முடங்கியது இலங்கையில் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தொடரும் பதற்ற நிலையை தவிரப்பதற்காக சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதற்றத்தை மேலும் கூட்டும் நோக்கில் சமூகவலைத்தளங்களில் போலியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர வேண்டாம் என்றும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சமூக வலைத்தளங்களினூடாக மத , இன வாதங்களைத் தூண்டும் செய்திகளும் பதிவுகளும் பகிரப்படுவதனால் சமூக வலைத்தளங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொடரும் தொடர்குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவை அதிகமாக பகிரப்படுவதால் முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - முடங்கியது இலங்கையில் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்

இரத்தம் வழங்கக் குவியும் குருதிக் கொடையாளர்கள்

குருதிக்கான தட்டுப்பாட்டையடுத்து விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பல ஆயிரக் கணக்கான குருதிக் கொடையாளர்கள் நாட்டின் பல குருதி வங்கிகளில் கூடியுள்ளனர்.
இதனால் குருதி போதியளவு கிடைத்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் 
அறிவித்துள்ளார்.
பெற்றோர் பாதுகாவலரை இழந்து குழந்தை ஒன்று வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் காட்சியாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் தற்போது குருதிக் கொடையாளர்களிடம் இருந்து குருதி சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குருதி தேசிய குருதி வங்கி ஊடாக தேவைப்படும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படும் 
எனக் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று காலை 6 இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 600இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இரத்தம் வழங்கக் குவியும் குருதிக் கொடையாளர்கள்