நாட்டில் முச்சக்கர வண்டி பயணக் கட்டணம் அதிகரிக்கப்படலாம்

திங்கள், 30 ஏப்ரல், 2018

முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது
.150 ற்க்கு அதிகமாக ஒரு லீற்றர் பெற்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டால் முச்சக்கர வண்டிகளின் கட்டணமும் அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் 
தீர்மானத்திற்கமைய தான் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.சாதாரண மாற்றம் தொடர்பில் தாம் கட்டணங்களை அதிகரிப்பதில்லை என அவர்
 குறிப்பிட்டுள்ளார்.ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 150 ரூபாவை விடவும் அதிகரித்தால் இது தொடர்பில் அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்
 அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் முச்சக்கர வண்டி பயணக் கட்டணம் அதிகரிக்கப்படலாம்

சிங்கப்பூர் ஊடாகபிரித்தானியா செல்ல முயற்சித்த இளைஞர் கைது

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியா செல்ல முற்பட்ட யாழ். இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் அவர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த நபர் சிங்கப்பூர் ஊடாக பிரித்தானியா செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் சிங்கப்பூரிலிருந்து பிரித்தானியா செல்வதற்காக பயண சீட்டொன்றை வைத்திருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சில போலியான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேநபருக்கு பிரித்தானியா செல்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய நபர் பிரித்தானியாவில் இருக்கின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க சந்தேகநபர் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - சிங்கப்பூர் ஊடாகபிரித்தானியா செல்ல முயற்சித்த இளைஞர் கைது

பேஸ்புக் காதலால் யாழில் யுவதிக்கு ஏற்பட்ட பரிதாபம்

யாழில் பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பால், யுவதி ஒருவர் தனது தலை முடியை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ். வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், வடமராட்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் பேஸ்புக் ஊடாக பல நாட்களாக காதலித்து 
வந்துள்ளனர்.
இந்த நிலையில் அண்மைக்காலமாக இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.
கருத்து முரண்பாடு முற்றியதால் குறித்த இளைஞன் யுவதியின் வீட்டுக்குச் சென்று காதலியின் நீளமான தலைமுடியை 
வெட்டியுள்ளார்.
குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.$.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பேஸ்புக் காதலால் யாழில் யுவதிக்கு ஏற்பட்ட பரிதாபம்

நாட்டில் கடந்த இரு மாதத்தில்10 பில்லியன் ரூபா பணம் அச்

அரசாங்கத்தினால் கடந்த 2018 மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரு மாத காலப்பகுதியில் மாத்திரம் 10 பில்லியன் ரூபா நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் தினசரி செலவீனம், அரச ஊழியர்களின் சம்பளம் உட்பட பல்வேறுபட்ட கொடுப்பனவுகள் என்பவற்றுக்காக இவ்வாறு பணம் அச்சிடப்பட்டுள்ளதாகவும்
 கூறப்படுகின்றது.
அமெரிக்க டொலர் 160 ரூபாவை விடவும் அதிகரிக்க பிரதான காரணம் அரசாங்கத்தின் இந்த பணம் அச்சிடும் நடவடிக்கை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் டொலரின் பெறுமானம் இன்னும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அடுத்து வரும் நாட்களில் சர்வதேச நாணய நிதியம் அரசுக்கு வழங்கவுள்ள அடுத்த கட்ட கடன் உதவி மற்றும் ஹம்பாந்தோட்ட துறைமுக குத்தகையின் மீதிப் பணம் என்பவற்றை வழங்கவுள்ளது. இதனால், குறுகிய காலப்பகுதிக்கு இந்த பண வீக்கம் கட்டுப்படுத்தப்படலாம் எனவும் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பணம் அச்சிடுவது தொடர்பில் இதுவரை பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படாதுள்ளதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்த விவகாரங்களை பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டியதில்லையெனவும் 
குறிப்பிடப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் கடந்த இரு மாதத்தில்10 பில்லியன் ரூபா பணம் அச்

நாட்டில் மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

திங்கள், 23 ஏப்ரல், 2018

வலய மட்டத்தில் ஆசிரியர் குழாமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சேவையில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருடாந்தம் குழந்தை பிரசவம் உள்ளிட்ட வேறு பல காரணங்களுக்காக விடுமுறைகளை பெற்றுக்கொள்ளும் போது , 
அக்காலப்பகுதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
அதேபோல் , எதிர்வரும் காலத்தில் பாடசாலை சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சர் சீட்டின் பெறுமதியை அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் மாணவர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

மோட்டார் சைக்கிளை தண்ணீரின் மேல் மோட்டார் செலுத்தி சாதனை

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

நீரின் மேல் மோட்டார் சைக்கிளை செலுத்தி இத்தாலியின் மோட்டர் சைக்கிள் வீரரான லுகா கொழும்பு (Luca Colombo) சாதனை நிகழ்த்தியுள்ளார்.நீரில் நீந்த பயன்படுத்தப்படும் உபகரணத்தை மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொருத்தி இத்தாலியிலுள்ள 3 ஆவது பெரிய
 குளமொன்றில் நீரின் மீது மோட்டார்  சைக்கிளை செலுத்தி சாதனை படைத்ததோடு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கொழும்பு.இத்தாலியில் பெரும்பாலும்
 பயன்படுத்தப்படும் சுசுகி ரக மோட்டார் சைக்கிளையே நீரின் மீது செலுத்தியுள்ள கொழும்பு, 5 நிமிடங்களில் மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் 40 கடல் மைல்தூரத்தில் மோட்டார் சைக்கிளை நீரின் மீது செலுத்தி சாதனைபடைத்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - மோட்டார் சைக்கிளை தண்ணீரின் மேல் மோட்டார் செலுத்தி சாதனை

கேப்பாபுலவில் திடீரென பற்றி எரிந்த காடுகள்!! முல்லையில் பரபரப்பு!!

முல்லைத்தீவில் காடுகள் திடீரெனப் பற்றி எரிந்தமையால் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.முல்லைத்தீவு, கேப்பாபுலவு காட்டுப் பகுதியில் சுமார் 40 ஏக்கர் பகுதி தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளது.இந்த அனர்த்தம் நேற்று மாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டதா அல்லது இயற்கையாக ஏற்பட்டதா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.காட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை விடுதலைப் புலிகளின் கோட்டையாக முல்லைத்தீவு காடு காணப்படுகிறது.அந்த காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் சில குழுவினர் இன்னும் மறைந்திருக்கலாம் என இராணுவத்தினர் அச்சம் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த காலங்களில் முல்லைத்தீவு காட்டினை அழிக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> 



READ MORE - கேப்பாபுலவில் திடீரென பற்றி எரிந்த காடுகள்!! முல்லையில் பரபரப்பு!!

பேருவளை வெளிச்சவீட்டை பார்க்கச் சென்ற அண்ணன் தங்கைக்கு பலி

பேருவளை கலங்கரை விளக்கத்தினை பார்க்க சென்ற ஒரே குடும்பத்தினை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோர்21.04-2018. இன்று காலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.27 வயதுடைய இளைஞரும் 
24 வயதுடைய அவரது தங்கையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் தற்போது களுத்துறை – நாகொடை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பேருவளை வெளிச்சவீட்டை பார்க்கச் சென்ற அண்ணன் தங்கைக்கு பலி

வரட்சியால் வடக்கில் அதிகமானோர் பாதிப்பு

சனி, 21 ஏப்ரல், 2018

வறட்சி காரணமாக வடக்கில்  அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமை மையம் தெரிவித்துள்ளது.
மன்னாரில் 29ஆயிரத்து 276 குடும்பங்கள்ச் சேர்ந்த ஒரு லட்சத்து ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் 5 ஆயிரத்து 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளர். 
கிளிநொச்சி மாவட்டத்தில் 33 ஆயிரத்து 624 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 10ஆயிரத்து 195 பேரும், முல்லைத்தீவில் 10 ஆயிரத்து 5 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். என அனர்த்த முகாமைத்துவ மையம்
 தெரிவித்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - வரட்சியால் வடக்கில் அதிகமானோர் பாதிப்பு

தொடர் பாரிய வீழ்ச்சி இலங்கை ரூபாவின் பெறுமதியில்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் வெளியிட்டுள்ள நாணயமாற்று அறிக்கைக்கு அமைய புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளன.அதற்கமைய நேற்றைய 
தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 158.12 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 154.34 ரூபாவாக பதிவாகியுள்ளதென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் ரூபாவின் பெறுமதி 2 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.அதே காலப்பகுதியில்
 யூரோவின் பெறுமதி 4.8 வீதத்திலும், ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி 4.8 வீதத்திலும், ஜப்பான் யென் ஒன்றின் பெறுமதி 7.1 வீதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக, மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - தொடர் பாரிய வீழ்ச்சி இலங்கை ரூபாவின் பெறுமதியில்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஆப்பு வருகிறது விரைவில் தடை

இலங்கையில் பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
.முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு மேல் இருக்கு வேண்டும் என கட்டாயக்கப்படவுள்ளதாகவும். விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்காக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
சாரதியின் வயது 35ஆக காணப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்த வருட இறுதிக்கு முன்னர் கட்டாயப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு அவசியமான நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். நல்லொழுக்கமுடைய சாரதிகளை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என அவர் மேலும்
 குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஆப்பு வருகிறது விரைவில் தடை

இலங்கை வங்கி ஏ.ரி.எம் வலைப்பின்னலில் நிகழ்ந்த அதிசயம்!!

கடந்த புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் இலங்கை வங்கியின் தன்னியக்க பண பரிமாற்றல் மற்றும் காசு வரவு வைத்தல் கருவிகள் மூலம் மிகப்பெரிய கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி, நாடெங்கிலுமுள்ள ஏ.ரி.எம் நிலையங்களிலிருந்து ஐயாயிரத்து 400 கோடி ரூபா பெறுமதியான கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக 
கூறப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் வங்கியின் ஏரிஎம், சிடிஎம் வலைப்பின்னல்களில் 930 இற்கு மேற்பட்ட கருவிகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ள அதே நேரம், இவற்றின் ஊடாக இந்தளவு பெருந்தொகை பணம் பரிமாறப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என இலங்கை வங்கி 
அறிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இலங்கை வங்கி ஏ.ரி.எம் வலைப்பின்னலில் நிகழ்ந்த அதிசயம்!!

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டி விபத்து ;

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

;அதி வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. 
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் உட்பட சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த
 இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காணப்படுவதுடன் இவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
வவுனியா போக்குவரத்து பொலிஸார் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
READ MORE - வவுனியாவில் மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டி விபத்து ;

தனக்­குத் தானே தீயிட்டு 7 பிள்­ளை­க­ளின் தாய் யாழில் பலி

நீண்­ட­கா­ல­மாக மன அழுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த 7 பிள்­ளை­க­ளின் தாய் தனக்­குத் தானே தீயிட்டு, எரி காயங்­க­ளு­டன் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு, நேற்று முன்­தி­னம் உயி­ரி­ழந்­துள்ளார்.
அல்­லைப்­பிட்டி முத­லாம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த சோதி­லிங்­கம் சாந்­த­கு­மாரி வயது 57 என்­ப­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளார்.
இவ­ரது உயி­ரி­ழப்பு தொடர்­பில் விசா­ரணை நடத்­திய திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிரே­ம­கு­மார் கூறுகையில்,
பல ஆண்­டு­க­ளாக மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்த சாந்­த­கு­மாரி அடிக்­கடி தான் சாகப் போவ­தாக குடும்­பத்­தி­ன­ருக்­குத் தெரி­வித்­துள்­ளார். ஒரு முறை இவர் தவ­றான முடி­வெ­டுத்து உயிர்­து­றக்க முற்­பட்ட நிலை­யில் 
காப்­பாற்­றப்­பட்­டார்.
நேற்று முன்­தி­னம் இரவு 12 மணி­ய­வில் தனக்­குத் தானே மண்­ணெண்ணை ஊற்­றித் தீ மூட்­டிக் கொண்­டார்.
சத்­தம் கேட்டு அறைக்­குள் நுழைந்த குடும்­பத்­தி­னர் அவரை மீட்டு யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்­தி­னம் அவர்
 உயி­ரி­ழந்­துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - தனக்­குத் தானே தீயிட்டு 7 பிள்­ளை­க­ளின் தாய் யாழில் பலி

நாட்டில் மேலதிக வகுப்புகளுக்கு கட்டாயபடுத்தும் ஆசிரியர்களுக்கு நடவடிக்கை

வியாழன், 19 ஏப்ரல், 2018

<
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், மேலதிக வகுப்புகளுக்கு கட்டாயம் வருமாறு வற்புறுத்தி பாடசாலை மாணவர்களுக்கும், பெற்றோர்கும் அழுத்தம் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  
கல்வியமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டே போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசேடமாக தரம் 5 மாணவர்களை இலக்காக கொண்டு நடத்தப்படுகின்ற மேலதிக வகுப்புகளுக்கு பிள்ளைகளை இணைத்துக்கொள்வதற்காக சில ஆசிரியர்கள் அழுத்தம் கொடுப்பது தொடர்பில் சில பெற்றோர் தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் முறையிட்டுள்ளதாக 
கூறியுள்ளார்
இந்த நிலமையை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சில ஆசிரியர்களால் நடத்தப்படுகின்ற மேலதிக வகுப்புக்களுக்கு சமூகமளிக்காத மாணவர்களுக்கு, பாடசாலையில் வைத்துக் அந்த ஆசிரியர்கள் பலவிதமான துன்புறுத்தல்கள் மேற்கொள்வது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - நாட்டில் மேலதிக வகுப்புகளுக்கு கட்டாயபடுத்தும் ஆசிரியர்களுக்கு நடவடிக்கை

காரைதீவில் உழவு இயந்திரம் மதிலுடன் மோதி விபத்து- சாரதி மரணம்

மாடுகளுக்கு வைக்கோல் ஏற்றுவதற்காக காரைதீவில் இருந்து இன்று(24-03-2018) காலை உழவு இயந்திரத்தினை ஓட்டிச்சென்றவா் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் மதகு ஒன்றின் கீழ் வீழ்ந்து
 உயிரிழந்துள்ளாா்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான விஸ்வலிங்கம் யோகேஸ்வரன் என்ற 51 வயதுடைய உழவு இயந்திர சாரதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது….
காரைதீவு வடிவேல் வீதியில் வசித்து வரும் இவர் ஒரு விவசாயியாக இருந்து கொண்டு 40க்கும் மேற்பட்ட எருமைமாடுகள் வைத்திருப்பதாகவும், அதற்காக வேண்டி வைக்கோல் ஏற்றுவதற்கே தனது வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டதாகவும் உறவினா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில் அட்டப்பள்ளம் பெரிய பால வீதிக்கு அண்மையில் உள்ள கோழியன்காட்டு வட்டைக்குச்செல்லும் வீதியில் உள்ள மதிலை முட்டி மோதிய பின்னரே மதகு ஒன்றின் கீழே உழவு இயந்திரம் தலைகீழாக குடைசாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
மரணமடைந்தவருடைய உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை வைத்தியசாலை பிரேத அறையில்
 வைக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - காரைதீவில் உழவு இயந்திரம் மதிலுடன் மோதி விபத்து- சாரதி மரணம்

தெரிந்த உண்மைகளும்…தெரியாத சங்கதிகளும் காலி கடலில்

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

அண்மையில் காலி கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சிலை தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி உள்ளன.காலி கோட்டைக்கு அருகிலுள்ள கடற்கரையில் இருந்து
 சுமார் 150 அடி தூரத்தில் தெளிவான கடலில் 5 அடி ஆழத்தில் சிலை கிடைத்துள்ளது.எப்படியிருப்பினும் இந்த 
சிலை தொடர்பில் மேலும் பல சர்ச்சைக்குரிய தகவல்கள் இணையத்தளங்களில் வெளியாகி வருகின்றன..
இதற்கு முன்னர் காலி கோட்டைக்கு அருகில் இருந்த சிலரால் இந்த சிலை தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் 
தகவல்கள் பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்டிருந்தன.அதற்கமைய குறித்த சிலை, காலி கோட்டை பிரதேசத்தில் கலை தொழிலில் ஈடுபடுகின்ற நபர் ஒருவரினால் வர்த்தக நோக்கத்தில் 
கடலில் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்தச் சிலை புராதன சொத்தாக இருக்க முடியாதென வரலாறு மற்றும் தொல்பொருள் பேராசிரியர் டீ.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.
அது தேவி சிலையாக அடையாளப்படுத்தக் கூடிய போதிலும், அதன் தலை, முகம் மற்றும் நெற்றி பகுதி மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதனால் அதனை வழிப்பாடு பொருளாக எடுத்து கொள்ள முடியாதென அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கண்காட்சி பொருளாகவும், அவ்வாறான சிலைகள் நிர்மாணிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில், அங்கிருந்த இளைஞர் பேஸ்புக்கில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், காலி கோட்டை பகுதியில் நான் செல்லாத
 இடம் ஒன்று இல்லை. அந்த சிலை பல மாதங்களாக அங்கிருந்தது. அந்த சிலையை கலை வரைபடங்கள் விற்பனை செய்யும் ஒருவரே அவ்விடத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

அந்த சிலையை நான் கண்டவுடன் அதனை அங்கு கொண்டு சென்றது யார் என கோபப்பட்டேன். அது மாத்திரமல்ல மக்கள் இதனால் ஏமாற்றப்படலாம் என நான் அதனை கொண்டுவந்தவரிடம் கூறினேன். எனினும், அதனை அவர் கண்டுக்கொள்ளவில்லை. பவளப் பாறைக்குள் சிலையை வைத்து அதனை பழையது போன்று காட்டுவதற்கும் வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்வதும் அவரது நோக்கமாக இருந்திருக்கலாம்.

இந்தச் சிலையை நான் முதலில் பார்த்த போது எடுத்த புகைப்படங்களை எனது பேஸ்புக் பக்கத்தில் பார்த்து கொள்ளக் முடியும். உரிமையாளர் கூறியதற்கமைய, இது சீமெந்தில் செய்த ஒன்றாகும்.

உரிமையாளர் எனது நண்பராக இருந்த போதிலும், சிலையின் முழுமையான நிர்மாணிப்பது குறித்து எனக்கு விழிப்புணர்வு இல்லை. எப்படியிருப்பினும் இது கப்பலில் இருந்து விழுவும் இல்லை, கடவுள் போடவும் இல்லை… என குறிப்பிடப்பட்டிருந்தது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - தெரிந்த உண்மைகளும்…தெரியாத சங்கதிகளும் காலி கடலில்

யாழ் சுன்னாகத்தில் கோர விபத்து!! குடும்பஸ்தர் பலி!!

திங்கள், 16 ஏப்ரல், 2018

யாழ். சுன்னாகத்தில் பட்டா ரக வாகனம் மோட்டார்ச் சைக்கிளை மோதித் தள்ளியதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் ஜெட்மோட்டர்ஸ் பகுதியில் நேற்று (15.04.2018) இரவு-08 மணியளவில்
 சுன்னாகத்திலிருந்து மல்லாகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம், சுன்னாகம் பகுதி நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார்ச் சைக்கிளுடன் மோதியதில் குறித்த 
குடும்பஸ்தர் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றிக் குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
குறித்த குடும்பஸ்தரின் உயிரிழப்புக்கு காரணமான பட்டா வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - யாழ் சுன்னாகத்தில் கோர விபத்து!! குடும்பஸ்தர் பலி!!

கொடூரமான தந்தையின் தாக்குதலில் சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்


மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 12 வயது பாட­சாலை மாண­வன், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப்
 பொலி­ஸார்
 தெரி­வித்­த­னர்.கோ.இசைப்­பி­ரி­யன் என்ற 12 வய­துச் சிறு­வ­னவே வைத்­தி­ய­சா­லை­யில் இவ்­வாறு சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.இது தொடர்­பில் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­தா­வது; சிறு­வன் கடந்த சில 
நாள்­க­ளாக வீட்­டிற்கு வரா­மல் உற­வி­னர் வீட்­டில் தங்கி இருந்­த­தா­க­வும் நேற்­றுக் காலை வீட்­டிற்கு வந்த சிறு­வனை அவ­ரது தந்தை தாக்­கி­யுள்­ளார். தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த சிறு­வனை தாய் உட­ன­டி­யாக மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று
 சேர்ப்­பித்­துள்­ளார்.
அங்­கி­ருந்து உட­ன­டி­யாக நோயா­ளர் காவு வண்டி மூலம் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சிறு­வன் நேற்று மாலை சேர்க்­கப்­பட்­டதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.சிறு­வ­னின்
 இரு கால்­க­ளும் முறிந்த நிலை­யில், கை,
 முகம், முதுகு, பகு­தி­க­ளில் பலத்த காயங்­கள் காணப்­ப­டு­வ­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. சிறு­வ­னின் தந்தை தனது மக­ளுக்கு அடித்த குற்­றச்­சாட்­டில் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­வர் என்­றும் பொலி­ஸார் தெரிவித்துள்ளனர் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கொடூரமான தந்தையின் தாக்குதலில் சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

சூரியன் உச்சத்திற்கு வருவதால் யாழில் ஏற்படவிருக்கும் மாற்றம்

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

 வடக்கு நோக்கிய சூரியனின்  தொடர்பான இயக்கம் காரணமாக ஏப்ரல் 05 முதல் 15 ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது.
இதன்படி இன்று நண்பகல் 12.10 அளவில் வட்டுக்கோட்டை, சுன்னாகம் மற்றும் அந்தணன்திடல் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சத்தில் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது பிற்பகல்வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை 
அறிவுறுத்தியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - சூரியன் உச்சத்திற்கு வருவதால் யாழில் ஏற்படவிருக்கும் மாற்றம்

புதிய நடைமுறை! போக்குவரத்து துறையில் இலங்கை மக்களுக்கு

இலங்கையில் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் அமுலிலுள்ள பணத்திற்கு பதிலாக ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.இலங்கை 
போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, தனியார் பேருந்து மற்றும் ரயிலில் பயணிக்க கூடிய பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை ஒன்றை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
டச் கார்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் அட்டையை கொள்வனவு செய்யும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும், ர
யிலிலும் பயணிக்க முடியும்.
இந்த அட்டை பயணிகள் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கும் போது, அட்டையில் அதற்கான கட்டணம் குறைத்து கொள்ளப்படும்.
இந்த ட்ச் அட்டை பயன்படுத்துவதனால் மீதி பணம் கிடைக்காமை போன்ற சிரமங்களை தவிர்க்க முடியும் எனக்
 குறிப்பிடப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - புதிய நடைமுறை! போக்குவரத்து துறையில் இலங்கை மக்களுக்கு

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித் இலங்கையர்கள் கைது

ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில்   செல்ல முயற்சித்த    ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசர்பஜானில் நாட்டில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளன.
அசர்பஜானின் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் குடியேற்ற சேவைகள் பிரிவு என்பன இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைதாகியுள்ளனர்.
அவர்கள் அசர்பஜானில் இருந்து ஈரான் - துருக்கி வழியாக, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்துள்ளமை தெளிவாகி இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர், மேலும் சில வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கடந்த 8ம் திகதியும் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் அசர்பஜானில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சின்னையாப்பிள்ளை டடீஸ், சின்னையாப்பிள்ளை ஜகதீசன் மற்றும் ஜீவதாசன் அசுயூமி ஆகிய மூன்று பேரும் ஒரு குழந்தையும் இவ்வாறு கைது செய்யப்பட்டவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களும் ஐரோப்பிய நாடுகள் நோக்கிய பயணத்தின் போதே கைதாகியுள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித் இலங்கையர்கள் கைது

நாட்டில் அடுத்த சில நாட்களில் பல மாகாணங்களில் கடும் மழை

புதன், 11 ஏப்ரல், 2018

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு பிற்பகல் வேளையில் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
கிழக்கு, ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளைகளில்
 மழை பெய்யக்கூடும்.மேற்கு, வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும்; காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது 
ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணம் வரையிலான கடற்கரையோரப்பிரதேசங்களில்
 மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.அத்துடன்  பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் 
தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் அடுத்த சில நாட்களில் பல மாகாணங்களில் கடும் மழை

கட்டண அறவீட்டு மீட்டர் முச்சக்கர வண்டிகளுக்கு பொருத்துவது கட்டாயம்

இம்மாத இறுதியில் இருந்து முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய 
சபை கூறியுள்ளது.
குறித்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் முச்சக்கர வண்டி சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 01ம் திகதி முதல்  கட்டண மீட்டர் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மேலும் இரண்டு வார காலம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - கட்டண அறவீட்டு மீட்டர் முச்சக்கர வண்டிகளுக்கு பொருத்துவது கட்டாயம்

அத்தியாவசிய பொருட்களின் விலை புத்தாண்டை முன்னிட்டு குறைப்பு

திங்கள், 9 ஏப்ரல், 2018

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக4
 தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - அத்தியாவசிய பொருட்களின் விலை புத்தாண்டை முன்னிட்டு குறைப்பு