யாழ் மகாஜனா மாணவிகள் தேசிய உதைப்பந்தாட்ட அணியில்

திங்கள், 30 ஜூலை, 2018

இலங்கையின் 14 வயதுப் பெண்களின் உதைப்பந்தாட்ட அணியில் மகாஜனக் கல்லூரி மாணவிகளான ஜெ.ஜெதுன்சிகா, உ.சோபிதா, சி.தவப்பிரியா ஆகிய மூன்று மாணவிகளே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த அணியினர் எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி
 பூட்டானில் ஆரம்பிக்கும் ஆசிய உதைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ண தொடரில் பங்குபற்றவுள்ளனர்.
இம் மாணவிகளை பாடசாலை மட்டத்தில் வீராங்கனைகளை பயிற்றுவித்து தேசிய அணியில் இடம்பிடிக்க வைத்த உடற்கல்வி ஆசிரியரும் பயிற்றுவிப்பாளருமான ச.செந்தூரன், மற்றும் கல்லூரி மேலதிக பயிற்றுநாராக செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தரும் பழைய மாணவனுமான தி.புருசோத்தமன் ஆகியோர் பயிற்றுவித்தனர்.
மகாஜனாவின் 14 வயதுப் பெண்கள் அணி கடந்த வருடம் தேசிய மட்டத்தில் மூன்றாமிடம் பெற்றமையும் 
குறிப்பிடத்தக்கது.


READ MORE - யாழ் மகாஜனா மாணவிகள் தேசிய உதைப்பந்தாட்ட அணியில்

விடுக்கப்படும் அவசர எச்சரிக்கையாழ் மக்களுக்கு

வெள்ளி, 27 ஜூலை, 2018

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற முறையில் பொருட்கள் மற்றும் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாவகச்சேரி வர்த்தக நிலையம் ஒன்றில் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழங்கு தொடுக்கப்பட்ட போது, அவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குறித்த வர்த்தகருக்கு எதிராக 9000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.அண்மையில் எழுதுமட்

டுவாழ் பிரிவுக்குட்பட்ட உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் விற்பனை நிலையங்களில், சாவகச்சேரி சுகாதாரத் திணைக்கள பொது சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது உசன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் எலி எச்சங்களுடன் உணவுப் பொருள்கள் வைத்திருந்தமை, எலிகளால் கடியுண்ட

 அரிசி மா பொதிகளை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் விற்பனைத் திகதி காலாவதியான தேயிலை மற்றும் ஜெலி வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களுடன் எழுதுமட்டுவாழ் பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது வர்த்தகர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 3 குற்றங்களுக்கும் தலா 3 ஆயிரம் ரூபா வீதம் 9 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்பட்டது .
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் வரும் நிலையில், யாழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - விடுக்கப்படும் அவசர எச்சரிக்கையாழ் மக்களுக்கு

எலிகளுடன் யாழில் விற்பனையாகும் உணவுப்பொருட்கள்

சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் தண்டம் விதித்துள்ளது. 
 நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குறித்த வர்த்தகருக்கு எதிராக 9000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. 
சாவகச்சேரி சுகாதாரத் திணைக்கள பொது சுகாதாரப் பரிசோதகர்கள் அண்மையில் எழுதுமட்டுவாழ் பிரிவுக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் விற்பனை நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை நடத்தினர்.
 அவ்வேளையில் உசன் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் எலி எச்சங்களுடன் உணவுப் பொருள்கள் வைத்திருந்தமை, எலிகளால் கடியுண்ட அரிசிமாப் பொதிகளை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் விற்பனைத் திகதி காலாவதியான தேயிலை மற்றும் ஜெலி வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தமை போன்ற மூன்று குற்றச்சாட்டுக்களுடன் வர்த்தகருக்கு எதிராக எழுதுமட்டுவாழ் பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது வர்த்தகர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 3 குற்றங்களுக்கும் தலா 3 ஆயிரம் ரூபா வீதம் 9 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதெனத் 
தெரிவிக்கப்பட்டது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - எலிகளுடன் யாழில் விற்பனையாகும் உணவுப்பொருட்கள்

புகை யாழ் மணியந்தோட்டம் பகுதியில் குளத்திற்குள்ளிருந்து

புதன், 25 ஜூலை, 2018

யாழ்.மணியந்தோட்டம் 1ம் குறுக்கு தெர பகுதியில் யாழ்.பிரதேச செயலகம் குளம் ஒ ன்றை புனரமைப்பு செய்யும்போது குளத்தி லிருந்து புகை வந்ததால் புனரமகப்பு நிறுத் தப்பட்டுள்ளதுடன் குளத்தை ஆய்வு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மணியந்தோட்டம் 1ம் குறுக்கு தெரு பகுதி யில் உள்ள குளம் ஒன்றை யாழ்.பிரதே செ யலகம் புனரமைப்பு செய்துள்ளது. இதன் போது குளத்திற்குள்
 இருந்து புகை வந்து ள்ளது.
மேலும் குளத்திற்குள்ளிரிந்து நாக பாம்பு ஒன்றும் வந்துள்ளது. இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இத னையடுத்து பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கிராமசேவகர், பொலிஸார் இன்று காலை
 குளத்தை பார்வையிட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் கொடுத் துள்ளனர். குறித்த குளத்திற்குள் வெடி கு ண்டுகள் இருக்கலாம் என அதிகாரிகளும் பிரதேச மக்களும் அச்சம் 
தெரிவிக்கும் நிலையில் விசேட அதிரடிப்படையினருடைய ஒத்துழைப்புடன் குளத்தை ஆய்வு செய்ய தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது


READ MORE - புகை யாழ் மணியந்தோட்டம் பகுதியில் குளத்திற்குள்ளிருந்து

சிறுவனை பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் இழுத்துச் சென்ற அலை

செவ்வாய், 24 ஜூலை, 2018

பருத்தித்துறை முனை கடற்கரைப் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்ற 14 வயதுச் சிறுவன் கடல் அலையில் வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டான்.
இதனால் சக சிறுவர்கள் சிறிது நேரம் பதறியடித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் நடந்துள்ளது.
ஏனைய சிறுவர்கள் படகின் கயிறு கொண்டு சிறுவனை காப்பாற்றியுள்ளனர். சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான் எனத் 
தெரியவருகிறது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - சிறுவனை பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் இழுத்துச் சென்ற அலை

தனது வீட்டில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் கொடிகாமத்தில் கைது

ஞாயிறு, 22 ஜூலை, 2018

யாழ். கொடிகாமம் பகுதியில் தனது வீட்டில் திடீரென வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திடீரென கோபமுற்ற இளைஞர் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை பிடிப்பதும் பின்னர் வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்துவதுமான செயல்களில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பெற்றோர் மற்றும் அயலவர்கள் இணைந்து குறித்த இளைஞரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் 
ஒப்படைத்துளளனர்.
இந்நிலையில் இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த இளைஞருக்கு மனநல மருத்துவ சிகிச்சையளிக்குமாறு 
உத்தரவிட்டுள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - தனது வீட்டில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் கொடிகாமத்தில் கைது

மர்மமாக மரணமடைந்த பிரித்தானியா வீரர்கள்! வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

சனி, 21 ஜூலை, 2018

இலங்கையில் மரணமடைந்த பிரித்தானியா ரக்பி விளையாட்டு வீரர்கள் இருவரும், இறப்பதற்கு முன் போதைப் பொருளை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் துர்ஹாம் நகர ரக்பி கிளப் சார்பில் 22 வீரர்கள் கடந்த மே மாதம் 9ம் திகதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இவர்களில் Thomas Howard (25) மற்றும் Thomas Baty (26) என்ற இரு வீரர்களும் அடங்குவர்.
இந்நிலையில் கடந்த 13ம் திகதி கொழும்புவில் போட்டியில் பங்கேற்று விட்டு, இருவரும் இரவு விடுதிக்கு சென்றுள்ளனர்.
மறுநாள் காலை ஹொட்டலுக்கு வந்தவுடன் மூச்சுத்திணறலால் அவதியுள்ள நிலையில், உடனடியாக Nawaloka மருத்துவமனையில்
 சேர்க்கப்பட்டனர்.
அங்கு தீவிரமான சிகிச்சைக்கு பின்னரும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர், இதுதொடர்பான விசாரணையை பொலிசார் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது கொழும்பு நீதிமன்றத்தில், மரணிப்பதற்கு முன்னர் இருவரும் போதை மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விரிவான அறிக்கையை வருகிற ஆகஸ்ட் 3ம் திகதி சமர்பிக்கும்படி நீதிபதி Lanka Jayaratna உத்தரவிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மர்மமாக மரணமடைந்த பிரித்தானியா வீரர்கள்! வழக்கில் திடுக்கிடும் திருப்பம்

கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்!! வழக்கில் திருப்பம்!

புதன், 18 ஜூலை, 2018

யாழ். மானிப்பாய் – சங்கரபிள்ளை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணைகள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.கொலை சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி க. சுகாஸ் முன்னிலையாகி
 இருந்தார்.
இதில் ‘சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவருக்கும் இந்தக் கொலைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. சம்பவ தினத்தன்று கொலையாளி வீட்டுக்குள் நுழைவது வீட்டிலிருந்து வெளியேறுவது என்பன கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.ஆனால், கைது செய்யப்பட்ட நபருக்கும் கமராவில் பதிவாகிய நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர் அவர் இல்லை. எனவே சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என சட்டத்தரணி க. சுகாஸ் நீதிமன்றில்
 தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், சந்தேகநபருக்கு எதிராக பொலிஸாரால் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் நீதிமன்று சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.யாழ். மானிப்பாய் – சங்கரபிள்ளை வீதியில் கடந்த மாதம் 28ஆம் திகதி 60 வயதுடைய தம்பையா லீலாதேவி என்ற வயோதிப் பெண் கழுத்து வெட்டப்பட்டு கொலை
 செய்யப்பட்டிருந்தார்.
பிச்சை கேட்பது போல் வந்து, வீட்டுக்குள் புகுந்து குறித்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு கொலையாளி தப்பிச்சென்றிருந்தார்.சம்பவம் தொடர்பாக ஆனைக்கோட்டைப் பகுதியில் சந்தேகத்தின் பேரில் நடமாடிய 35 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்!! வழக்கில் திருப்பம்!

கோலாகலமாக யாழில் நடைபெற்ற பட்டம் விடும் போட்டி! காணொளி (

செவ்வாய், 17 ஜூலை, 2018

யாழ்ப்பாணத்தில் வருடாந்தம் இடம்பெறும் பட்டம் விடும் போட்டி
, இம்முறையும் கண்கவர் நிற பட்டங்களுடன் மிகவும் 
 கோலாகலமாக நடைபெற்றது.
யாழ்.அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. சரஸ்வதி சனசமூக விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் இப்போட்டி 
இடம்பெற்றது.
இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த பலர், பல வடிவங்களில் கட்டப்பட்ட பட்டங்களுடன் போட்டிகளில் 
கலந்து கொ ண்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





              
READ MORE - கோலாகலமாக யாழில் நடைபெற்ற பட்டம் விடும் போட்டி! காணொளி (

தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கில் சாவகச்சேரியில் விபத்து

சாவகச்சேரி பேருந்து நிலையத்துக்கு முன்பாக தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் காயமடைந்தார்.
நேற்று மாலை நடந்த விபத்தில் தலை மற்றும் கால்களில் காயமடைந்த நுணாவில் சந்தியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய பேருந்தும் மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கில் சாவகச்சேரியில் விபத்து

இளம் குடும்­பப் பெண் ஒரு­வர் மீது வட்­டுக்­கோட்­டை­யில் தாக்­கு­தல்

இனந்­தெ­ரி­யா­தோ­ரால் தாக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­வித்து இளம் குடும்­பப் பெண் ஒரு­வர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.
இந்­தச் சம்­ப­வம் வட்­டுக்­கோட்­டை­யில் 
இடம்­பெற்­றுள்­ளது.
வட்­டுக்­கோட்டை-- கோட்­டைக்­காடு வைத்­தி­ய­சா­லைக்குச் சிகிச்­சைக்­காக தனது குழந்­தை­யு­டன் சென்று வீடு திரும்­பிக்­கொண்­டி­ ருந்­த­வேளை வட்­டுக்­கோட்­டைச் சந்­திக்கு அண்­மை­யில் வைத்தே பெண் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்­கள் தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ள­னர். இது தொடர்­பில் வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் நிலை­யத்­தி­லும் முறைப்­பாடு
 செய்­யப்­பட்­டுள்­ளது.
காய­ம­டைந்த பெண் வீதி­யில் வீழ்­ந்து ­கி­டந்த நிலை­யில் வீதி­யால் சென்­ற­வர்­க­ளால் மீட்க்­கப்­பட்டு கோட்­டைக்­காடு வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்ட நிலை­யில் மேல­திக சிகிச்­சைக்­காக அவர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டு சிகிச்சை பெற்று 
வரு­கின்­றார்.
நாவற்­கு­ழி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரால் கொண்டு செல்­லப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பான வழக்­கில் முன்­னி­லை­யா­கும் சட்­டத்­த­ரணி ஒரு­வ­ரின் உத­வி­யா­ள­ராக மேற்­படி பெண் பணி­யாற்றி 
வரு­கின்­றார்.
இந்த வழக்­குத் தொடர்­பான விசா­ரணை மன்­றில் இடம்­பெற்­ற­போது, இரா­ணு­வப் புல­னாய்­வா­ளர் கள் அங்கு வந்­தி­ருந்­தாக நீதி­மன்­றின் கவ­னத்­துக்­கும் கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்­தமை
 குறிப்­பி­டத்­தக்­கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இளம் குடும்­பப் பெண் ஒரு­வர் மீது வட்­டுக்­கோட்­டை­யில் தாக்­கு­தல்

தவறுகளுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம்

போக்குவரத்து தவறுகளுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம்  15).07.2018 முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ்
 தெரிவிக்கின்றனர்
இதுவரையில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு 23 வாகன தவறுகளுக்காக மேற்கொள்ளப்பட்டது. இது தற்பொழுது 33 தவறுகளை உள்ளடக்கும் வகையில் செயற்படுகின்றது.
அதன்படி குறைந்த பட்ச தண்டப் பணமாக 500 விதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த தண்டப் பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
 தெரிவிக்கின்றது.
இந்த தண்டப் பத்திரத்தால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாக குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன 
தெரிவித்துள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - தவறுகளுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம்

வாள் வெட்டு உரும்பிராயில் மூவர் படுகாயம்

வியாழன், 12 ஜூலை, 2018

யாழ்.உரும்ராய் – கோப்பாய் வீதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை புகுந்த இனம் தெரியாத நபர்கள் அங்கிருந்த மூன்று பேரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர். அத்துடன் வீட்டிலிருந்த பெறுமதியான நகைகளையும் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை ஒரு மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி அங்கிருந்த பெண்களின் நகைகளை பறித்ததுடன் அங்கிருந்த மூவரை வாள்களால் வெட்டிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டுள்ளதுடன்
அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இன்று காலை ஸ்தலத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக யாழில் வேகமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை அனைவரது மத்தியிலும் பாரிய அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - வாள் வெட்டு உரும்பிராயில் மூவர் படுகாயம்

மட்டுவிலில் பெற்றோரின் கவனயீனத்தால் நடந்த சோகம்

தண்ணீர் என எண்ணி அசிட்டை அருந்திய சிறுவன் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இச் சம்பவம் நேற்றுமுன்தினம்(10-07-2018) மாலை மட்டுவில் கிழக்கு சந்திரபுரத்தில் இடம் பெற்றுள்ளது.நகை உற்பத்திக்கென கொள்வனவு செய்யப்பட்ட அசிட்­டை விளையாடிய களைப்பில் ஓடிவந்த சிறுவன் தண்ணீர் என்று நினைத்து அருந்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தையடுத்து சிறுவன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மட்டுவிலில் பெற்றோரின் கவனயீனத்தால் நடந்த சோகம்

யாழ் கோப்பாய் பகுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

புதன், 11 ஜூலை, 2018

யாழ் கோப்பாய் வடக்கு பகுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று காலை பாடசாலை மாணவி ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காண்டீபன் விபூஷா வயசு என்கின்ற மாணவியே உயிர்
 இழந்துள்ளார். 
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இவ் மாணவி மருதனார் மடம் ராமநாதன் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி என்பது குறிப்பிடதக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - யாழ் கோப்பாய் பகுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

அச்­சு­வே­லி­யில் ஆட்டுத் திருடர்கள் கைது


யாழ் அச்­சு­வே­லி­யில் ஆடு திரு­டி­னர் என்ற குற்­றச்­சாட்­டில் 3 பேரை, திரு­டப்­பட்ட 3 ஆடு­க­ளு­டன் கைது செய்­துள்­ளோம் என்று அச்­சு­வே­லிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
கடந்த மாதம் அச்­சு­வே­லி­யில் மூன்று ஆடு­கள் வீட்­டி­லி­ருந்து இரவு திரு­டப்­பட்­டு­விட்­டன என்று அதன் உரி­மை­யா­ளர் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார்.
இந்­த­நி­லை­யில், இணை­யத்­த­ளம் ஒன்­றில் ஆடு­கள் விற்­ப­னைக்­குள்­ளன என்று விளம்­ப­ரப்­ப­டுத்­தப் பட்­டுள்­ளது.
அதைப் பார்த்த திரு­டப்­பட்ட ஆடு­க­ளின் உரி­மை­யா­ளர், அச்­சு­வே­லிப் ­பொ­லி­ஸா­ருக்கு அறி­வித்­தா
அவற்றை விற்­க­வி­ருந்த நபர், தான் வேறொ­ரு­வ­ரி­டமே ஆடு­களை 25 ஆயி­ரம் ரூபா­வுக்கு வாங்­கி­ய­தா­க பொலிஸ் விசாரணையில் கூறி­யுள்­ளார். விற்­ற­வர்­க­ளைப் பொலி­ஸார் கைது செய்­த­னர்.

அவர்­கள் அச்­சு­வே­லி­யில் அவற்­றைத் திருடி மோட்­டார் சைக்­கிள் மூல­மாக வல்லை வீதி­வரை கொண்­டு­சென்று அங்­கி­ருந்து முச்­சக்­கர வண்டி மூல­மாக நெல்­லி­ய­டிக்­குக் கொண்­டு­சென்று விற்­பனை செய்­த­தா­கக் கூறி­னர். மூவ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.
அவர்­கள் விசா­ர­ணை­யின் பின்­னர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வர். அவர்­கள் 27, 29, மற்­றும் 26 வய­து­டை­ய­வர்­கள் என்று பொலி­ஸார் மேலும்
 தெரி­வித்­த­னர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - அச்­சு­வே­லி­யில் ஆட்டுத் திருடர்கள் கைது

கண்டியில் கார் பாதாளத்தில் விழுந்து விபத்து

கண்டி  அருப்பொல பிரதான வீதியில் நேற்று அதிகாலை பயணித்த காரொன்று வீதியை விட்டும் விலகி, அருகிலுள்ள பாரிய பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
வாகனச் சாரதி உயிர் தப்பியுள்ளார். குறித்த சாரதி மட்டுமே அதில் பயணித்துள்ளார்.

READ MORE - கண்டியில் கார் பாதாளத்தில் விழுந்து விபத்து

இலங்கை ஹங்கேரியிலிருந்து ஆயிரம் பேருந்துகள் இறக்குமதி

செவ்வாய், 10 ஜூலை, 2018

இலங்கை போக்குவரத்து சபைக்கு ஹங்கேரியிலிருந்து ஆயிரக்கணக்கான புதிய வகை பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் பேருந்துகள் 10 வருடப் பாவனையின் பின் போக்குவரத்து சபைக்கு சொந்தமாகும் வகையிலும், அதுவரை மீற்றருக்கான கட்டண அடிப்படையில்பாவனைக்குட்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றை அமைச்சரவை ஆராயவுள்ளதாக அறிய முடிகிறது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - இலங்கை ஹங்கேரியிலிருந்து ஆயிரம் பேருந்துகள் இறக்குமதி

இலங்கை தமிழ் பெண்ணொருவர் பிரான்ஸில் சாதனை

திங்கள், 9 ஜூலை, 2018

பிரான்ஸில் இலங்கை தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் முதல் தடவையாக இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக தெரிவாகி உள்ளார்
2018 ஆம் ஆண்டுக்கான மருத்துவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த மாதம் 23ம் திகதி நடைபெற்றது.
நான்சி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் 300 பேருக்கு வைத்தியர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் இலங்கையை சேர்ந்த சிநேகிதா ஸாகரியும் ஒருவராக பட்டம் பெற்றார்.
இவர் பிரான்ஸ் மெட்ஸ் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களான சுந்தரவடிவேல்பிள்ளை சந்திரவதனி புதல்வி ஆவார்.
இலங்கையில் ஆரம்ப கல்வியை ஆங்கில மொழியில் தொடர்ந்த சிநேகிதா, பிரான்ஸிற்கு குடிபெயர்ந்த நிலையில் பிரெஞ்சு மொழியில் தனது படிப்பினை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.
2008ம் ஆண்டு மெட்ஸ் நகரிலிருந்த கல்லூரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 28 சிறந்த மாணவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப் பட்டு GASTON-HOFFMANN விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தானொரு வைத்தியராக வர வேண்டும் என்ற கனவோடு தீவிரமாக படித்தமையினால் இன்று அது நனவாகி உள்ளதாக சிநேகிதா குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் ஒரு இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக வந்திருப்பது இதுவே முதற்
 தடவையாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம்செய்தி >>>


READ MORE - இலங்கை தமிழ் பெண்ணொருவர் பிரான்ஸில் சாதனை

சிறுவன் உயிரை காப்பாற்ற யாழில் தாலிக்கொடியை திருடிய விசித்திரம்

ஞாயிறு, 8 ஜூலை, 2018

சுழிபுரம் - பெரியபுலோவில் பகுதியில் சிறுவன் உயிரை காப்பாற்றுவதாக கூறி நூதனமான முறையில் சந்தேகநபர் ஒருவர் தாலிக் கொடியை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சர்சையை 
ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,
பெரியபுலோவை சேர்ந்த இராசேந்திரம் டினு (வயது-14) என்ற சிறுவன் நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மகனின் நோய் குணமாக வேண்டுமாயின் தாலிக்கொடியில் சிகிச்சை செய்யவேண்டும் என்று சாமியார்
 ஒருவர் கூறியுள்ளார்.
மகனின் பிறந்த திகதி மற்றும் நேரம் போன்றவற்றைக் கேட்ட அந்த சாமியார் சிறிது நேர சிந்தனையின் பின்னர் மகனுக்கு கடும் தீவிரமான நோய் ஏற்பட்டுள்ளது. வீட்டில் கும்பம் வைத்து, கும்பத்தில் தாலிக்கொடி ஒன்றை வைத்து பூசை செய்த பின்னார் அத்தாலிக்கொடியை மகனின் உடம்பில் வைத்து வணங்கினால் மட்டுமே குணமாகும் 
என தெிவித்துள்ளார்.
அதை நம்பிய குடும்பத்தினர் தம்மிடம் தாலிக்கொடி இல்லாத நிலையிலும் உறவினர் ஒருவரிடம் ஓடிச் சென்று ஐந்தரைப் பவண் தாலிக்கொடியைப் பெற்றுவந்து அவரிடம் கொடுத்துள்ளனர்.
வீட்டில் கும்பம் வைக்கப்பட்டது. சில மந்திரங்களும் ஓதப்பட்டன. பூசைகள் முடிந்த பின்னர் குறித்த நகைப் பொட்டலத்தை கொழும்புக்குக் கொண்டுசென்று சிறுவனின் உடம்பில் வைத்து வணங்கிய பின்னர் மூன்றாம் நாள் வீட்டிற்கு கொண்டுவந்து சுவாமி அறையில் வைத்து அவிழ்த்து தாலியை எடுக்குமாறு அந்த ஆசாமி கூறிவிட்டு பூசைக்கான கொடுப்பனவையும் பெற்றுக்கொண்டு சென்றுள்ளார்.
குடும்பத்தினரும் அவசர அவசரமாக அன்றைய தினமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று மகனின் உடலில் வெள்ளைப் பொட்டலத்தை வைத்து வணங்கிவிட்டு நேற்று வீட்டிற்கு வந்து அதை அவிழ்த்தனர்.
தாலிக்கொடியைக் காணவில்லை. குறித்த போலி சாமியார் தாலியை திருடிச்சென்றுள்ளார்.
இதன்பின்னர் இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக கூறியுள்ளனர்
இதேவேளை, குறித்த சிறுவனுக்கு தலையில் இரண்டு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் குணமாக உள்ளதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - சிறுவன் உயிரை காப்பாற்ற யாழில் தாலிக்கொடியை திருடிய விசித்திரம்

பத்து கோடி ஏற்றுமதிப் பயிர்கல் யாழில் நடுகை ஆரம்பம்

பத்து கோடி ஏற்றுமதி பயிர் நடுகை செய்வதற்கான ஆரம்ப நிகழ்வினை விவசாய அமைச்சர் தயா கமகே யாழில் ஆரம்பித்து வைத்ததுடன், விவசாயிகளுக்கான பயிர்களையும் வழங்கி வைத்தார்.
வடமாகாண விவசாய மற்றும் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய பயிற்சிக் கல்லூரி கேட்போர் கூடத்தில்
 இன்று நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் பத்து கோடி ஏற்றுமதிப் பயிர் நாட்டுவதற்கான பாரிய திட்டத்தினை ஜனாதிபதி தலைமையில் ஏற்பாடு செய்துள்ளமையினால், அதன் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து
 வைக்கப்பட்டுள்ளது.
இதில் யாழ்.மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏற்றுமதிப் பயிர்களை வழங்கி வைத்ததுடன், உரம் மற்றும் சிறப்பாக விவசாய செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு சான்றிதழ்களையும் அமைச்சர்
 வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண விவசாய பணிப்பாளர், யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


READ MORE - பத்து கோடி ஏற்றுமதிப் பயிர்கல் யாழில் நடுகை ஆரம்பம்

அடுத்த வாரம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டடுள்ளது.
குறித்த தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கயைில்,
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.
இந்த பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளன.
இந்தப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் வருடம் ஆண்டு இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக 
குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - அடுத்த வாரம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்

இறுதிச் சடங்குகளில் இனி வெடி கொளுத்த விரைவில் தடை

சனி, 7 ஜூலை, 2018

 சாவுச் சடங்குகளில் வடக்கு மாகாணத்தில் பட்டாசுகள் கொளுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்படவுள்ளது என்று அறியவருகின்றது.வடக்கு மாகாண சபையின் 126ஆவது அமர்வு எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது.இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் குறித்த பிரேரணையை சபையில் முன்மொழியவுள்ளார் எனத் தெரிய வருகின்றது.
அவர் தனது பிரேரணையில், வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் சாவுச் சடங்குகளில் பட்டாசுகள் கொழுத்தும் கலாசாரம் காணப்படுகின்றது. இது நிறுத்தப்பட வேண்டும்.
இதனைக் கட்டுப்படுத்த மாகாண உள்ளூராட்சி அமைச்சு திணைக்களத்தின் ஊடாக அனைத்துச் சபைகளுக்கும் அறிவுறுத்தலை வழங்க வேண்டும். அதன் ஊடாகப் பட்டாசு கொளுத்துவது தடை செய்யப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் சபையில் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களுக்கும் சூழலுக்கும் நன்மை பயக்கும் குறித்த பிரேரணையை மாகாண சபை உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரிக்கும் பட்சத்தில், அது வடக்கு தமிழ் மக்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும் விடயமென சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து உறுப்பினர்களும் இது குறித்து தீர்க்கமான முடிவெடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
READ MORE - இறுதிச் சடங்குகளில் இனி வெடி கொளுத்த விரைவில் தடை

வளிமண்டவிலயல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

வெள்ளி, 6 ஜூலை, 2018

எதிர்வரும் சில நாட்களில் நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கக் கூடும் என்று வளிடமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்துக்கு 40 – 45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்றுவீசுக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
.நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறியளவில் மழை பெய்யக் கூடும். கிழக்கு கடற்பரப்பில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை 
பெய்யக்கூடும்.
அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 55 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும். அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்.புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது அப் பிரதேசங்களில் தற்காலிகமாக காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களுக்கு 
தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - வளிமண்டவிலயல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு