யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மனில் தாலிக் கொடி அறுத்தவர் கைது

வெள்ளி, 29 ஜூன், 2018

நயினாதீவு நாகபூசணி அம் மன் ஆலயத்தின் தேர்த் திருவி ழாவுக்கு நேற்றைய தினம் பாதை யில் (படகு) சென்ற பெண்ணொருவரின் தாலிக் கொடி அறுக்கப் பட்டது.
பாதை நயினாதீவுத் துறையை  நெருங்கும் போது தனது தாலிக் கொடி அறுக்கப்பட்டதை அவதானி த்த பிரஸ்தாப பெண் தகவலை அங்கிருந்தவர்களிடம் தெரிவிக்க,
உடனடியாக பொலிஸார் வரவ ழைக்கப்பட்டு பாதையில் சென்றவர்கள் பரிசோதிக்கப்பட்டார்கள்.
இதன்போது அங்கிருந்த ஒருவரிடம் அறுக்கப்பட்ட தாலிக் கொடி இருந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட நபரை பொலிஸார்
 கைது செய்துள்ளனர். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மனில் தாலிக் கொடி அறுத்தவர் கைது

முதல் மாமன்னன் ஈழத்தை ஆண்ட இராவணன்

புதன், 27 ஜூன், 2018

தமிழர்களின் முதல் மாமன்னன் ஈழத்தை ஆண்ட இராவணன் சிவனின் கைலாய மலையை தூக்கும் காட்சி!ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அரிய படைப்பு!!கர்நாடக மாநிலத்தில் ,ஹளேபீடு என்னுமிடத்தில் இரண்டாம் வீரவல்லபனால்,12-ம் நூற்றாண்டில் கட்டப்பட சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோர்க்காக கட்டப்பட்ட ஹோய்சாலேஸ்வரர் 
ஆலயத்தில் உள்ளது.
பல ஆயிரம் எடை கொண்ட ஒரே கல்லில் இராவணனையும்,அதில் உள்ள வேளைப்பாடுகள் நிறைந்த சிறபங்களையும் தொழில் நுட்பம் இல்லாத அந்தக் காலத்தில் ஒரே இடத்தில் செதுக்கிய சிற்பி என்னைப் பொருத்தவரைக்கும் வணக்கத்திற்கரியவர்
READ MORE - முதல் மாமன்னன் ஈழத்தை ஆண்ட இராவணன்

தண்ணீரில் சிறுவனுடன் குதித்து விளையாடும் கரடி(காணொளி)

திங்கள், 25 ஜூன், 2018

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள கரடி சிறுவன் ஒருவனின் செய்கை பார்த்து திரும்ப செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள நாஷ்விலி உயிரியல் 
பூங்காவில் இயான் என்ற 5 வயது சிறுவன் தனது தந்தையுடன் சென்றிருந்தான். அப்போது அங்கிருந்த கரடி ஒன்று தண்ணீருக்குள் குதித்தது. இதை பார்த்த இயான் உட்பட பல சிறுவர்கள் ஆனந்தத்தில் குதித்தனர். இதை பார்த்த கரடியும் அவர்களுடன் 
சேர்ந்து குதித்தது.
இயான் செய்ததை பார்த்து கரடி மீண்டும் குதித்து கொண்டே இருந்தது. இதனை இயானின் தந்தை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகின்றது.சிறுவர்களை பார்த்த மகிழ்ச்சியில் கரடியும் குழந்தைகளை போல் தண்ணீர் விளையாடியது. இது பார்வையாளர்களிடையே மகிழ்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - தண்ணீரில் சிறுவனுடன் குதித்து விளையாடும் கரடி(காணொளி)

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது

திங்கள், 18 ஜூன், 2018

யாழ் – மல்லாகம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் 16.06.2018.நேற்று வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.இந்த நிகழ்விற்கு வந்த இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.அதன்போது அங்கு வந்த காவல்துறையினர் மோதலை
 கட்டுப்படுத்த முனைந்தபோது காவல்துறையினரின் துப்பாக்கியை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, காவல்துறையினரால் துப்பாக்கிப் பிரயோகம்
 மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மோதலுடன் தொடர்புபடாத இளைஞர் ஒருவர் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருக்கும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில், மல்லாகம் – குளமங்கால் பகுதியை சேர்ந்த 28 வயதான பாக்கியராஜா சுதர்சன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் காயமடைந்த மற்றும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மல்லாகத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது

வெப்பக் காற்றினால் மட்டக்களப்பில் தீப்பிடித்து எரிந்த குடிசைகள்

புதன், 13 ஜூன், 2018


மட்டக்களப்பு மாவட்டத்தில் 23:28 13.06.2018
இந்த நாட்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தென்மேல் பருவப் பெயர்ச்சி காற்றினால் மரக் கிளைகள் முறிந்து விழுவதும் புழுதி வாரி இறைக்கப்படுவதும் நிகழ்ந்து வருகின்றது.
இந்த நிலையில் நேற்று வீசிய பலத்தஅனல் வெப்பக் காற்றினால் ஓலைக் குடிசை ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மீராவோடை தமிழ்ப் பிரிவு 10ஆம் குறுக்கில் உள்ள ஓலைக் குடிசைகளே தீப்பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென வீசிய சூறைக் காற்றினால் குடிசை தீப்பற்றியதாக சபாபதிப்பிள்ளை கோமளம் (வயது 57) தெரிவித்துள்ளார்.
இதன்போது, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.
இதேவேளை, கூலித் தொழில் செய்து ஜீவனோபாயம் நடத்தும் இவருக்கு மூன்று பெண் மக்கள் உள்ளது.
இந்த குடிசையில் தான் பல்வேறு வறுமைகளுடன் வாழ்ந்து வந்ததாகவும் சபாபதிப்பிள்ளை கோமளம் கூறியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - வெப்பக் காற்றினால் மட்டக்களப்பில் தீப்பிடித்து எரிந்த குடிசைகள்

யாழ் குப்பிளானில் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

யாழ். குப்பிளான் வடக்கில் இடம்பெற்ற கோரவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி ஐந்து நாட்களின்  திங்கட்கிழமை(11.06.2018) பிற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் இந்த மாதம்-05 ஆம் திகதி பிற்பகல் வேளையில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த வேளையில் மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வர்த்தக நிலையமொன்றின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் தலையில் கடும் படுகாயமடைந்த குறித்த இளைஞன் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். மறுநாளே அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பத் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுப் பிற்பகல்(11) உயிரிழந்துள்ளார்.
யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியைச் சேர்ந்த சு. சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவர்.இவர் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து நடத்துனராகக் கடமையாற்றி வந்தவராவார்.
இதேவேளை, மேற்படி இளைஞனின் இழப்புக் குப்பிளானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு
 குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - யாழ் குப்பிளானில் விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

இளைஞனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி பொலிஸாரின் வினோதச் செயல்

செவ்வாய், 12 ஜூன், 2018

தலைநகர் கொழும்பில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.இது தொடர்பில் கொழும்பு போதிராஜ மாவத்தைக்கு
 அருகில் பொலிஸார் இன்று முன்னெடுத்த விசேட நடவடிக்கையினால் பரபரப்பு ஏற்பட்டது.பெண்ணொருவரின் பணப்பையை திருடியதாக இளைஞர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை தாக்க முயன்றுள்ளனர்.
எனினும் உடனடியாக தலையிட்ட பொலிஸார், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அதுவொரு நாடகம் என தெளிவுபடுத்தினர்.மக்கள் மத்தியில் திருட்டுச் சம்பவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.இது தொடர்பான காணொளியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - இளைஞனுக்கு பெண் கொடுத்த அதிர்ச்சி பொலிஸாரின் வினோதச் செயல்

கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டி

திங்கள், 11 ஜூன், 2018

கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய அனைத்து பீடங்களுக்கிடையிலான நாடகப் போட்டியில் நடுவராக பணியாற்றிய தருணம்.
இலங்கையின் அரசியலை அப்பட்டமாக தோலுரித்து சித்தரித்திருந்தனர் சட்டபீடத்தினர் . ஒவ்வொரு பீட மாணவர்களும் சமகால விடயங்கள் பலவற்றை சித்தரித்திருந்தார்கள். பாராட்டுக்கள் எதிர்கால
 தலைவர்களுக்கு.
1ம் இடம் சட்டபீடம்
2ம் இடம் முகாமைத்துவ பீடம்
3ம் இடம் விஞ்ஞான பீடம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய நாடகப் போட்டி

வீசிய சூறைக் காற்றினால் யாழ் குடாநாட்டில் பல சேதங்கள்

 ,யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்று வீசிய சூறைக் காற்றினால், பல இடங்களிலும் மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதங்கள் ஏற்பட்டது. உடுவில் லவ்லேன் பகுதியில் பனை மரம் முறிந்து உயர் மின் அழுத்த கம்பிகளில் வீழ்ந்தமையினால் அப்பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
இதேபோன்று வடமராட்சிப் பகுதியிலும் பனை முறிந்து வீழ்ந்ததில்மின்கம்பம் சேதமடைந்த்தோடு மின் தடையும் ஏற்பட்டது. குறித்த மின்தடை மாலையிலேயே சீர் செய்யப்பட்டது.
யாழ். நகரின் மத்தியில் பொருத்தப்பட்டிருந்த ஓர் விளம்பரப் பலகை முறிந்து வீழ்ந்த நிலையில் மக்களால் உடனடியாக இ.மி.சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அப்பகுதிக்கான மின் தடை ஏற்படுத்தப்பட்டு சீர் செய்யப்பட்டது.
சுன்னாகம் , மல்லாகம் போன்ற பகுதிகளில் வீதியோரம் நின்றிருந்த மரங்களின் கிளைகள் வீழ்ந்தமையினாலும் சிறிது நேரம்
 மின் தடை ஏற்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - வீசிய சூறைக் காற்றினால் யாழ் குடாநாட்டில் பல சேதங்கள்

மண்ணெண்ணெய் விலை செவ்வாய் முதல் குறைப்பு

நாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படவுள்ளது.
அதற்கமைய ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மண்ணெண்ணெய்யின் விலையை 25 ரூபா முதல் 30 ரூபா வரை குறைப்பதற்கு நேற்று முன்தினம் அரசாங்கம் தீர்மானித்தது.
நிதி அமைச்சு மற்றும் திறைசேறி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
கடற்றொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அண்மையில் எரிபொருளின் விலைச்சுட்டெண் பிரகாரம் மண்ணெண்ணெய்யின் விலை 130 ரூபா வரை அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மண்ணெண்ணெய் விலை செவ்வாய் முதல் குறைப்பு

விசிய பலத்த காற்ரினால் மலையகத்தில் ; பல வீடுகள் சேதம்

சனி, 9 ஜூன், 2018

மத்திய மலை நாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் மற்றும் தகரங்கள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. இதனால் பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
பலத்த காற்று வீசி வருவதனால் பல இடங்களில் மரக்கிளைகள் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்து அட்டனில் பல பிரதேசங்களுக்கு நள்ளிரவு முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளன.
ஒரு சில பிரதேசங்களுக்கு மின்சாரம்  இன்று அதிகாலை வேளையில் வழமைக்கு திரும்பிய போதிலும், ஏனைய சில பகுதிகளுக்கு இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என
 தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கடி மழையுடன் பலத்த காற்று வீசி வருவதனால் மண்சரிவு அபாயப்பகுதிகளில் வாழ்பவர்களும், மரங்களுக்கு அருகாமையில் வசிப்பவர்களும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் 
கேட்டுக்கொண்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - விசிய பலத்த காற்ரினால் மலையகத்தில் ; பல வீடுகள் சேதம்

சில பகுதிகளில் யாழ்.குடாநாட்டின் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(09) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் 
தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை யாழ்.தொண்டைமானாறு,கெருடாவில், பொக்கணை, மயிலியதனை, ஊரிக்காடு, அக்கரை, வளலாய், சுருவில், மெலிஞ்சிமுனை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - சில பகுதிகளில் யாழ்.குடாநாட்டின் நாளை மின்தடை

வாகனங்களை வீதியில் திருத்த வேலை செய்பவர்கள் மீது பாயும் சட்டம்

போக்குவரத்து இடையூறாக வாகனங்களை நிறுத்தி திருத்த வேலைகளை மேற்கொள்ளும் வாகன திருத்தும் நிலையங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வவுனியா நகரசபை தலைவர் 
இ.கௌதமன் தெரிவித்தார்.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வாகன திருத்தகங்கள் போதிய இடவசதியின்றி வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்தி திருத்துவதனால் பொதுமக்கள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன்
 தெரிவித்தார்.
தாண்டிக்குளம், பூந்தோட்டம், இறமபைக்குளம், சூசைப்பிள்ளையார்குளம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள வாகன திருத்தகங்களை நேரடியாக சென்று பார்வையிட்ட நகரசபை தலைவர் அடங்கிய குழுவினர் குறித்த திருத்தகங்களின் உரிமம் மற்றும் இடவசதிகள் 
தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார்.
இதன் பின்னர் நகரசபை தலைவர்  கருத்து தெரிவிக்கையில்
வீதிகளில் வைத்து வாகனங்களை பழுதுபார்க்கும் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைத்தவண்ணமுள்ளது. அத்துடன் அதனால் ஏற்படும் பாதிப்புகள் வாகனத்தின் கழிவு எண்ணை நிலத்தடி நீரில் கலப்பது தொடர்பாகவும் முறைப்பாடு கிடைத்து வருகின்றது. 
இவற்றை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளதனால் இதற்குமப்பால் வீதிகளில் வைத்து வாகனங்களுக்கான டயர் மாற்றுமு; கடைகள் காணப்படுவதுடன் பாதசாரி கடவைகளை ஆக்கிரமித்தும் அவர்கள் வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் பெரும் இடையூறுகளுக்கு முகம் கொடுக்கின்றனர். எனவே பொலிஸாரின் உதவியுடன் விரைவில் நடவடிக்கை 
எடுக்கப்படும்.
அத்துடன் சகல வர்த்தக நிலையங்களிற்குமான வியாபார  அனுமதியினை 07ம் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ள வேண்டும். வியாபார அனுமதி முடிவடைந்தவர்கள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதுடன் குறித்த காலப்பகுதிக்குள் உரிய நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 
தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







READ MORE - வாகனங்களை வீதியில் திருத்த வேலை செய்பவர்கள் மீது பாயும் சட்டம்

கிளிநொச்சி இளைஞன் தாமரைக்கோபுரத்திலிருந்து விழுந்து பலி

கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.
தாமரைக் கோபுரத்தின் மின் உயர்த்தி நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போதே 13ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞன் உயிரிழந்தார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே
 இவ்வாறு உயிரிழந்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கிளிநொச்சி இளைஞன் தாமரைக்கோபுரத்திலிருந்து விழுந்து பலி

அன்பினால் ஏற்பட்ட வினை கத்திக்குத்தில் முடிந்தது

செவ்வாய், 5 ஜூன், 2018

மாத்தளை நகரத்தில் காணப்படும் உல்லாசவிடுதியொன்றில் வைத்து நபரொருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கத்தியால் குத்திய நபர் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இது குறித்து அவர்கள் மேலும் தெரியவருவதாவது;
மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நகரப்பகுதியில் காணப்படும் விடுதியொன்றில் வைத்து இளைஞர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.இந்நிலையில், கத்தியால் குத்திய நபரை கைதுசெய்துள்ள மாத்தளை பொலிஸார் அவரை இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளதாகவும், அடிக்கடி இருவரும் ஒரே வீட்டில் தங்கியதாகவும் மாத்தளை நகரில் காணப்படும் சில்லறை
 கடையொன்றில் ஒன்றாக பணியாற்றுபவர்கள் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது.மேலும், இச்சம்பவத்தில் கத்திக்குத்துக்கிலக்கானவர் இரத்தினபுரியை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படும் நிலையில், தாக்குதலை மேற்கொண்டவர் மாத்தளை நகரை சேர்ந்த 26 வயதுடைய இளைஞராவார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல்தாரியை கைதுசெய்த பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, சம்பவத்தில் கத்திக்குத்துக்கிலக்கானவர் குறித்த சில்லறைகடையிலிருந்து விலகி வெளிநாட்டுக்குச் செல்ல முயன்றதாகவும் இதனை விரும்பாததன் காரணமாகவே இவ்வாறு கத்திகுத்து தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
கத்திக்குத்துக்குள்ளானவர் வெளிநாடு செல்ல ஆயத்தமாகிய விடயம் குறித்து பல நாட்களாக இருவரிடையேயும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதன்போது மாத்தளை நகரிலுள்ள விடுதியில் அறையொன்றில் தங்கியுள்ள இருவரும் இவ்விடயம் தொடர்பில் மீண்டும் நள்ளிரவை தாண்டியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இறுதியாக வெளிநாட்டுக்கு செல்ல ஆயத்தமாகியவர் கத்தியால்
 தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது இருவரிடையே ஏற்பட்ட மோதலில் சத்தம் கேட்டு ஓடி வந்த விடுதியின் பணியாளர்களினால் கத்திக்குத்துக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கட்ட நிலையில் கத்திக்குத்துக்கிலக்கானவர் மாத்தளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மாத்தளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கிடைத்துள்ள தகவலை கொண்டு பார்க்கையில் இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்களா? என்ற சந்தேகமும் 
பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.இந்நிலையிலேயே, குறித்த நபரை கைதுசெய்த பொலிஸார் அவரை மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - அன்பினால் ஏற்பட்ட வினை கத்திக்குத்தில் முடிந்தது

திருகோணமலையில் விதவைப் பெண் கற்பழிப்பு

திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான பாட்டாளிபுரத்தில் பெண்ணெருவர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த பெண் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 5 பிள்ளைகளின் தாயான விதவைப் பெண்ணுக்கே இந்த 
அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் மற்றும் நீதித்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட் நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் குறித்த பெண்ணை பொலிஸாரின் உதவியுடன் தோப்பூர் வைத்தியசாலை ஊடாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.தற்போது, அவரால் பேசமுடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தில் பல தவறான இளைஞர்கள் பங்குகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.குறித்த பெண்ணை அவர்கள் பலாத்காரம் செய்து இறுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யவும் துணிந்துள்ளார்கள்.
5 பிள்ளைகளின் தாயான குறித்த விதவைப் பெண்ணை பலர் சேர்ந்து இவ்வாறு சிதைத்து அவரைக் கொல்லத் துணிந்துள்ளமை பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. எனவும் அவ்வமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.இந்த சம்பவம் பல பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்விடயத்தில் இன, மத, சாதி ஏற்றத்தாழ்வு பாராமல் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என அவ் அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - திருகோணமலையில் விதவைப் பெண் கற்பழிப்பு

கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ் கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கேரள கஞ்சா  (04.-06-2018.) கைப்பற்றப்பற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
குறித்த கஞ்சாவினை கடத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார்
 தெரிவிக்கின்றனர். 


சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
நேற்று (03) இரவு கைதடி பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போதே 4 கிலோ கிராம் கஞ்சா கைப்ப
ற்றப்பற்றுள்ளது. 
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - கைதடி பகுதியில் 4 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

சிறிய ரக பாரவூர்தி திடீரென தீப்பற்றியது ஓட்டுனர் மருத்துவமனையில்

திங்கள், 4 ஜூன், 2018

கொழும்பின் வெளிப்புற சுற்றுவட்ட அதிவேக வீதியின் கொட்டாவை மற்றும் அதுருகிரிய பரிமாற்று மையத்திற்கு இடையில் சிறிய ரக பாரவூர்தியொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் பாரவூர்தியின் சாரதி எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் , ஹோமாகமை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
விபத்துக்குள்ளான பாரவூர்தி தற்போதைய நிலையில் அதுருகிரிய பரிமாற்று மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவல் இயந்திர கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - சிறிய ரக பாரவூர்தி திடீரென தீப்பற்றியது ஓட்டுனர் மருத்துவமனையில்

யாழில் பாதுகாப்பற்ற கேபிள் இணைப்புகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

வெள்ளி, 1 ஜூன், 2018

யாழ். மாவட்டத்தில் கேபிள் இணைப்புகளை வழங்குவதற்கான பிரத்தியேக கம்பங்கள் எவையும் நடப்படவில்லை.
இலங்கை மின்சார சபை மின் விநியோகத்திற்காக அமைத்துள்ள மின் கம்பங்கள் ஊடாகவே கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கேபிள் இணைப்புகள் பாதுகாப்பற்ற வகையில் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளமையினால், பல்வேறு ஆபத்துகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.
மின்சார கம்பிகளுடன் கேபிள் கம்பிகள் உராய்வதனால், மின் ஒழுக்கு ஏற்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறு கேபிள் இணைப்பிலிருந்து பரவிய மின்சாரம் தாக்கியதில், நெல்லியடி - நாவலர்மடம் பகுதியைச் சேர்ந்த தந்தையும் மகனும் கடந்த செவ்வாய்க்கிழமை (22) காலை உயிரிழந்தமை
 குறிப்பிடத்தக்கது.
வடமராட்சியில் மாத்திரம் இவ்வாறு மின்சாரம் தாக்கி, கடந்த காலங்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் கூறினார்.
மற்றுமொரு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்னர், பாதுகாப்பற்ற வகையில் மின்கம்பங்களுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ள கேபிள் இணைப்புகளை அகற்றுமாறு மக்கள் வேண்டுகோள் 
விடுத்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் மின்கம்பங்களூடாக கேபிள் இணைப்புகள் வழங்கப்படுவது தொடர்பில் அறிந்திருக்கவில்லை எனவும் ஆராய்ந்து பார்ப்பதாகவும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க அமைச்சின் ஊடகப்பேச்சாளர்  தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழில் பாதுகாப்பற்ற கேபிள் இணைப்புகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்