அதிர்ச்சித் தகவல்; யாழில் இரு பொலிஸார் மீது வாள் வெட்டு; வழிநடத்தியவர் யார்?

திங்கள், 31 ஜூலை, 2017

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்குதல் நடாத்திய குழு தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அதன்படி இந்த வாள் வெட்டுத் தககுதலானது ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் உறுப்பினர்களைக் கொண்ட ஆயுதக் குழுவொன்றின் தாக்குதல் என்பது இதுவரையிலான விசாரணைகளில்
 தெரியவந்துள்ளது.
இந் நிலையில் நேற்று முன் தினம் பொலிஸார் மீது தககுதல் நடாத்திய குழுவில் 15 பேர்வரை இருந்துள்ளமையை விசாரணையில் வெளிப்படுத்திக்கொண்டுள்ள பொலிஸார், அந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்பதை பொலிஸார் அடையாளம்
 கண்டுள்ளனர்.
அத்துடன் குறித்த பிரதான சந்தேக நபர் ஆவா பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் வீரகேசரி இணையத்திற்கு தெரிவித்தார். அத்துடன் இந்த விடயத்தை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் உறுதி செய்தார்.
வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் கட்டுப்பாட்டில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகியோரின் மேற்பார்வையில் 6 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
அந்த பொலிஸ் குழுக்களின் ஆரம்பகட்ட விசாரணைகளிலேயே பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் அடையாளம் காணப்பட்டோரை கைது செய்யவும் மேலதிக நடவடிக்கைகள் 
முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நேற்று நண்பகல் தம்மிக, சுரேன் ஆகிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதற்காக கொக்குவில் பகுதிக்கு தமது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இதன்போது கொக்குவில் நந்தாவில் பகுதியில் உள்ள பற்றைக்காட்டு பகுதியில் சிலர் மது அருந்தி குழப்பத்தில் ஈடுபடுகின்றார்கள் என குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அப் பகுதிக்கு சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அங்கு சில இளைஞர்கள் மது அருந்திகொண்டிருப்பதையும் அவர்களிடம் வாள் போன்ற ஆயுதங்கள் இருப்பதனையும் அவதானித்ததுடன் இருவரும் அங்கிருந்து திரும்பி பொலிஸ் நிலையம் நோக்கி
 சென்றுள்ளார்கள்.
இச்சமயத்திலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த கும்பலொன்று அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்தியுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் மூகங்களை மூடிக் கொண்டுவந்த பத்துக்கும் மேற்பட்ட இனந்தெரியாத குழுவொன்று இவர்களை துரத்தி துரத்தி வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இரு பொலிஸ் உத்தியோகத்தரில் ஒருவருக்கு இடது கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் தப்பி ஓட முற்பட்ட போதும் சந்தேக நபர்கள் அவரை துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர்.
இந் நிலையில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், இன்று நண்பகலாகும் போது சந்தேக நபர்கள் ஏழு பேரை அடையாளம் கண்டுள்ளனர்
குறிப்பாக சம்பவம் தொடர்பில் 
சந்தேக நபர்கள் 7 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக கண்டறிந்துள்ள பொலிஸார் ஒவ்வொரு மோட்டார் சைக்கிள்களிலும் 2 அல்லது மூன்று பேர் இருந்துள்ளதை சாட்சிகள் ஊடாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அதன்படி குறைந்த பட்சம் 15 பேர் கொன்ட குழு இந்த தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் அனைவரையும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர விஷேட திட்டம் ஒன்றினை வகுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முதலில் சந்தேக நபர்கள் இரு மோட்டார் சைக்கிள்களில் மூவர் வீதம் பொலிஸாரை துரத்தி வந்து பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிளை இடை மறித்து அவர்களை அவர்களது மோட்டார் சைக்கிளுடன் வீழ்த்தியுள்ளதாகவும் பின்னர் வாளால் துரத்தித் துரத்தி வெட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் போது மேலும் 4 முதல் 5 மோட்டார் சைக்கிள்களில் சந்தேக நபர்கள் அங்கு வந்துள்ளமையும் அங்கு பொலிஸார் மீதான தககுதலில் பங்கேற்றுள்ளமையும் விசாரணைகளில்
 உறுதியாகியுள்ளது.
இந் நிலையிலேயே பிரதான சந்தேக நபர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனவும் ஆவா குழுவினது முக்கிய செயற்பாட்டு உறுப்பினர் எனவும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





READ MORE - அதிர்ச்சித் தகவல்; யாழில் இரு பொலிஸார் மீது வாள் வெட்டு; வழிநடத்தியவர் யார்?

கொக்குவிலில் வாள்வெட்டில் காயமடைந்த பொலிஸாரை பொலிஸ் மா அதிபர் சந்தித்தார்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று இரு பொலிஸார் மீது இனந்தெரியாத குழு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியது. அதையடுத்தே அவர் யாழ்ப்பாணத்துக்கு திடீரென 
வந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வந்த பொலிஸ் மா அதிபர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொலிஸ் உத்தியோகர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





READ MORE - கொக்குவிலில் வாள்வெட்டில் காயமடைந்த பொலிஸாரை பொலிஸ் மா அதிபர் சந்தித்தார்

யாழ் கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு!! – இருவர் படுகாயம்

கோப்பாய் பொலிஸார் இருவர் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளன
இந்தச் சம்பவம் நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
கொக்குவில், பொற்பதிப் பகுதியிலேயே வாள்வெட்டுச் சம்பவம் நடந்துள்ளது. 10க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட குழு ஒன்றே மோட்டார்சைக்கிள்களில் வந்து வாள்வெட்டை நடத்தியுள்ளது 
என்று கூறப்பட்டது.
வாள்வெட்டில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

READ MORE - யாழ் கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு!! – இருவர் படுகாயம்

சமனங்குளம் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் படுகாயம்!

புதன், 26 ஜூலை, 2017

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது – 27) என்பவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு
 முன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய சத்தியசீலன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார். அது தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடும் 
செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டை மீளப்பெற்று சமாதானமாக செல்வதற்கு இணங்குமாறு தாக்குதல் நடத்திய இளைஞர்கள் கோரிய போதும், சத்தியசீலன் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே அவர் மீது மீண்டும் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - சமனங்குளம் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் படுகாயம்!

வடமராட்சி இளைஞன் படுகொலை! தீவிர விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவினர்

வியாழன், 13 ஜூலை, 2017

யாழ். வடமராட்சி, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை
 முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸார் மீது பக்கச்சார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள பொலிஸாரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளோம். அவர்கள் கூறுவதை மட்டும் கவனத்தில் 
எடுக்க முடியாது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினர்களின் கருத்துகளையும், வாக்குமூலங்களையும் பெற்றுக்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளோம். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் முதலில் கொண்டு செல்லப்பட்ட அம்பன் மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலையிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.
வாகனம் தொடர்பிலும் அதில் பயணித்ததாகக் கூறப்படும் 5 பேர் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவங்கள் பற்றிய மேலதிக தகவல்களைக் வாகனத்தில் பயணித்தவர்களிடமே பெறவேண்டியுள்ளது.
அவர்களது தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டே பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்தலாம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். வடமராட்சி, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



READ MORE - வடமராட்சி இளைஞன் படுகொலை! தீவிர விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவினர்

பதுளைக்கு கொழும்பிலிருந்து சென்ற ரயில் 60அடி பாலத்திற்கு அருகில் விபத்து


பதுளைக்கு கொழும்பிலிருந்து  சென்ற தபால் சேவை புகையிரதம் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த,60 அடி பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (13) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் மூன்று பேர் சிறுகாயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் நான்கு புகையிரத பெட்டிகள் குடைசாய்ந்து பாரிய அளவில் சேதத்திற்குள்ளாகியுள்ளன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


READ MORE - பதுளைக்கு கொழும்பிலிருந்து சென்ற ரயில் 60அடி பாலத்திற்கு அருகில் விபத்து

திடீரெனத் தீப்பற்றிய எழுதுமட்டுவாழ் பகுதியில் பனை வடலிகள்!

வெள்ளி, 7 ஜூலை, 2017

தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பகுதியில் திடீரென பனை வடலிகளில் நேற்றுமுன்தினம் தீப்பற்றி பெரும் பகுதி காடு அழிந்துள்ளதென அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வடலிப் பனைகளில் பற்றிய தீயை யாழ்.மாநகர தீயணைப்பு படையினரும் அப் பகுதியில் நிலை கொண்டுள்ள படையினரும் இணைந்து மூன்று மணி போராட்டத்திற்குப் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் 
கொண்டு வந்தனர்.
கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதெனவும் தெரிவி்க்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - திடீரெனத் தீப்பற்றிய எழுதுமட்டுவாழ் பகுதியில் பனை வடலிகள்!

கோபமடைந்த ஆலயப் பூசகர் ஒருவர் மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தார்?


யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் கோபமடைந்த பூசாரி ஒருவர் மோட்டார் சைக்கிளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (04) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் குறித்த பூசகர் அண்மையில் உள்ள இடம் ஒன்றுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளை
 இயக்கியுள்ளார்.
மோட்டார் சைக்கிள் இயங்காமையினால் கோபமடைந்த பூசகர் தனது மோட்டார் சைக்கிளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றித் தீ மூட்டியுள்ளார். தீயினால் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து
 சாம்பலாகியுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - கோபமடைந்த ஆலயப் பூசகர் ஒருவர் மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தார்?

இருபத்தி மூண்று மருந்து உற்பத்திச்சாலைகள் இலங்கையில் நிறுவப்பட உள்ளன. ?

இலங்கையில் 23 மருந்து உற்பத்திச்சாலைகள் நிறுவப்பட உள்ளதாக சுகாதார, போசாக்கு அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க மருந்துப் பொருள் கூட்டுத்தாபனத்திற்காக உள்நாட்டு ரீதியில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இவ்வாறு 23 உற்பத்திச்சாலைகள் நிறுவப்பட
 உள்ளன.
மருந்துப் பொருள் உற்பத்தி தொடர்பில் 23 நிறுவனங்களுடன் 33 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளன. இந்த நிறுவனங்களுடன் எதிர்வரும் 11ம் திகதி உத்தியோகபூர்வமாக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
மருந்துப் பொருள் உற்பத்திச்சாலைகளை அமைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஹொரனை, களுத்துறை, கொக்கல மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இந்த மருந்துப் பொருள் உற்பத்திச்சாலைகள்
 நிறுவப்பட  உள்ளன.
இந்த மருந்துப் பொருள் உற்பத்திச்சாலைகளின் ஊடாக சுமார் 2000 வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என
 எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு ரீதியில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் இறக்குமதி செய்வதனால் ஏற்படும் 45 பில்லியன் ரூபா செலவினை தவிர்க்க முடியும் என சுகாதார அமைச்சு 
அறிவித்துள்ளது.
2018ம் ஆண்டின் நிறைவில் இலங்கைக்கு தேவையான மருந்துப் பொருட்களில் 75 வீதமான மருந்து வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக் கூடிய சாத்தியம் உண்டு என அமைச்சு நம்பிக்கை 
வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - இருபத்தி மூண்று மருந்து உற்பத்திச்சாலைகள் இலங்கையில் நிறுவப்பட உள்ளன. ?

முழங்காவில் இளைஞனைக் காணவில்லைஎன தாயார் முறைப்பாடு!

புதன், 5 ஜூலை, 2017

இளைஞன் ஒருவரை, கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் காணவில்லை என, குறித்த இளைஞனின் தாயார் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முழங்காவில்
 பகுதியைச் சேர்ந்த கிறேசியன் பிரேமிளன் (வயது 18) என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.
முழங்காவிலில் இருந்து யாழ். நாவாந்துறைப் பகுதிக்கு, மேசன் வேலைக்காக, கடந்த மாதம் 30ஆம் திகதி சென்ற இளைஞன் இதுவரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும்
 அவர் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை என தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - முழங்காவில் இளைஞனைக் காணவில்லைஎன தாயார் முறைப்பாடு!

முதியவர் இருவர் சாவகச்சேரி விபத்துகளில் காயம்!

யாழ் சாவகச்சேரியில் இரு வேறு விபத்துகளில் சிக்கி முதியவர்கள் இருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.நேற்று காலை ஏ9 வீதி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகில் முன்னால் சென்று கொண்டிருந்த
 முச்சக்கரவண்டி சமிக்ஞையின்றி பாடசாலைக்குள் செல்ல முற்பட்ட வேளை பின்தொடர்ந்து சென்ற மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதியது. அதில் பயணித்த மீசாலை மேற்கைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பரம்சோதி (வயது-62) என்பவர் காயமடைந்தார்.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் கிளிநொச்சி இராமநாதபுரத்திலிருந்து சாவகச்சேரிக்கு மகனுடன் வந்த 62 வயது மூதாட்டி சாவகச்சேரியை அண்மித்த பகுதியில் சாலையைக் கடந்த மாடு மாட்டுடன் மோதி தூக்கி வீசப்பட்டதில் காயமடைந்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - முதியவர் இருவர் சாவகச்சேரி விபத்துகளில் காயம்!

மாணவி முச்சக்கரவண்டியில் இருந்து வெளியே பாய்ந்து காயம்

முச்சக்கரவண்டியில் இருந்த வெளியே பாய்ந்த 16 வயது பாடசாலை மாணவி காயமடைந்து, அரநாயக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அரநாயக்க - திக்கபிட்டிய பிரதேசத்தில், அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தனது 24 வயது காதலனுடன் முச்சக்கரவண்டியில் மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது, இருவருக்கு இடையே ஏற்பட்ட முறுகல் காரணமாக அந்த மாணவி, இவ்வாறு முச்சக்கர வண்டியில் இருந்த வெளியே பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளதாக காவற்துறை
 தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - மாணவி முச்சக்கரவண்டியில் இருந்து வெளியே பாய்ந்து காயம்

தண்ணீர் தொட்டிக்குள் வவுனியாவில் முதியவரின் சடலம்!

செவ்வாய், 4 ஜூலை, 2017

 
வவுனியா- திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்திலுள்ள
 நீர் தொட்டிக்குள் இருந்து இன்று மதியம் வயோதிபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டனர். திருநாவற்குளம் பார ஊர்தி தரிப்பிடத்தில் கடந்த சில காலமாக தங்கியிருந்த 53 வயதுடைய இராசரட்ணம் அரியரட்ணம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இன்று மதியம் குளிப்பதற்கு தண்ணீர் தொட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையிலேயே அவர் தண்ணீர் தொட்டியினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இறப்பிற்கான காரணம் என்ன என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
 பொலிஸார் தெரிவித்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - தண்ணீர் தொட்டிக்குள் வவுனியாவில் முதியவரின் சடலம்!

மயி­லிட்­டி துறை­மு­கம் 27 ஆண்­டு­க­ளின் பின் மக்களிடம் கையளிப்பு

27 ஆண்­டு­க­ளா­கப் பாது­காப்­புத் தரப்­பின் ஆக்­கி­ர­மிப்­பில் இருந்து வந்த மயி­லிட்­டித் துறை­மு­கம் மக்­க­ளி­டம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட இரா­ணு­வத் தள­பதி, மாவட்­டச் செய­ல­ரி­டம் காணி விடு­விக்­கப்­ப­டு­வ­தற்­கான பத்­தி­ரத்தை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து மயிலிட்டி அம்மன் கோவிலை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டும், கற்பூரம் ஏற்றிக் கும்பிட்டும் வருகிறார்கள்.
பிரதேச செயலர் பிரிவில் 54 ஏக்கர் நிலப் பரப்பு மக்­கள் பாவ­னைக்கு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




READ MORE - மயி­லிட்­டி துறை­மு­கம் 27 ஆண்­டு­க­ளின் பின் மக்களிடம் கையளிப்பு

யாழ் நீர்வேலியில் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த கார்

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் வேகக்கட்டுப்பாட்டை மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த வாழைத்தோட்டத்தில் 
நுழைந்து.
இச்சம்பவம் நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு அண்மையில் இடம்பெற்றது. எனினும் காரில் பயணித்தவர்களுக்கு தெய்வாதீனமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



READ MORE - யாழ் நீர்வேலியில் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்த கார்

இன்று நாட்டின் பல பகுதிகளில் அடைமழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேடமாக தெற்கு மாகாணங்களிலும் இடைக்கிடையே கடும் காற்று வீசக்கூடும். மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மழையுடன் கடும் காற்று மற்றும் மின்னல் ஆபத்துக்கள் ஏற்படும். இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டு
 கொண்டுள்ளது.
இலங்கையின் தென் பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வரும் போதும், வடமாகாணத்தில் கடும் வரட்சியான நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - இன்று நாட்டின் பல பகுதிகளில் அடைமழை

நாட்டில் புகையிரத பாதையின் குறுக்கே பயணித்த 24 பேர் கைது

ஞாயிறு, 2 ஜூலை, 2017

புகை­யி­ரதப் பாதையின் குறுக்கே பய­ணித்த 24 பேர் இது­வரை கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக போக்­கு­வ­ரத்து அமைச்சு அறி­வித்­துள்­ளது
ரயில் கடவை மூடப்­பட்­டி­ருந்த நிலை­யிலும், மற்றும் சிவப்பு நிற வீதி சமிக்ஞை விளக்கு எரிந்து கொண்­டி­ருந்­த­வே­ளை­யிலும் இவர்கள் பய­ணித்­த­தனால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் 
அறி­வித்­துள்­ளது.
இதே­வேளை நாடு முழு­வதும் 684 பாது­காப்­பற்ற ரயில் கட­வைகள் காணப்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்ள போக்­கு­வ­ரத்து அமைச்சு இந்த வரு­டத்தில் பாது­காப்­பற்ற 200 புகை­யி­ரத கட­வை­க­ளுக்கு சமிஞ்சை விளக்­கு­களை பொருத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக 
தெரி­வித்­துள்­ளது.
இனங்­கா­ணப்­பட்­டுள்ள அனைத்து பாது­காப்­பற்ற புகை­யி­ரத கட­வை­க­ளுக்கும் இந்த சமிக்ஞை விளக்கை பொருத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.
இதே­வேளை கடந்த 27 ஆம் திகதி முன்­னெ­டுக்­கப்­பட்ட சோத­னையின் போது புகை­யி­ரதப் பாதை மூடப்­பட்­டி­ருந்த 
சந்­தர்ப்­பத்தில் புகை­யி­ரதக் கட­வை­களில் பய­ணித்த 29 பேருக்கு எதி­ராக வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ள­தாக புகை­யி­ரத திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.
புகை­யி­ரத விபத்­துக்கள் அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் இந்த
 நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக புகை­யி­ரத திணைக்களத்தின் பாது­காப்பு அதி­காரி அனுர பிரேமரத்ன 
தெரிவித்தார். நாடுமுழுவதும் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்கு 26 குழுக்களை நியமித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>
READ MORE - நாட்டில் புகையிரத பாதையின் குறுக்கே பயணித்த 24 பேர் கைது

மோட்டார் சைக்கிள் சைக்கிளுடன் மோதி கைதடி பாலத்தில் இருவர் படுகாயம்!

கைதடி பாலத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற சைக்கிளுடன் மோதி, தூக்கி வீசப்பட்டதில் இருவர் காயமடைந்தனர். இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் மட்டுவில் தெற்கைச் சேர்ந்த கமலநாதன் சசீந்திரன் (வயது-33) மற்றும் மட்டுவில்
 வடக்கைச் சேர்ந்த கதிர்காமு இராஜலிங்கம் (வயது-53) ஆகியோரே இவ்வாறு காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி 
வைக்கப்பட்டார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - மோட்டார் சைக்கிள் சைக்கிளுடன் மோதி கைதடி பாலத்தில் இருவர் படுகாயம்!

தெல்லிப்பளை யூனியன் கல்லூரிநிழல்படம் மாணவர் பாராளுமன்ற அமர்வு


யாழ்.தெல்லிப்பளை, யூனியன் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற அமர்வும், சாதனையாளர் பரிசளிப்பு விழாவும் கல்லூரி அதிபர் எஸ்.வரதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, நேற்றைய தினம் (30) இடம்பெற்றுள்ளதுடன், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராக
 கலந்துகொண்டுள்ளார்.
இதன் போது மாகாண மட்டத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் வீர வீராங்கனைகளுக்கான பரிசில்கள் வழங்கி 
வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊரவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

READ MORE - தெல்லிப்பளை யூனியன் கல்லூரிநிழல்படம் மாணவர் பாராளுமன்ற அமர்வு

ஆறு மாதங்களுக்குள் விபத்துகளால் ஆயிரத்து 261 பேர் மரணம்


வாகன விபத்துக்களால் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் ஆயிரத்து 261 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இதில் முச்சக்கரவண்டி விபத்துக்களாலேயே அதிகளவானோர் உயிரிழந்துள்ளனர் என்றும், அதிக வேகம் மற்றும் போதையில் வாகனத்தைச் செலுத்தியமையே விபத்துக்கள் சம்பவித்தமைக்கான முதன்மைக் காரணம் என்றும் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான பாதுகாப்பு சபையின் தலைவர் மருத்துவர் சிசிர கொதாகொட கூறியுள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் விபத்துக்களின் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சற்றுக் 
குறைவடைந்துள்ளது.
அதேவேளை, புதிதாக முச்சக்கரவண்டி ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு மூன்று நாள் செயலமர்வை அடுத்த மாதம் முதல் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - ஆறு மாதங்களுக்குள் விபத்துகளால் ஆயிரத்து 261 பேர் மரணம்