பெண்னொருவர் யாழில் மின்சாரம் தாக்கி பலியானார்

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

யாழில் மின்சாரம் தாக்கி பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று யாழ். வைத்தியசாலை வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.இதில் 55 வயதுடைய 
பெண் ஒருவரே இவ்வாறு உரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர்.



READ MORE - பெண்னொருவர் யாழில் மின்சாரம் தாக்கி பலியானார்

கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் திருட்டு

சனி, 27 அக்டோபர், 2018

யாழ் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் பித்தளை பாத்திரங்கள் திருட்டுப் போயுள்ளதாக வீட்டு உரிமையாளர் விஸ்வலிங்கம் கீர்த்தி ராசன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கல்வியங்காடு புதிய செம்மணி வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று (26-10-2018) வெள்ளிக்கிழமை மதியம் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர் இல்லாத சமயத்தில் ஜன்னல் கம்பிகளை களற்றி வீட்டினுள் உட்புகுந்து அறைகள் அனைத்திலும் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியதோடு அறையில் இருந்த பெறுமதிமிக்க பித்தளை பாத்திரங்களை திருடிச்சென்றுள்ளார்கள்.
குறித்த புதிய செம்மணி வீதியில் கடந்த இரண்டு மாதங்களில் பக்கத்து பக்கத்து வீடுகளில் தொடர்ச்சியாக மர்ம முறையில் பல திருட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளது. அனைத்து திருட்டு சம்பவங்களும் ஒரே தரப்பினரால் மேற்கொண்டிருக்கலாம் என பொலிஸார் 
சந்தேகிக்கின்றனர்.
கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - கல்வியங்காடு புதியசெம்மணி வீதி வீடு ஒன்றில் திருட்டு

யாழ் ஏழாலையில் திடீரென தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

யாழ் ஏழாலையில் சற்று முன்னர், முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றியெரிந்து நாசமாகியுள்ளது. இதில் பயணம் செய்தவர்கள் மயிரிழையில் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.யாழ் ஏழாலை வடக்கு சிவகுரு கடையடியில் சென்றுகொன்டிருந்த முச்சக்கர 
வண்டி ஒன்று திடீரென்று தீப்பிடித்து முற்றாக நாசமாகியுள்ளது. எனினும் முச்சக்கர வண்டி தீப்பிடித்ததற்கான காரணம்
 தெரியவில்லை.
வீதியில் சென்று கொண்டிருந்தவர்களும் அயலவர்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்ற போதும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் ஏழாலையில் திடீரென தீப்பற்றியெரிந்த முச்சக்கர வண்டி

வேரோடு சரிந்த 200 வருடங்கள் பழமையான மரம் யாழில்

யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை மற்றும் புயல் காற்று காரணமாக 200 வருடங்கள் பழமையான பாரிய மலை வேம்பு மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
நேற்று  கடும் காற்றுடன் கூடிய அடை மழை பெய்த நிலைமையில் மரம் இவ்வாறு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். பழைய பூங்கா வீதியில் உள்ள வடமாகாண மின்சாரசபை காரியாலயம் முன்பாக நின்றிருந்த மரமே சரிந்து
 விழுந்துள்ளது.
தனால் யாழ். மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் ஊடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, யாழ். மாநகர சபையின் தீயணைப்பு 
பிரிவினரும், சுகாதார ஊழியர்களும் இணைந்து குறித்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


READ MORE - வேரோடு சரிந்த 200 வருடங்கள் பழமையான மரம் யாழில்

மன்னார் தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்

வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழர் தாயகத்தில் அதிசயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய மன்னாரில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெற்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
20 வருடங்களுக்கு 300 மெகாவோட் கணக்கில் மின்சாரம் உற்பத்தி செய்ய கூடிய இயற்கை எரிவாயு வைப்பகம் ஒன்று மன்னாரில் 
கிடைத்துள்ளது.
இந்த வைப்பகம் 350 கன அடியை கொண்டுள்ளதாகவும், அதனை அபிவிருத்தி செய்வதற்காக திறந்த விலை மனு கோரல் ஒன்று எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு வைப்பங்களை ஆய்வு செய்யும் ஸ்லம்புஜா என்ற சர்வதேச நிறுவனத்தினால் மன்னார் கடல் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் ZM 2Z என பெயரிடப்பட்ட பகுதியில் இந்த இயற்கை எரிவாயு வைப்பகம் உள்ளது.
மன்னார் கடல் பகுதியில் 1500 மீற்றர் ஆழ் கடலில் இருந்து மேலும் 2000 மீற்றர் தூர ஆழத்தில் இந்த வைப்பகம் 
அமைந்துள்ளது.
இந்த வைப்பகத்தை பெற்றுக் கொள்வதற்காக 750 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய வேண்டும். அதற்காக சர்வதேச சந்தையில் விலை மனு கோரப்படவுள்ளது" என அமைச்சர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - மன்னார் தமிழர் தாயகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்

கம்பளை கஞ்சாவுடன் காட்டிலே கலாட்டா மாணவர்கள் கைது

கம்பளை மாணவர்கள் சிலர் காடு ஒன்றிற்கு சென்று மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்னர்.இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த 4 மாணவர்கள் மேலும் ஒரு 20 வயதான இளைஞனுடன் கம்பளை பிரதேசத்தில் கஞ்சா அருந்தி பாலியல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். அத்துடன் 
அதனை தங்கள் கையடக்க தொலைபேசியில் பதிவு செய்துள்ளனர்.பாடசாலைச் சீருடையில் மாணவர்கள் சில காட்டிற்குள் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்வதாக கூறிவிட்டு காடு ஒன்றிற்கு சென்ற மாணவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்னர்.அவர்களின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது அவர்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட காட்சி அதில் 
காணப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் இருந்து கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மாணவர்கள் இம்முறை பரீட்சை எழுது உள்ளமையினால் எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - கம்பளை கஞ்சாவுடன் காட்டிலே கலாட்டா மாணவர்கள் கைது

யாழில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள்

செவ்வாய், 23 அக்டோபர், 2018

யாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் அதிகாரிகள், தமது முதலாவது வெளிநாட்டு அகழ்வாய்வு நடவடிக்கைகளை,  கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கையில் மேற்கொண்டிருந்தனர்.
துறைமுக நகரான யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40 நாள்கள் விரிவான அகழ்வாய்வில், ஈடுபட்டனர்.
இதன்போது, அல்லைப்பிட்டி மற்றும் ஊர்காவற்றுறை கோட்டை சிதைவுப் பகுதிகளில், அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக, ஷங்காய் அருங்காட்சியக அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய  சென் ஜீ தெரிவித்தார்.
சென்னும் அவரது நண்பர்களும், அல்லைப்பிட்டிப் பகுதியில் 92.4 சதுர மீற்றர் பரப்பளவிலான இடத்தில் அகழ்வாய்வை மேற்கொண்ட போது, 650 வரையான மட்பாண்டத் துண்டுகளைக் கண்டெடுத்தனர். அவற்றில் 600 இற்கு மேற்பட்டவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை 
என்று சென் கூறினார்.
பெரும்பாலான சீன மட்பாண்ட துண்டுகள், 11 ஆம் நூற்றாண்டின் பின் அரைக்காலப் பகுதி அல்லது, 12 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலப்பகுதியைச் சேர்ந்தவையாகும் என்று ஷங்காய் அருங்காட்சியகத்தின், சீன மட்பாண்ட ஆய்வாளர் லூ மிங்ஹுவா தெரிவித்தார்.
கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகளில் கிண்ணங்கள், தட்டுகள், பானைகள் அடங்குகின்றன. இதுபோன்ற மட்பாண்டங்கள், தற்போதைய சீன மாகாணங்களான குவாங்டொங் மற்றும் பியூஜியானில் வெளிநாட்டு விற்பனைக்காக தயாரிக்கப்படுகின்றன.
பண்டைய பட்டுப்பாதை தொடர்பான ஆய்வுகளை ஷங்காய் அருங்காட்சியகம் அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் யாங் ஷிகாங் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் சீனா தொடர்பான வரலாற்று ஆவணங்களி்ல், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயணங்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக கூறுகின்றன.
சீனாவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளரான ஷெங், இலங்கைக்கு பலமுறை வணிக மற்றும் நட்புறவுப் பயணங்களை மேற்கொண்டார் என்பதை வெளிப்படுத்தும், கல்வெட்டு ஒன்று 1911ஆம் ஆண்டு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பண்டைய கடல்சார் பட்டுப்பாதை வணிக வழி, பயண வலைப்பின்னல்கள், மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கலாசார தொடர்புகள்  குறித்த ஆய்வுகளில், இந்த தொல்பொருள் கண்டுபிடிப்பு முக்கியமான பங்கை வகிக்கும் என்று யாங் கூறினார்.
பண்டைய கடல்சார் பட்டுப் பாதையின் வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்வது, இலங்கையில் முக்கியமான சிதைவுகள் உள்ள பகுதிகளில் அகழ்வாய்வில் ஈடுபடுதல், கூட்டு கண்காட்சிகளை நடத்துதல், பணியாளர்களை பரிமாற்றம் செய்தல் தொடரபாக,  இலங்கை மத்திய கலாசார நிறுவகத்துடன்,  சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம், ஐந்து ஆண்டு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - யாழில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள்

கிணற்றினுள் உரும்பிராய் பகுதியில் சடலம்

திங்கள், 22 அக்டோபர், 2018

உரும்பிராய் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் தோட்ட கிணற்றினுள் மீட்க பட்டது உயிர் இழந்தவர் தொடர்பான விபரங்கள் 
தெரிய வரவில்லை 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - கிணற்றினுள் உரும்பிராய் பகுதியில் சடலம்

முச்சக்கரவண்டியில் மீற்றர் கருவி இல்லை என்றால் இனி நீதிமன்றம்

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

இலங்கையில் இனிமேல் முச்சக்கரவண்டியில் மீற்றர் கருவி பொருத்தாத சாரதிகளை நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னராக மீற்றர் கருவிகளின் தரம் குறித்த அறிக்கை பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டிகளில் பொறுத்தப்பட்டுள்ள மீற்றர் அளவீட்டுக் கருவிகள் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையினால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
அதன் பின்னர், குறித்த அறிக்கை விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அந்த அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் 
கூறியுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - முச்சக்கரவண்டியில் மீற்றர் கருவி இல்லை என்றால் இனி நீதிமன்றம்

சிக்கிய திருடர்களை யாழில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்

புதன், 17 அக்டோபர், 2018

யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு பொது இடத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடுகளிலும் கடந்த இரு நாட்களில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கொள்ளையில் 
ஈடுபட்டு வந்தது.
இந்த கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களின் தெளிவான அடையாளங்களுடன் கூடிய சீ.சீ.ரி.வி ஆதாரங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் குறித்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக இளைஞர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் 4 பேர் இன்று மாலை நடமாடியுள்ளனர்.
அவர்களை மறித்த இளைஞர்கள் விசாரித்ததுடன் அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது கோவிலில் மீட்கப்பட்ட பித்தளை பொருட்களை இளைஞர்கள் மீட்டனர்.
பின்னர் கொள்ளை சம்பவம் தொடர்பான சீ.சீ.ரி.வி காட்சிகளை பார்த்து பிடிபட்டவர்களே கொள்ளையர்கள் என அடையாளம் கண்டதை தொடர்ந்து, கொள்ளையர்களை இளைஞர்கள் பிடித்து கட்டுவதற்கு முயற்சித்தபோது இருவர் தப்பி ஓடியுள்ளனர்.
எனினும் இருவர் அகப்பட்டனர். அவர்கள் இருவரையும் நையபுடைத்த இளைஞர்கள் அவர்களை மின் கம்பத்துடன் கட்டிவைத்தனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த கொள்ளையர்களை தாம் இதற்கு முன்னரும் கைது செய்ததாகவும், அவர்கள் பிணையில் வந்து மீண்டும், மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவதாக கூறி கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - சிக்கிய திருடர்களை யாழில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்

குடும்பமே வாழை இலையில் உணவருந்தியதால் மரணம்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை எதிர் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் குடும்பப்பெண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை 
செய்யப்பட்டார்.
வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மகனைத் தாக்க முற்பட்ட போது, அதனைத் தடுக்க முற்பட்ட தாயார் பொல்லு மற்றும் கம்பியால் தலையில் தாக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்தார்.
சம்பவத்தில் 58 வயதான சந்திரராசா விஜயகுமாரி என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டதோடு அவரது மகன் 
காயமடைந்தார்.
இந்நிலையில் அந்தக் கொலையுடன் தொடர்புடைய மூவர் நேற்றுத் திங்கட்கிழமை அதிகாலை கோப்பாய் பொலிஸில் சரணடைந்தனர். எனினும் அவர்கள் மூவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்கிழமை முற்படுத்தப்பட்ட போது. அவர்களை எதிர் வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூவர் தொடர்பான தகவலை பொலிஸார் நீதிமன்றில் தெரிவிக்கவில்லை. அத்துடன், பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட முதல் அறிக்கையிலும் மூன்று சந்தேகநபர்கள் தொடர்பிலேயே 
தெரிவிக்கப்பட்டுள்ளது-
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - குடும்பமே வாழை இலையில் உணவருந்தியதால் மரணம்

கடத்தப்பட்ட பெண் யாழில் திடீர் திருப்பம் கடத்தியவர் சொன்ன தகவல்

செவ்வாய், 16 அக்டோபர், 2018

யாழ் செய்திகள்:யாழில் முச்சக்கர வண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் , குறித்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 
யாழ். செம்மணி பகுதியில் வைத்து யுவதி 
ஒருவர் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார" தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதன் பிரகாரம்
 யுவதி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முச்சக்கர வண்டியின் பதிவிலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த முச்சக்கர வண்டி நீர்வேலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடையது என கண்டறிந்து , அந்த இளைஞனிடம் விசாரணைகளை 
முன்னெடுத்து உள்ளனர்.
அதன் போது தொடர்புடைய இளைஞன் , தனது மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அதனால் செம்மணி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு அழைத்து சென்றதாகவும் , அதன் போது வருத்தம் குணமடையாது அவரது நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவரை கட்டி முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் அந்த இளைஞனனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


READ MORE - கடத்தப்பட்ட பெண் யாழில் திடீர் திருப்பம் கடத்தியவர் சொன்ன தகவல்

யுவதி கடத்தப்பட்ட்டு யாழில் தெருவில் கழற்றி வீசப்பட்டஆடைகள்

யாழ் கைதடிப் பகுதியில் யுவதி ஒருவர்  வீதியில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த இனந்தெரியாதவர்களால் இன்று கடத்தப்பட்டார். அதனை அவதானித்த வயதான ஒருவர் குறித்த ஆட்டோவை துரத்திச் சென்ற போது ஆட்டோவில் இருந்தவர்களால் யுவதி அணிந்திருந்த ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டதாகவும்
 தெரியவருகின்றது.
திருநெல்வேலி மருத்துவபீடத்துக்கு அருகில் குறித்த ஆடைகள் கழற்றி வீசப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவித்தும் பொலிசார் அப்பகுதிக்கு வருவதற்கு தாமதமாகியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - யுவதி கடத்தப்பட்ட்டு யாழில் தெருவில் கழற்றி வீசப்பட்டஆடைகள்

யாழில் வீதியில் சென்ற பெண்ணுக்குயாழில் ஏற்பட்ட பரிதாபம்

!  

யாழ்ப்பாணம் நெல்லியடி மூத்த விநாயகர் கோவிலடிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி இரண்டு பவுண் தங்கச் சங்கிலி அபகரிக்ப்பட்டுள்ளது.
சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் உள்ள வீதியால் சென்று நடந்து சென்றுகொண்டிருந்த 42 வயதுடைய பெண் ஒருவருடைய சங்கிலியே இவ்வாறு அபரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணை மறித்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
அவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்தமையால் அடையாளம் காணப்படவில்லை என்று அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். பொலிஸார் உடனடி விசாரணைகளை
 மேற்கொண்டுள்ளனர்.


READ MORE - யாழில் வீதியில் சென்ற பெண்ணுக்குயாழில் ஏற்பட்ட பரிதாபம்

புதுக்குடியிருப்பில் கிணற்றை சுத்தம் செய்யப் போனவர்களுக்கு அதிர்ச்சியில்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாக கிணறு ஒன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பிரதேச சபை ஊழியர்கள் சுமார் 50 அடி ஆழம் கொண்ட குறித்த பிரதேச சபை கிணறு ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் இன்று 
ஈடுபட்டிருந்தனர்.
இந்த கிணற்றில் இருந்து நீர்தாங்கிகள் மூலம் மக்களுக்கு நீர் விநியோகம் செய்வதற்காவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது கிணற்றுக்குள் அபாயகரமான வெடிபொருட்கள் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.மேலும் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு பிரதேச சபை அதிகரி ஒருவர் 
தகவல் வழங்கியதையடுத்து, ஆபத்தான வெடிப்பொருட்களை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - புதுக்குடியிருப்பில் கிணற்றை சுத்தம் செய்யப் போனவர்களுக்கு அதிர்ச்சியில்

நாட்டில் மடுத் திருத்தலத்திற்குச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

திங்கள், 15 அக்டோபர், 2018

மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பேரூந்து வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா செட்டிகுளம், பெரியகட்டுப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் இருந்து மடுத் தேவாலயம் நோக்கிச் சென்ற மூன்று பேரூந்துகளில் ஒரு பேரூந்து 
வேகக் கட்டுப்பாட்டை இழந்து செட்டிகுளம், பெரியகட்டு 40 ஆவது மைல்கல் அருகில் உள்ள பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் குறித்த பேரூந்தில் பயணித்த 8 பேர் காயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பேரூந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட்டில் மடுத் திருத்தலத்திற்குச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்

போலி பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்து பவர்களுக்கு இந்த எச்சரிக்கை

வியாழன், 11 அக்டோபர், 2018

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.கிடைத்துள்ள 
முறைப்பாடுகளில் அதிகளவானவை போலிக் கணக்குகளை முன்னெடுப்போர் குறித்தே பதிவாகியுள்ளது.கனிணி அவசர ஒழுங்குபடுத்தல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர் ரொசான் சந்திர குப்த 
இதனை குறிப்பிட்டார்.
சிரேஷ்ட பொறியியலாளர் ரொசான் சந்திர குப்த இதனை குறிப்பிட்டார்.
கடந்த வருடம் இவ்வாறான 3,600 முறைப்பாடுகள் பதிவாகியிருந்ததாகவும் அவர் கூறினார்.இதன்காரணமாக
, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அறியாத நபர்களை நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் ரொசான் சந்திர குப்த எச்சரித்துள்ளார்.


READ MORE - போலி பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்து பவர்களுக்கு இந்த எச்சரிக்கை

பொதுமக்களே ஜாக்கிரதை மீண்டும் போலி நாணயத் தாள்கள் யாழில்

யாழ் நகரில் மீண்டும் போலி நாணயத் தாள்கள்…. பொதுமக்களே ஜாக்கிரதை….!!

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள வெற்றிலை பாக்கு விற்பணை செய்யும் கடை ஒன்றில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளினை மாற்ற முற்பட்ட சரவணை கிழக்கு வேலணை ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்த நபரை நேற்று (10) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உப பொலிஸ் பரிசோதகர் அனில்குமார அவர்களின் தலைமையிலான பொலிஸாரே இவ்வாறு போலிநாணயத்தாளினை மாற்ற முற்பட்டவரை கைது செய்துள்ளனர் .
வெற்றிலை பாக்கு விற்பணை செய்யும் கடையில் 5ஆயிரம் ரூபா போலிநாணயத்தாளிணை மாற்ற முற்பட்ட போது இது தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த கடைக்கு சென்ற அனில்குமார தலைமையிலான பொலிஸ்குழு மாற்ற முற்பட்ட 5ஆயிரம் ரூபா தாள் ஒன்றினையும், அதனுடன் இணைந்து பேர்சுக்குள் இருந்து மேலும் ஒரு போலி 5ஆயிரம் ரூபா தா ளைக் கைப்பற்றியுள்ளனர். மேலதிக விசாரணைளை யாழ் நகர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - பொதுமக்களே ஜாக்கிரதை மீண்டும் போலி நாணயத் தாள்கள் யாழில்

நாட்டில் அதிகரித்தது பெற்றோலின் விலை

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டு, இன்று நள்ளிரவு முதல்  அமுல்படுத்தப்படுவதாக நிதியமைச்சு 
தெரிவித்துள்ளது.
இதன்படி பெற்றோல் 92 ஆறு ரூபாயாலும், பெற்றோல் 95 எட்டு ரூபாயாலும், சுப்பர் டீசல் எட்டு ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் 92 - 155 ரூபாய்
பெற்றோல் 95 - 169 ரூபாய்
சுப்பர் டீசல் - 141 ரூபாய்%ae%b0/
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் அதிகரித்தது பெற்றோலின் விலை

வவுனியாவில் யாழிலிருந்து கடத்தப்பட்ட பெரும் தொகையான கஞ்சா மீட்பு

புதன், 10 அக்டோபர், 2018

வவுனியாவில் இருவேறு நடவடிக்கைகளில் இன்று அதிகாலை 8 கிலோ  கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பேருந்தை ஓமந்தை பகுதியில் வழிமறித்து பொலிஸார் சோதனை செய்த போது, 4 கிலோ 592 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்தனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து பொத்துவில் நோக்கிச் சென்ற பேருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக தரித்து நின்ற போது, பேருந்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட நபரிடம் 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - வவுனியாவில் யாழிலிருந்து கடத்தப்பட்ட பெரும் தொகையான கஞ்சா மீட்பு

சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் கைது

ஞாயிறு, 7 அக்டோபர், 2018


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் இருவர சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட்டுகளை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட சீன பிரஜைகள்  இருவரே கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
32 வயதான மற்றும் 36 வயதான  சீனப் பிரஜைகளே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
குறித்த நபர்கள் இன்று காலை சீனாவிலிருந்து  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது சந்தேக நபர்களின் பயண பையில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்டபோது 44,000 சிகரெட்டுகள் உள்ளடங்கிய  220 சிகரெட் பக்கற்றுகளை கைப்பற்றியுள்ளனர்.  சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் 
கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து  மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். 
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் எச்சரிக்கப்பட்டு விடுதலை
 செய்யப்பட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம்செய்திகள் >>>
READ MORE - சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டவர்கள் கைது

இலங்கையின் நீரில் மூழ்கிய பல பகுதிகள்!

இலங்கையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரபி கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என
 கூறப்படுகின்றது.
அது சூறாவளியாக மாற்றமடையும் சாத்திய கூறுகள் தென்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு 
கூறப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்க நிலை வடமேல் திசையாக ஓமானை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அந்த திணைக்களம் 
குறிப்பிட்டுள்ளது.
மன்னார் முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடும் மழையுடனான வானிலை நிலவும் எனவும் அந்த அறிக்கையில் 
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த காலப் பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரித்து வீசும் சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
களுத்துறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோர பகுதிகளில் அலையின் சீற்றம் 2 முதல் 2.5 மீற்றர் வரை உயருவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.இதன்காரணமாக கடல்சார் தொழில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - இலங்கையின் நீரில் மூழ்கிய பல பகுதிகள்!

மட்டு நகரில் இளம் பெண் தூக்கிலிட்டு தற்கொலை

வெள்ளி, 5 அக்டோபர், 2018

மட்டக்களப்பில் வவுணதீவு பிரதேசத்தில் களிமடு பிரதேசத்தில் இன்று 10 மணி அளவில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த மட்டக்களப்பு 
மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பொலிசார் விசாரணையை நடத்தி வருகின்றனர் எனினும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மட்டு நகரில் இளம் பெண் தூக்கிலிட்டு தற்கொலை

யாழ் பூநகரி சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் புரண்ட பேரூந்து

புதன், 3 அக்டோபர், 2018

பூநகரி, சங்குப்பிட்டி பாலத்திற்கு தனியார் பேருந்து ஒன்று அருகில் விபத்துக்கு உள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மதியம் யாழில் இருந்து முழங்காவில் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மாடு ஒன்று பாதையின் குறுக்கே சென்றதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது பேருந்து தடம் புரண்டதில் பலர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு காயமடைந்தார்கள் அம்புலன்ஸ் வண்டி மூலம் பூநகரி மற்றும் யாழ் போதான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> 



READ MORE - யாழ் பூநகரி சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகில் புரண்ட பேரூந்து