யாழ் கோப்பாய் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

வியாழன், 31 மே, 2018

கன்டர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். 
யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்று (24) காலை இந்த விபத்துச் 
சம்பவம் இடம்பெற்றது.
விபத்தில் கோண்டாவில் நவரட்ணராஜா வீதியைச் சேர்ந்த சின்னத்துரை இராசரட்ணம்( வயது 62) என்பவரே உயிரிழந்தார்.
"கோப்பாய் சந்தியின் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் முதியவர் சென்றுகொண்டிருந்த போது, பின்புறமாக வந்த கன்டர் 
வாகனம் மோதியது.
விபத்தில் படுகாயமடைந்த முதியவர், கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சடலம் யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்" என்று பொலிஸார் தெரிவித்தனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் கோப்பாய் விபத்தில் முதியவர் உயிரிழப்பு

இலங்கை எப்படி இருக்கும் நாளை வெளியாகப் போகும் ஆதாரம்

புதன், 30 மே, 2018

இலங்கையின் புதிய வரைப்படம்.31.05.2012. நாளைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நில அளவை திணைக்களத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்ட 1-50000 வகை கொண்ட வரைபடமே வெளியிடவுள்ளதாக நில
 அளவையாளர் உதயகாந்த தெரிவித்துள்ளார்.கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கடந்த காலங்களில் நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அனைத்து தகவல்களும் இந்த வரைபடத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.இலங்கை வரைபடத்தில் 92 பகுதிகள் உள்ள நிலையில் கொழும்பு நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 66 பகுதிகள் உள்ளதாக உதயகாந்த தெரிவித்துள்ளார்.
முழுமையான நாட்டை கொண்டுள்ள வகையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், விமான புகைப்படங்கள் உட்பட நவீன தொழில்நுட்பத்திலான அளவீட்டு உபகரணங்கள் பயன்படுத்தி பெற்றுக் கொண்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு புதிய வரைபடம் 
தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய வரைபடத்தை வெளியிடுவதனை தொடர்ந்து நாட்டின் அபிவிருத்தி பயணம் இன்னமும் வேகமடைந்து, இலங்கை தொடர்பில் புதிய கண்களில் பார்ப்பதற்கு உலகின் அனைத்து நாடுகளுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இலங்கை எப்படி இருக்கும் நாளை வெளியாகப் போகும் ஆதாரம்

மின்னல்,இடியுடன் கூடிய மழை யாழில் மக்கள் பாதிப்பு .

வியாழன், 24 மே, 2018

யாழ்ப்பாணத்தில் மின்னல்,இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் இந்த நிலை தொடர்ந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.
எனினும் ஆங்காங்கே மின்னல், இடித் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தின் கோபுரம் மீது இடி விழுந்தது எனக் கூறப்படுகிறத
இதன் போது கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. ஏனைய சேதவிவரங்கள் வெளியாகவில்லை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மின்னல்,இடியுடன் கூடிய மழை யாழில் மக்கள் பாதிப்பு .

யாழ் கரவெட்டியில் கேபிள் ரீவி இணைப்பில் தந்தை, மகன் பலி

புதன், 23 மே, 2018

யாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம்.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் டிஷ் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரீவி இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.
கேபிள் ரீவி வயருடன் மின் விநியோக இணைப்பும் தொடர்புபட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் நகரில் வானகம் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் ஜெகனாந்தன் (வயது- 50), சஞ்சீவன் (வயது- 29) ஆகிய இருவருமே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் கரவெட்டியில் கேபிள் ரீவி இணைப்பில் தந்தை, மகன் பலி

வட மாகாணம் முழுவதும் இரு நாட்கள் முற்றாக மின்தடை

வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை 
அறிவித்துள்ளது.
வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை 
அறிவித்துள்ளது.
வடக்குக்கான பிரதான மின் மார்க்கங்களான அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளின் அதியுயர் மின்னழுத்த மின்மாற்ற வேலைகளுக்காகவே மின்சாரம்
 நிறுத்தப்படவுள்ளது.
குறித்த இரு தினங்களும் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - வட மாகாணம் முழுவதும் இரு நாட்கள் முற்றாக மின்தடை

யாழில் நடந்த பயங்கரம் தெய்வாதீனமாக உயிர் தப்பிய மக்கள்

செவ்வாய், 22 மே, 2018

யாழ்ப்பாணத்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் ஒன்று தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதி ஊடாக பயணித்த ரயிலில் மோதுண்டு பல உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை 
தவிர்க்கப்பட்டுள்ளது.
ரயில் கடவை மூடப்படாத நிலையில் பயணித்த ரயில் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று மதிய வேளையில் அந்தப் பகுதியால் சென்ற ரயில், ஒலிகளை எழுப்பாத நிலையில் பயணித்துள்ளது.
இதன் போது பாடசாலை நிறைவடைந்து பிள்ளைகளுடன் பெற்றோர் சென்று கொண்டிருந்தனர். ரயில் கடவையைக் கடந்தபோது ரயில் வந்து கொண்டிருந்தது.
ரயில் பாதுகாப்பு கடவை போடப்படவில்லை. அதனால் ரயில் வரவில்லை என்று கருதி, அந்தப் பகுதியை கடந்து சென்றுள்ளனர். எனினும் திடீரென வந்த ரயிலை கண்ட மக்கள் பல பகுதி சிதறி ஓடியுள்ளனர்.
இதன் காரணமாக தனது பாடசாலைக்கு வந்த பிள்ளையை கூட்டிச் சென்றவர் கடவைக்கு அருகில் வீழ்ந்துள்ளார். பலர் உயிர் தப்பியுள்ளனர்.
இதேவேளை தமது சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் அதில் கடமையில் இருந்தார். பணி பகிஷ்கரிப்பு காரணமாக அவர் அதில் தற்போது கடமையில் இருப்பதில்லை என கடவைக் காப்பாளர் சங்கத் தலைவர் 
றொகான் தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழில் நடந்த பயங்கரம் தெய்வாதீனமாக உயிர் தப்பிய மக்கள்

நாட்டில் பரவும் ஆபத்து! 12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாய் பலி

இலங்கையின் தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, அம்மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதிவரையில் இதனை மூடிவிட தென் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
குறித்த வைரஸ் காய்ச்சல் முன் பள்ளி சிறுவர்கள், அந்த வயதை அண்டிய வயதுப் பிரிவினரை வெகுவாக பாதிக்கின்றது.
இந்த நிலையிலேயே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது.
இதனிடையே குறித்த வைரஸ் காய்ச்சலை ஏர்படுத்தும் இன்புளுவென்ஸா வைரஸ்,  எடினோ வைரஸ்,  நியூமோகொக்கல் பக்டீறியா தாக்கத்துக்கு உள்ளான மேலும் 22 பேர் அடையாளம்
 காணப்பட்டுள்ளனர். 
கொழும்பு வைத்திய பரிசோதனை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரத்த மாதிரிகளை ஆராய்ந்த போதே இன்று இந்த 22 பேரும் குறித்த வைரஸ் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
 ஏற்கனவே இந்த வைரஸ் தொற்று காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் தகவல்கள் வெளிப்படுத்திய நிலையில், அவர்களில் 12 பேர் சிறுவர்களாவர். மற்றையவர் கர்ப்பிணித் தாயாவார்.
தென்மாகாண சுகாதார சேவைகள் அலுவலக தகவல்களின் பிரகாரம், காலி கராபிட்டிய வைத்தியசாலை, மாத்தறை பொது வைத்தியசாலை, எல்பிட்டிய, கம்புறுப்பிட்டிய, தங்காலை, வலஸ்முல்லை ஆகிய ஆரம்ப வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதாக அறிய முடிகின்றது.
 இந் நிலையில் குறித்த நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடன் பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு உத்தர்விட்டுள்ளார். 
அதன்படி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அவசியமான ஹைப்லோ ஒட்சிசன் இயந்திரங்கள் 10 காலி கராபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வைத்தியர்கள் கோரும் அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன் பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாச க்கோளாறு உள்ளோர் மற்றும் வயோதிபர்கள் இந்த வைரஸ் தொற்று காரணாமாக இலகுவில் பாதிக்கப்படக் கூடியவ்ர்களாக  காணப்படுவதாகவும் அவர்களுக்கு தனி நபர் பாதுகாப்பு முறைமைகளை கையாள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 
 குறிப்பாக பொது இடங்களில், மூக்கு, வய் என்பவற்ரை மூடும் வகையிலான பாதுகாப்பு மூடிகளை அணிய ஆலோசனை 
வழங்கப்பட்டுள்ளது. 
 காய்ச்சல், தலைவலி, மூச்சுத் திணறல், சளி உள்ளிட்ட நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ள இந்த வைரஸ் தொற்று தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், பிள்ளைகளை முன்பள்ளி உள்ளிட்ட தனியார் வகுப்புகளுக்கோ அனுப்ப வேண்டாம் எனவும்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க பெற்றோரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இந் நிலையில் தடிமன், காய்ச்சல், இருமலுடன் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பெற்றோரை அழைத்து வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதேவேளை, குறித்த வைரஸ் தொற்றுக் காரணமாக மாத்தறை, முலட்டியான, அக்குரஸ்ஸ, தங்காலை, வலஸ்முல்ல மற்றும் காலி கல்வி வலயத்திற்குட்பட்ட தரம் 1 முதல் தரம் 5 வரையான அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 22 ஆம், 23 ஆம் திகதி மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் பரவும் ஆபத்து! 12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாய் பலி

யாழ் நெல்லியடியில் கத்தி வெட்டுக்கு இளைஞன் படுகாயம்!

யாழ்வடமராட்சி - நெல்லியடிப் பகுதியில்.22.05-2018. இன்று மாலை இடம்பெற்ற கத்தி வெட்டுச் சம்பவத்தில் ஒருவர்
 படுகாயமடைந்தார். இரு இளைஞர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் மற்றவரை கத்தியால் வெட்டியதாகத் 
தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை பொலிஸார் 
கைதுசெய்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் நெல்லியடியில் கத்தி வெட்டுக்கு இளைஞன் படுகாயம்!

நடமாடும் போலீஸ் அலுவலகம் ஏழாலை தெற்கு பிரதேசத்தில்

யாழ் சுன்னாகம் ஏழாலை தெற்கு பிரதேசத்தில் கருப்பாவோடை அம்மன் கோவிலுக்கு அருகாமையில் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் பொருட்டு குறிப்பாக போதை பாவனை 
,களவு ,போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்கும் இதனூடாக நடவடிக்கை எடுகப்படுமேனவும், மேலும் பிரதேச கிராம மக்கள் அணுகுவதட்கு இலகுவாக அமையும் எனவும் போலீஸ் அதிகாரி அவர்களும் ,பிரதேச சபை உறுபினர்களும் இதன் போது கருத்து தெரிவித்திருந்தனர்.இதன் காரணமாகவே  நிலையம் கிராமத்திற்கு விஸ்தரிக்கப் படுகின்றதெனவும் கருத்து 
வெளியிட்டு இருந்தனர் .இந்த நிகழ்வில் போலீஸ் அதிகாரிகள் சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் ,பிரதேச சமூக தலைவர்கள் ,பொதுமக்களென பிரதேசத்தின் நலன் கருதி  பலரும் கலந்து கொண்டிருந்தனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - நடமாடும் போலீஸ் அலுவலகம் ஏழாலை தெற்கு பிரதேசத்தில்

பரிதாபமாக கொழும்பு புறநகர் பகுதியில் உயிர் விட்ட சிறுமி

கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள பாதுக்க கோரலஹிம 
அலுத்வத்த எனும் 
பகுதியில் பூச்சி மருந்து வில்லை தொண்டடையில் சிக்கி சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
4 வயதான தினுர திமான் தெவ்மிகா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மரண விசாரணையின் போது, தாய் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
'சில நாட்களுக்கு முன்னர் எனது மகளை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றேன். மகள் எடை குறைந்த காரணத்தினால் மகளுக்கு விட்டமின் மற்றும் பூச்சி மருந்துகள் வழங்கப்பட்டன.
மகளுக்கு மருந்து குடிப்பதற்கு பயம். இதனால் அவருடைய தந்தை பணிக்கு செல்ல முன்னர் மகளுக்கு மருந்தை கொடுத்தார். இதன்போது பூச்சி வில்லையை இரண்டாக உடைத்து ஒரு பாதியை தண்ணீருடன் கொடுத்தார்.

பின்னர் மறு பாதியையும் தொண்டையில் இட்டு தண்ணீர் கொடுத்தார். அப்போது மகள் "அப்பா" என சத்திமிட்டார். அதன் பின்னர் மகளின் முதுகில் பலமாக தட்டினோம், தலை கீழாக தொங்கவிட்டு தட்டினோம், பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றோம்
அங்கிருந்து சிறுவர் நல வைத்தியசாலைக்கு மகள் மாற்றப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி மகள் உயிரிழந்தார்" என சிறுமியின் தாய் சாட்சியமளித்துள்ளார்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் சிறுமி பூச்சி மாத்திரை தொண்டையில் இறுகி உயிரிழந்துள்ளார் என கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ராஹல் அக் அறிவித்துள்ளார்.
பிள்ளைகளுக்கு மருந்து கொடுக்கும் போது பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - பரிதாபமாக கொழும்பு புறநகர் பகுதியில் உயிர் விட்ட சிறுமி

சீரற்ற காலநிலை யால் இலங்கையில் 5 பேர் பலி

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கம், மண்சரிவு, மரக்கிளை முறிவு போன்ற  இடர்களாலேயே  இந்த உயிரிழப்புக்கள் இடம்பெற்றன என்றும்  இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் ஏற்படும் இடர்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க, முப்படையினரும்,இடர் முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - சீரற்ற காலநிலை யால் இலங்கையில் 5 பேர் பலி

யாழில் பீடி மூட்டி வீசிய தீக்குச்சியினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழில் பீடி மூட்டிவிட்டு வீசிய தீக்குச்சியினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பீடி மூட்டிவிட்டு வீசிய தீக்குச்சி பெற்றோல் போத்தலுக்கருகே வீழ்ந்து தீ பற்றியதால் குடும்பத் தலைவர் உயிரிழந்தார்.
சம்பவம் சுழிபுரம் மேற்கில் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த மாரிமுத்து பாஸ்கரன் (வயது - 52) என்பவரே 
உயிரிழந்தார்.
கடந்த 14 ஆம் திகதி பெற்றோல் வாங்கிவந்து வீட்டுக்கு வெளியே வைத்துள்ளார். 
அன்றிரவு பீடி புகைக்க தீக்குச்சி மூலமாக பற்றி வைத்தார். பின்னர் தீக்குச்சியை வீசியபோது அது பெற்றோல் போத்தலுக்கு அருகில் வீழ்ந்து பற்றியுள்ளது.
காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காது நேற்று உயிரிழந்தார். திடிர் இறப்பு விசாரண அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார். 
விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் 
ஒப்படைக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழில் பீடி மூட்டி வீசிய தீக்குச்சியினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ் புத்தூரில் முச்சக்கரவண்டி கோர விபத்து! மூவர் படுகாயம்

திங்கள், 21 மே, 2018

 முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்தது மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் மூவர் படுகாயமடைந்தனர்.இந்த விபத்து புத்தூர் பிரதேச சபை முன்பாக இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, புத்தூர் பிரதேச சபை பிரதான வீதி வளைவில்
 வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது மின்கம்பத்துடன் மோதுண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.முச்சக்கர வண்டியில் 
பயணித்த சாரதி உட்பட இருக்கையில் அமர்ந்திருந்தவர்களும் படுகாயமடைந்தனர்.விபத்தில் காயமடைந்தவர்கள் அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலதிக 
விசாரணைகளைப் பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - யாழ் புத்தூரில் முச்சக்கரவண்டி கோர விபத்து! மூவர் படுகாயம்

சாரமாரியாகமாணவன் மீது கத்திக்குத்து!! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

வியாழன், 17 மே, 2018

மாணவர்கள் இணைந்து இன்னொரு மாணவனை கிண்டலடித்துப் பேசியதால் கோபமடைந்த மாணவன் சக மாணவனை சராமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார்.கத்திக்குத்துக்கு இலக்கான மாணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் மொனராகலை,
 சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்களிடையே நடந்துள்ளது.காயமடைந்த மாணவன் சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் மொனராகலை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய மாணவனை சியம்பலாண்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.சியம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செயதி >>>


READ MORE - சாரமாரியாகமாணவன் மீது கத்திக்குத்து!! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

யாழ் தோப்பில் மின்னல் தாக்கி இளம் பெண் படுகாயம்!

யாழ்  தோப்­பு  அச்­சு­வேலிப்  பகு­தி­யில் .16.05.2018.அன்று  பிற்பகல் 3 மணி­ய­ள­வில் இடி முழக்­கத்­து­டன் மழை பெய்து கொண்­டி­ருந்­த­ போது, அலை­ பே­சி­யில் உரை­யா­டிக் கொண்டிருந்த பெண் ஒரு­வர் 
மின்­னல் தாக்­கி படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார்
 தெரி­வித்­த­னர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் தோப்பில் மின்னல் தாக்கி இளம் பெண் படுகாயம்!

வாள் முனையில் தென்மராட்சியில் கொள்ளை

புதன், 16 மே, 2018

தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளையர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தியுள்ளனர்.
தாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட 10 பவுண் நகைகள், 
2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 2 கைபேசிகள் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - வாள் முனையில் தென்மராட்சியில் கொள்ளை

கோர விபத்து முன்னேஸ்வரத்தில் ஒருவர் பலி மூவர் படுகாயம்!!

செவ்வாய், 15 மே, 2018

முன்னேஸ்வரத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மாடு ஒன்றும் உயிரிழந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீன் கொள்வனவு 
செய்வதற்காக பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்று பாதையின் குறுக்காக பயணித்த மாடு ஒன்றுடன் மோதிய பின்னர், எதிரில் வந்த வான் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது.சிலாபம் – குருநாகல் பிரதான வீதியின் முன்னேஸ்வரம் பகுதியில்
 இன்று அதிகாலை நடந்த விபத்தில் ஒருவர்
 உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்தனர் என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில், விலத்தவ பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்தில்
 காயமடைந்தவர்கள் தங்கொட்டுவை பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் சிலாபம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்துச் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - கோர விபத்து முன்னேஸ்வரத்தில் ஒருவர் பலி மூவர் படுகாயம்!!

மரத்துடன் மோதி முச்சக்கர வண்டி கோர விபத்து!! மூவர் பலி!

மாத்தறை ஊருபொக்க – ரொட்டும்ப பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் நேற்றிரவு இம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.முச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், குறித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து 
சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் பஸ்கொட, பெங்கமுவ மற்றும் ஹதுகல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34, 50 மற்றும் 53 வயதானவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மரத்துடன் மோதி முச்சக்கர வண்டி கோர விபத்து!! மூவர் பலி!

இலங்கையில் ஆகக் குறைந்த பேரூந்துக் கட்டணம் 15 ரூபா

இலங்கையில் பேருந்து பயண கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளது.போக்குவரத்து துறை அமைச்சினால் இதற்கான நடவக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து உரிமையாளர்களால் இந்தக் கோரிக்கை 
முன்வைக்கபபட்டுள்ளது.
இதற்கமைய, பேருந்தில் பயணிப்பதற்கான ஆகக் குறைந்த பயணக் கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இலங்கையில் ஆகக் குறைந்த பேரூந்துக் கட்டணம் 15 ரூபா

இடம்பெற்ற விபத்தில்சாவகச்சேரி பகுதியில் இருவர் படுகாயம்

திங்கள், 14 மே, 2018

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.
சாவகச்சேரியை சேர்ந்த 23 வயதான சந்திரகுமார் கஜிபன், 15 வயதான கிருஷ்ணகுமார் நிறுஜன்
ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, ஒருவர் மேலதிக
சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு
 மாற்றப்பட்டுள்ளார்.
< இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> /div>







READ MORE - இடம்பெற்ற விபத்தில்சாவகச்சேரி பகுதியில் இருவர் படுகாயம்

களஞ்சியசாலையில் தனியார் ஆடை நிறுவனம் தீயினால் பாரிய சேதம்

இரத்மலானை பொருபன வீதியில் அமைந்துள்ள தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் நேற்று(சனிக்கிழமை) தீ பரவியுள்ளது.
களஞ்சியசாலையில் பிற்பகல் 1.30 மணியளவில்
 பரவிய தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்கு தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் இரத்மலானை 
விமானப்படையினரின் தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டு சுமார் தீயை அணைப்பதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னர் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - களஞ்சியசாலையில் தனியார் ஆடை நிறுவனம் தீயினால் பாரிய சேதம்

யாழ். குடாநாட்டில் இன்றும் நாளையும் மின்தடை

சனி, 12 மே, 2018

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று சனிக்கிழமை(12) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.குடாநாட்டின் தும்பளை, கற்கோவளம்,கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, புனிதநகர், மாதனை, வெளிச்ச வீடு, திகிரி, வறாத்துப்பளை ஆகிய பகுதிகளிலும்,
நாளை ஞாயிற்றுக்கிழமை(13) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். கரணவாய், பொலிகண்டி, பொலிகண்டி ஐஸ் தொழிற்சாலை, பளையின் ஒரு பகுதி, இலந்தைக்காடு,கரணவாய், எள்ளன் குளம், கொற்றாவத்தை, நெடியகாடு, அரசர் கேணி, 
கச்சாய் வெளி, தர்மகேணி, முகமாலை, இத்தாவில், எழுதுமட்டுவாள், உசன் , விடத்தற்பளை, கெற்பலி, மிருசுவில் தெற்கு, தவசிக்குளம், நாவலடி, ரோக்கியோ சீமெந்துக் கம்பனி(லங்கா), மிருசுவில் பி. எல்.சி, மிருசுவில் இராணுவ முகாம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ். குடாநாட்டில் இன்றும் நாளையும் மின்தடை

யாழ் நீர்­வே­லி வாள்வெட்டுடன் தொடர்புடைய மூவர் கைது

நீர்­வே­லி­யில் கடந்த.07.05.2012. திங்­களன்று இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் மூன்று பேர் கைது 
செய்­யப்­பட்­டுள்­ள­னர். 
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து வாள் ஒன்­றும், மோட்­டார் சைக்­கிள் ஒன்­றும் மீட்­கப்­பட்­டுள்­ளதாக பொலி­ஸார்
 தெரி­வித்­துள்ளனர்
நீர்­வேலி செம்­பாட்­டுப் பிள்­ளை­யார் கோவி­லில் இரண்டு இளை­ஞர்­கள் மீது வாள்­வெட்டு நடத்­தப்­பட்­டி­ருந்­ததுடன், இச்சம்பவத்துடன் ஆவா குழு­வைச் சேர்ந்த 8 பேர் தொடர்பு கொண்டுள்ளதாக பொலி­ஸார் தகவல் வெளியிட்டுள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் நீர்­வே­லி வாள்வெட்டுடன் தொடர்புடைய மூவர் கைது