகையில் கட்டுநாயக்க விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

 
READ MORE - கொரோனா அச்சுறுத்தலால் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுகிறது

இலங்கையிலும் கொரோனா வைரஸின் தீவிரம்சில பகுதிகள் மூடப்படும் அபாயம்

வியாழன், 12 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் சில பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் மக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலைமை இலங்கையிலும் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவை 
இயக்குனர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அதிகாரிகளினால் பொது மக்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றவில்லை என்றால் கொரோனா வைரஸ் பரவி, நாட்டிலுள்ள ஒரு பகுதி மூடப்படட வாய்ப்புகள் உள்ளது.எனவே சுகாதார அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை முழுமையாக 
பின்பற்ற வேண்டும். தொடர்ந்தும் சுகாதாரப் பிரிவுகளின் ஆலோசனைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து
 இலங்கை வரும் வெளிநாட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பரிசோதிக்கப்பட்ட பின்னரே மட்டக்களப்பு நோக்கி அனுப்பி வைக்கப்படுவார்கள்.மேலும், தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என இயக்குனர் நாயகம் மேலும் 
தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - இலங்கையிலும் கொரோனா வைரஸின் தீவிரம்சில பகுதிகள் மூடப்படும் அபாயம்

உணவில் வாய் வைத்ததால் இரண்டு நாய்களை தெருவை விட்டே துரத்திய .சேவல்

செவ்வாய், 3 மார்ச், 2020

தனக்கு வழங்கிய உணவில் வாய் வைத்த குற்றத்திற்காக இரண்டு நாய்களை தெருவை விட்டே சேவல் ஒன்று துரத்தியுள்ளது.
இது குறித்த காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.உணவுக்காக ஒரு கட்டத்தில் இரண்டு நாய்கள் சேர்ந்து சேவலுடன்
 சண்டை போடுகிறது.பின்னர் ஒரு நாய்
 மட்டும் சேவலுடன் விடாமல் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறது. கோவத்தில் சேவல் இரண்டு நாய்களையும் 
விரட்டியடித்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - உணவில் வாய் வைத்ததால் இரண்டு நாய்களை தெருவை விட்டே துரத்திய .சேவல்

முக்கிய அறிவிப்பு சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுருக்குக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு

கல்விப் பொதுத் தராதரப் சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் 
அறிவித்துள்ளது.இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் மாவட்ட ரீதியிலான அல்லது அகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல்கள் வெளியிடப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
 கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில், 4,987 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதோடு, இதில் 7 இலட்சத்து 17,008 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - முக்கிய அறிவிப்பு சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுருக்குக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு

அவசர அறிவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 9ஆம் திகதி வரை இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கனவே 
இந்த மார்ச் 2ஆம் திகதியே இறுதித் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது
.விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை இணையம் மூலம் அனுப்ப முடியும்.தகவல்கள் தேவைப்பட்டால், பரீட்சை திணைக்கள தொலைபேசி விளக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கோரப்பட்டுள்ளனர். 
0112 2784208, 01122784537

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - அவசர அறிவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு