வித்தியாசமான முறையில் யாழில் நடந்த மரண ஊர்வலம்!!

சனி, 30 டிசம்பர், 2017

யாழில் கடந்த காலங்களில் மரண ஊர்வலம் செல்லும்போது தேவாரம், திருமுறைகளைப் பாடிச் செல்லும் வழக்கம் இருந்தது.ஆனால், தற்போது அது வழக்கொழிந்து மரண ஓலம் கலந்த இசையை ஒலிபரப்பிச் செல்வதையே அனைவரும் பின்பற்றுகின்றனர். இந்த
 இசையால் பலரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.இந்நிலையில், வீட்டில் இருந்து மயானம் வரை சிவபுராணம் மற்றும் செந்தமிழ் திருமறைகள் ஒலிக்கச் இன்றைய மரண ஊர்வலம் இடம்பெற்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



                        
READ MORE - வித்தியாசமான முறையில் யாழில் நடந்த மரண ஊர்வலம்!!

விண்வெளித் துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சாதனை படைத மாணவன்!!

விண்வெளித்துறையில் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது கனவு. ஆனால் அத்துறையானது எமது நாட்டில் இல்லை.முதலில் இத்துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவ

 தேர்ச்சி பெற்று எனது இலக்கை ஒருநாள் அடைவேன் என, இயற்பியல் கணிதப்பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற வங்காலை புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலய மாணவன் டெனிசியஸ் ஜென் ரெம்சியஸ் பெர்னாண்டோ தெரிவித்தார்.குறித்த மாணவன் மேலும் தெரிவிக்கும் போது;நான் இந்நிலைக்கு முன்னேறக் காரணமாய் இருந்த 
ஆசிரியர்கள், அதிபர், நண்பர்கள், குறிப்பாக பெற்றோர் சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் விசேட விதமாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதமும் பெற்றோர்களின் ஆசீர்வாதமும் தான் என்னை
 இந்தநிலையை அடையவைத்தது.மன்னார் மாவட்டத்தில் இயற்பியல் கணிதப்பிரிவில் 2 ஏ.பி சித்தியை பெற்று மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுள்ளேன்.விண்வெளித்துறையில் சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது கனவு. ஆனால் அத்துறையானது 
எமது நாட்டில் இல்லை. முதலில் இத்துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சிறந்த நிபுணத்துவ தேர்ச்சி பெற்று எனது இலக்கை ஒருநாள் அடைவேன்.என அந்த மாணவன் மகிழ்ச்சி தெரிவித்தார்.இவர் வங்காலை 01 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு திருமதி டெனிசியஸ் ஆன் லக்சிக்கா தம்பதிகளின்
 புதல்வனாவார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - விண்வெளித் துறையில் இயற்பியல் கணிதப்பிரிவில் சாதனை படைத மாணவன்!!

திருகோணமலை பிரதான விதியில் மூவர் பலி, இருவர் படுகாயம்

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான விதியில் .(23.12.2017.சனிக்கிழமை    மாலை மூன்று இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்தனர்.
மாவடிவேம்பு , கோரகல்லிமடு மற்றும் ஆறுமுகத்தான்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் இவ்விபத்துக்கள் இடம்பெற்றதாக ஏறாவூர்ப் 
பொலிஸார் தெரிவித்தனர்.
மாவடி வேம்பு பிரதேசத்தில் துவிச்சக்கரவண்டியில் சவாரிசெய்த வயோதிபர் ஒருவர் பிரதான வீதியை குறுக்கிட்டபோது அதேதிசையில் வந்த வேன் மோதியதில் 68 வயதுடைய செல்வமணி சிவரெத்தினம் என்பவர் உயிரிழந்துள்ளார். அந்த வேன் சாரதி கைது
செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கோரகல்லிமடு பிரதேசத்தில் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பஸ் வண்டியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 24 வயதுடைய நாகராஜா கோகுலராஜ் என்ற இளைஞர் பலியானார். மற்றுமொருவர் காயமடைந்தார்.
இதற்கிடையே ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய காத்தான்குடியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்ஏ. முனிப் அகமட் என்பவரே மரணமடைந்தவராவார்.
பிரதான வீதியால் இருவர் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்குவந்த ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் மோதியதையடுத்து பிரதான வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் தூக்கிவீசப்பட்டுள்ளார். இவரை மற்றுமொரு வாகனம் இடித்துள்ளது.
இவ்விபத்துடன் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சாரதியுடன் லொறியும் பொலிஸாரினால் மீட்கப்பட்டபோதிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியவர்கள் தலைமறைவா
கியுள்ளனர்..
இச்சம்பவங்களில் மரணமடைந்தவர்களது மூன்று சடலங்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - திருகோணமலை பிரதான விதியில் மூவர் பலி, இருவர் படுகாயம்

அறு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபையைச் சேர்ந்த 6 பேர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய பணிப்பாளர் சபையை நியமிப்பதற்காக அவர்கள் இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை,ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஆணைக்குழுவொன்றே நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 
தெரிவித்துள்ளார்.
பிணை முறி விநியோக மோடி தொடர்பில் விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் இந்த ஆணைக்குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி 
குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆணைக்குழுவானது ஜனவரி முதல் வாரத்தில் நியமிக்கப்படும் என்றும் ஜனாதிபதி இன்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் ஆறு பேர் இராஜினாமா செய்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - அறு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிப்பாளர்கள் இராஜினாமா

மக்களே! இன்று பிற்பகல் 2மணிக்கு பின் காலநிலையில் ஏற்படும்

வெள்ளி, 22 டிசம்பர், 2017

இதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளிலும் இன்றைய தினம்பிற்பகல் 2 மணிக்கு பின்னர் தொடர்ந்து மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மொனராகலை மாத்தறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, காங்கேசன் துறையிலிருந்து புத்தளம் வழியாக
$, கொழும்பு வரையிலும், காலியிலிருந்து மாத்தறை வழியாக அம்பாந்தோட்டை வரையிலான
 கடற்பகுதியிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கால நிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - மக்களே! இன்று பிற்பகல் 2மணிக்கு பின் காலநிலையில் ஏற்படும்

நிதி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தை மக்கள் முற்றுகை

செவ்வாய், 19 டிசம்பர், 2017

வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள இலங்கை பண்ணை மற்றும் மீன்பிடி உற்பத்தி ஊக்குவிப்பாளர்  கம்பனி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இன்று  காலை 10.30 மணியளவில் குறித்த நிதி நிறுவனத்தின் அலுவலகத்தினை பாதிக்கப்பட்ட மக்கள் 
முற்றுகையிட்டனர்.
இந் நிதி நிறுவனத்தில் உறுப்பினர் ஆகுவதற்கு 1,000 ரூபா செலுத்துமாறும்,  1,000,000 ரூபாவிற்கு 1% வீத வட்டியடிப்படையில் பெற்றுக் கொள்ள வேண்டுமாகவிருந்தால் 100,000 ரூபா பணம் செலுத்த வேண்டுமெனவும், 500,000 ரூபா பணம் தேவைப்படின் 50,000 பணம் செலுத்த வேண்டுமென நிதி நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி பணத்தினை மக்கள் வைப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் மக்களுக்கு குறித்த தனியார் நிதி நிறுவனத்தினால் காசோலை வழங்கப்பட்டுள்ளது.
அந்த காசோலையினை வைப்பிட சென்ற சமயம் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இன்று பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் குறித்த தனியார் நிதி நிறுவனத்தினை முற்றுகையிட்டனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் பாதிக்கப்பட்ட மக்களுடனும், நிதி நிறுவன ஊழியர்களுடனும் கலந்துரையாடினர்.
பாதிக்கப்பட்ட மக்களிடம் முறைப்பாட்டினை பெற்றுக் கொண்ட பொலிஸார். நிதி நிறுவனத்தின் முகாமையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தெரிவித்தனர்.
ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய தீர்வு கிடைக்கும் வரை நிதி நிறுவனத்தினை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்து நிதி நிறுவன அலுவலகத்தினுள் முற்றுகையிட்டு 
உள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - நிதி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தை மக்கள் முற்றுகை

அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சலால் 9பேர் உயி­ரி­ழந்­தனர்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கடந்த 20 நாள்­க­ளுக்­குள் அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சல் கார­ண­மாக 9பேர் உயி­ரி­ழந்­தனர்.
திடீர் உயி­ரி­ழப்­புத் தொடர்­பில் கொழும்பு அர­சின் மருத்­து­வக் குழு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆய்­வில் ஈடு­பட்­டுள்­ளது.
முல்­லைத்­தீவு நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­களே இந்­தக் காய்ச்­சல் கார­ண­மாக உயி­ரி­ழந்­தனர். தொடர்ச்­சி­யான காய்ச்­ச­லின் பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட 9 பேரும் உயி­ரி­ழந்­த­னர் என்று 
தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தின் கவ­னத்­துக்குக் கொண்டு செல்­லப்­பட்­டது. கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவு மற்­றும் ஆய்­வ­கத்­தின் கவ­னத்­துக்கு அதனை சுகா­தா­ரத் திணைக்­க­ளம் 
கொண்டு சென்­றது.
இத­னை­ய­டுத்தே முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. அத்­து­டன் தடுப்பு நட­வ­டிக்­கை­யும் முன்­னெ­டுக் கப்­பட்டு
 வரு­கின்­றது.
இதே­வகை காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்ட இரு­வர் முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு 
மாற்­றப்­பட்­டுள்­ள­னர்.
இந்த விட­யம் தொடர்­பில் மாகாண சுகா­தா­ரப் பணிப்­பா­ளர் வைத்­தி­யக் கலா­நிதி ஆ.கேதீஸ்­வ­ரனை தொடர்பு கொண்டு கேட்­ட­போது, “இது தொடர்­பில் எமது கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டது.
எமது மருத்­து­வக் குழு முத­லில் ஆய்­வு­களை மேற்­கொண்­டது. அதே நேரம் கொழும்பு சுகா­தார அமைச்­சுக்­கும் தக­வல் வழங்­கப்­பட்­டது.
அத­ன­டிப்­ப­டை­யில் கடந்த இரு தினங்­க­ளாக முல்­லைத்­தீ­வில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.
காய்ச்­ச­லுக்கு கார­ண­மான வைரஸை அடை­யா­ளம் காணும் முயற்சி வேக­மாக இடம் பெற்று வரு­கின்­றது என்­றார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - அடை­யா­ளம் காணப்­ப­டாத காய்ச்­சலால் 9பேர் உயி­ரி­ழந்­தனர்.

பேசாலையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் மீண்டு வந்த அதிசயம்

திங்கள், 18 டிசம்பர், 2017

உயிரிழந்துள்ளதாக நம்பப்பட்ட நபர் ஒருவர் உயிருடன் இருப்பதாக அறிந்து அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .கடலில் அடித்து செல்லப்பட்ட நபரின் சடலம் மீண்டும் கரைக்கு வரும் என 10 நாட்களாக காத்திருந்த உறவினர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.மன்னார் பேசாலை பிரதேசத்தில் கடலுக்கு சென்று காணாமல்
 போன மீனவர் 
ஒருவர், 10 நாட்களின் பின்னர் இந்திய மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு ராமேஸ்வரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.அந்தோனி மரியதாஸ் என்ற 37 வயதுடைய இந்த மீனவர் கடந்த 7ஆம் திகதி மேலும் மூன்று மீனவர்களுடன் கடலுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் கடல் அலையில் சிக்கி காணாமல் போனார்.மரியதாஸ் கடலில் மூழ்கியமை 
தொடர்பில் சக 
மீனவர்களால் அவரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் அறிந்த நாளில் இருந்து மரியதாஸின் சடலம் கரை ஒதுங்கும் என குடும்பத்தினர் பேசாலை கடற்கரையில் காத்திருந்துள்ளனர்.சூறாவளியில் சிக்கில் கடலில் விழுந்த மரியதாஸ் கடலில் 
மிதந்து தென் 
இந்தியாவுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்திய மீனவர்கள் அவரை காப்பாற்றி டேலர் இயந்திரம் ஒன்றில் ஏற்றியுள்ளனர்.அதன் பின்னர் அவர் உயிருடன் இருப்பதாக குடும்பத்தினரிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


READ MORE - பேசாலையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் மீண்டு வந்த அதிசயம்

நாட்டில் அடுத்த சில நாட்களில் அடை மழை பெய்ய வாய்ப்பு!

வெள்ளி, 15 டிசம்பர், 2017

அடுத்த சில நாட்களுக்கு இலங்கை முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இலங்கையின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களிலும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என அந்த திணைக்களம் 
கூறியுள்ளது.
இதேவேளை அவ்வாறு தொடர்ந்து மழை பெய்தால் மண்சரிவு குறித்து பொது மக்கள் கூடிய அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக காலி மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் சில இடங்களுக்கும் மலையகத்தின் பல பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - நாட்டில் அடுத்த சில நாட்களில் அடை மழை பெய்ய வாய்ப்பு!

பாடசாலை நேரத்தில் வடமாகாணத்தில் மீண்டும் மாற்றம்!!

வியாழன், 14 டிசம்பர், 2017

வடக்கு மாகாணப் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர். முன்னர் இருந்தமை போன்று 8 மணிக்கே பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என வடக்கு
 மாகாண சபை அமர்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.வடக்கு மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாளில் கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் வடக்குமாகாண அமைச்சர் அனந்தி 
சசிதரன் ஆகியோரால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்; வடக்கு மாகாணத்தில் தற்போது பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதால் மாணவர்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.நேரத்திற்கு
 எழுந்து பாடசாலைக்குச் செல்லவேண்டியிருப்பதால் காலை உணவைக் கூட உண்ணாது செல்கின்றனர். இதனால் அவர்களின் உடல் நிலை சோர்வடைந்து கற்றலைத் தொடர முடியாது அவதிப்படுகின்றனர்.இதேபோன்றே ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாகக் குடும்பப் பொறுப்புள்ள 
ஆசிரியர்களது பாதிப்புக்கள் பல வகைகளில் காணப்படுகின்றன. ஆகவே இதனைக் கல்வி அமைச்சர் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவிக்கும் போது;காலை 7.30 மணிக்கு பாடசாலை ஆரம்பிப்பது பொருத்தம் இல்லை. மாணவர்கள் பாதிக்கப்படுபின்றனர். 
எனவே இதனை அமைச்சர் பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.இதன்போது சபை இதனை மாற்றச் சம்மதித்தால் பரிசீலிக்கலாமென வடமாகாண கல்வி அமைச்சர்
 பதிலளித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





READ MORE - பாடசாலை நேரத்தில் வடமாகாணத்தில் மீண்டும் மாற்றம்!!

யாழ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; அதிரடிப் படை வீரர்களின் விளக்கமறியல் நீடிப்பு

அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்கமறியல் எதிவரும் டிசம்பர் 28ம் திகதி வரை 
நீடிக்கப்பட்டது.
கடந்த ஒக்டோபர் மாதம் 22ம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம், வசந்தபுரம், முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி
 உயிரிழந்தார்.
இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண தலைமையக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு
 வருகின்றது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரி உள்பட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று இடம்பெற்றது. இதன்போது சந்தேகநபர்கள் யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்வதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அதனால் சந்தேகநபர்கள் இருவரையும் டிசம்பர் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் 
கட்டளையிட்டார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - யாழ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; அதிரடிப் படை வீரர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை வான்பரப்பில் இன்று நள்ளிரவிலும் அதிகாலையிலும் நிகழப் போகும் அதிசயம்

புதன், 13 டிசம்பர், 2017

இலங்கையின் வான்பரப்பில் இயற்கையின் வர்ணஜால நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இன்று நள்ளிரவு விண்கற்கள் மழை பொழியவுள்ளதாக பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஒவ்வொரு 
வருடமும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை பொழியும் ஜெமினிட் என்ற விண்கற்கள் பூமியில் விழும். இந்நிலையில் விண்கற்கள் மழையின் உச்ச நிலையை நாளை இரவு இலங்கை மக்கள் தெளிவாக காணும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக 
அவர் குறிப்பிட்டுள்ளார்.தெளிவான வானம் உள்ள இடத்தில் இரவு 9 மணிக்கு பின்னர் கிழக்கு வானிலும், நள்ளிரவில் வானத்திற்கு மத்திய பகுதியிலும் அதிகாலை மேற்கு வானிலும் நட்சத்திரம் போன்று
 விண்கற்கள் மழையை அவதானிக்க 
முடியும்.நாளை அதிகாலை 2 – 4 மணியளவிலான காலப்பகுதியே விண்கற்கள் மழையை 
அவதானிப்பதற்கான மிக பொருத்தமான நேரம் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.மணிக்கு கிட்டத்தட்ட 120 விண்கற்கள் பொழியும் எனவும், இதனை வெற்றுக் கண்களினால் பார்க்க 
வேண்டும் எனவும் பேராசிரியர் கூறியுள்ளார்.இந்த விண்கற்கள் மழை வெள்ளை, மஞ்சள், பச்சை நீலம், மற்றும் சிகப்பு உட்பட பல நிறங்களில் பொழியும் என கூறப்படுகின்றது.இந்த நிகழ்வு இலங்கை வாழ் மக்களுக்கு அபூர்வ நிகழ்வு என பேராசிரியர் மேலும்
 குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - இலங்கை வான்பரப்பில் இன்று நள்ளிரவிலும் அதிகாலையிலும் நிகழப் போகும் அதிசயம்

இடம்பெற்ற விபத்துக்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் நால்வர் பலி

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் இடம்பெற்ற விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 3 விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்
.இதற்கு மேலதிகமாக முல்லைத்தீவு பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
.தலங்கம, கடவத்தை மற்றும் மொரகஹஹேன
 ஆகிய பிரதேசங்களில் குறித்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.தலங்கம பிரதேசத்தில் ஜுப் வண்டி ஒன்று பாதையில் சென்ற இருவரை மோதிவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.இவ்வாறு விபத்துக்குள்ளான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்
 உயிரிழந்துள்ளனர்.
பின்னர் ஜுப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் குடிபோதையில் இருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கடவத்தை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சென்றவர் மீது மோதியமையினால்
 வீதியில் சென்றவர் உயிரிழந்துள்ளார்.மெரகஹஹேன பிரதேசத்தில் வேன் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளா
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இடம்பெற்ற விபத்துக்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் நால்வர் பலி

பிச்சையெடுத்து நூதனமான முறையில் கொள்ளையடித்த பெண் கைது

சனி, 9 டிசம்பர், 2017

பேருந்துகளில் பயணிகளை ஏமாற்றி கொள்ளையடிக்கும் இளம் பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.பல்வேறு நோய்களுடன் உள்ள நபர்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என கூறி பயணிகளின் பேருந்துகளுக்குள் போலியாக பணம் சேகரித்து, பயணிகளின் பைகளை இளம் பெண்ணொருவர் கொள்ளையடித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.அம்பலந்தொட்டை மற்றும் குட்டிகல பொலிஸார் இணைந்து மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டில் 
இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.மாத்தறையில் இருந்து எம்பிலிப்பிட்டிய வரை பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பெண்ணின் பணப்பை நேற்று பகல் திருடப்பட்டுள்ளது.இதன் போது, பேருந்தில் பணம் சேகரித்து கொண்டிருந்த இருவர் மீது 
சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், குட்டிகல பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் வீட்டை தேடி சென்றுள்ளனர்.அதற்கமைய அந்த இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டிருந்த நபர் தப்பி சென்ற நிலையில் அதற்கு தொடர்புடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.ஊனமுற்ற தனது தந்தை மற்றும் ஊனமுற்ற சிறுவர்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கூறி பண மோசடி இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கையில் நீண்ட காலமாக குறித்த பெண்இ அவரது கணவர் மற்றும் சகோதரர்
 ஈடுபட்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய வீட்டினுள் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த நோய்வாய்ப்பட்ட சிறுவர்கள் புகைப்படங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - பிச்சையெடுத்து நூதனமான முறையில் கொள்ளையடித்த பெண் கைது

புத்துார்ப் பகுதியில் சிறுப்பிட்டி பகுதியைச்சேர்ந்த குடும்பஸ்தருக்கு வாள் வெட்டு

வெள்ளி, 8 டிசம்பர், 2017

யாழ் சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் வாள் வெட்டில் படுகாயமடைந்துள்ளார். புத்துார்ப் பகுதியில் உள்ள சாராயக்கடையில் நின்ற 17 வயது மதிக்கத்தக்க சிறுவனே தனது
 நண்பர்களுடன்
 குறித்த குடும்பஸ்தரை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - புத்துார்ப் பகுதியில் சிறுப்பிட்டி பகுதியைச்சேர்ந்த குடும்பஸ்தருக்கு வாள் வெட்டு

இன்று நள்ளிரவு முதல் சாதாரணதர பரீட்சைகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 7 டிசம்பர், 2017

கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையானது எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புகள், மாதிரி வினாத்தாள்களை
 அச்சிடல், விநியோகித்தல், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் மூலம் விளம்பரப்படுத்துதல் என்பன முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இது தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் மூலமாக வெளியிடுதல் என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு மீறப்படுமாயின், அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ தகவல் வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - இன்று நள்ளிரவு முதல் சாதாரணதர பரீட்சைகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஊடாகவும் நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் ஊடாகவும் நாட்டைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு தென் கரையோரப் பகுதிகளிலும் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் பல பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும்.
வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் அதி கூடிய மழை வீழ்ச்சியாக 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன் துறை வரையிலான கடற் கரையோரப் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதோடு அச்சந்தர்ப்பத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும். எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - நாட்டின் ஊடாகவும் நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும்

குடத்தனையில் மனைவியை கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை

யாழ்ப்பாணம் - வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து அவரை கொலை செய்ய குற்றத்திற்காக கணவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று வழங்கியுள்ளார்.
வடமராட்சி, மணற்காடு - குடத்தனையில் கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி ஞானதாஸ் மேரி ஜிமில்டா (வயது -24) என்ற இளம் குடும்பப் பெண் உடலில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் அந்தோனிமுத்து ஞானதாஸ் (வயது-25) கைது
 செய்யப்பட்டார்.
சந்தேகநபருக்கு எதிராக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்றன. அதன் நிறைவில் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மனைவியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சந்தேகநபருக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது. இதன்போது தீர்ப்பை அறிவித்த நீதிபதி இளஞ்செழியன்,
"வழக்கின் எதிரி கொலை செய்யும் பொது நோக்கத்தோடு திட்டமிட்டு அவரது மனைவி மீது தீப்பற்றவைத்தார் என்பது வழக்குத் தொடுனரால் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டவில்லை.
எதிரி கைமோசக்கொலைக் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்ற முடிவுக்கு இந்த மன்று வருகிறது. அந்தக் குற்றத்துக்காக
 எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. அத்துடன், குற்றவாளி 5 ஆயிரம் ரூபாய் தண்டம் பணம் செலுத்தவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்" என்று தீர்ப்பளித்தார்.
வழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் நெறிப்படுத்தினார். எதிரி சார்பில் சட்டத்தரணி வி.திருக்குமரன் 
முன்னிலையாகிவந்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - குடத்தனையில் மனைவியை கொலை செய்த கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை