யாழ் நல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

நல்லூர் ஆலயத்தில் மின சாரம் தாக்கியதில் தரிசனம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று யாழ்.பொலிஸர் தெரிவித்தனர்.
காலையில் பெய்த மழை காரணமாக அங்கு மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில்
 சேர்க்கப்பட்டார்.
அங்கு முதியவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் 
மேலும் தெரிவித்தனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - யாழ் நல்லூர் ஆலயத்தில் முதியவர் பரிதாப மரணம்

நாடு பூராகவும் 24 மணி நேரத்தில்- 168 பேர் கைது

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய 168 பேர்
 கைதாகியுளளனர்.
கடந்த 05.07.2019 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில் இதுவரை 9692 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


READ MORE - நாடு பூராகவும் 24 மணி நேரத்தில்- 168 பேர் கைது

நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு

யாழ்ப்­பா­ணம்,  நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில்  9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.
வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில் அத­னைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திய திரு­டர்­கள், அலு­மா­ரிக்­குள் வைக்­கப்­பட்­டி­ருந்த 9 பவுண் நகை­யைத் திரு­டிச் சென்­றுள்­ள­னர்.
வீட்­டி­லி­ருந்­த­வர்­கள் காலை­யில் எழுந்து பார்த்­த­போது, அலு­மாரி திறக்­கப்­பட்­டி­ருந்­ததை அவ­தா­னித்­துள்­ள­னர்.
அதன் பின்­னரே வீட்­டில் நகை திரு­டப்­பட்­டதை அறிந்து பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­துள்­ள­னர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு

முரண்பாட்டினால் விபரீத முடிவை எடுத்த தாய்….!! தென்மராட்சியில் சோ

சனி, 17 ஆகஸ்ட், 2019

யாழ்ப்பாணம், சாவகச்சேரி சங்கத்தனைப் பகுதியில் தாயொருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனது மகளுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே தாய் இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக, ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்தச் சம்பவம் அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


>


READ MORE - முரண்பாட்டினால் விபரீத முடிவை எடுத்த தாய்….!! தென்மராட்சியில் சோ

உலுக்கிய கோர விபத்து..!! பெற்றோர் ஸ்தலத்தில் பலி…

நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்ட பகுதியில் சுமார் நூறு அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.குறித்த விபத்து இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்ததாக தெரியவருகின்றது.  ஏனைய மூவரும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வலப்பனை – மந்தாரநுவர – எலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த கணவன், மனைவியான டி.பி.ரூபசிங்ஹ (வயது 50) மற்றும் ரோஹினி குமாரி (வயது 45) ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். எலமுல்லை பிரதேசத்திலிருந்து நுவரெலியாவை நோக்கி குறித்த தாய், தந்தை மற்றும் 6,16,19 வயதுடைய பிள்ளைகள் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்திற்கு
 இலக்காகியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - உலுக்கிய கோர விபத்து..!! பெற்றோர் ஸ்தலத்தில் பலி…

திடீரெனக் கொட்டிய மழை…வவுனியாவில் பெருமகிழ்ச்சியில் பொதுமக்கள்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.வவுனியா மாவட்டத்தில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று பிற்பகல் 12.30 மணி
 தொடக்கம் 2 மணிவரை மழை தொடர்ச்சியாக கன மழை பெய்துள்ளது.   கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் இதனால் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - திடீரெனக் கொட்டிய மழை…வவுனியாவில் பெருமகிழ்ச்சியில் பொதுமக்கள்

பெண்ணொருவர் ஒடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை..

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஓடும் ரயிலின் முன் பாய்ந்து 41 வயதுடைய பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வாதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹோந்தரமுல்ல பாடசாலைக்கருகில் 
குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மருதானையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த புகையிரதத்திற்கு 
முன்பாகப் பாய்ந்தே, குறித்த பெண் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.

READ MORE - பெண்ணொருவர் ஒடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை..

ழ் சுதுமலை அம்மன் கோவிலில் இடம்பெற்ற வித்தியாசமான அன்னதானம்

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

சுதுமலை அம்மன் கோவிலில் நடைபெற்றஒரு அன்னதான நிகழ்வில் கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.
முற்றிலும் இயற்கையிலிருந்து தயாரிக்கப்பட்ட கமுகு மடலில் செய்த சாப்பாட்டு தட்டுகளில் அடியவர்களிற்கு அன்னதானம் 
வழங்கப்பட்டிருந்தது .
இந்நிலையில் அன்னதானங்களின் ஊடாக பிளாஸ்ரிக், பொலித்தீனுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவிய , அன்னதான நிகழ்வை நடத்திய குடும்பங்களுக்கு பலரும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துவருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - ழ் சுதுமலை அம்மன் கோவிலில் இடம்பெற்ற வித்தியாசமான அன்னதானம்