சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகரித்துவிட்டதா?

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் வெங்காயம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

வெங்காய சாறை தேனுடன் கலந்து சாப்பிடுவதால், ஆஸ்துமாவுக்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

வெங்காயத்தை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் மருந்து தயார் செய்யலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக அமைகிறது.

பொடியாக நறுக்கிய வெங்காயத்தை 50 கிராம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் இரண்டு டீஸ்பூன் புளிப்பு இல்லாத கெட்டி தயிர் சேர்க்க வேண்டும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக அமைகிறது.

இந்த தயிர் வெங்காய கலவையை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்.

அல்லது காலை உணவுடன் சேர்த்து இதை சாப்பிட்டு வரலாம். வெங்காயத்தில் அல்லிசின் என்ற வேதிப்பொருள் மிகுந்து காணப்படுகிறது.
சிறுநீர் பாதையில் ஏற்படக் கூடிய அழற்சியை போக்கக் கூடிய தன்மையும் வெங்காயத்திற்கு உள்ளது.

ஆன்டி பயாடிக், ஆன்டி ஃபங்கல் போன்றவை பற்களில் ஏற்படும் கிருமிகளை போக்கக் கூடியதாக வெங்காயம் விளங்குகிறது.
ரத்தத்தில் ஏற்படும் சர்க்கரையை இது குறைக்கிறது. 50 கிராம் வெங்காயத்தில் 20 யூனிட் இன்சூலின் உள்ளது.

அதே போல் ஆண்களுக்கு ஏற்படும் விந்தணு குறைபாடுகளை போக்கக் கூடிய மருந்து ஒன்றை வெங்காயத்தின் விதைகளை கொண்டு தயார் செய்யலாம்.

வெங்காய விதை, பனங்கற்கண்டு, காய்ச்சிய பால். வெங்காய விதையை நன்றாக நீர் விட்டு அலசி காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரு ஸ்பூன் வெங்காய விதையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறிது பனங்கற்கண்டு சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் அளவு நீர் சேர்த்து தேநீராக கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயத்தின் விதைகளை எடுத்து அதை தேநீராக ஆக்கி, அதனுடன் இனிப்பு சேர்த்து பருகி வருவதால் விந்தணு குறைபாடுகள் நீங்குகின்றன.
விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவால் ஆண்கள் குழந்தை பேறு இன்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மிகச் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


READ MORE - சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகரித்துவிட்டதா?