படகு விபத்தில் உயிரிழந்த 6மாணவர்கள் தொடர்பாக 5 மாணவர்கள் கைது

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

யாழ். மண்டைதீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக 18 மாணவர்கள் குறித்த கடற்பரப்பில் படகு சவாரி செய்திருந்த நிலையில், படகு கவிழ்ந்து 7 பேர் கடலுக்குள் விழுந்துள்ளனர். அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் நீந்திக் கரையை அடைந்துள்ளார்.
இந்நிலையில், நீந்தித் தப்பித்த மாணவன் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்
நண்பர்கள் இருவரது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கடலுக்குச் சென்ற இம் மாணவர்கள், இவ்வாறு உயிரிழந்தமை யாழ்ப்பாணத்தை சோக மயமாக்கியுள்ளது.
உயிரிழந்த மாணவர்களின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, தற்போது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு 
வருகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - படகு விபத்தில் உயிரிழந்த 6மாணவர்கள் தொடர்பாக 5 மாணவர்கள் கைது

பண்ணை படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் விபரங்கள்!

யாழ். மண்டைத்தீவு கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் உயிர் தப்பியுள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் 
வைக்கப்பட்டுள்ளன. இன்று கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி சென்ற போது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 இதேவேளை, படகில் ஏறி கடலில் பயணித்த 7 மாணவர்களில் ஒரு மாணவர் மாத்திரம் நீந்திக் கரை சேர்ந்துள்ளார். ஏனைய 6 மாணவர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,
உரும்பிராயைச் சேரந்த 18 வயதுடைய நந்தன் ரஜீவன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய நாகசிலோஜன் சின்னதம்பி, கொக்குவிலைச் சேர்ந்த 20 வயதுடைய தனுரதன், நல்லூரைச் சேர்ந்த 20 வயதுடைய பிரவீன், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுடைய தினேஷ், சண்டிலிப்பாயைச்  சேர்ந்த 18 வயதுடைய தனுசன்
ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.
இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை.28.08.2017. பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





READ MORE - பண்ணை படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் விபரங்கள்!

பண்ணை படகு விபத்தில் மேலும் 10 பேரை தேடும் பணி தீவிரம்!

யாழ் பண்ணை பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
யாழ் தொழில் நுட்பக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் உட்பட 16 பேர் மாணவர்கள் நண்பரின் பிறந்த நாளை ஒட்டி பொழுதுபோக்கிற்காக கடலுக்கு சென்று படகொன்றில் சவாரியில் ஈடுபட்டபோது படகு கவிழ்ந்ததில் பெரும் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கவிழ்ந்த படகிலிருந்து தப்பி வந்த ஒரு மாணவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு 
வருகிறது.
சற்று முன்னர் வரை 5 உயிரிழந்த சடலங்களை கடற்படையினர் மற்றும் குருநகரை சேர்ந்த மீனவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இவர்கள் கொக்குவில் மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 19 வயது இளைஞர்களென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 10 பேரையும் தேடும் பணி தீவிரமாக 
இடம்பெற்று வருகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




READ MORE - பண்ணை படகு விபத்தில் மேலும் 10 பேரை தேடும் பணி தீவிரம்!

இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த மருத்துவர்கள் பொலிஸாரால் கைது!

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

இளம் பெண் ஒருவருக்கு வீதியோரத்தில் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக இரண்டு மருத்துவர்களை கேகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேகாலை வைத்தியசாலையில் சேவையாற்றும் மருத்துவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்றிரவு கேகாலை நகருக்கு அருகில் பெண்ணொருவருக்கு தொந்தரவு
 செய்துள்ளனர்.
அப்போது பிரதேச வாசிகள் சம்பவம் குறித்து விசாரித்துள்ளதுடன் மருத்துவர்களை தாக்கியுள்ளதுடன் கேகாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, மருத்துவர்கள் மது போதையில் இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மருத்துவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாகவும் மேலும், இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த மருத்துவர்கள் பொலிஸாரால் கைது!

சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் பலி

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017


யாழ் சுன்னாகம் பகுதியில் இன்று மாலை புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று மாலை பயணித்த யாழ் தேவி புகையிரதத்தில் மோதிய நிலையில் உடலும் தலையும் இரண்டாக பிளந்துள்ளது.
குறித்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் பலி

பொதிப் போக்குவரத்துக்கு ரயில் கட்டணம் அதிகரிக்கும்?

வியாழன், 24 ஆகஸ்ட், 2017




இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பொதிப் போக்குவரத்து கட்டணத்தில் மாற்றங்களை கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
 வருகின்றன.
இலங்கை புகையிரத திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பொதிப் போக்குவரத்துக்கு, கடந்த 9 வருங்களாக, எவ்விதத் திருத்தமும் மேற்கொள்ளாமல், ஒரே வகையான கட்டணங்களே 
அறவிடப்படுகின்றன.
அத்தொகையானது, ஏனைய பொதி போக்குவரத்துக்கு அறவிடப்படுகின்ற கட்டணங்களுடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைவாகும்.
அதனால், சாதாரண மக்களுக்கு மேலதிக சுமையை சுமத்தாமல், வணிகமற்ற மற்றும் நுகர்வுத் தேவையின் அடிப்படையில், 
போக்குவரத்து பொதிகள் தவிர்ந்த ஏனைய பொதிகள் போக்குவரத்துக்காக, 
தற்போது அறவிடப்படுகின்ற கட்டணங்களை, 50 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு, அமைச்சரவை 
அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

READ MORE - பொதிப் போக்குவரத்துக்கு ரயில் கட்டணம் அதிகரிக்கும்?

.அதிகாலை பூஜைக்கு கதிர்காம முருகன் ஆலயத்தில் தடை

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

வரலாற்று சிரப்புமிக்க கதிர்காமம் தேவாலயத்தில்.21.08.2017. இன்று அதிகாலை குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் வரலாற்று சம்பிரதாயமாக இடம்பெறும் அதிகாலை பூஜைக்கு இன்றைய தினம் தடை ஏற்பட்டுள்ளது
தேவாலயத்தின் பிரதான பூஜகர் தேவாலயத்தை திறக்க செல்லும் சந்தர்ப்பத்தில் பஸ்நாயக்க நிலமேயினால் தேவாலயத்தின் சாவி பறிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது வரையிலும் தேவாலயம் மூடி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் வருகைத்தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - .அதிகாலை பூஜைக்கு கதிர்காம முருகன் ஆலயத்தில் தடை

நாட்டில் உயிருக்கு போராடும் மனைவி! வெளிநாட்டில் தவிக்கும் கணவன்

சனி, 12 ஆகஸ்ட், 2017

வெளிநாடொன்றில் சிக்கியுள்ள இலங்கையர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ள இலங்கை தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.
55 வயதான ஷாந்த ராஜபக்ச என்ற கப்பல் மாலுமியே இவ்வாறு சிக்கியுள்ளதாக அரபு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ராஜபக்ஷ குடும்பத்தை பார்க்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
அவர் பணியாற்றும் கப்பல் கடந்த ஒரு வருடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ளது. அவருக்கு சம்பளமும் இதுவரை
 செலுத்தப்படவில்லை.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் தனது தந்தை இறந்த போதிலும், அவர் இலங்கைக்கு செல்லவில்லை. தற்போது அவரது மனைவி மாரடைப்பினால் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.வி ஷார்ஜா மூன் என்ற கப்பலில் ராஜபக்ஷ பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குறித்த கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடலில் சிக்கியுள்ளது. இந்நிலையில் அங்கிருந்து நாடு திருப்ப வேண்டும் என ராஜபக்ஷ சண்டையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது இந்திய நண்பர்கள் ஆறு பேர்,
 அவருடன் அந்த கப்பலில் ஒரு வருடத்தை செலவழித்துள்ள நிலையில் கடந்த மாதம் அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எனினும் 55 வயதான ராஜபக்ச இன்னமும் நாடு திரும்ப முடியாமல்
 காத்திருக்கின்றார்.
2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் இந்த கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக அரபு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மாலுமிகளுக்கு எந்த சம்பளமும் வழங்கப்படாத நிலையில் உணவு, நீர் மற்றும் எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - நாட்டில் உயிருக்கு போராடும் மனைவி! வெளிநாட்டில் தவிக்கும் கணவன்

அரச பேருந்து வவுனியாவில் ரயிலுடன் மோதியது உயிர் தப்பிய பயணிகள்.!

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று (04.08) மாலை 4 மணியளவில் வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த வவுனியா-மெனிக்பாமிற்கான அரச பேருந்து ஒன்று  புகையிரத கடவையை கடக்க முயன்ற வேளையில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாதாக அங்கிருந்து வரும் தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
மேலும் இவ்விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பேருந்தின் சாரதி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அறியப்படுகிறது. இப் புகையிரதகடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவை என்பது குறிப்பிடத்தக்கது.
 சாரதி கவலைக்கிடமான நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப் புகையிரதகடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவை என்பது குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - அரச பேருந்து வவுனியாவில் ரயிலுடன் மோதியது உயிர் தப்பிய பயணிகள்.!

கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு: மற்றொரு சந்தேகநபர் கைது

கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொக்குவில் அம்பாள் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 30 ஆம்திகதி கோப்பாய் பொலிஸார் மீது கொக்குவில் நந்தாவில் பகுதியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல்
 நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று 
தெரிவிக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு: மற்றொரு சந்தேகநபர் கைது

நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழையும் பனிமூட்டமும் !!!

சுவிஸ்லாந்தாக மாற்றிய நுவரெலியா மக்கள்.வியப்பில்   நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழையும் பனிமூட்டம் நிறைந்த காலநிலை காணப்படுகின்றது
இன்று காலை முதல் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் 
காணப்படுகின்றது.
இதனால் சாரதிகளை வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரவிட்டு செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் 
விடுத்துள்ளன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






READ MORE - நுவரெலியா மாவட்டத்தில் அதிக மழையும் பனிமூட்டமும் !!!

பதின் மூன்று இளைஞர்கள் வடமராட்சியில் அதிரடிக்கைது!!

புதன், 2 ஆகஸ்ட், 2017

யாழ்- வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 13 இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் வண்டி மீது கற்களால் தாக்குதல் நடத்தியமை, நெல்லியடியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியமை, பருத்தித்துறை வீதியில் ரயர்களை கொழுத்தி வன்முறையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டிலே குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளனர்
குறித்த இளைஞர்களில் இருவர் நெல்லியடியில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன் 11 இளைஞர்கள் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் வீதியின் 6 ஆம் கட்டைப் பகுதியில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி மாலை 4 மணியளவில் மணல் ஏற்றி சென்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
குறித்த இளைஞர் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற நிலையில் பொலிஸார் இடை மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார்
 தெரிவித்தனர்.
இதன்போது துன்னாலையைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரினால் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மந்திகை வைத்தியசாலையில்
 வைத்து பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் மீது மக்கள் கற்களால் தாக்குதல் நடத்திய நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





READ MORE - பதின் மூன்று இளைஞர்கள் வடமராட்சியில் அதிரடிக்கைது!!

கட்டுநாயக்க வந்த விமானம் 202 பயணிகளுடன் அவசர தரையிறக்கம!

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017


இந்தியாவின் கொச்சியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த யூ.எல்.166 ரக விமானத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கைத்தொலைபேசியின் மின்கலம் வெடித்ததினாலேயே குறித்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணியொருவரின் கையடக்கத் தெலைபேசியின் மின்கலம் வெடித்ததையடுத்து விமானத்தினுள் புகை நிரம்பியதால், விமானத்தில் பயணிகளுக்கிடையில் பதற்ற நிலை
 உருவாகியதாகவும் அதையடுத்து விமானத்தில் அமைதியின்மை ஏற்பட்டதையடுத்து, பயணிகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - கட்டுநாயக்க வந்த விமானம் 202 பயணிகளுடன் அவசர தரையிறக்கம!