மாணவி எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததால் தற்கொலை

சனி, 31 மார்ச், 2018

மாணவி ஒருவர் இன்று (29) காலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியது.
இந்த நிலையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த மாணவி இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்து அம்மம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.
எதிர்பார்ப்புடன் கல்வி கற்று பரீட்சை எழுதிய போதும் 4 பாடங்களில் மாத்திரமே சித்தியடைந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
முல்லைத்தீவு வள்ளிபுனம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று பரீட்சை எழுதிய கைவேலி மருதமடு குழ வீதியை சேர்ந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவியே இவ்வாறு தனது உயிரை
 மாய்த்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - மாணவி எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததால் தற்கொலை

ஆலய கும்பாபிஷேகத்தில் வவுனியாவில் நடந்த அதிசயம்!

வவுனியா செட்டிக்குளத்திலுள்ள விநாயக ஆலய கும்பாபிஷேகத்தின் போது அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியிலுள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று
 நடைபெறுகிறது.
இன்றைய பூஜையின் போது ஆலயத்தில் வைக்கப்பட்ட நாகபூஷணி அம்மனுக்கு தீப ஆராதனை செய்யப்பட்டது.
இதன் போது திடீரென அங்கு நாகபாம்பு ஒன்று தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்மனின் திருவுருத்தில் ஏறிய நாக பாம்பு பக்தர்களுக்கு காட்சி கொடுத்துள்ளது. 
தீப ஆராதனை முடியும் வரையில் அங்கேயே இருந்துள்ளது. ஆராதனை முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டுச்
 சென்றுள்ளது.
இந்த அதிசய சம்பவத்தை காண பெருந்தொகை பக்தர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - ஆலய கும்பாபிஷேகத்தில் வவுனியாவில் நடந்த அதிசயம்!

இரட்டைப் படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் மீது கத்திக்குத்து

திங்கள், 26 மார்ச், 2018

மட்டக்களப்பு - ஏறாவூர் தாய் மகள் இரட்டைப் படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்கே நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான 56 வயதுடைய நூர்முஹம்மது உஸைரா மற்றும் அவரது திருமணமாகிய மகளான 32 வலயதுடைய ஜெனீராபானு மாஹிர் 
ஆகியோர் 2016 ஆம் ஆண்டு  செப்டெம்பர் மாதம்11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த 2016 ஆண்டு செப்டெம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஒரு வருடம் நீடிக்கப்பட்டு வந்த விளக்கமறியல் உத்தரவின் பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இவ்வருடம் 2018 பெப்ரவரி மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டிந்த ஏறாவூர், அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த 29 வயதுடைய உஸனார் முஹம்மது தில்ஷாத் என்பவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் முதுகுப்புறத்தில் மூன்று தடவைகள் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களே கத்திக்குத்தை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - இரட்டைப் படுகொலை சம்பவத்தின் சந்தேக நபர் ஒருவர் மீது கத்திக்குத்து

நாட்டில் தனியார் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாது -

இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்தாலும்,தற்போதைக்கு பேரூந்து
 கட்டணம் அதிகரிக்கப்படாது என  இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின்  தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - நாட்டில் தனியார் பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாது -

இராணுவ வாகனம் மோதி சாவகச்சேரியில் இளைஞன் பலி

சாவகச்சேரி ஏ9 வீதி புளியடி சந்தியில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என தெரியவந்துள்ளது

இந்த சம்பவம் இன்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சற்று பதற்ற நிலை நிலவுவதாகவும்  
தெரியவருகின்றது. 
விபத்தில் வெள்ளாம் போக்கட்டி கொடிகாமத்தை சேர்ந்த சிவயோகலிங்கம் மயூரன்(வயது 27) என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இராணுவ வாகனத்தின் சாரதியின் 
அவதானமின்மையாலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கார் ஒன்றை மறித்துள்ளனர். இதன்போது, கார் சடுதியாக தனது பாதையில் நிறுத்தப்பட, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் காரினை விலக்கி செல்ல முற்பட்டுள்ளார்.
இந்நிலையில், பின்னால் வந்த இராணுவ பஸ் மோதி இளைஞன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இதையடுத்து விபத்து இடம்பெற்ற இடத்தில் பெருந்திரளான மக்கள் கூடி சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது..

நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - இராணுவ வாகனம் மோதி சாவகச்சேரியில் இளைஞன் பலி

நாட்டில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு

சனி, 24 மார்ச், 2018

நள்ளிரவு  வெள்ளிக்கிழமை(23.03.2018) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது.அதன்படி ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தின் ஒரு லீற்றர் டீசலின் விலை ஐந்து(05) ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஒன்பது(9) ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மஹிந்த ஆட்சியின் போது  ஒரு லீற்றல்  டீசலின் விலை 120 ரூபாவாகவும்,  ஒரு லீற்றல் பெற்றோலின் விலை 164 ரூபாவாகவும் காணப்பட்டது. எனவே நல்லாட்சி அரசின் புதிய விலைகளுக்கு அமைய ஒரு லீற்றல் பெற்றோலின் விலை 126 ரூபாவாகவும், ஒரு லீற்றல் டீசலின் விலை 100 ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு

சாலை ரீவியில் எஸ்.ரி.எஸ் தமிழ் ரீவி இணைக்கப ட்டுள்ளது

புதன், 21 மார்ச், 2018

சாலை ரிவியில் எஸ்.ரி.எஸ் தமிழ்தன்னை இணைத்துக்கொண்டதையிட்டு எஸ்.ரி.எஸ் தமிழ் நிர்வாகத்தினர் மிக மகிழ்வுகொள்கின்றனர்
27.03:2017 லில் இருந்து யூரூப் மூலமும் எஸ்.ரி.எஸ் தமிழ் இணைய மூலமும் ஒளிபரப்பாக்கி
இன்று சாலை ரீவியில்தன் முகம்காட்டும் எஸ்.ரி.எஸ் தமிழ் வரும் 27.03.2018 ஓராண்டைநிறைவுகாண இருக்கின்றது
இதன் நோக்கு எம்மவருக்கான தனிக்களம் இதன் செயல்பாட்டைக்கண்டு மூத்த ஊடகவியலாளர்கள் பலர் பாராட்டுக்கள்
 கூறியுள்ளனர்
இதன் செயல் கண்டு பலர்வாழ்த்துக்கள் கூறியுள்ளனர் ஈழத்தில் இருந்து பல்துறைக்கலைஞர்கள் வாழ்துக்கூறியதுமட்டுமல்ல இதன் பணியோடு தாங்களும் பயணிக்க உள்ளதாக 
கூறியருக்கின்றார்கள் அதில் குமாரு யோகேஸ் அவர்கள்முதன்மை ஆவார் மீண்டும் சாலை ரீவி ஆதரவுக்கரம் நீட்டலுக்காய் எஸ்.ரி.எஸ் 
தமிழின் நன்றிகள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - சாலை ரீவியில் எஸ்.ரி.எஸ் தமிழ் ரீவி இணைக்கப ட்டுள்ளது

அரியாலையில் ரயிலில் மோதுண்டு முதியவர் மரணம்!!

திங்கள், 19 மார்ச், 2018

யாழ்ப்பாணம் – அரியாலை – முள்ளிப் பிரதேசத்தில் தொடருந்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதுண்டே இவர் உயிழந்தார் 
எனத் தெரிவிக்கப்பட்டது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





READ MORE - அரியாலையில் ரயிலில் மோதுண்டு முதியவர் மரணம்!!

தர்மகேணி பகுதியில் இராணுவவாகனம் மோதி கோர விபத்து

பளையில் 18.03.2018. (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மகேணி பகுதியில் இராணுவத்தின் பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து
 நேர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் பளை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக
 யாழ். போதனா வைத்தியசாலைக்கு 
அனுப்பப்பட்டார்.ஒரு
 பிள்ளையின் தந்தையான குணசீலன் ஜெசிந்தன் (29 வயது) என்பரே உயிரிழந்தவர் என்பதுடன் தர்மகுலசிங்கம் தர்மகுமார் (27 வயது) என்பவரேபடுகாயமடைந்தவராவார்.இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - தர்மகேணி பகுதியில் இராணுவவாகனம் மோதி கோர விபத்து

இரு மாணவ ஜோடிகள் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயச்சி

யாழ் வலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன் காரணமாக இரு சோடிகள் கூடிப்பேசி நேற்றைய தினம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் வலி. வடக்குப் பகுதியில் உள்ள ஓர் பாடசாலையில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் கொண்ட காதல் தொடர்பினால் ஏற்பட்ட இடையூறுகளினால் பாடசாலையில் இரு சோடிகளும் ஒரே நாளில் தற்கொலைக்கு முடிவெடுத்துள்ளனர்.
இதன் பிரகாரம் நால்வலும் கூடிப்பேசி ஒருவகை மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை புரிய முடிவு எட்டிய
 சமயம் ஒருவர் அதில் இருந்து விலகிச் சென்ற நிலையில் மூவரும் மாத்திரைகளை உட்கொண்டுள்ளனர். 
நேற்றுக் காலை 11 மணியை தாண்டியவேளையில் இடம்பெற்ற இச் சம்பவத்தினையடுத்து சிறிது நேரத்தில் மயக்கமுற்று வீழ்ந்துள்ளனர்.
இவ்வாறு மயக்கமுற்ற பாடசாலை 
மாணவர்களை உடனடியாக ஆசிரியர்களின் முயற்சியினால் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசா்ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





READ MORE - இரு மாணவ ஜோடிகள் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயச்சி

மகள் தனது திருமணத்திற்கு பின் தாயிற்கு எழுதிய கடிதம்

ஞாயிறு, 18 மார்ச், 2018

நானும் எல்லா பெண்களை போலவே நான் தெரிந்துகொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்புதான் தெரிந்தது உங்கள் கண்ணீருக்கு அர்த்தங்கள் என்னவென்று.
எத்தனை பொறுப்புகள் !
எத்தனை சுமைகள் !
எத்தனை தியாகங்கள் !
எத்தனை ஏமாற்றங்கள் !
எத்தனை கடமைகள் என்று...
நான் உங்களிடம் இருக்கும் பொழுது என் சோம்பலையும் 
அழகாய் பார்த்தீர்கள்.
ஆனால் இங்கு, என் தூக்கத்தை தியாகம் செய்து நான் செய்யும் வேலைகளை கவனிக்கவும் யாருக்கும் நேரமில்லை.
எனக்கு பிடிக்காததையும், பிடித்ததை போலவே நடித்துக்கொண்டிருக்கிறேன்.
யாராவது என்னை குறை சொல்லிவிடுவார்களோ என்ற பயம் அவ்வப்போது வந்து செல்கிறது. பண்டிகை காலத்திலும், என் பிறந்த நாட்களிலும் நீங்கள் தேடி தேடி வாங்கி தந்த ஆடைகளை இங்கு நான் உடுத்த முடியாமல் காட்சி பொருளாய் கிடக்கிறது.
அவற்றை அனைத்துக்கொண்டே உங்களது பாசத்தினை சுமந்து 
வருகிறேன் அம்மா.
உங்களிடம் சண்டையிடும் பொழுது, நான் உரிமையோடு சத்தம் போட்டால் , என்னை திட்டுவதை விட்டுவிட்டு நீங்கள் அமைதியாய் செல்வீர்கள். ஆனால் இங்கு எனக்கு வலி ஏற்பட்டாலும் மௌனம் காக்கிறேன்.
சில நேரங்களில் உன்னிடம் இருந்த போதே நான் மகிழ்வாக இருந்தேனே! உன்னோடு வந்து விடலாமா என்று கூட தோன்றுகிறது. உன் மடியில் படுத்துக்கொள்ளவேண்டும் எனவும் தோன்றுகிறது.
எந்த கவலையும் இல்லாமல் உன் அரவணைப்பில் உன் கொஞ்சலில் உன் பாதுகாப்பில் இருந்திடக்கூடாதா என்று நினைக்கிறன்.
ஆனால் அடுத்த கணமே நீயும் என் வயதில் என்னை போலத்தானே உணர்ந்திருப்பாய். நீ உன் திருமணத்தில் செய்த தியாகம் தானே எனக்கு இந்த அழகிய நினைவுகளை கொடுத்திருக்கிறது.
நீ அன்று நான் நினைப்பது போல் நினைத்திருந்தால் நான் இன்று இருப்பேனா? நீ செய்த தியாகங்களையும் உழைப்பையும் எதிர்பாரா அன்பையும், நான் திருப்பி தர வேண்டாமா என்று நினைத்துக்கொள்கிறேன்.
அப்படி நினைக்கும் பொழுது வாழ்க்கையே எளிதாக தெரிகிறது. காலம் செல்ல செல்ல நீ உன் குடும்பத்தை நேசித்தது போல நானும் என் குடும்பத்தை நேசிக்க ஆரம்பித்துவிடுவேன்.
இனி நானும் நீ செய்த தியாகங்களை என் குடும்பத்திற்கு செய்ய தயாராகிவிடுவேன். ஆமாம் நீ எனக்கு கொடுத்ததை நானும் என் குடும்பத்திற்கு கொடுக்க தயாராகிவிட்டேன்.
நன்றிம்மா!!!
என்றும் அன்புடன் உன் ஆசை மகள்.....
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மகள் தனது திருமணத்திற்கு பின் தாயிற்கு எழுதிய கடிதம்

நாட்டில் ரயில் கட்டணம் ஏப்ரல் மாதத்தில் இருந்து அதிகரிக்கும்

சனி, 17 மார்ச், 2018

பல்வேறுபட்ட விடயங்களை கருத்தில் கொண்டு ரயில் பயணிகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் 15 வீதத்தில் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் இம்மாத இறுதிக்குள் இக்கட்டண அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மக்களுக்கு வெளியிடப்படும் எனவும்  ரயில்வே திணைக்களம் கருத்துத்தெரிவித்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் ரயில் கட்டணம் ஏப்ரல் மாதத்தில் இருந்து அதிகரிக்கும்

நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

புதன், 14 மார்ச், 2018

இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க இலங்கை ஆட்பதிவு திiணைக்களம் திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை
 மேற்கொள்ளப்பட்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

சமூக ளங்களில் வைபருதடை நள்ளிரவு முதல் நீக்கம்

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக ளங்களில் வைபருக்கு (Viber) விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (13) நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது. 
எனினும் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும் நாட்களில் நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகப்புத்தகம், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - சமூக ளங்களில் வைபருதடை நள்ளிரவு முதல் நீக்கம்

நாட்டில் பொலித்தீன் பாவனை தொடர்பில் விசேட சோதனை

திங்கள், 12 மார்ச், 2018

இலங்கையில்      தடை செய்யப்பட்ட பொலித்தீன் வகைகளின் பாவனையை தடுத்து நிறுத்தும் திட்டம் மும்முரமாக முன்னெடுக்கப்படுகிறது.
மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களை ஒன்றிணைந்து சுற்றாடல் பொலிஸ் பிரிவின் பங்களிப்புடன் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகார சபை அறிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் தடை நடைமுறையில் உள்ளது.
இதன்கீழ் சில வகை பொலத்தீன்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு போன்றவை தடை செய்யப்பட்டிருந்தன. இந்தத் தடை முறையாக அமுலாகிறதா என்பதை கண்டறிவதற்காக நாடு முழுவதிலும் விசேட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - நாட்டில் பொலித்தீன் பாவனை தொடர்பில் விசேட சோதனை

அரசாங்கம் கண்டி மாவட்ட மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

புதன், 7 மார்ச், 2018

* உன் பிறந்தநாள் இன்று, உனக்காய் பிறந்த  இந்த கவிதை, என் அன்பையும்,  என் வாழ்த்தையும் உன்னிடம்  கொண்டு சேர்க்கட்டும்.... * அம்மாவின் ஆண்பிள்ளைக் கனவுக்கும்,  அப்பாவின் தலைமுறை விருதுக்கும் வளம் தந்த, செல்ல மகன் நீ தானே.. தத்தி தத்தி நீ நடக்க  தங்க
 மயில் ஆடுதுன்னு, சொல்லிவச்ச அண்ணாவுக்கு இன்றும் சொக்கத் தங்கம் நீ தானே... * கொஞ்சிப் பேச ஒரு அக்காவும், சண்டை போட தங்கையும் சமாதானம் பண்ண குடும்பமுமாய், நாம் அடித்த
 கூத்துக்கள் நெஞ்சுக் கூட்டில்  நினைவுகாளாய் ஏராளம்... * நிலாச் சோறு ஊட்டிய நாளும், உன் கைபிடித்து உன்னை நான் பள்ளியனுப்பிய நாளும், அப்பா உனக்கு வாங்கித்தந்த  பொம்மைக்காருக்காய்
 உன்னிடம் சண்டை போட்ட  நாளும் என, அழகான நம் மழலைக் காலம் மனக்கண்ணில் ஓடுதடா....ஹேமா * காலங்கள் உருண்டோட, கனவுகளும் சேர்ந்தோட, காலத்தின் கோலத்தில்  பொறுப்புகளும் சேர்ந்தாட, நெருங்கியே இருந்த நம் அன்பு,  இன்று...இதுவரை
 உன் அருகில் இருந்து  வாழ்த்திய நான் வார்த்தையைத் தேடுகிறேன்... * வெயிலும், மழையும் உன்னை நெருங்காம பொத்திப் பொத்தி வளர்த்த நாட்கள், புழுதி நிறைந்த  புழுதி நிறைந்த மண்ணில் புதைத்திடத்தனோ...... * இங்கு பிடி சோறும் நீ இன்றி  உள்ளிறங்க
 மறுக்கிறது * இன்று உன் பிறந்த நாளில்,  கடவுள் உன்னை காத்திடவும், காலம் நம்மை கரைசேர்த்திடவும், உன் அக்கா வெறும் வார்த்தையிலே வாழ்த்துகின்றேன்.. ஏழுப்பிறப்பென்பதில், எனக்கு நம்பிக்கை இல்லை... அப்படி ஒன்று இருப்பின், என் ஏழுபிறவிக்கும்,
 அன்னையாக, தந்தையாக  தம்பியாக, தங்கையாக  ஹேமா நீ வேண்டும் என்று, இல்லாத கடவுளிடம்  மண்டியிட்டு 
வேண்டுகின்றேன்.... * உன் பிறந்தநாள் அன்று,  உனக்காய் பிறந்த  இந்த கவிதை, என் அன்பையும்,  என் வாழ்த்தையும் உன்னிடம்  கொண்டு சேர்க்கட்டும்.... இன்று உனக்காய் மலர்ந்த இந்த மலர்கள் உன்னிடம் சேர்க்கட்டும்........ வாழிய பல்லாண்டு. இந்த இணையங்களும் வாழ்த்துகின்றன 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - அரசாங்கம் கண்டி மாவட்ட மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நாளை மறுதினம் முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

வியாழன், 1 மார்ச், 2018

இலங்கையில் கடும் வறட்சிக்கு மத்தியில் நாளை மறுதினம் முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் அடை மழை பெய்யும் என அதன் இயக்குனர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும், இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஏனைய பிரதேசங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும்.
மின்னலினால் ஏற்படுகின்ற விபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்காள்ளுமாறு பொது மக்களிடம் திணைக்களம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.
இதேவேளை அம்பாறை - அக்கறைபற்று பிரதேசத்தின் ஊடாக நேற்று இரவு வீசிய கடும் காற்று காரணமாக அந்த பிரதேசத்தின் 25 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டில் நாளை மறுதினம் முதல் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்