; மேலும் கிளிநொச்சி விவகாரம் சில தடையப்பெருள்கள் மீட்பு

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

கிளிநொச்சி, பன்னங்கண்டிப் பகுதியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடைமைகள் சில 30.08.2018. மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி – அம்பாள் குளத்தின் கலிங்குப் பகுதியில் 
வைத்து இன்று காலை 11 மணியளவில் தடையப் பொருள்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பெண் அணிந்து சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான சீருடையின் மேல் ஆடை, அவருடைய தேசிய அடையாள அட்டை, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் அடையாள அட்டை மற்றும் கைப் பை என்பன இதுவரை கைப்பற்றப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே, இன்று காலை 11 மணியளவில் மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - ; மேலும் கிளிநொச்சி விவகாரம் சில தடையப்பெருள்கள் மீட்பு

இளைஞன்! உழவு இயந்திரம் தடம்புரண்டு பரிதாபமாக உயிரிழப்பு

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

உழவு இயந்திரம் தடம்புரண்டதில் 23 வயதான சியாந் என்ற இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் கிளிநொச்சி ஊரியான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பம் தொடர்பில் தெரியவருவதாவது;
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் மண் ஏற்றிச் சென்ற வேளை ஆறு ஒன்றில் இறங்கி ஏறிய போது உழவு இயந்திரம் தடம்புரண்டுள்ளது.
இந்த விபத்தில் சாரதியான குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இளைஞன்! உழவு இயந்திரம் தடம்புரண்டு பரிதாபமாக உயிரிழப்பு

யாழ் பிரபல தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளர் கைது

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவரும், பிரபல பெண் அரசியல்வாதி ஒருவரின் செயலாளரும் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஊடகவியலாளர்
 நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட
 விசாரணைகளுக்கு அமைய அரசியல்வாதியின் செயலாளர் இன்று கைதாகியுள்ளார்.சுவிஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 7 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் பதிவுசெய்த முறைப்பாட்டை தொடர்ந்தே குறித்த கைது
 இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும், குறித்த வட்டுக்கோட்டை நபரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, பணம் அறவிட்டுள்ளனர்.ஆனால், பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டதை தொடர்ந்து குறித்த சந்தேகநபர்கள் இருவரும், வட்டுக்கோட்டை நபருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், அவர்கள் தொடர்புகொண்ட தொலைபேசி இலக்கத்தை வழங்கி யாழ். பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக கடந்த 9ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொலைப்பேசி இலக்கத்தை கொண்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், குறித்த தொலைபேசி இலக்கம் யாழிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளரது என
 கண்டுபிடித்துள்ளனர்.
அதற்கமைய ஊடகவியலாளர் நேற்று கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய பெண் அரசியல்வாதி ஒருவரின் செயலாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்
.கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். விசாரணையின் பின்னர் சந்தேகநபர்களை யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து 
வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>


READ MORE - யாழ் பிரபல தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளர் கைது

உடுப்பிட்டியில் பகுதியில் கொள்ளையார்கள் அட்டகாசம்

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018


உடுப்பிட்டி சந்நிதி கோவில் வீதி வாசிகசாலைக்கு அருகில் இன்று அதிகாலை 1 மணியளவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் வயோதிபத் தம்பதிகளைக் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கி பெருமளவு பணம், பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத்
 தெரியவருகின்றது. அதிகாலை ஒரு மணியிலிருந்து 4 மணி வரை கொள்ளையர்கள் குறித்த வீட்டில் தங்கியிருந்து கொள்ளையடித்துள்ளனர். குறித்த தம்பதிகள் உறவினர் ஒருவருக்கு
 அப்பகுதியில் வீடு ஒன்று கட்டி வருவதாகவும் அதற்காக வங்கியிலிருந்து நேற்று பணம் எடுத்து வந்த பின்னரே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிப பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - உடுப்பிட்டியில் பகுதியில் கொள்ளையார்கள் அட்டகாசம்

வாகனத்தில் இருந்து இலங்கையில் வீசப்பட்ட தங்கம்!

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

இலங்கையின் இன்று விசித்திர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியின் தம்பலகாம் ஊடாக செல்லும் கிண்ணியா - தம்பலகாமம் எல்லையின் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் குறித்த பகுதியினூடாக சென்ற வானில் இருந்து ஒரு தொகை தங்கம் வீசப்பட்டுள்ளது.
குறித்த வானில் பயணித்த சிலர் வட்ட வடிவான, முத்து போன்ற, தங்க நிறத்தினாலான சிறிய பொருட்களைவீதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
வானிலிருந்து விழுந்த இந்த தங்க நிறத்தினாலான முத்துக்கள் மழைத்துளி போல் வீதியின் சகல இடங்களிலும் சிதறிக்காணப்பட்டுள்ளது.
இதை எடுத்த சில இளைஞர்கள் தங்கமா என்று பரிசோதிப்பதற்காக நகைக்கடைக்கு கொண்டு சென்ற போது அது தங்கம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவை பழைய காலத்து தங்கமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இதையறிந்த பாதசாரிகளும். அப்பகுதி மக்களும் வீசிச் சென்ற தங்கத்தை சேகரிப்பதற்காக வீதியில் குவிந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அவ்வழியாக வாகனத்தில் செல்வோரும் தகவல் அறிந்து குறித்த பகுதியில் தேடுதல் நடத்தி தங்கம் சேகரிப்பதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - வாகனத்தில் இருந்து இலங்கையில் வீசப்பட்ட தங்கம்!

சுன்னாகத்தில் கொள்ளையர்களுடன் போராடி சங்கிலியை மீட்ட பெண்

தனது சங்கிலியை அறுத்த கொள்ளையருடன் போராடி சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார் அறுபது வயது பெண்ணொருவர். 
யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூராவத்தை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த குறித்த பெண்ணுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்டனர். 
உடனே சுதாகரித்துக்கொண்ட குறித்த பெண் சங்கிலியை அறுத்த கொள்ளையனின் ரீ - சேர்ட்டை எட்டி பிடித்துக்கொண்டார். அதனால் கொள்ளையர்கள் நிலை தடுமாறிய போது , கொள்ளையர்கள் அறுத்த சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார். அத்துடன் கொள்ளையர்களின் கையடக்க தொலைபேசியையும் அவர்களிடம் இருந்து 
எடுத்துள்ளார். 
அந்நிலையில் கொள்ளையர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். 
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பெண் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் தன்னால் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசியையும் பொலிசாரிடம் கையளித்துள்ளார். 
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் , கையடக்க தொலைபேசி ஊடாக கொள்ளையர்களை இனம் கண்டு உள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் 
தெரிவித்துள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - சுன்னாகத்தில் கொள்ளையர்களுடன் போராடி சங்கிலியை மீட்ட பெண்

குடும்பஸ்தர் தந்தை நசுங்கிப் பலி கோர விபத்து கோப்பாய் சந்தியில் குடும்பஸ்தர் உயிரிழந்தார்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

யாழ்  கோப்பாய் சந்திப்பகுதியில்  நடந்த விபத்தில் குடும்பத் தலைவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் 
தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் மகளுடன் பயணித்த நபர், பெற்றோர் ஏற்றிக் கொண்டு சென்ற பவுசருடன் மோதுண்டார் எனத்
 தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்
 சேர்க்கப்பட்டுள்ளார்..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - குடும்பஸ்தர் தந்தை நசுங்கிப் பலி கோர விபத்து கோப்பாய் சந்தியில் குடும்பஸ்தர் உயிரிழந்தார்

கோரவிபத்து வவுனியாவில் 9 பாடசாலை மாணவர்கள் படுகாயம்

புதன், 1 ஆகஸ்ட், 2018

வவுனியாவில் கோர விபத்து! 9 பாடசாலை மாணவர்கள் படுகாயம்!
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்தும் அதே திசையில் மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர 
வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த 9பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதி மற்றும் ஓர் மாணவி ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போதே
 விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கோரவிபத்து வவுனியாவில் 9 பாடசாலை மாணவர்கள் படுகாயம்